மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எனது சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணலை கண்டதாகவும்,
அதில் SOFA MODEL ஆட்சிக்கு (Social Justice - Organised Action - Freedom - Anti-Caste/Corruption) கொடுத்த விளக்கத்தை மிகவும் ரசித்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து துறை ரீதியான பணிகளில் சிறப்பாக செயல்படுமாறு வாழ்த்தினார்.
@CMOTamilnadu
Wishing the Chief Minister of Tamil Nadu, Thiru Joseph Vijay, a very happy birthday.
I wish you good health and success in all your efforts. I stand with you in defending the rights, dignity, and aspirations of the Tamil people, and in working together for the state’s progress.
காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும், 2018-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தன்னிச்சையாக முனையும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்கள் தனித்தீர்மானத்தைக் கொண்டு வந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றி இருப்பது பாராட்டுக்குரியது.
தமிழ்நாட்டின் நீர் உரிமையையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மேகதாது விவகாரத்தில் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு அனைவரும் ஓரணியாக நின்று ஒருமித்த குரலாக ஒலித்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறேன்.
@CMOTamilnadu
தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும் “sonஆதன” சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் திரு @Udhaystalin அவர்களே...
அதிகாரத்தை பரவலாக்கும் , அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோஃபாக்கள் பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்?
நான்கு பேர் மட்டுமல்ல, ஐந்து பேர் மட்டுமல்ல... மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோஃபா இது.
சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது!
தமிழ்நாட்டில் 04.05.2026 அன்று வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலே அனைவருக்கும் அதிகார பகிர்வு அளிக்கக்கூடிய ஜனநாயக சோஃபா மட்டும் தான்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @BussyAnand | @TVKHQITWingOffl |
#தமிழகவெற்றிக்கழகம் | #TVK |
தமிழில் சமூக வலைதள பதிவு மாதிரி:
"குடிபோதையில் இருந்த சென்னை பெண், டாக்ஸி ஓட்டுநரை போலியான பாலியல் புகார் கொடுப்பதாக மிரட்டியதாக வீடியோ வைரல்."
உண்மையாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களின் குரலுக்கும் நம்பகத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், பொய்யான குற்றச்சாட்டுகள் அல்லது அதுபோன்ற மிரட்டல்கள் இருக்கக் கூடாது. அதே நேரத்தில், ஒரு சம்பவத்தின் முழு உண்மையும் விசாரணை மூலமாகவே உறுதி செய்யப்பட வேண்டும்.
சட்டத்தை தவறாக பயன்படுத்துவதும் தவறு; உண்மையான பாதிக்கப்பட்டவர்களின் புகார்களை அலட்சியப்படுத்துவதும் தவறு. நீதியும் பொறுப்புணர்வும் இருபுறமும் சமமாக இருக்க வேண்டும். #Chennai #TaxiDriver #JusticeForAll
Please do revisit #Kaithi before getting into the world of #Vikram.
One Tweet & THE REST IS HISTORY 🔥💥.
It always feels proud to be part of this. Thank you @Dir_Lokesh for this Life time settlement 🫂♥️.
Can’t wait for #AA23#4YearsofVikram
தவறான தகவல் @DinakaranNews
நேற்று வெண்கலமூர்த்தி நகர் கோயில் திருவிழாவிற்கு சென்றபோது மக்கள் பல மாதங்களாக குடிநீர் இல்லாமல், நிலத்தடி நீரும் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் கடும் பாதிப்பில் இருப்பதாக கூறினார்.
உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் பேசி இன்று காலை குடிநீர் பைப்புகளை சீர் செய்யும் பணிகளை துவக்கப்பட்டு, குழாய்கள் சீர்செய்யும் பணி முடிவடையும் வரை தற்காலிகமாக அரசு சார்பாக குடிநீர் விநியோகிக்கும் பணிகளை துவங்கி வைத்து மக்களிடமும் தெரிவித்து விட்டு வந்தோம்.
வரலாற்று நிகழ்வுகளை விமர்சிக்கலாம், விவாதிக்கலாம். ஆனால் வரலாற்று நிகழ்வுகளைக் காரணமாகக் கொண்டு பாண்டியர்களை "லொடுக்கு பாண்டி" என்று இழிவுபடுத்தும் இந்த ராஜகம்பளத்து பாலகிருஷ்ணன், என்றாவது ஒருநாள் அவரது சமூகத்தைச் சேர்ந்த மன்னர்கள் செய்த கொடுமைகளைப் பற்றி பேசியிருக்கிறாரா? விமர்சித்திருக்கிறாரா?
சாதிய உணர்வோடு வரலாற்றில் பாகுபாடு காட்டும் இத்தகைய நபர்களை தமிழர்கள் அடையாளம் காண வேண்டும்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (29.05.2026) தலைமைச் செயலகத்தில், மாநில தலைமை தகவல் ஆணையர் திரு. முகமது ஷகில் அக்தர், இ.கா.ப., (ஓய்வு), மாநில தகவல் ஆணையர்கள் திரு. அபய் குமார் சிங், இ.கா.ப., (ஓய்வு),
திரு. பி. தாமரைக்கண்ணன், இ.கா.ப., (ஓய்வு), திரு. ஆர். பிரியாகுமார், திரு. கே. திருமலைமுத்து, திரு.வி.பி. இளம்பரிதி, திரு. எம். நடேசன், திரு. ஏ. விஜயராம் ஆகியோர் சந்தித்தார்கள்.
#CMJosephVijay
பள்ளிக் கல்வி அமைச்சருக்கு நன்றி 🙏🏿
விழுப்புரம் மாவட்டத்தின் பள்ளிக் கல்வியில்
ஏற்பட்டிருக்கும் சரிவு குறித்து காலையில் எக்ஸ் தளத்தில் நான் போட்டிருந்த பதிவைப் பார்த்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு ராஜ்மோகன் @imrajmohan அவர்கள் இன்று விடுமுறை நாள் என்றாலும் உடனடியாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு பேசியதோடு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருக்கிறார். அந்தத் தகவல்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னிடமும் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டக் கல்வி நிலையை உயர்த்துவதற்கு மாண்புமிகு அமைச்சர் எடுத்துக்கொண்டுள்ள அக்கறைக்கு மாவட்ட மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- ரவிக்குமார் எம்.பி