ரஜினி ஜெயிச்சா தமிழ்நாட்டில் பெரும்பான்மை தாங்களே ஜெயிச்ச மாதிரி மகிழ்ச்சி அடையறோம். அதில் பிரபலங்கள், நடிகர்கள், பணக்காரர்கள், ஏழைகள், சாமானியர்கள் அத்தனை பேரும் அடக்கம். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்காத கொடுப்பினை ❤️
ஒரு பாடலாசிரியருக்கு தன் வரிகளை ஒருவன் இன்ச் பை இன்ச் ரசித்து அதை தன்னிடமே விளக்கும் போது கிடைக்கிற சந்தோஷமே தனி...
அதுவும் இந்த பையன் விளக்கி சொல்ற விதமே நம்மை அந்த பாட்டை திரும்ப கேட்க வச்சுடும் ❤️❤️❤️
ஒரு 40 நிமிடங்கள் கிடைத்தால் comrade talkies ன் வாச்சாத்தி ஆவணப்படம் பார்த்துவிடுங்கள்…
செங்கொடி மீதான மதிப்பு பல மடங்கு உயரும்….💪🏻
https://t.co/scPPPkuz3p
அந்த அச்சம் இருக்கிற வரையில், அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்! 🖤❤️🩵
Scoundrels removed this iconic recreated scene from the movie Parasakthi through CBFC😂
Fascist still fear Anna 🔥🔥
#RememberingAnna#CNAisourDNA#DMK4TN#DravidianModel#DravidianStock
பொதுமக்களுக்கு தொந்தரவா இருக்கு ன்னு கை காச செலவு பண்ணி போராட்டக்காரர்கள அப்புறப்படுத்த வழக்கு போட்ட அந்த உயர்ந்த உள்ளம் படைத்த தேன்மொழி இவங்க தானா….,,???
தொழிலதிர்பர்கள், சினிமா பிரபலங்கள், எஸ்.வி. சேகர், ரங்கராஜ் பாண்டே வகையறாக்களின் சுக துக்க நிகழ்வுகளுகெல்லாம் நேரம் ஒதுக்கி நேரில் செல்லும் தமிழ்நாட்டு முதல்வருக்கு @CMOTamilnadu 10 நாட்களுக்கு மேல் போராடும் தூய்மைப் பணியாளர்கள் குறித்து வாய்திறக்கக்கூட நேரமில்லையா? மனமில்லையா?
சிறு சலனம் இல்லாமல் ஆயிரக்கணக்கான மாணவர்களை படிக்க வைத்துவருகிறார் நடிகர் சூர்யா. பப்ளிசிட்டிக்காக மாணவர்களை பயன்படுத்தாத அவர் மாண்பு முக்கியமானது. அந்த நேர்மை கவனப்படுத்தப்பட வேண்டிய ஒன்று. நிச்சயம் பாராட்டி ஆக வேண்டும்.
டாக்டர்கள், என்ஜினியர்கள், ஆசிரியர்கள் என ஒவ்வொருவர் விவரித்த அனுபவங்களும் நெகிழ்ச்சியை உண்டாக்குகிறது.
'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'
கல்வி கொடுப்பதென்பது வாழ்க்கை கொடுப்பதுதான்.
எட்டாயிரம் என்பது சிறிய எண் இல்லை.
You empowered 8000 professionals.
மனமார்ந்த வாழ்த்துகள் சார் ❤️ @Suriya_offl
ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச் சட்டம் மிக அவசியமானது...அந்த சட்டங்களே ஜாதி வெறியர்களுக்கு சிறிதளவேனும் அச்சத்தை உருவாக்கும்...
அதே நேரத்தில் இந்து மதத்தில் பிறந்த எல்லா ஜாதியினருக்கும் சுய ஜாதி பற்று உண்டு . அந்த பற்றே சுயஜாதி வெறியாக மாறுகிறது..
ஜாதி வெறியின் ஊற்றாக இருக்கிற இந்து மதத்தையும், சுய ஜாதிப் பற்றையும் கேள்வி எழுப்பாமல் வெறும் சட்டங்களால் மொத்த சமூகமும் மாறி விடாது...
ஆணவ படுகொலைகளுக்கு எதிரான தனிச் சட்டம் வேண்டுமென கோரிக்கை வைக்கும் அனைவரும்
நாமோ அல்லது நம் குடும்பத்திலோ ஒருவருக்காவது ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்தி வைப்போம் என்கிற உறுதியை ஏற்போம்...
ஜாதியை காப்பாற்றும் இந்து மத சடங்குகள் ,வழிபாடுகள் , கோவில் திருவிழாக்கள், குல தெய்வ வழிபாடுகள் என அனைத்தையும் புறக்கணிப்போம்...
ஜாதி ஒழிப்பு ,அம்பேத்கர், பெரியார் என்று மேடையிலும் - முகநூலிலும் பேசுவதற்கு முன் நம் வாழ்வில் ஜாதி மறுப்பை கடை பிடிப்போம்...
இயக்கங்கள் முன்பை விட அதிகமாக ஓபிசி இளைஞர்களிடம் ஜாதிக்கெதிரான பரப்புரைகளை முன்னெடுப்போம்
ஜாதி என்கிற மன நிலை சிறிதளவேனும் மாறத் தொடங்கும்...
மாணவர்கள் ஒவ்வொருத்தருடைய கதையும் கேக்கவே அவ்ளோ நெகிழ்ச்சியா இருக்கு… பாராட்டுகளுக்கு அப்பாற்பட்ட செயல் அகரம் செஞ்சிட்டிருக்கறது…
அவன் வீட்டுல இல்லைன்னாலும் அவன் சார்ந்த சமூகத்துல இருந்து எதோ ஒரு மூலையில ஒரு பிள்ளையோட கல்வியையும் ஒரு குடும்பத்துடைய வாழ்கை தரத்தையும் அகரம் மாத்திட்டிருக்கு ன்னு தெரியாம..
கண்ட சங்கி சாதி வெறியனுங்க பேச்ச கேட்டுக்கிட்டு சம்மந்தமே இல்லாம சூர்யா மேல வெறுப்பு கக்கிட்டிருக்கவனுங்கள பாத்தா பரிதாபமா இருக்கு..
#15YearsOfAgaram