நான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டங்களில் எங்கள் வீட்டின் தொலைக்காட்சி பெட்டியில் கலைஞர் கருணாநிதியின் பேச்சும் அவர் தொடர்பான செய்திகளும் தான் தந்தையின் வாயிலாக அடிக்கடி கண்களில் படும் ; செவிகளில் விழும். அதற்குப் பிறகான பள்ளிக்கூட காலகட்டத்தில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து பேச்சு போட்டிகளுக்கும் தயாராகும் முன்பாக ஒருவரின் பேச்சை கேட்டு விட்டு தான் போவேன் என்றால் அது மதிமுகவின் பொதுச் செயலாளர் ஐயா.வைகோ அவர்களின் பேச்சைத்தான். தந்தை பெரியார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நான் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது "வந்துட்டாரு நம்ம ஸ்கூல் வைகோ" என்று என் இயற்பியல் வாத்தியார் தோளில் தட்டி அழைத்தது இன்றும் நினைவில் இருக்கிறது.
அதற்கு பிறகான கல்லூரி காலகட்டங்களில் மாவட்ட அளவிலான மேடைகளாக இருந்தாலும் சரி கல்லூரிகளுக்கு இடையிலான மேடைகளாக இருந்தாலும் சரி சீமான் அவர்களின் பேச்சுக்களை பார்த்துவிட்டு போவதுண்டு. என்னைப்போல பலரும் அவரைப் பற்றி பேச்சுப்போட்டி அரங்குகளில் கலந்து பேசுவதுண்டு.
அப்போதில் இருந்து இப்போது வரை தன் பேச்சால் மட்டுமே தன் கட்சியின் தொண்டர்களை உருவாக்கி தனதாக்கி வைத்திருப்பது என்பது ஓர் அசாத்திய ஆற்றல் தான். தலைவர்களாக உருவாகிய பலர் சிறந்த பேச்சாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இந்த தலைமுறையில் பேச்சுத் திறமை வாய்ந்த தலைவர்களுள் தற்போதைக்கு டாக்டர். திருமாவளவன் அவர்களும்,
திரு. சீமான் அவர்களும் கடைசிகட்ட தலைவர்களாக நான் பார்க்கிறேன். அப்படி நான் பார்த்து ரசித்த, தமிழ்நாட்டின் பல தலைவர்கள் பேசத் தயங்கிய அந்த இடத்தை தொட்டுப்பேசி வெடித்த சீமான் அவர்களின் இந்தப் பேச்சு மறக்க முடியாதது. வலதுசாரி இந்துத்துவ சக்திகள் முன்னெடுத்த பெண்களுக்கு எதிரான பரப்புரை செய்த நேரத்தில் தமிழ்நாட்டின் திராவிட இயக்க பேச்சாளர்கள் எதிர் வினையாற்ற தவறவிட்ட தருணமாக இதை நான் கண்டேன். சீமானின் இந்த அனல் கக்கும் பேச்சு தான் பாஜகவால் இன்றைக்கும் ஜீரணிக்க முடியாத ஒன்று.
"கோவிலுக்குள்ளே என் குல பெண்கள் நுழைந்தால் புனிதம் கெட்டுப் போய்விடும் என்றால் அது கோயிலே அல்ல குட்டிச்சுவர்" என்று பேசுவதற்கு எத்தனை தலைவர்கள் இன்று தயாராக இருப்பார்கள் என்பது கேள்விக்குறிதான் !
சாதி மத பேதமற்ற நற்றமிழ் நாட்டை உருவாக்க தங்களைப் போன்று ஒரு தமிழ்க்குரல் என்றென்றும் ஒலிக்கட்டும்.
மதிப்பிற்குரிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய தாலாட்டு நாள் வாழ்த்துக்கள் ❤💐
@Seeman4TN@_ITWingNTK@NaamTamilarOrg
தேவர் அய்யா மொத்த தமிழருக்கும் சொந்தமானவர் இசக்கி .
இந்த காணொளியிலேயே இளைஞர்கள் வாகனத்தின் வெளிப்புறம் தொங்கி அடாவடி செய்கிறார்கள் .
அய்யா இந்நேரம் இருந்திருந்தால் சாட்டை எடுத்து வெளுத்து விட்டு இருப்பார் - இப்படி பட்ட இளைஞர்களுக்கு தான் நீங்கள் வழிகாட்டியா ?
இங்கே ஒரே இனம் தான் - அது தமிழினம் ! எங்களை உரிமை கொண்டாட எவனுக்கும் உரிமை இல்லை !
