விவிஐபி கலாச்சாரத்தை ஒழிக்க நாடு முழுவதும் நடைபெற்ற இயக்கத்தை மதித்து, தன் காரில் இருந்த சைரனை அன்றைய முதல்வர் மாண்புமிகு புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் கழற்றியதன் மூலம் நாட்டிற்கே எடுத்துக்காட்டாக திகழ்ந்தது தமிழ்நாடு.
ஆனால், குருட்டு யோகத்தில் ஆட்சிக்கு வந்துவிட்ட #பொய்க்கால்_குதிரை_அரசு, மீண்டும் அமைச்சர் வாகனத்தில் சைரனை பொருத்தி வலம் வரத் தொடங்கியுள்ளது.
ஆட்சிக்கு முன் பரம ஏழை போல வேஷம் கட்டித் திரிந்தவர்கள், இப்போது தங்கள் ஒரிஜினல் பண்ணையார் முகத்தை காட்டத் துவங்கிவிட்டார்கள்.
“ரீல்”கள் சூழ் த.வெ.க!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே
11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருக்கிறதோ? என்ற அச்சம் தமிழக மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே எழத் தொடங்கிவிட்டது.
இன்றைய முதல்வரின் கூற்றுப்படியே கேட்கப்போனால்,
“தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?”
சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்திடவும்,
தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால், அவற்றை மீண்டும் போட்டுப் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு இவ்வரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@AIADMKOfficial
தவெக ஆச்சரியக்குறிகளே! இப்பதான் First Time Government Form பண்ணி சீட்ல உக்காந்திருக்கீங்க.. அதுக்குள்ள 50 வருஷ வரலாறு இருக்குற அதிமுக-வ பாத்து விரல் நீட்டுறதா?
தலைமை செயலகத்துல சபாநாயகரை பாத்து முறைப்படி ராஜினாமா லெட்டர் குடுக்கலாம்..
ஆனா ராஜினாமா செஞ்ச அடுத்த நிமிஷமே உங்க அமைச்சரை பாத்து இணைப்பு விழா நடத்தக் கூடாது!
தார்மீகப் பொறுப்புன்னு சொன்னா சபாநாயகர் கிட்ட போயிருக்கணும், அமைச்சர எதுக்கு சந்திக்கணும்?
இதான் நீங்க சொல்ற சுயவிருப்பமா?
இல்ல,
பதவி + பவர் காமிச்சு பின்னால நடந்த Backdoor Deal-ஆ?
குதிரை பேரம் இப்போ க்ளியரா மக்களுக்கு வெட்ட வெளிச்சம் ஆகிடுச்சு பாஸ்!
தேர்தல்ல ஜெயிக்கிறதும் தோக்குறதும் சகஜம் தான்..
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்,
புரட்சித்தலைவி அம்மா காலத்துல இருந்து எத்தனையோ சரிவை சந்திச்சு ஃபீனிக்ஸ் பறவை மாதிரி மாஸா Comeback குடுத்த வரலாறு எங்களுக்கு இருக்கு.
கட்சி ஆரம்பிச்சு இப்பதான் 1st கியர் மாத்தியிருக்கீங்க.
உங்க கொள்கை என்ன,
நீங்க மக்களுக்கு என்ன பண்ணப் போறீங்கன்றத மட்டும் பாருங்க.
அதை விட்டுட்டு அரை நூற்றாண்டு காலமா மக்கள் மனசுல சிம்மாசனம் போட்டு உக்காந்திருக்க அதிமுக-வ சீண்டிப் பார்த்து Cheap Publicity தேடாதீங்க.
ஆட்சிக்கு வந்ததுல இருந்து இதுவரை நடந்த பிரச்சனைகள் எதுக்குமே மக்களை சந்தித்து பதில் சொல்ல கொஞ்சம் கூட துணிவில்லாத உங்க தலைவரை வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம் உங்களுக்கு.
இதெல்லாம் உங்களுக்கு செட் ஆகாது.
போங்க போங்க ..
போய் reels போட்டு விளையாடுங்க பாஸ்..
இன்று இன்னொரு பெண் :
புதுக்கோட்டையில் வாய் பேச முடியாத
இளம் பெண் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து பின் கொலை முயற்சியில் தப்பியதாக தகவல்..
விஜய் எங்கே இருக்க ?
