18.08.2026
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்களுடன்
சந்திப்பு
~~~~~~~
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார் நம்முடைய முதலமைச்சர் மாண்புமிகு திரு.ஜோசப் விஜய் அவர்கள், அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஆட்சி அமைத்து 100 நாட்கள் வெற்றிகரமாக கடந்திருக்கிறது, 100 நாட்கள் வெற்றிகரமான ஆட்சியை நடத்தியிருக்கிற முதலமைச்சர் அவர்களை வாழ்த்துவதற்கும், இந்த ஆட்சி ஐந்தாண்டு காலம் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்வதற்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்பதை உறுதிப்படுத்துவதற்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து பேசினோம் நன்றி தெரிவித்தோம்!
தமிழ்த்தாய் வாழ்த்துக்குத்தான் அனைத்து
நிகழ்ச்சியிலும் முதலிடம் என்பதை உறுதிப்படுத்தி தீர்மானம் கொண்டு வந்ததற்காகவும் எங்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டோம். அதேபோல நாடாளுமன்ற தொகுதி வரையறை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றி தமிழ்நாட்டில் அரசியல் ரீதியான வேறுபாடுகள் கட்சிகளுக்கு இடையே இருந்தாலும் தமிழர் அனைவரும் ஒரே அணியில் இருக்கிறோம் என்பதை இந்திய ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உணர்த்திய அந்தப் பாங்கையும் நாங்கள் சுட்டிக் கட்டி அவருக்கு எங்கள் பாராட்டுகளை தெரிவித்தோம்!
தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டு தீர்மானங்களையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வழங்கினோம். ஏனென்றால் மாநில உரிமைகள் தொடர்பான அனைத்து தளங்களிலும் தமிழ்நாடு மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை 125 தீர்மானங்களாக வரையறுத்து இருக்கிறோம். அந்த தீர்மானங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் மாநில சுயாட்சியை ஓங்கி உரத்து முழங்குவது என்பதாகும். மாண்புமிகு முதலமைச்சர் மாநில சுயாட்சியை தமிழ்நாடு அரசு தவெக அரசு வலுவாக முன்னெடுக்க வேண்டும்; பேரறிஞர் அண்ணா, கலைஞர் காலத்தில் இந்த கோரிக்கை வலுவாக பேசப்பட்டது போல் அந்த தலைவர்களை தொடர்ந்து நீங்களும் அதே வழியில் மாநில சுயாட்சிக்கான குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதையும் முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
தமிழ்த்தேசியம் என்பது வெறும் மொழி உணர்வு இனஉணர்வு அல்ல பிற மொழி பேசும் இனத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலும் அல்ல. சாதி ஒழிப்பு, மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, அகில இந்திய அளவில் தேசிய இனங்களின் ஐக்கியம் ஆகியவற்றை முன்னிறுத்துவது தான் தமிழ்த்தேசியம் என்பதை உணர்த்தும் மாநாடாக இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம்.
அந்த வகையில் இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக அமைந்தது. கூடுதலாக மேகமலை மற்றும் அமுதன் படுகொலை ஆகிய பிரச்சனைகளையும் முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு சென்றோம். மேகமலையில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து அங்கே வசித்து வரும் மக்களை விவசாயம் செய்து வரும் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தப்படக்கூடாது. அவர்களுக்கு எதிராக அளிக்கப்பட்டிருக்கிற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யும் என்ற கருத்தை ஏற்கனவே சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. நிர்மல் குமார் அவர்கள் கூறியிருக்கிறார். அதனை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். சீராய்வு மனுவை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் அந்த மக்களுக்கு உரிய நீதியை பெற்று தர வேண்டும் என்பதையும் முதலமைச்சரிடம் எடுத்து சொல்லி இருக்கிறோம்.
அமுதன் படுகொலையில் போதை பொருள் புழக்கம் இருப்பதாக அமுதனின் பெற்றோர் உள்ளிட்ட பலரும் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிற நிலையில் அந்த குறிப்பிட்ட வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்பதையும் தாண்டி போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு போதை பொருள் ஒழிப்பு அதிரடி படை ஒன்றை உருவாக்கிட வேண்டும் அதற்கு முதலமைச்சரின் கூடுதல் கவனம் தேவை என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே முன் வைத்திருக்கிறோம்.
