“வா போகலாம்…” என்றுதான் அழைத்தார். வண்டி வயநாட்டில் போய் நின்றது. வினோத், அவருடைய உதவி இயக்குநர்கள் இருவர், நான் என நான்கே பேர். விஜய் சார் பட கதை விவாதம் என்றார்கள். பெரிய ஹோட்டலில் ரூம் போட்டுத்தானே கதை விவாதம் நடக்கும்… இவர் ஒரு மலைப்பகுதியின் குடிசை வீட்டுக்குக் கூட்டிப் போனார். எளிய இடம், எளிய உணவு எனக் கிட்டத்தட்ட ஒரு சாமியார் கணக்காகத்தான் வாழ்ந்தார். பேய்த்தனமாகப் பேசி, விவாதித்து முழு நிறைவு வந்த ஒரு நாளில், நிம்மதியாய் பாறைகளின் மேல் படுத்து உறங்கினார் வினோத்.
“இந்தப் பூவுலகில் நாமெல்லாம் புழு, பூச்சிகளைவிடச் சிறியவர்கள்…” எனச் சொல்லிச் சொல்லி, எதையுமே தலைக்கு ஏற்றிக்கொள்ளா தன்மையோடு வாழும் தம்பி வினோத் இன்னும் பல உச்சங்கள் எட்டுவார். ‘ஜனநாயகன்’ வெல்லட்டும்; ஜனநாயகம் பூத்துக் குலுங்கட்டும்!
.@CMOTamilnadu@vdsatheesan
Tonnes of #KeralaWaste, largely plastic waste, used car parts, seat covers & electrical wires, have allegedly been dumped on govt land at Kadayam in Tenkasi district.
This is major incident since the National Green Tribunal, acting on a TNIE report, directed Kerala to take back tonnes of illegally dumped biomedical waste from several villages in Tirunelveli in December 2024.
In the aftermath, Tamil Nadu amended Goondas Act to enable the preventive detention of those involved in illegal biomedical waste dumping.
@CollrTenkasi@tnpoliceoffl
Madrid Vs Madurai
Spain capital Madrid's bullfighting arena & Madurai's
Jallikattu arena, two cultures, two distinct traditions.
Different histories, united by heritage and identity.
Cultural tourism takes many forms. From Jallikattu to its timeless temples and vibrant traditions, Tamil Nadu @tntourismoffcl offers a rich and diverse cultural experience.
@incredibleindia@ttdcofficial
பொலிவியா, அர்ஜென்டினாவில் நீர்வளத்தைச் சூறையாடி, அம்மக்களின் போராட்டத்தால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகத்தைத் தாரைவார்ப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
சேலம் மாநகராட்சியின் குடிநீர் வியோகத்தை 25 ஆண்டுகளுக்கு சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்த்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அர்ஜென்டினா மற்றும் பொலிவியா நாடுகளுக்குள் குடிநீர் விநியோகம் செய்வதாய் உள்நுழைந்து, தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கி, அம்மண்ணின் நீர்வளத்தைச் சூறையாடி, அந்நாட்டு மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு, சேலம் மாநகரத்தின் நீர் விநியோகத்தை வழங்கியிருக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; அது புல், பூண்டு, பூச்சி, ஆடு, மாடு, கரடி, மான், புலி, சிங்கம் என உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்குமான உயிருடைமை. அதனை மனிதர்களுக்கு மட்டுமானதாக்கி, விற்பனைப்பண்டமாக மாற்றி, சந்தைப்படுத்திப் பொருளீட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. நீரை விற்பனை செய்யும் மானுடகுலத்தின் செயல் உலக உயிர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். புட்டிகளிலும், போத்தல்களிலும் அடைக்கப்பட்டுள்ள நீரை மனிதர்கள் விலைகொடுத்து வாங்கிப் பருகிவிட முடியும். காக்கையும், குருவியும், மைனாவும், சிட்டும் தனது தாகத்திற்கு என்ன செய்யும்? எனும் கேள்வியை உளச்சான்றோடு ஒவ்வொரு குடிமகனும் எழுப்ப வேண்டும். தண்ணீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதும், குடிநீரை சந்தைப்பொருள் ஆக்குவதும் ஏற்கவே முடியாத சனநாயகத் துரோகம். வரிசெலுத்தி, வாக்குச் செலுத்தி ஓர் அரசை நிர்மாணிக்கும் குடிமக்களுக்கு தூய குடிநீரைத் தங்குதடையின்றித் தர வேண்டியது ஒரு அரசின் தலையாயப் பொறுப்பும், முதன்மைக் கடமையுமாகும்.
கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டு, அதற்கெதிராகப் பரப்புரையும், போராட்டமும் செய்து வரும் நிலையில், தற்போது சேலம் மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை அதே சூயஸ் நிறுவனத்திடம் தவெக அரசு கையளித்திருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய் அவர்கள் குடிநீர் வழங்குவதைத் தனியாருக்குத் தாரைவார்க்க உத்தரவிட்டது ஏன்? பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தால் குடிநீர் விநியோகத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும்; இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு அரசு இயந்திரத்தால் செய்ய முடியாதா? பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் இலாபத் தேவைக்குத்தான் வேலைசெய்வார்களே ஒழிய, மக்கள் சேவைக்கு ஒருநாளும் வேலை செய்ய மாட்டார்கள் எனும் அடிப்படைப் புரியாதா? நீர்வளத்தையும், நீராதாரங்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் கையளித்தால், நீர் இறையாண்மை முழுக்க முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். அவர்கள் சொல்கிற விலைக்குக் குடிநீரை மக்கள் வாங்க வேண்டியப் பேராபத்துமிக்க சூழல் நாளை உருவாகும். இது வருங்காலத் தலைமுறையின் நலவாழ்வினைப் பன்னாட்டு நிறுவனத்திடம் அடமானம் வைக்கும் பேரபாயம். அர்ஜென்டினாவிலும், பொலிவியாவிலும் சூயஸ் நிறுவனம் செய்த மானுடகுலக் கொடுமைகள் வரலாறாக விரிகையில், கண்முன்னே சாட்சியாக இருக்கையில், அந்நிறுவனத்திடமே சேலம் மாநகரத்தின் நீர்விநியோகத்தை வழங்குவது மக்கள் விரோதப்போக்கின் உச்சமாகும்.
ஆகவே, சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, மாநில அரசே தரமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
From majestic elephants and graceful flamingos to the vibrant Karakattam and Karuppasamy folk traditions, Tamil Nadu is a perfect blend of nature, wildlife, and rich cultural heritage.
@tntourismoffcl@ttdcofficial@TN_Archaeology@incredibleindia
Photos L Ramachandran
People often ask, "What have you achieved in your life?"
The answer is in this video.
My writ petition, W.P. No. 27356 of 2019, led to action against around 300 illegal brick kilns in Coimbatore. Today, large herds of elephants are reclaiming their habitat. Black leopards and even tigers are returning to these landscapes.
There can be no greater reward than witnessing nature heal itself. These are the moments that will make me dance all the way to my grave with a smile.
@tnforestdept@RvRanjithtvk@CMOTamilnadu
இதற்கு மிகுந்த சிரத்தையோடு எட்டு பக்க கட்டுரையில்தான் என்னால் விடை அளிக்க முடியும் !!!
'முதல் காதல்' குறித்து கவிஞர்களும் இலக்கியங்களும் சிலாகிப்பதைப் போல், காசு சேர்த்து தனியாக பட்டிவீரன்பட்டி மதி மெஸ்ஸில் சாப்பிட்ட பரோட்டாவின் சுவையை எல்லா ஊர்களிலும் தேடிக் கொண்டே இருக்கிறேன் !!
மதுரை ஒத்தக்கடை முனியாண்டி விலாசின் அதே பரோட்டா சுவை ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உண்ணக் கிடைத்தது தமிழர்களின் உணவியல் அதிசயம்.
ராஜபாளையத்தில் நான் கண்டறிந்த ஆய்வு முடிவின்படி, ஒரு கடையில் பரோட்டாவும் இன்னொரு கடையில் சால்னாவும் சூப்பராக இருக்கும். அதனால் எப்போதும் இரண்டு கடைகளில் பரோட்டா வாங்கி Mix Match செய்த அனுபவத்தோடு இந்த கட்டுரையை ஒரு நாள் எழுதி முடிக்கலாம்..
