கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.19-க்குட்பட்ட சத்தி சாலை அத்திப்பாளையம் பிரிவு பகுதியில், சாலையில் தேங்கியுள்ள மழைநீரை, நீர் உறிஞ்சும் வாகனங்கள் மூலமாக அப்புறப்படுத்தப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் முன்னிலையில், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திருமதி.மோகனசுந்தரி, செயற்பொறியாளர் திரு.தேவதாஸ், உதவி செயற்பொறியாளர் திரு.சத்தியமூர்த்தி(பொ), சுகாதார ஆய்வாளர் செல்வி.சரண்யா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர் 15.09.2026.
#CoimbatoreCorporation #CCMC #Coimbatore #RainWaterRemoval #MonsoonPreparedness
@MawsTamilNadu | @TNDIPRNEWS
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
முப்பதாண்டுகளுக்கும் மேலாக அளவற்ற அன்பை வாரி வழங்கி, வாழ்வில் கிடைத்தற்கரிய ஓர் உயரிய இடத்தைப் பேரன்புடன் தந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாக, உறவாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக ஒவ்வோர் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒரு நிரந்தர இடத்தை வழங்கி, தாயன்புடன் தாங்கி வருகின்றீர்கள்.
எல்லாவற்றையும் அளித்த ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழ் உறவுகளுக்கும் என் நன்றியை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று யோசித்தோம். அதன் வெளிப்பாடாகவே, உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே 2024-இல் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் அரசியல் களம் கண்டே 27 மாதங்கள்தான் ஆகின்றது. ஆனால் அதற்குள், தமிழக அரசியல் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டினீர்கள்.
35% வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாகத் த.வெ.க.வை உயர்த்திப் பிடித்தீர்கள். உங்கள் தீர்ப்பை மதித்த ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் இதோ இன்று, தமிழக மக்களின் முதல் சேவகனாக, முதலமைச்சராக உங்கள் விஜய். ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை லட்சியமாகக் கொண்டு, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி அமைத்து, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சியை நிறுவிக் காட்டி இருக்கிறோம்.
மக்களே… என் சொந்தங்களே…தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பேரதிசயத்தை நீங்கள் நிகழ்த்திக் காட்டினீர்கள். அதன் வெளிப்பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையம் உங்கள் தமிழக வெற்றிக் கழகத்தை, தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது. ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய உங்கள் விசில் சின்னத்தையும் த.வெ.க.வின் சின்னமாக அங்கீகரித்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் நம்மை நம்புகிற ஒட்டுமொத்த மக்களுக்கான நன்றிக்கடன் பணி என்றென்றும் தொடரும். இந்த வேளையில், பேருழைப்பைத் தந்து கழகம் காக்கும் தோழர்களையும் நிர்வாகிகளையும் நெகிழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன். அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!
சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, சிந்தாமணி கூட்டுறவு சிறப்பாங்காடி நியாயவிலை கடையில் இன்று (06.09.2026) ஆய்வு மேற்கொண்டார் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் V. சம்பத்குமார் MBA அவர்கள்.
இடம் -வடகோவை
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காகவும், குடிநீர்த் தேவைக்காகவும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதற்காக இன்று (1.9.2026) சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களுக்குப் பெருந்திரளான பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்!
@BussyAnand
தனது அறிமுக உரை மற்றும் மானியக் கோரிக்கையை சட்டமன்றத்தில் சிறப்பாக முன்வைத்த பின்னர், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள், தனது குடும்பத்தினருடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்!
கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்!
அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்!
എല്ലാവർക്കും ഹൃദയം നിറഞ്ഞ ഓണാശംസകൾ.
#CMJosephVijay
மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.
திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!
#CMJosephVijay