கேரளாவிலிருந்து குமரி மாவட்டம் வழியாக கோழி மருத்துவ மீன் கழிவுகளை ஏற்றி வந்த வாகங்களை நேற்று இரவு முதல் தற்போது வரை சிறைபிடித்து வரும் நாம் தமிழர் கட்சியினர். இதுவரை 3 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு எதிராகப் போராடக்கூடிய ஏகனாபுரம் மக்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கினை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.
@mkstalin@CMOTamilnadu@KanchiCollector@SMeyyanathan@AAI_Official@MoCA_GoI@DGCAIndia@RamMNK@TRBRajaa@MRKPanneer@byadavbjp@moefcc
பரந்தூரில் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதை எதிர்த்து சற்றொப்ப 765 நாட்களாக மக்கள் போராடி வரும் நிலையில் இதுநாள் வரை ஒரு முறை கூட மக்களை சந்திக்காமல் இருப்பதோடு, இத்திட்டத்தைத் துரிதமாக செயல்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதன் வழியே மக்களுக்கு எதிரான போக்கினை வெளிப்படையாகத் தமிழ்நாடு அரசு கடைபிடித்து வருவது கடும் கண்டனத்திற்குரியதாகும். தற்பொழுது முழுமூச்சாக மக்களை அடக்கி ஒடுக்கும் எண்ணத்தில், அமைதி வழியில் போராடிக்கொண்டிருக்கும் மக்களின் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சகட்டமாகும்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது அதிமுக ஆட்சியில் போராடக்கூடிய மக்களின் மீது பதியப்பட்ட வழக்குகளுக்கு எதிராக குரல் கொடுத்த திமுக, தற்பொழுது ஆட்சியில் இருக்கும்போது அறவழியில் போராடக்கூடிய மக்களை அதனை விட வீரியமாக அடக்குமுறைக்கு ஆளாக்குவது என்பது திமுகவின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
பார்முலா பந்தயம் நடத்துவதிலும், அமெரிக்கப் பயணத்திலும் கவனம் செலுத்தி வரும் அரசு, அருகில் இருக்கும் ஏகனாபுரம் மக்களைப் பற்றியும் கொஞ்சமாவது சிந்தித்திட வேண்டும். போராடும் மாக்களின் மீது வழக்குப் பதியும் பாசிச போக்கினை உடனே விடுத்து, வழக்கினைத் திரும்பப் பெற்று, அவர்களின் கோரிக்கைக்கு செவிமடுத்து செயல்பட வேண்டும் என்றும், இல்லையேல், கடும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சியின் சார்பாக எச்சரிக்கிறேன்.
கள்ளச்சாராயப் படுகொலைகளுக்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை?
@CMOTamilnadu@mkstalin
கள்ளக்குறிச்சி மாவட்டம் ‘கருணா’புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஐயும் தாண்டி தொடர்ந்து அதிகரித்துவருவது ஆற்றமுடியாத மனத்துயரத்தையும், கவலையையும் அளிக்கிறது. தந்தையை இழந்து தவிக்கும் பிள்ளைகள், பிள்ளையை இழந்து தவிக்கும் பெற்றோர்கள், கணவரை இழந்து தவிக்கும் மனைவிகள் என வாசலில் இறந்த உடல்களை வைத்து அடுத்தடுத்த வீடுகளில் கேட்கும் மரண ஓலங்கள் நெஞ்சைப் பிளக்கின்றது. குடும்பப் பாரத்தைச் சுமக்க நேர்ந்துள்ள பெண்களின் அழுகுரல்கள் இதயத்தை நொறுங்கச் செய்கின்றன. கள்ளச்சாராயத்தைத் தடுக்கத்தவறி திமுக அரசு வட மாவட்டங்களைச் சுடுகாடாக மாற்றியுள்ளது.
‘கருணா’புரத்தில் கள்ளச்சாராயத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு, 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கும் அளவிற்கு மிகமோசமான சூழல் நிலவும் நிலையில், உயிரிழப்புகளுக்குக் கள்ளச்சாராயம் காரணம் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தது எப்படி? திமுக அரசு சிறிதும் மனச்சான்று இன்றி, வெவ்வேறு உடல் உபாதைகளாலேயே உயிரிழப்புகள் நிகழ்ந்தது என்றுகூறி, கள்ளச்சாராய மரணங்களை மூடி மறைக்க முயன்றது வெட்கக்கேடானது. கள்ளச்சாராயம் அருந்தி இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ள கொடுமைகளும் அரங்கேறியுள்ள நிலையில் அதிகாரிகளுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ கள்ளச்சாராயம் விற்பனை குறித்த குறைந்தபட்ச அறிதல் கூட இல்லை என்பது திமுக ஆட்சியில் அரசு இயந்திரம் எந்த அளவிற்கு மோசமாக இயங்குகிறது என்பதைக் காட்டுகிறது.