Upon landing in Rome, had the opportunity to meet Prime Minister Meloni over dinner followed by a visit to the iconic Colosseum. We exchanged perspectives on a wide range of subjects. Looking forward to our talks today, where we will continue the conversation on how to boost the India-Italy friendship.
@GiorgiaMeloni
When a computer tracks the Indian classical dancer in this video, it picks up perfect circles, triangles, and curves in every movement. There are exactly 108 of them. All 108 were written into a manual over 2,000 years ago.
That manual is the Natya Shastra. Six thousand verses, written somewhere around 200 BCE. It describes 108 specific dance movements for Bharatanatyam, one of the oldest dance forms in India. Each movement spells out three things: where your hands go, what angle your body holds, and the exact path your legs trace. Roughly 150 step combinations grow out of those 108 base movements. A trained dancer spends years learning 70 to 80 of them.
Watch the dancer's legs in the video. The bent-knee squat creates a diamond shape. Palms together make a triangle. When researchers plotted these positions in three dimensions this year, they found the moving body carves out twisted spirals and bowl-shaped curves, the kind of shapes you see in an engineering textbook, not a dance studio. Every limb holds a specific angle and moves a measured distance.
The rhythm is math too. A 7-beat song gets filled with dance steps of 3 and 4. Scale that to 35 beats and the groups of 3 and 4 repeat five times. Choreographers work out these splits in their heads while performing live. All 108 movements are also carved into the stone walls of a 12th-century temple in Tamil Nadu called Chidambaram, many panels still carrying the original Sanskrit description next to them. A choreography textbook in granite, still legible after 900 years.
A 2013 study put 25 people on a walkway rigged with motion-capture cameras. Every human stride has two parts: when your foot is on the ground and when it swings forward. The ratio between those two parts came out to 1.620. The golden ratio is 1.618. Your foot lifts off at 61.8% of every step you take, and it has done this your entire life. A Bharatanatyam dancer takes that same built-in proportion and amplifies it across 108 movements, each one tracing shapes that were set down in writing over 2,000 years before the tracking software in this video existed.
do me a favour.
எல்லாரும் "ஜி.நாகராஜன்னோட" சிறுகதை,நாவல்,குறுநாவல் வாங்கி படிங்க!.
குறைந்தப்பட்சம் மூணு புக்ஸ் தான் வரும்..
ஆன ஒரு பேரனுபவத்தை கொடுக்கும்..
அப்படி ஒரு ரைட்டர் அவரு..
🛐🛐
Claude Pro-க்கு காசு கட்டுனேன், Free Version-ஐயே சரியா Use பண்ணதே இல்லன்னு இப்போதான் புரிஞ்சுது!
Subscription வாங்கிட்டு “நான் AI-ல expert” னு feel பண்ணிட்டிருந்தேன்.
Anthropic Academy இது என்னன்னு தெரியுமா?
Anthropic, Claude-ஓட parent company. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு முக்கியமான விஷயம் announce பண்ணாங்க.
Anthropic Academy.
13-க்கும் மேற்பட்ட official courses. Real certificates.
Fee? ஒரு ரூபாய் கூட கிடையாது.
Zerodha Varsity பார்த்திருக்கீங்களா? Stock market கத்துக்க, Zerodha இலவசமா எல்லாத்தையும் கொடுத்தாங்க beginners முதல் options traders வரை.
இது அதே concept. ஆனா AI-க்கு.
Claude 101 ரொம்ப Basic-ஆ இருக்கும்னு Skip பண்ண நினைச்சேன்! நான் daily use பண்றேன். Beginner course என்னால skip பண்ணிடலாம்னு நினைச்சேன்.
100+ hours Claude use பண்ணிய கத்துகாத நெறைய nuances, prompting techniques கத்துட்டேன்.
என்னெல்லாம் இருக்கு Course Catalogue-ல?
- Claude 101: Prompting fundamentals. Fundametals-நு நெனச்சு பண்ணாதீங்க.
- Claude Code in Action: Developers-க்கு இது goldmine. Code எழுத, debug பண்ண, automate பண்ண எல்லாத்துக்கும்.
- Building with the Claude API: 8+ மணி நேரம் content. Production-grade applications எப்படி build பண்றதுன்னு step by step கத்துக்கலாம்.
