நல்லா சினிமா சூட்டிங் எடுக்கும் இடம் போல் மாற்றியுள்ளீர்கள் சட்டமன்றத்தை..
முதலமைச்சர் விஜய் கடமை என்ன?
முதலமைச்சர் கீழ் வரும் துறைகள் பின் வருவன
பொது நிர்வாகம் (General Administration)
உள்துறை (Home)
IAS , IPS , IFS தொடர்பான நிர்வாகம்
காவல்துறை
மாவட்ட வருவாய் அலுவலர்கள்
சிறப்புத் திட்ட செயலாக்கம்
பெண்கள் நலன்
இளைஞர் நலன்
குழந்தைகள் நலன்
முதியோர் நலன்
மாற்றுத்திறனாளிகள் நலன்
மாநகராட்சி நிர்வாகம்
நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நீர்வழங்கல்
இந்த துறைகளுக்கு தான் அவர் பதில் கொடுத்திருக்க வேண்டும்.
இந்த துறைகளுக்கு அவர் என்ன என்ன குறைகள் உள்ளது என்றும் , அதில் எப்படி தீர்வுகளை தன்னுடைய ஆட்சி முன் வைக்கிறது என்றும் , அதில் எதிர்கட்சிகள் என்ன கேள்விகள் எழுப்புகிறார்களோ அதற்கு தீர்வையும் பதிலையும் சொல்வது தான் விஜய் இன்று சட்டமன்றத்தில் செய்ய வேண்டிய மக்கள் பணி... ஆனால் அவர் செய்துள்ளது என்ன? 5 வருடம் மேலாக நாம் திமுக அரசுக்கு எதிராக முன் வைத்த குற்றச்சாட்டுகளை எடுத்துக் கொண்டு வந்து வாசித்துவிட்டு போய் உள்ளார். இதானல் மக்களுக்கு என்ன பயன்? இதுவா சட்டமன்றத்தின் வேலை?
ஆக மொத்தம் சினிமா தியட்டர் போல ஆக்கிவிட்டு சென்றுள்ளார் விஜய்.. இதான் மக்களுக்கு 1% கூட பயன் எதுவும் இருக்காது... இதற்கு சட்டமன்றம் நடக்காமலே இருக்கலாம்...
இதில் சபா நாயகர் செய்வது பச்சை துரோகம் மக்களுக்கு..
Delighted to have had the opportunity to be a part of the "Women of Vision and Leadership 2026" event organised by @Wetheleadersuk at Cranford Community College, Hounslow, UK and honour women achievers from various spheres of life.
When we talk about women empowerment, we must think 50 years ahead with a clear vision. True progress requires an intellectual revolution for profound social change.
Recalled the historic UK women’s suffrage movement that fought courageously for voting rights, there are vital lessons for us all. Today, the working women’s participation gap in the UK is only about 5% compared to men, whereas in India, this gap is still much, much wider. Bridging this divide through economic and social integration is essential for our nation's future.
@WTLFoundation
மாணவர்களை அறிவால் மட்டுமல்ல, வாழ்வியல் நெறிகளாலும் வழிநடத்திய நமது முன்னாள் குடியரசுத் தலைவர், தத்துவ மேதை, டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுவது, ஆசிரியர்களின் பெருமைக்குக் கிடைத்த மிகச் சிறந்த அங்கீகாரம்.
ஆசிரியர்கள் பாடங்களைக் கற்றுத் தருவதோடு மட்டுமல்லாமல், அறிவையும், சிந்தனையையும், நல்ல பண்புகளையும் மாணவர்களின் மனதில் விதைப்பதில் முக்கியமானவர்கள்.
ஒவ்வொரு தலைமுறையின் வாழ்வையும் வடிவமைத்த, வடிவமைத்துக் கொண்டிருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.