தினமும் ஒன்று நடக்கிறது - ஆன உன் ரூட் மாபியா எப்படி மக்களை ஏமாற்றலாம் என வித விதமா ரீல்ஸ் போட்டுகொண்டு இருக்கிறது. MLA எல்லாம் முழு வேலை ரீல்ஸ் போடுவதற்கு கண்டட் தேடுவது மட்டுமே என திரியுறானுக.. நீ எப்பவும் போல வாயை திறக்காம எவனாது நமக்காக முட்டு கொடுப்பான் என இருப்பதற்கு நீ நடிகர் இல்லை இன்று மாநிலத்தின் முதலமைச்சர்.
தூயசக்தி என்று சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்த த.வெ.க., ஜனநாயக மாண்புகளை மீறி குதிரை பேரம் நடத்தி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்கிய துர்நாற்ற அரசியலை நான் பொதுவெளியில் அம்பலப்படுத்தி இருந்தேன்.
த.வெ.க.வின் இந்த அவமானகரமான செயலை ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் கொண்டுசெல்லும் வகையில், சட்டப்பேரவையிலேயே இதுபற்றி விரிவாகப் பேசி இந்த அரசின் குதிரைபேர, மோசடி அரசியலை மேலும் அம்பலப்படுத்தி, கண்டித்த மதிப்பிற்குரிய அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தே.மு.தி.க., பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல, தங்கள் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க த.வெ.க.வினர் செய்த அசிங்க அரசியலைக் கண்டித்துக் குரல் கொடுத்த தி.மு.க. தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
த.வெ.க.வின் இந்த தரம் கெட்ட அரசியல் இனியும் தொடர்ந்தால், ஜனநாயகத்தைக் காக்க, அவர்களை மக்கள் முன்னால் தொடர்ந்து முழுமையாக அம்பலப்படுத்துவோம்!
@TVKVijayHQ@TVKPartyHQ@EPSTamilNadu@Udhaystalin@mkstalin@PremallathaDmdk
அண்ணா @TTVDhinakaran அவர்களே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் @AIADMKOfficial இணைத்து விடுங்கள்.
மாண்புமிகு @EPSTamilNadu அவர்களின் தலைமையில் ஒரு பிரம்மாண்டமான இணைப்பு விழா ஒன்று செய்யுங்கள்..
துரோகிகள் அனைவரையும் வீழ்த்தி தமிழ்நாட்டில் களம் காணலாம்🥺🙏✌️🌱
கட்சியை வலிமையாக வழிநடத்த சரியான தலைமை தேவை! 💯 அதிமுகவின் பொதுச்செயலாளராக திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடர வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்.
நீங்கள் இதை ஆதரித்தால் மறக்காம LIKE ❤️ பண்ணுங்க!
#EPSforGS#ADMK#TamilNaduPolitics#எடப்பாடிபழனிசாமி@EPSTamilNadu
எடப்பாடியார் இல்லம் நோக்கி அனைத்து மாவட்ட செயலாளர்கள், கழக மூத்த நிர்வாகிகள், அமைப்பு செயலாளர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.
எடப்பாடியாரின் கரங்களை வலுசேர்ப்போம்
@EPSTamilNadu
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
@AIADMKOfficial
MLA கூட ஆக முடியாத ஸ்டாலினுக்கு தன் கட்சி அலுவலகத்தில் பெரும் வரவேற்பு.
தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் பெற்று வென்ற எடப்பாடியாருக்கு நெருக்கடியாம்.
என்னடா நியாயம் உங்களுடையது..???
இவர மாத்தனும்னு நினைக்கறதுல யாராவது ஒருத்தர் இவர் உழைச்சதுல ஒரு 10% உழைச்சிருப்பாங்களா...???
1996ல தோத்தபோது
2004ல தோத்தபோது
2006ல தோத்தபோது
அம்மாவ யாரும் பதவி விலகணும்னு சொல்லல... ஏன்? பயம்.
அந்த பயம் இப்ப இருக்கற பொதுச்செயலாளர் மேல இருந்திருந்தா ஒழுங்கா உழைச்சிருப்பானுங்க குறைந்த பட்சம் எதிர்க்கட்சி அந்தஸ்தாவது வந்திருக்கும். எந்த ஒரு நிறுவனத்திலயும் தலைமை மேல பயம் இல்லனா அது மயிர்ல கூட விளங்காது.