- Intro to MCP + Advanced MCP: AI agents-ஐ external tools-உடன் connect பண்றது எப்படின்னு கத்துக்கலாம். இது future. இப்பவே கத்துக்கணும்.
- Agent Skills: Workflows automate பண்றது. Real leverage இங்கிருந்துதான் ஆரம்பிக்குது.
- Claude on AWS Bedrock & Google Vertex AI: Enterprise-scale-ல AI deploy பண்றவங்களுக்கு இது must.
Daily Use பண்றோம், So தெரியும்னு இருக்காதிங்க. இந்த Thinking-தான் Dangerous!
ChatGPT-ல “write me an email” type பண்றது வேற. Prompting engineer-ஆ, API developer-ஆ, Agent builder-ஆ இருக்கறது வேற உலகம்.
இந்த இரண்டுக்கும் நடுவுல இருக்கற gap இப்போவே பெரிசு. இனிமேல் இன்னும் பெரிசாகும்.
யாரு இதை Use பண்ணணும்? எல்லாரும் use பணலாம்.
இந்த weekend-க்குள்ள Anthropic Academy-ல ஒரு course enroll பண்ணுங்க.
இலவசம். Certificate கிடைக்கும்.
Time waste ஆகாது.
https://t.co/3MSI3PFODD
#AnthropicAcademy #AI #claude
"படிக்கலாம் என்கின்ற எண்ணம்கூட தோற்றுப் போகிறது..." 📉📚
எவ்வளவு உண்மையான வார்த்தைகள்!
நிறைய மாணவர்கள் படிக்காமல் இருப்பதற்குக் காரணம் அவர்களுக்குப் படிக்கப் பிடிக்காதது அல்ல. இந்தக் கேள்விகளுக்கான விடை தெரியாததே காரணம்:
1️⃣ எப்படிப் படிப்பது? (How to study?)
2️⃣ எங்கிருந்து தொடங்குவது? (Where to start?)
3️⃣ படித்ததை எப்படி நினைவில் கொள்வது? (How to retain?)
4️⃣ அதை எப்படி வெளிப்படுத்துவது? (How to present?)
இந்தக் கேள்விகள் ஒரு மலையாக மாறி அவர்களை அழுத்துகின்றன.
எனது "விதையெல்லாம் மரமாகும் (அ) கற்பது எப்படி?" நூலைப் படித்த ஆசிரியர் ஒருவர், இந்த நிலைக்கு ஒரு தீர்வை அடையாளம் கண்டிருக்கிறார்.
அவர் சொல்வதைக் கேளுங்கள்:
"இத்தனை கேள்விகளுக்கும் ஒரு புத்தகத்தில் விடை இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறது இந்தப் புத்தகம்.
பயணி தரனின் பயணம் மிக மென்மையானது; அது மூளையின் நரம்புகளுக்குள் ஊடுருவுகிறது."
அறிவியல் என்பது மூளையைக் கசக்கக் கூடாது; அது மூளையின் நரம்புகளுக்குள் மென்மையாக ஊடுருவ வேண்டும்.
அதைத்தான் நாவல் வடிவத்தில் இருக்கும் இந்த நூல் செய்கிறது. 🧠🌱
இவ்வளவு கவித்துவமாக விமர்சித்த அந்த ஆசிரியருக்கு நன்றிகள்!
புத்தகத்தைப் பெற:
📕 விதையெல்லாம் மரமாகும் (அ) கற்பது எப்படி?
