#WATCH | கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொடூரமாக அடித்துக் கொலை.. போதைப்பொருள் விற்பனை தொடர்பாக தகவல் தெரிவித்ததால் கொல்லப்பட்டதாக பெற்றோர் வேதனையுடன் குற்றச்சாட்டு
#SunNews | #Coimbatore | #Amuthan
https://t.co/dIFsbuOb7e
10 years of NEET - Countless lives lost - Systemic exclusion with a different MASK.
We stand with the students. We demand the abolition of NEET.
Watch this powerful drama unfold and join the movement to make medical education accessible to ALL.
@dhamma_the_band
@samuvel.maragatham
@santhosh_krishnan01
@arampa_buddhar
@trendganasanjay
@imman_sagayaraj
@vey.ra.parthi
#dhammatheband
#banNEET
#NEETExposed
#StandTogether
#SaveOurStudents
#JusticeForStudents
#VoiceOfThePeople
#VoiceOfVoiceless
#DTBoriginals
She is not a criminal. She isn't carrying a weapon. She is just an Adivasi woman fighting for Jal-Jangal-Jameen and her constitutional rights.
This is how she is being treated. There are countless others facing the same. Why is nobody talking about them??
#KenBetwa#Bundelkhand
தமிழக வேளாண் துறை அமைச்சர், வேளாண் துறை நிதிநிலை அறிக்கையைத் திருப்பதி கோயிலுக்குக் கொண்டு சென்று பூஜை செய்துள்ளார். இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது. சட்டப்படி அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது.
அமைச்சரான பிறகு, அந்தப் பொறுப்பிற்கு ஏற்ற முறையில் நடந்துகொள்ள வேண்டும். தாங்கள் விரும்பியபடியெல்லாம் நடந்துகொள்ளக் கூடாது என்ற அறிவுரையைப் பொறுப்பானவர்கள் அவருக்குச் சொல்ல வேண்டும்.
இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
டில்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பாஜக அரசு கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது.
தாக்குதலுக்குள்ளான நிலையிலும், இன்றும் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்துவரும் மாணவர் தலைவர் அபிஜித் தீப்கே மற்றும் SFI தலைவர்கள் உள்ளிட்ட அனைவரையும் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதினாங்கு பேரும் நேரில் சந்தித்து எங்களது ஒருமைப்பாட்டைத் தெரிவித்தோம்.
இப்பிரச்சனை சம்பந்தமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மோடி அரசு பதில் சொல்லும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என்ற உறுதியையும் அவர்களுக்குத் தெரிவித்துள்ளோம்.
#StandWithStudents
#JantarMantarProtest
#StudentSolidarity
#SFI
#ModiGovtAccountable
#NewsUpdate | திருவொற்றியூரில் மாடுகளை இறைச்சிக்காக பலியிடக் கூடாது என நள்ளிரவில் மிரட்டிய பாரத் முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிவாஜியை கைது செய்ய வலியுறுத்தி மாடு, ஆடு இறைச்சிக் கடை வியாபாரிகள் சாலை மறியல்.
இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் ஒன்று கூடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.
#SunNews | #Beef | #TNPolice
சேலத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை திறப்பை தடுக்கும் சாதிகளில் 'குற்றப்பரம்பரை' என ஒடுக்குமுறை சட்டத்தால்' முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட சாதியும் இருக்கிறது.
இந்த சாதியில் பிறந்த அனைவரையும் ��ிறவி-குற்றவாளிகள் என கிட்டதட்ட 88 சாதிகளை ஆங்கிலேயர் சட்டமியற்றி கொடுமை படுத்தினர். இந்த குற்றப்பரம்பரை சட்டத்தை நீக்கவேண்டுமென இவர்களுக்காக வெள்ளையரிடத்தில் வாதம் நடத்தியவர் அண்ணல் அம்பேத்கர்.
"ஒருவர் பிறப்பால் குற்றவாளியாக முடியாது, சூழ்நிலையே ஒருவரை குற்றவாளியாக்குகிறது" என்ற அறிவியல் பூர்வமான உண்மையை அம்பேத்கர் உரக்கச் சொன்னார். பிறப்பிலேயே ஒரு சமூகத்தை குற்றப்ப���ம்பரை என்று அழைப்பது அநாகரிகமானது என்று அவர் கடுமையாக வாதிட்டார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது, ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைவருக்கும் சம உரிமை, சுதந்திரம் மற்றும் வாழ்வுரிமை வழங்கும் சட்டப்பிரிவுகளை (குறிப்பாக பிரிவு 14, 15, 19, 21) அம்பேத்கர் சேர்த்தார். இந்த அடிப்படை உரிமைகள், குற்றப்பரம்பரை சட்டம் போன்ற கொடூரமான சட்டங்கள் சுதந்திர இந்தியாவில் நீடிப்பதற்கான ���ழியை முற்றிலும் அடைத்தன.