The Text of the D.O. Letter dated 28.7.2026, addressed to the Hon'ble Prime Minister of India Thiru. Narendra Modi, from the Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay, regarding Mekedatu Dam.
#CMJosephVijay
தருமபுரி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘தேர்தல் அங்கீகாரம், தேர்தல் நிதியளிப்பு விழா – எழுச்சித்தமிழர் பிறந்த நாள் விழா – மதச்சார்பின்மை காப்போம் பேரணி தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்’ என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.
இவ்விழாவில் இன்று பங்கேற்று உரையாற்றினேன். மாண்புமிகு அமைச்சர் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
இவ்விழாவில் விசிக தர்மபுரி மேற்கு மற்றும் மைய மாவட்டங்களின் சார்பில் தேர்தல் நிதியாக ரூபாய் 50 லட்சம் வழங்கினர்.
ஏற்கனவே விசிக தர்மபுரி கிழக்கு மாவட்டத்தின் சார்பில் ரூபாய் 31.50 லட்சம் வழங்கினார்கள்.
தர்மபுரி (கிழக்கு, மேற்கு, மையம்) ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பில் இதுவரை ரூபாய் 81,50,000 தேர்தல் நிதியாக வழங்கியுள்ளார்கள்.
மேலும், அடுத்தடுத்து வழங்குவதாகவும் உறுதியளித்திருக்கிறார்கள்.
பல்லாயிரக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.
உச்சநீதிமன்ற வளாகத்திலேயே இந்திய தலைமை நீதிபதி @JusticeBRGavai அவர்களை அவமதிக்கும் நோக்கில் அவரை நோக்கி செருப்பை வீசியுள்ள சனாதன வெறிபிடித்த வழக்கறிஞரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம்.
அந்த நபரின் வழக்கறிஞர் தகுதியை உடனடியாக ரத்து செய்யவேண்டும். அத்துடன், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் அவரைக் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டும்.
செருப்பை வீசும்போது 'சனாதன தருமத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என அந்நபர் கூச்சலிட்டதாகத் தெரிகிறது. இதிலிருந்து அவர் ஒரு சனாதன சங்கி என்பது உறுதியாகிறது.
புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளை உள்வாங்கியுள்ள சனநாயக சக்தியாக விளங்கும் தலைமை நீதிபதியின் மீது இங்ஙனம் வெறுப்பை உமிழ்வது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையே ஆகும். மேலும், ஒட்டுமொத்த நீதித்துறைக்கே நேர்ந்த அவமானமாகும்.
நாடெங்கிலும் சனாதனவெறியர்களின் கொட்டம் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகவுள்ளது.
இந்நிலையில், சனாதனத்தை வேரறுக்க சனநாயக சக்திகள் ஓரணியில் திரளுவது காலத்தின் தேவையாக உள்ளது.
@PMOIndia@AmitShah
திருமண வாழ்வில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் கழகத் தலைவர் - முதலமைச்சர் அண்ணன் திரு. @mkstalin அவர்களுக்கும், அண்ணி திருமிகு. துர்கா ஸ்டாலின் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விவசாயிகள் குறைதீர்க்கும் வழிமுறைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன்
அ) அரசாங்கத்திடம் விவசாயிகள் குறை தீர்க்கும் குழு உள்ளதா, அப்படியானால், அதன் விவரங்கள் ;
(ஆ) திட்டங்களை செயல்படுத்துவது, பாகுபாடு அல்லாமல் சலுகைகளைப் பெறுவது , தாமதமாவது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து எளிதில் அணுகி புகார் அளிக்கக்கூடிய வகையில் விவசாயிகளின் குறை தீர்க்கும் வழிமுறையின் விவரங்கள் என்ன?
(இ) இந்தப் புகார்கள் எந்த அளவிற்குத் தீர்க்கப்படுகின்றன, குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் ;
(ஈ) பல திட்டங்கள் மத்திய அரசின் நிதியுதவியுடன் இருந்தாலும், மாநிலங்களால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதிலும் குறிப்பாக உத்திரபிரதேசத்தை கருத்தில் கொண்டு, மாநில அரசுகள் இந்த மத்திய திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதை ஒன்றிய அரசு எவ்வாறு உறுதி செய்கிறது? ;
(இ) தற்போது மாவட்ட வாரியாக, குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் வழிமுறை நடைமுறையில் உள்ள இடங்கள்?