GPay: 9444960935 (பாரதி புத்தகாலயம்)
விலை: ₹190 (டெலிவெரி இலவசம்)
#Education #StudentProblems #LearningSuccess #TamilBooks #BrainScience #PayaniDharan
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
2025 - இந்த ஆண்டு வாசிக்க முடிந்த புத்தகங்கள் :
* சாதியைப் புரிந்துகொள்ளுதல் - கெயில் ஓம்வெத்
* அம்பேத்கரைப் பாடிய பாரதிதாசன் - மணி கோ பன்னீர்செல்வம்
* ஈரோட்டுப்பாதை சரியா? - ஜீவா (ஏற்கெனவே படித்தது என்றாலும் விவாதங்களையொட்டி மீண்டும் படித்தது)
* ஆதி திராவிடர் வரலாறு - ஆ.பெருமாள் பிள்ளை
* ஆதிதிராவிடர்களைப் பற்றிய வரலாற்றுக்குறிப்புகள்
* ஆதி திராவிடர் மாநாடுகள்
* சனாதன தர்மம் ஒரு விசாரணை - தேவ்தத் பட்நாயக்
* சாதி : தோற்றமும் வளர்ச்சியும் ஓர் அறிமுகம் - சுரிந்தர் எஸ்.ஜோத்கா
* தமிழ்த்தேசியம் : ஏன் எதற்கு எப்படி? - தொகுப்பு நூல்
* உத்தம வில்லன் - யமுனா ராஜேந்திரன்
* இஸ்லாமோபோபியா - சில அடிப்படைப் புரிதல்கள்
* பெரியவர் தமிழரசன் - பெ.சிவசுப்பிரமணியம்
* சட்டைக்காரி - கரன் கார்க்கி
* களத்தில் நின்றவை - ’தடா’ மதியுடனான நேர்காணல்களின் தொகுப்பு
* தமிழின் சம உரிமைக்கான போராட்டம் - ப. திருமாவேலன், சுகுணா திவாகர், மருதையன், க. காமராசன்
* பாலமாகி நிற்கும் பணி - யமுனா ராஜேந்திரன்
* நவதாராளவாதம் - அ.மார்க்ஸ்
* திரையுலகில் திராவிட இயக்கம் - பாலு மணிவண்ணன்
* படுபட்சி - டிலுக்ஸன் மோகன்
* இந்தியா காட்டும் ஆன்மிகத்தோற்றம் : நம்பலாமா வேண்டாமா? - மீரா நந்தா
* அயோத்திதாசர் - பெரியார் - அம்பேத்கர் - சி.சரவணகார்த்திகேயன்
* ஏன் தமிழ் இந்து? - பெ.மணியரசன்
* நேரு மேல் இவர்களுக்கு ஏன் இந்த கோபம்? - நா.வீரபாண்டியன்
* விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்? - கி.தளபதிராஜ்
* கமலி - சி.மோகன்
* சென்னையில் பாபாசாகேப் அம்பேத்கர் ஆற்றிய உரைகள்
* நக்சலைட் இயக்கம் : நிழலும் வெளிச்சமும் - கே.பாலகோபால்
* அஷேரா - சயந்தன்
* சாதிப்பெருமை - மனோஜ் மிட்டா
* அகஸ்தியர் என்னும் புரளி - மூ. அப்பணசாமி
* காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க 75 தொகுப்பு நூல்
* நக்சல்பாரி : ஒரு கிராமத்தின் பெயர் மட்டுமல்ல - இரா.முருகவேள்
* விசில் - நிவேதிதா லூயிஸ்
* வரலாற்று நாயகன் தோழர் முகுந்தன் என்ற உமா மகேஸ்வரன் - மா.கண்ணதாசன்
* 1990 - லைடன் தீவு, மண்டை தீவு : படுகொலைகளும் புதைகுழிகளும் - ஷோபாசக்தி
வானம் ஏன் நீலமாக இருக்கிறது, சோப்பு நுரையில் ஏன் வானவில் தெரிகிறது 🌈 என எந்த சூத்திரமோ, கணிதமோ இல்லாமல் இயற்பியலை மிக எளிமையாக புரிய வைத்த புத்தகம். பள்ளியில் இப்படி யாரும் எனக்கு சொல்லித் தரவில்லையே என ஏங்க வைத்தது. வாய்ப்பிருந்தால் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள்!
2022ல் ஆனந்த விகடனில் சாரு மஜூம்தாரைப் பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுதினேன். சாரு கொல்லப்பட்ட 50வது ஆண்டு அது. மார்க்சிய-லெனினிய இயக்கத்தில் இருந்த, இருக்கும் பல தோழர்களுக்கு சாரு மஜும்தார் பற்றிய கட்டுரை ஆனந்த விகடன் போன்ற ஒரு வெகுஜன இதழில், அதுவும் நான்கு பக்கங்களுக்கு வெளியானது ஓர் இன்ப அதிர்ச்சி. பலரும் நெகிழ்ச்சியுடன் தொடர்புகொண்டு பாராட்டினர்.