கள்ளச்சாராய விற்பனையின் முக்கியக் குற்றவாளியான சின்னதுரை மீது இதுவரை 70க்கும் மேல் குற்றவழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்க அவர் அனுமதிக்கப்பட்டது எப்படி? அப்பகுதியில் காவல்துறையால் நேற்று ஒரே நாளில் மட்டும் 1000 லிட்டர் அளவிற்கு கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்ட நிலையில், இத்தனை நாட்கள் தமிழ்நாடு காவல்துறை என்ன செய்துகொண்டிருந்தது? தொழிற்போட்டி காரணமாக கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், போட்டி போட்டு விற்கப்படும் அளவிற்கு கள்ளச்சாராயப் புழக்கம் அதிகரித்தது எப்படி? அதனை அனுமதித்தது யார்? காவல்துறையின் அனுமதியுடன்தான் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகப் பொதுமக்கள் கூறும் குற்றச்சாட்டிற்கு திமுக அரசின் பதில் என்ன?
கள்ளச்சாராய விற்பனையில் திமுகவினரின் ஆதிக்கம் காரணமாகவே காவல்துறையினரால் உரிய நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பதும், பொதுமக்கள் அதுகுறித்து புகார் தெரிவிக்கவே அச்சப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்பதும் கடும் கண்டனத்துக்குரியதாகும். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்து தண்டித்துள்ள திமுக அரசு, அவர்களை நிர்வகிக்கும் முதலமைச்சர் உள்ளிட்ட ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை அளிக்க உள்ளது? கள்ளச்சாராயத்தால் நடைபெற்றுள்ளது விபத்தோ, தற்செயலான உயிரிழப்புகளோ அல்ல; அரசின் அலட்சியத்தால் நிகழ்த்தப்பட்டுள்ள பச்சைப் படுகொலைகள்! அதற்கு அதிகாரிகளை மட்டும் பலியாடாக்கி ஆட்சியாளர்கள் தப்பிக்க முயல்வது பெருங்கொடுமையாகும்.
எத்தனை இலட்சங்கள் துயர்துடைப்புத்தொகையாகக் கொடுத்தாலும், அவற்றின் மூலம் இழந்த ஒரே ஒரு உயிரையாவது திமுக அரசால் திருப்பிக்கொடுக்க முடியுமா? கடந்தகால கள்ளச்சாராய மரணங்களிலிருந்து திமுக அரசு படிப்பினைப் பெற்று, கடும் நடவடிக்கைகள் எடுத்திருந்தால் தற்போது மேலும் பல உயிர்கள் பலியாவதைத் தடுத்திருக்க முடியும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையால் கண்டறிந்து தடுக்க முடியாத கள்ளச்சாராய விற்பனையையும், மரணங்களையும் அதே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குற்றப்புலனாய்வுத்துறை (சிபிசிஐடி) மூலம் விசாரித்து தடுக்க முடியும் என்பது வேடிக்கையானதாகும். கடந்த ஆண்டு விழுப்புரம் எக்கியார்குப்பத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விசாரிக்க திமுக அரசு நியமித்த சிபிசிஐடி விசாரணை என்னானது? அதன் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? அதன் பிறகும் தற்போது மீண்டும் கள்ளச்சாராயத்தால் இத்தனை உயிர்கள் பலியாகிறது என்றால் சிபிசிஐடி விசாரணை என்பதே மக்களின் மனக்கொந்தளிப்பை அடக்க மேற்கொள்ளப்படும் ஒரு கண் துடைப்பு நாடகம் என்பது தெளிவாகிறது.
ஆகவே, காவல்துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுபாட்டில் வைத்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெல்வதில் காட்டும் அக்கறையையும், அவசரத்தையும் சிறிதளவாவது கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில் காட்ட வேண்டுமென்றும், இனியும் இதுபோன்று மதுவினால் மனித உயிர்கள் மலினமாகப் பறிபோவதைத் தடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
திமுகவின் மூன்றாண்டு ஆட்சி எப்படி போகுது???
24 மணி நேரமும் போதைப்பொருள் கிடைக்குது...
கஞ்சா போதையில் சிறுமி பாலியல் வன்புணர்வு , கொலை , கொள்ளைன்னு தமிழ்நாடு நாசமா போகுது....
#3YrsofMKStalinGovt#போதை_முன்னேற்றக்_கழகம்