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக ��ருந்த அம்பேத்கர், இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், அவர்களின் மீதான அவதூறு முத்திரையை அகற்றுவதற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தார். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று இச்சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
வரலாறு சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தால், அண்ணலின் சிலையை இந்த சாதியை சார்ந்தவர்களே நிறுவியிருப்பார்கள். வரலாறை மறந்தவர்கள் நன்றியு���ர்வற்று சாதிய வன்மத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
இந்த வரலாறு அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தால் அவர்களாவது சொல்லி சிலையை திறந்திருப்பார்கள்.
மாவட்ட காவல்துறை அதிகாரிக்கும், வருவாய்-நிர்வாக அதிகாரிகளுக்கும் வரலாறு தெரியவில்லை. விடுதலையான மக்களுக்கும் வரலாறு தெரியவில்லை. ஆட்சியாளர்களுக்கும் வரலாறு தெரியவில்லை.
காவல்துறையை ஏவிய தவெக ஆட்சியாளர்கள் அண்ணலின் சிலையை நிறுவ முன்வரவில்லை. தவெக ஆட்சியாளர்களின் காவல்துறை ஒடுக்குமுறையை திமுக-அதிமுக ஆகிய எதிர்கட்சிகளும் கேள்வி எழுப்பவில்லை.
கற்றறிந்த அதிகாரிகளும், காவல்துறையினரும், ஆட்சியாளர்களும், எதிர்கட்சியினரும் வரலாறு அறியாதவர்களெனில்
இ��்கே யார் 'தற்குறி' ??
இந்த தற்குறிகளுக்கு மத்தியில் இனிமேல் அண்ணல் அம்பேத்கர் சிலைகள் ' கால் மேல் கால்' போட்டவாறுதான் வடிவமைக்கப்பட்டு திறக்கப்பட வேண்டும்.
தற்குறிகளுக்கு மத்தியில் அறிவாளி கால்-மேல்-கால் போட்டு திமிராக அமர்வதுதான் கற்றோர்க்குச் சிறப்பு
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான அண்ணன் K. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலை வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்றுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள நிலைப்���ாட்டை, நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) முழு மனதுடன் வரவேற்கிறது.
அண்ணன் K. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலை தொடர்பாக உண்மை முழுமையாக வெளிக்கொணரப்பட்டு, இந்தக் கொலையின் பின்னணியில் உள்ள சதியில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளின் எதிர்பார்ப்பாகும். அந்த வகையில், விசாரணையின் மீது பொதுமக்களுக்கு முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், சிபிஐ விசாரணை நோக்கிய @TVKVijayHQ @CMOTamilnadu அரசின் இந்த முடிவு முக்கியமானது.
அதேவேளையில், இந்த விசாரணை எந்தவித அரசியல் அல்லது பிற தலையீடுகளும் இன்றி, முழுமையான சுதந்திர��்துடனும், வெளிப்படைத்தன்மையுடனும், விரைவாகவும் நடைபெற்று, அண்ணன் K. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும். நேரடியாகவும் மறைமுகமாகவும் இக்கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அவர்களது தண்டனை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
இவ்வழக்கில் சிபிஐ விசாரணையைத் தொடர்ந்து வலியுறுத்திய அனைத்து ஜனநாயக இயக்கங்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வழக்கில் நீதி தாமதமின்றி நிலைநாட்டப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதே அண்ணன் K. ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு செலுத்தப்படும் உண்மையான அஞ்சலியாகவும், ஜனநாயகத்தின் மீதும் சட்டத்தின் மீதும் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதாகவும் அமையும்.
ஜெய் பீம்!
#JusticeForArmstrong #CBI #JaiBhim
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தரம் தாழ்ந்த வகையில் சித்தரித்து கடந்த ஒன்றரை மாதத்தில் ஆறுக்கும் மேற்பட்ட செய்திக் கட்டுரைகளைத் 'தமிழ் இந்து' நாளிதழ் வெளியிட்டுள்ளது.
மதுரை மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவை, கடந்த ஏழு ஆண்டுகளாக எந்தச் சமரசத்திற்கும் இடமின்றித் திறம்பட நடத்தி வருகிறோம். இதன் மூலம் மதுரை மாவட்டம் பல்வேறு நன்மைகளைப் பெற்றுள்ளது.
மக்களின் நலனுக்காக அதிகாரத்தைப் பணிபுரிய வைப்பதே எங்களது அரசியல்.
யாருடைய நலனுக்காகப் பணி செய்வது 'தமிழ் இந்து' நாளிதழின் அரசியல்?