கீழ்வெண்மணி படுகொலைகளை நிகழ்த்திய கோபாலகிருஷ்ணநாயுடுவைக் கொன்ற நக்சல்பாரி தோழர்கள் குறித்த வெப்சீரிஸ் திரைக்கதைக்காக, கீழ்த்தஞ்சையில் கள ஆய்வு செய்தபோது அந்த அழித்தொழிப்புடன் தொடர்புடைய பல தோழர்களைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் பகிர்ந்துகொண்ட பல தகவல்கள் வெளிப்படையாகச் சொல்ல முடியாத ஆச்சர்யமானவை என்பது ஒருபுறம். இன்னொருபுறம் இயக்கம் தொடர்பான தகவல்களிலும் ஒருவர் சொன்னதற்கும் இன்னொருவர் சொல்வதற்குமிடையில் முரண்பாடுகள் இருக்கும். காரணம் நக்சல்பாரி இயக்கம் ஒரு தலைமறைவு இயக்கம். அந்த இயக்கத்தில் இருந்தவர்கள் பற்றிய முறையாக ஆவணப்படுத்தப்பட்ட, தொகுக்கப்பட்ட வரலாறு கிடையாது. பல விஷயங்கள் செவிவழிச்செய்திகள்தான்.
பொதுப்புத்தியிலோ ‘நக்சலைட்’ என்றால் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் என்ற பிம்பத்தை ஊடகங்களும் திரைப்படங்களும் உருவாக்கியிருந்தன.
ரஜினி நடித்த ‘ராணுவ வீரன்’ திரைப்படத்தில் சிரஞ்சீவி நக்சலைட்டாக நடித்திருப்பார். ஒருவரை நக்சலைட் இயக்கத்தில் சேர்த்துக்கொள்ள வித்தியாசமான சோதனையை வைத்திருப்பார்கள். பழுக்கக் காய்ச்சிய இரும்பைக் கையில் சிலநிமிடங்கள் பிடித்திருக்கவேண்டும். அப்போதுதான் இயக்கத்தில் சேர்ப்பார்கள். அதாவது எந்தச் சூழலிலும், எந்த சித்திரவதையிலும் அவர்கள் ரகசியத்தை சொல்லிவிடக்கூடாது என்பதற்கான பரிசோதனையாம் அது. இப்படிப்பட்ட கேலிக்கூத்துகள் ஒருபோதும் நக்சல்பாரி இயக்கத்தில் நடந்தது கிடையாது.
படத்தை தயாரித்தது, நக்சல்பாரிகளை வேட்டையாடிய எம்.ஜி.ஆர் ஆட்சியின் அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனின் ‘சத்யா மூவீஸ்’. திரைப்படத்தையே காவல்துறைக்கு சமர்ப்பித்திருப்பார்கள்.
‘குருதிப்புனல்’ படத்தில் கமல்ஹாசன் நக்சல்பாரிகளைப் பெண்பித்தர்களாகச் சித்திரித்திருப்பார். ‘கோ’ படத்தில் குறுக்குவழியில் ஆட்சியைப் பிடிக்க முயல்பவர்களுக்கு உதவுபவர்களாகச் சித்திரித்திருப்பார்கள். 80களில் வெளியான ஓர் ஆனந்த விகடன் இதழில் ‘நக்சலைட் ஜோக்ஸ்’ என்னும் பக்கங்களைப் பார்த்து அதிர்ந்துபோனேன். முழுக்க நக்சல்பாரிகளை ஜேப்படி திருடர்களாக சித்திரித்த அசட்டு நகைச்சுவைத்துணுக்குகள். தினத்தந்தி ‘தீ கம்யூனிஸ்ட்’ என்றுதான் எழுதும்.
இப்படி கொச்சைப்படுத்துபவர்கள் பலருக்கு ‘நக்சல்பாரி’ என்பது மேற்குவங்கத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர் என்பதுகூட தெரியாது என்பதுதான் வினோதம்.
1992ல் ஜெயமோகன் எழுதி ஆனந்தவிகடனில் வெளியான ‘துணைவன்’ சிறுகதையும் நக்சல்பாரி இயக்கத்தின் அடிப்படையே தெரியாமல், கொச்சைப்படுத்தி எழுதப்பட்ட சிறுகதை. அந்தக் கதையையே வெற்றிமாறன் திரைப்படமாக இயக்கப்போகிறார் என்றதும் அதுகுறித்து நான் விரிவாக எழுதினேன். பிறகு டைட்டிலில் மட்டும் ஜெயமோகன் பெயர் இருந்தது. ஜெயமோகன் கதைக்கு சம்பந்தமேயில்லாமல் அந்தப் படம் உருவாகியிருந்தது.