(ஈ) உச்ச நீதிமன்றம் கடந்த மூன்று ஆண்டுகளில் எப்போதாவது ஏதேனும் விவசாயிகள் குறை தீர்க்கும் குழுவை அமைத்துள்ளதா, அப்படியானால், அதன் விவரங்கள்
ஆகிய கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பினேன் அதற்கு மாண்புமிகு
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை ஒன்றிய இணை அமைச்சர் ராம்நாத் தாகூர்
அவர்கள் " மையப்படுத்தப்பட்ட பொது குறை தீர்க்கும் மற்றும் கண்காணிப்பு அமைப்பு (CPGRAMS) என்பது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் 24x7 ஆன்லைன் தளமாகும். இது விவசாயிகள் உட்பட குடிமக்கள் அனைவரும் மத்திய அரசின் எந்தவொரு அமைச்சகம்/துறை, அதனுடன் இணைக்கப்பட்ட அல்லது துணை அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மீது குறைகளை பதிவு செய்ய உதவுகிறது. CPGRAMS ஒற்றை, ஒருங்கிணைந்த போர்ட்டலாக செயல்படுகிறது. 60க்கும் மேற்பட்ட அமைச்சகங்கள்/துறைகள் மற்றும் 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் (உத்தரபிரதேசம் உட்பட) ஆகியவற்றுக்கு அணுகுமுறையில் பங்களிப்பு வழங்குகிறது." எனக் குறிப்பிட்டு பின்வருமாறு எழுத்துப்பூர்வமாக விவரங்களை வழங்கியுள்ளார்.
இன்று
பிறந்தநாள் காணும்
பிறவிப் போராளி
விடுதலைச் சிறுத்தைகள்
கட்சித் தலைவர்
தொல்.திருமாவளவனுக்கு
வாழ்த்துக்கள்
ஒவ்வொரு பிறந்தநாளிலும்
ஒரு மனிதன்
புதிதாய்ப் பிறக்க வேண்டும்
சமூகம் - சூழல்
கடமைகள் - எதிர்ப்புகள்
ஒரு மனிதனைப்
புதிதாய்ப் பெற்றெடுக்கும்
போராடுகிறவனும்
சிந்திக்கிறவனும்
புதிது புதிதாகவே
பெற்றெடுக்கப்படுவான்
திருமாவளவன்
தன்னைப்
புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார்
அடுத்த உயரம் நோக்கி
அவர் வளரவேண்டும்
ஒடுக்கப்பட்ட மக்களைக்
கல்வித் திசையில்
ஆற்றுப்படுத்துங்கள் தோழரே!
நூற்றாண்டுகளாய்
இறுகிக்கிடக்கும் இருட்சுவரைத்
துளைத்து அழித்துத்
துடைத்தெடுப்பது
அருங்கல்வி என்னும்
அக்கினிக் கணைதான்
சகோதர சமுதாயத்தைக்
கல்வியால் மீட்டெடுப்போம்
உங்கள் பிறந்தநாள் நீளட்டும்
நடக்கும் திசையெல்லாம்
நன்மையே சூழட்டும்
@thirumaofficial | #TholThirumavalavan
இந்திய அரசியல் தளத்தில் தவிர்க்க முடியாத பெரும் அரசியல் ஆளுமை, பெரும் மதிப்புக்குறிய தலைவர், அண்ணன் திரு தொல்.திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்❤️😊@thirumaofficial
எனது சிற்றன்னை செல்லம்மாள் (78)அவர்கள் சற்றுமுன் இயற்கை எய்தினார்.
கடந்த ஆக 07 அன்று மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு சுயநினைவு இழந்தநிலையில் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமிசீனிவாசன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மிகுந்த கவனத்தோடு மருத்துவர்கள் தீவிர கண்காணிப்புடன் சிகிச்சை அளித்தனர். எனினும், பலனின்றி தற்போது காலமானார்என்பது
பெருந்துயரமளிக்கிறது.