@TamilTheHindu@tncpim
#HinduTamil #தமிழ்இந்து #CPIM #CPIMTamilnadu #Madurai #மத��ரை #மக்கள்அரசியல்
Now that #Satluj/#Punjab95 has been taken down from @ZEE5India, I'm reposting my investigation into #Modi-era censorship across Indian film industries published by @Article14live in 2025. The situation was terrible then but it is even worse now.
https://t.co/917ghMdOCP
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: மேல்முறையீட்டை வாபஸ் பெற்று சிபிஐ விசாரணைக்கு தவெக
@TVKVijayHQ@CMOTamilnadu அரசு ஒப்படைக்க வேண்டுமென நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது! @Neelam_Culture
அண்ணாமலை மீதான திமுக பதிவு செய்த அவதூறு வழக்கை வாபஸ் பெறக்காரணம் என்ன? 2021-26 ஆண்டுகாலத்தில் அண்ணாமலை மீது Piyush Manush கொடுத்த வழக்கின் மீதும் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என அவர் இன்றளவும் சுட்டிக்காட்டுகிறார். தீவிர ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கல்யாணராமன் என்பவர், பெரியார் சிலையை உடைப்பேன் என தொடர்ந்து பேசியவர், குண்டர் சட்டத்தில் கைதானவர், அண்பாமலை செய்த ஊழல்கள், மோசடிகள் குறித்து ஆதாரங்களோடு 2 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்தார். அவை இன்றளவும் பொதுவெளியில் உள்ளது. இவற்றின் மீது எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அண்ணாமலையின் மதவெறி தூண்டும் பிரச்சார பயணத்திற்கு எவ்வுத தடையுமில்லாமல் அனுமதியளித்தது மட்டுமல்லாமல், அண்ணாமலைக்கான உதவிகளை திமுகவின் மூத்த பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் செய்தார்கள் எனும் குற்றச்சாட்டு பலமாக தோழர்கள் ��லர் முன்வைத்தார்கள். இன்று தவெகவை எதிர்கிறார்கள் என்பதற்காக , திராவிடத்தை இழிவு செய்த மாரிதாஸ், சாட்டை துரைமுருகன் ப���ன்றோரின் வீடியோக்களை திமுக ஐ.டி விங் குடுவின் மூத்தவர்கள் பலர் ஆதரிக்கிறார்கள், பரப்புகிறார்கள், பகிர்கிறார்கள். இது என்னவகையான அரசியல்?
இதே ஆதரவை இங்குள்ள முற்போக்கு இயக்கங்களுக்கு திமுக கொடுத்ததில்லை. மே17 இயக்கம் இன்றளவும் அதிமுக-பாஜக ஆட்சிகாலத்து வழக்குகளை சுமக்கிறது. ரவுடிப்பட்டியலில் என்னுடைய பெயரை கடந்த 5 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் வைத்திருந்தது திமுக. என்மீதான அந���தியான சிறப்பு விசாரணைகளை தொடர்ந்து நடத்தியது. இதுபோல பல செயற்பாட்டாளர்கள் போராட்ட வழக்குகளைச் சுமக்கிறார்கள். ஆனால் அண்ணாமலைக்கு முழு பாதுகாப்பை கொடுக்கிறார்கள், ஆதரவு கொடுக்கிறார்கள்.
தன் கழுத்துக்கு கத்தி வைப்பது ராஜதந்திரம் ஆகாது. திமுகவின் எதிர்கால தலைவரை வீழ்த்தும் வலிமையை அண்ணாமலைக்கு ஊட்டி வளர்க்கிறது திமுக. இதுகுறித்து நாம் கவலைபப்டப்போவதில்லை. ஆனால், தமிழ்நாட்டின் சீரழிவு சக்தியான அண்ணாமலையை எதிர்த்து நின்று போராடுவது மிக முக்கியமானது. ஆர்.எஸ்.எஸ்சின் கள்ளக்குழந்தையை ஆதரிப்பது, பாம்புக்கு பால்வார்க்கும் முட்டாள்தனத்திற்கு ஒப்பானது. திமுக பைல்ஸ், அறிவாலயத்தை செங்கல்-செங்கல்லாக பிரிப்பேன் எனும் அண்ணாமலையின் கருத்துகளை திமுக ஏற்கிறதா என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும்.
இதுபோன்ற நடவடிக்கைகளையும் தலித்முரசுவும், காட்டாறு அதிதீவிர பெரிதாரிஸ்டும் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்? சாதியை ஒழிக்கும் வழியை அண்ணாமலை வாயிலாக நடைமுறைப்படுத்துகிறார்களா? திமுக் ஆட்சிகாலத்தின் போது கைகட்டி மெளனம் காத்து திராவிடத்தை காக்கிறோம் என்ற சான்றோர்கள் அண்ணாமலை குறித்து வாய்திறக்காமல் மெளனம் காத்தது எதனால் என தெரியாது. ஆனால் மே17 இயக்கம் பெரியாரிய-திராவிட அரசியலுக்கான போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்தே வருகிறது, இனிமேலும் முன்னெடுக்கும். ஆளும்வர்க்கத்தின் தொங்குசதையல்ல பெரியாரியமும், திராவிடமும் என்பதை நன்கு அறிந்தவர்கள் மே17 இயக்கத்தினர்.
அண்ணாமலை மீதான வழக்குகளை திரும்பபெற்று, அவருக்கு சாதகமான நகர்வுகளைச் செய்யும் திமுகவின் முடிவுகளுக்கு மே17 இயக்கத்தின் வன்மையான கண்டனங்கள்.