“பெரியார் தலித்துகளின் எதிரி என நான் சொல்ல வரவில்லை. தலித்துகள் தனது எதிரி என பெரியார்தான் சொல்லியிருக்கிறார்,” ‘மைனாரிட்டி பிரச்சினையில்’ அத���வது இஸ்லாமியர்கள் மீதான அணுகுமுறையில், “எனது நோக்கம் அம்பேத்கரும் பெரியாரும் எதிரெதிரானவர்கள் என்று நிரூபிப்பது அல்ல. மாறாக, அவர்கள் இரண்டு பேருடைய அணுகுமுறையும் ஒரே விதமானவையல்ல என்று சுட்டிக் காட்டுவது மட்டும்தான்” - @WriterRavikumar
வல்லினம் மே �� ஜுலை 2002 & தாய்மண் சூன் 2002
வல்லினம் இதழுக்கு தந்துள்ள பேட்டியில், ரவிக்குமார் ‘உள்ளே சென்று பெரியாரின் புத்தகம் ஒன்றினை எடுத்து வந்து படித்துக் காட்டுகிறார்’. ஆனைமுத்து தொகுத்த பெரியார் ஈ. வே. ரா. சிந்தனைகள் 3 – வது தொகுப்பில், 1950 – ஆம் பக்கத்தில் “சதியை முறியடிப்போம்” என்ற கட்டுரையில் ரவிக்குமார் காட்டும் மேற்கோள் வருகிறது: “ஆதலால், நாம் இன்று 1.பார்ப்பனர், 2. நம்மில் கீழ்த்தர மக்கள். 3. முஸ்லீம்கள், 4. கிறிஸ்தவர்கள் ஆக இன்று நமக்குச் சமுதாய எதிரிகளாக இந்த நான்கு கூட்டங்கள் (குழுக்கள்) இருக்கின்றன. இந் நால்வரும் ஏற்கனவே நம் சமுதாயத்தைப் பற்றிக் கவலை இல்லாதவர்கள். மற்றும், இந் நான்கில் மூவர், தம்தம் சமுதாய துறையில் நம்மைவிட மேலான நிலைமையில் அரசியல், பொருதாளார இயல், கல்வி இயல், மத இயல் முதலியவற்றில் சராசரித்தன்மைக்கு மிகமிக மேலான நிலைமையில் இருப்பவர்கள், வாழ்பவர்கள் என்று சொல்லத்தக்கவர்கள் ஆவார்கள். ஒரு கூட்டத்தினர் நம்முடைய இழிநிலை பற்றியும், ஏன் – தங்களுடைய இழிநிலை பற்றியுங்கூடக் கவலை இல்லாமல் ‘சோறு – சீலை – காசு’ ஆகிய மூன்றையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டவர்கள் ஆவார்கள். ஆதலால், ஒரு சிறு நலத்திற்கும் தங்களுடைய எதையும் தியாகம் பண்ணவும் துணிவு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.”
“ஆகையால் நமது இலட்சியம் நிறைவேறுவதற்கு இவர்கள் – இந்நான்கு குழுவினர்களும் பெரும் கேடர்களாக இருக்கும் நிலைமை நமக்கு ஏற்பட்டிருக்கிறது.”
இந்த மேற்கோளைக் காட்டிவிட்டு சட்டென்று தலித்துகளை இப்படியெல்லாம் சித்தரிப்பது “தலித் பிரச்சினையில் அக்கறை கொண்டவர்கள் செய்கிற காரியமா,” “தலித் பிரச்சினைகள் குறித்து பெரியாருக்கு எந்த ஆழமான சிந்தனையும் க���டையாது,” “கீழ்ததர மக்கள் என்ற சொல்லாட்சியை சாதிவெறி பிடித்தவன்கூட பயன்படுத்தியதில்லை” என்றெல்லாம் ‘உணர்ச்சி வசப்பட்டு’ விட��கிறார் ரவிக்குமார். “பெரியாரை ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் பிரதிநிதியாக வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்” என்று பிரகடனமும் செய்து விடுகிறார்.
@thirumaofficial @VanniArasu_VCK @aloor_ShaNavas
கடவுளை கண்டவர் ஒருவருமில்லை. மக்கள் கடவுளைப் பற்றி பேசமட்டும் செய்கிறார்கள். கடவுள் தான் உலகத்தை படைத்தார் என்று யாராலும் நிருபிக்க முடியாது.
உலகம் பரிணமித்ததே அன்றி படைக்கப்பட்டதல��ல.
கடவுளை நம்முவதால் ஒரு பயனுமல்ல.
புத்தர்