Dear @TeamYouTube,please give my terminated Vinorelax channel one more human review.If I violated any policy, please identify the specific video/issue. I’m ready to remove or correct it.Most content is based on published news and analysis.Pls reconsider and restore my channel. 🙏
CM sir @CMOTamilnadu@TVKVijayHQ உங்கள் secret agency Mossad,C.I.A போன்று செயல்பட வேண்டும். உங்கள் அரசாங்கத்திற்கு கெட்ட பெயரை விளைவிக்கும் விதமாக செயல்பட பல பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் public request Sir.
@CMOTamilnadu ஒன்று வகுப்பு அல்லது ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை computer science கண்டிப்பாக ஒரு பாடப்பிரிவை உருவாக்குங்கள். அண்டை மாநிலத்தில் 2004 முதல் உள்ளது தமிழ்நாட்டில் இல்லை, உலகம் கனிமயம் AI, LLM agent AI என்று சென்று கொண்டிருக்கிறது. ஒரு குடிமகன் கோரிக்கை.
@narendramodi@AmitShah@AmitShahOffice@SpokespersonMoD Indian enemies are trying to split India like Soviet union.if you ask is possible? yes people are suffering corruption and unemployment our enemy using this problem to brainwash our youth and citizens against our nation.
ஐயா முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் என் ஆற்காடு வீராசாமி தெரியுமா 2006 to 2011 எட்டு மணி நேரம் 14 மணி நேரம் தமிழ்நாடு மின்வெட்டை சந்தித்து உள்ளது அதற்கு காரணம் யார் என்று பாருங்கள், இந்த ஆட்சி தவறு நடக்கும் கண்டிப்பாக நடக்கும் அப்பொழுது அதை வெளிப்படுத்துங்கள்
தமிழ்நாட்டில் அரசு துறைகள் மற்றும் அரசு திட்டங்களில் பணிபுரியும் தொகுப்புதிய பணியாளர்களுக்கு தங்கள் தேர்தல் வாக்கு உறுதியின்படி பணி நிரந்தரம் செய்தால் அந்த குடும்பங்கள் காலம் முழுவதும் தங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கும்.
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.