பள்ளிப் பருவத்தில் எனக்கு ஆடை உடுத்தி, தலையில் எண்ணெய்த் தடவி இரட்டை சடைபின்னிவிட்டுப் பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாய்! தந்தை என்னைக் கண்டிக்கும் போதெல்லாம் எனக்காக வாதாடிய தாய்! வீட்டில் மூத்த மகன் என்பதால் 'பெரியதம்பி, பெரியதம்பி' என்று என்னைச் செல்லமாக அழைத்த தாய்! நான் பட்டவகுப்பை முடித்த காலத்திலிருந்து, 'படித்தது போதும் கல்யாணம் பண்ணு பா' என அறிவுறுத்திய தாய்! பத்தாண்டுகளுக்கு முன்னரே பக்கவாதத்தால் உடல் நலிவுற்று நினைவு தடுமாறி வீட்டிலேயே முடங்கிய நிலையிலும் எப்போதாவது நான் ஊருக்குச் செல்லும்போது, என் குரல் கேட்டதும் 'தம்பீ தம்பீ' என்று ஓடிவந்து என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு அன்பைப் பொழிந்த தாய்! இன்று எம்மோடு இல்லை என்பது வாழ்வே வெறுமையாய் உள்ளது. துக்கத்தால் மனம் கனக்கிறது.
அப்பா(2010), அக்கா,(2020), சின்னம்மா (2025)என அடுத்தடுத்து இழப்புகளை எதிர்கொள்ளும் அவலம். துயரங்களைத் தாங்கும் நிலை.
அம்மாவுக்கு எனது வீரவணக்கம்!
ஒரு சீட்டா ரெண்டு சீட்டாங்றது
எனக்கு முக்கியமில்ல.!
நாளைக்கே தேர்தல் பாதையே
வேணாம்னு தூக்கி எறிஞ்சிட்டு போயிருவேன்.!
அடித்தட்டு விளிம்புநிலை மக்களின் விடுதலைக்காக எந்த முடிவையும் எடுக்க என்னால் முடியும்.!
இந்த முடிவெடுக்கும் "தில்லு" தமிழ்நாட்டு அரசியலில்.
எவனுக்காவது இருக்கா.
#ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை இந்திய அரசு கண்டிக்க வேண்டும்!
மோடி அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை!
-----------------------------
உலக அமைதியை அச்சுறுத்தும் வகையில் ஈரான் நாட்டின் மீது இராணுவத் தாக்குதல் நடத்தியிருக்கும் இஸ்ரேலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம். இந்திய ஒன்றிய அரசு இஸ்ரேல் நாட்டின் இந்த இராணுவத் தாக்குதலைக் கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
ஈரானின் அணு சக்தி சோதனைகளைத் தடுத்து நிறுத்தும் வகையில் ஈரானின் முக்கிய நகரங்கள் மீதும் அணுசக்தி ஆராய்ச்சி மையங்களின் மீதும் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கிறது. இதில் ஈரான் நாட்டைச் சேர்ந்த முக்கியமான அணு விஞ்ஞானிகளும், இராணுவத் தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். தன்னிடம் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இஸ்ரேல் அத்தகைய வலிமையை ஈரான் பெற்றுவிடக்கூடாது எனத் தடுப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. உலக அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இஸ்ரேல் நாட்டின் இந்த இராணுவ நடவடிக்கையை ஐநா பொதுச் செயலாளர் கண்டித்துள்ளார். ரஷ்யா, சீனா, சவுதி அரேபியா என உலகின் பல்வேறு நாடுகளும் கண்டித்துள்ளன. ஆனால் இந்தியா அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீனப் பிரச்சினையிலும் இஸ்ரேலையே ஆதரித்த மோடி அரசு இப்போதும் இஸ்ரேலை ஆதரிக்கும் வகையில் கள்ள மௌனம் காக்கிறது.
இதுவரை இந்தியா கடைப்பிடித்து வந்த அயலுறவுக் கொள்கையில் மோடி அரசு ஏற்படுத்திய மாற்றம் காரணமாகவே இந்தியா - பாகிஸ்தான் போரின் போது எந்த ஒரு நாடும் இந்தியாவை ஆதரிக்க முன்வரவில்லை. மோடி அரசின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டின் காரணமாக உலக அரங்கில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டது. இப்போதும் இஸ்ரேலை கண்டிக்காமல் மௌனம் காப்பதன் மூலம் மோடி அரசு மீண்டும் தவறிழைக்கிறது.
ஈரான் மீது இஸ்ரேல் நடத்தியிருக்கும் தாக்குதல் மூன்றாவது உலக யுத்தத்துக்கு வழி கோலக் கூடும். அது மட்டுமல்லாமல் உலக அளவில் அது கடுமையான பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தும். அந்த நெருக்கடியில் இந்தியாவும் பாதிக்கப்படும்.
எனவே, இந்தப் பிரச்சனையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் இந்தியா இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலை கண்டிக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.