அறம் சார்ந்த சந்திப்பு!
தலைவர் தொல்காப்பியன் திருமாவளவன் எழுச்சித்தமிழர் அவர்களுடன் இன்று 30-05-2026 மாண்புமிகு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களை சந்தித்து நான் எழுதிய "பு(யு)த்தம் பழகு" என்ற புத்தகத்தை வழங்கினேன்.
ம. சங்கத்தமிழன்
VCK Youth Wing
Minister's Immediate Response | அமைச்சரின் உடனடி ரெஸ்பான்ஸ்
கோவை: ஒண்டிப்புதூர் ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக எழுந்த புகார்
பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் வீடியோ கால் வழியாக குறைகளைக் கேட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு
Kovai | Womens Hostel | VCK Minister | Immediate Response
#Kovai #WomensHostel #VCKMinister #VanniArasu #ImmediateResponse
இன்று தலைமைச் செயலகத்தில், பழங்குடி நரிக்குறவ பெண்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவி சீத்தா மகேந்திரன், ஜெய் சங்கர் , அனுராதா, சமூக செயற்பாட்டாளர் யா.அருள், ஆலோசகர் கீதா அம்மா உள்ளிட்டோர் என்னை சந்தித்து நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் தொடர்பாக கோரிக்கை வைத்தனர்.
மேலும், சர்ப்பம் இருளர் தொழிலாளர் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் மாநில தலைவர் சீனிவாசன், ஆலோசகர் கீதா, சித்தம்மா, யா.அருள் உள்ளிட்டோர் என்னை சந்தித்து, பல்வேறு மாவட்டங்களில் வாழும் இருளர் பழங்குடியின மக்களின் நிலம், அடிப்படை வசதிகள், சாதி சான்றிதழ் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
தோழர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் உறுதி அளித்தேன்.
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரில் சமூக நீதித்துறை கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் தரம் குறைந்த முறையில் உணவு வழங்கப்படுவது தொடர்பாக, மாவட்ட ஆட்சியருக்கு மாணவிகள் மின்னஞ்சல் வாயிலாக புகார் அளித்ததாகவும், இப்புகாருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்று நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது.
இச்செய்தி எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதும், நேற்று (28.05.26) விடுதி மாணவிகளை வீடியோ காலில் அழைத்து அவர்களின் புகார் குறித்து விசாரித்தேன். இப்புகார் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கோரிக்கைகள் அனைத்தும் நிச்சயம் நினைவேற்றப்படும் என்றும் மாணவிகளிடம் உறுதி அளித்தேன். விரைவில் மாணவிகளை சந்திப்பதற்கு நேரில் வருவதாகவும் அவர்களிடம் தெரிவித்தேன்.
அமைச்சர் மாண்புமிகு ராஜ்மோகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
இன்று அரசு விடுமுறை நாள்!
எழுத்தாளர் ரவிக்குமார் விழுப்புரம் பள்ளிகள் குறித்து ஒரு X பதிவு இடுகிறார்!
உடனே அதை சரி செய்து, அவரை அழைத்து விளக்கம் அளிக்கிறார்.
இதுதான்
மக்கள் சேவை!
மாண்புமிகு சேவை!!
மரியாதைக்குரிய சேவை!
நீங்க சாப்பிடுறீங்களே சோறு, அதுக்கு திமுக தான் காரணம்..
நீங்க Fbல Post போடுறீங்களே அதுக்கு திமுக தான் காரணம்..
தேர்தல்ல ஜெயிச்சீங்களே, அதுக்கும் திமுக தான் காரணம்..
ஆனா திமுக தோத்ததுக்கு மட்டும் விசிக காரணம்.
😂😂😂😂😂😂😂😂
நெல்லை மாவட்டத்தில் மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை வழக்கில் விடுதலைச் சிறுத்தைகளின் தொடர் முயற்சியால் 10 மாதங்களுக்கு பின்னர்
கொலையாளி சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்!
தமிழ்நாடு அரசின் நேர்மையான நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள்!