எல்லா மா.செ.வும் குறுநில மன்னர் மாதிரி தனக்கு ஒரு கூட்டத்த சேர்த்து வச்சிகிட்டு பொ.செ மேல பயமே இல்லமா சுத்துறாங்க. அப்புறம் எப்படி வேலை செய்வாங்க? அடுத்தவங்கள குறை சொல்றது இருக்கட்டும், தன் தொகுதில தான் ஜெயிக்க வேலை பாத்தவங்க எத்தனை பேர்? அவங்க எல்லாரும் ஜெயிச்சாங்களா? அப்படி இல்லனா ஏன் இல்ல? அதுக்கும் எடப்பாடியார்தான் காரணமா?
இந்த முறை வந்தது எல்லாவற்றையும் தாண்டிய ஒரு ரசிக மனப்பான்மை அலை. யார் தலைமைல இருந்திருந்தாலும் இந்த ரிசல்ட்தான் வந்திருக்கும். இவர் இல்லாம வேற யாராவது இருந்திருந்தா கத்தையா கழட்டி கட்டிருப்பாங்கன்னா... கண்டிப்பா முடியாது.
என் புருசன பலர் பாக்க வெட்டி கொன்னுட்டாங்க அதுக்கு நீதி வேணும்னு பச்சபுள்ளய கைல தூக்கிகிட்டு வீடு வீடா ஓட்டு கேட்டப்ப, உனக்குதான் கண்ணு ஓட்டுனு சொல்லிட்டு அவங்கள 3 வது இடத்துக்கு தள்ளுன வாக்களர்கள் இருக்கற ஊரு இது.
வருஷத்துல 2 தடவை சொந்த தொகுதிக்கு போய் டாட்டா காட்டிட்டு வந்த முதலமைச்சரையே தோக்கடிச்ச வாக்கள பொருமக்கள் இருக்கற ஊர் இது.
இந்த அழகுல எடப்பாடியர் மேல குறை சொல்லிட்டு வேற யார கொண்டாந்து நிறுத்துவீங்க?
35 பேர் வேலை செய்ற கம்பனிலருந்து 33 பேர் விசிலுக்கே ஓட்டு போட்ருக்கானுங்க. காரணம் MOB mentality.
யார் வேட்பாளர் என்ன வாக்குறுதி, என்ன கட்சியோட திட்டம் ஒரு மண்ணும் தெரியாது.
ஆனாலும் எல்லாரும் சொல்றாங்க நாமளும் போடுவோம் அவ்ளோதான்.
இந்த லட்சண கூந்தல்ல நடந்த தேர்தல் முடிவுகள வச்சிகிட்டு இவரோட உழைப்ப குறை சொல்றங்க.... காலக் கொடுமை.
இவர் எடுத்த எல்லா முடிவுலயும் கட்சி பொதுக்குழு உயர்நிலைக்குழுனு கூடித்தானே முடிவெடுத்தீங்க? இப்போ இவர் மட்டும் காரணம்னா?
இப்படி கடந்த 10 வருசமா ஒண்ணுமில்லாத உட்கட்சி பிரச்சனை ஊதி வளத்ததோட பலன் பொதுவான அதிமுக ஓட்டு கூட, இவனுங்க எப்ப பாத்தாலும் சண்ட போடுறானுங்க தலைமையே இல்ல இனி அவ்ளோதான். இவங்களுக்கு ஓட்டு போட்டு என்ன ஆகப்போகுதுன்னு ஒரு பொது புத்தி உருவாகிடுச்சி.
இனி அதை உடைச்சி கட்சிக்கு ஓட்ட சேக்குறதுதான் புத்திசாலித்தனம். அதை விட்டுட்டு மறுபடியும் தலைமைக்கு சண்ட போட்டி மொத்தமா நக்கிகிட்டுதான் போகும்.
சொந்த கட்சி தலைவரும் பொதுச் செயலாளரும் ஒண்ணா தோத்துருக்காங்க இந்த தேர்தல்ல. திமுக வரலாறு எப்பயுமே நடக்காத சம்பவம் இது. ஆனா அங்க அதைபத்தி ஒருத்தர் கூட பேசல. இங்க வெறும் வாய்க்கு அவல் கிடைச்ச மாதிரி மெல்லுறீங்க....
நம்புங்கள்; நல்லது நடக்கும்.