’கண் சிவந்தால் மண் சிவக்கும்’, வேலுபிரபாகரனின் ‘கடவுள்’ போன்ற திரைப்படங்கள் நக்சல்
பாரிகளை நேர்மறையாக அணுகிய படங்கள் என்றாலும் சமீபத்தில் வெற்றிமாறனின் ‘விடுதலை’ ஓரளவுக்கு பலராலும் பேசப்பட்ட படமாக, பல குழப்பங்கள் இருந்தாலும் மா.லெ இயக்கத்தை நேர்மறையுடன் அணுகிய படமாக அமைந்தது. சமீபத்தில் வெளியான ‘தண்டகாரண்யம்’ திரைப்படமும் மாவோயிஸ்ட் இயக்கம் பற்றி நேர்மறையாக அணுகியிருந்தது.
தமிழில் பொன்னீலனின் ‘புதிய தரிசனங்கள்’ முதல் பாட்டாளியின் ‘கீழைத்தீ’ வரை நக்சல்பாரி இயக்கத்தைப் பற்றிய புனைவுகள் உள்ளன. ஆனால் கட்டுரைத் தொகுப்புகள் குறைவு அல்லது இல்லவே இல்லை. ம.க.இ.க ‘நக்சல்பாரி : புரட்சியின் இடிமுழக்கம்’ என்று சிறுவெளியீட்டை வெளியிட்டுள்ளது. மற்றபடி தியாகுவின் ‘சுவருக்குள் சித்திரங்கள்’, கலியபெருமாள், தமிழரசன் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகங்களில் நக்சல்பாரி இயக்கம் குறித்து பேசப்பட்டாலும் அவை இந்திய அளவிலான விரிவான வரலாற்றைப் பேசவில்லை.
மா.லெ இயக்கப்பின்னணி கொண்ட தோழர், எழுத்தாளர் இரா.முருகவேள் உயிர்மை இதழில் தொடராக எழுதி, உருவாகியுள்ள ‘நக்சல்பாரி - ஒரு கிராமத்தின் பெயர் மட்டுமல்ல’ புத்தகம், ஓரளவுக்கு அந்தக் குறையைத் தீர்த்துள்ளது.
நக்சல்பாரி எழுச்சியின் பின்னணி, சாரு மஜீம்தார் முன்னெடுத்த அழித்தொழிப்பு இயக்கம், அதன் பின்னடைவுகள், தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவுகள், ஆந்திரா, தெலங்கானா, தண்டகாரண்யத்தில் மக்கள் யுத்தக்குழு போன்ற மா-லெ இயக்கங்களின் வெவ்வேறான உத்திகள், ஈழத்தில் நடந்ததைப்போல் பீகாரில் மா-லெ இயக்கங்களுக்குள் நடந்த சகோதரப்படுகொலைகள், நந்திகிராம், சிங்கூர் போராட்டங்கள், சமீபமாக மாவோயிஸ்ட்களுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் என விரிவாகப் பேசியுள்ளது. இன்னமும்கூட விரிவாகப் பேசலாம் என்றாலும் முன்பு சொன்னதைப் போல் ஆவணப்படுத்தப்பட்ட, ஆதாரபூர்வமான தகவல்கள் குறைவு என்பது ஒரு முதன்மை சிக்கல்.
சி.பி.எம் கட்சியையும் மேற்குவங்க அரசையும் முற்றிலும் எதிர்நிலையில் நிறுத்தாமல் இந்திய அரசியல் சட்டகத்திலும் உலகமயமாக்கலுக்குப் பின்பும் அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும் நூல் சுட்டிக்காட்டுகிறது. அதேபோல் இறுதியாக உலகம் முழுவதும் ஆயுதப்போராட்டத்துக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவுகள், காரணங்கள், காலாவாதியான உத்திகள் ஆகியவற்றையும் முருகவேள் விமர்சனப்பார்வையுடன் முன்வைத்திருக்கிறார்.
அவசியம் படிக்கவேண்டிய நூல்.