எடப்பாடியார் என்னும் ஆளுமை இல்லையெனில், 2021 தேர்தலில் முதல்முறையாக முதலமைச்சரின் வேட்பாளராக களம்கண்டு 75 சீட் வென்று இருக்க முடியாது, அதேபோல் 2026 தேர்தலில் இவ்வளவு பெரிய மாற்றுக் கட்சி அலையிலும் 53 சீட் வென்றிருப்பது அவ்வளவு சுலபம் அல்ல, இவை அனைத்தும் எடப்பாடியார் உழைப்பிற்கு மட்டுமே கிடைத்த வெற்றி, வாய்ப்பு கொடுத்தவர்களுக்கு போதும் இனிமேலாவது இளைஞர்களை கழகம் மற்றும் அனைத்து அணியிலும் இணைத்து வெற்றியை மென்மேலும் வலுப்படுத்துவோம், எடப்பாடியாருடன் இருப்போம் என்ற சபதம் ஏற்போம்.
@Balagutz @prof_vinodkumar
மீண்டும் எப்போது தேர்தல் வந்தாலும் மீண்டும் அண்ணாதிமுகவால் வெல்ல முடியும். அதற்கான வலிமை நம்மிடம் இப்பொழுது வரையுமே இருக்கிறது. ஒன்னே கால் (more or less 25%) கோடி ஓட்டுக்களைப் பெற்றிருக்கிறோம்.
அதே சமயத்தில், திமுக கூட்டணி உடைந்துவிட்டது. இனி திமுகவிற்குக் கூட்டணி வைக்கக் கட்சிகளே கிடையாது. எந்தக் கூட்டணியில் இருந்தாலும் இனி கம்யூ மற்றும் விசிக கட்சிகளுக்கு இனி ஓட்டே கிடையாது. அதுவுமில்லாமல் திமுக ஆட்சி பிடிக்காமல் தான், வாக்குகள் சிதறிப்போய், எவரும் எதிர்பாரா ஒரு 'விபத்து அரசாங்கம்' விபரீதமாக அமைகிறது. அமையட்டும். ஆனால்,
நிலையான, நிம்மதியான, நிர்வாகத்தில் தேர்ந்த, மக்களுக்கு நீண்டகாலப் பயனுள்ள ஆட்சியை அண்ணாதிமுகவால் தர முடியும் என்பதை தமிழ்நாடு விரைவில் உணரும்.
இனி எந்தத் தேர்தல் நடந்தாலும் எப்போது வந்தாலும், அதிமுக Vs Others என்றே களம் மாறும். ஏனெனில் திமுக வேண்டாம் என்று தான் புதியது வந்திருக்கிறது.
நாம நமக்குல்ல எந்தப் பிரச்சினையும் இல்லாம, கூட்டணியைக் கரெக்ட்டா வச்சிருந்தாலே போதும். நிர்வாகச் சீர்திருத்தங்கள் செய்யுங்கள். Social Engineering செய்யுங்கள். அனைத்து சமூகத்திற்கும் பிரதிநிதித்துவத்தை கட்சியின் பல்வேறு மட்டங்களிலும் உறுதி செய்யுங்கள். எம்பி எம்எல்ஏ சீட்டு வழங்கும் போதும் உறுதி செய்யுங்கள்.
இது போதும் அண்ணாதிமுக மீண்டெழ.
உழைப்பைக் கொடுக்க தொண்டர்கள் நாங்க இருக்கிறோம். எதற்கும் அஞ்சாதீர்கள். துணிச்சலோடு களத்தில் இறங்குங்கள். சோர்ந்து போக வேண்டாம். தொண்டனைச் சோர்ந்து போக விடாதீர்கள். தொண்டர்கள் கவலைப்படும் அளவிற்கு எந்தச் செயலையும் செய்யாதீர்கள்
கட்சி மாறுவதற்கு நாங்கள், கட்சியில் இணைந்தவர்கள் அல்லர். கட்சியிலேயே பிறந்தவர்கள்.
அண்ணாதிமுக எங்கள் உயிரில் இருக்கிறது. உழைக்க நாங்கள் தயார். எங்கள் உழைப்பை ஒருமுகப்படுத்தி வெற்றியை நோக்கி இழுத்துச் செல்லும் வேலையை நீங்கள் பாருங்கள்.
பொதுச் செயலாளரே நீங்கள் ஒரு அசுரத்தனமான உழைப்பாளி. கடுமையாகப் போராடியவர். ஊனிலும் உதிரத்திலும் கட்சிப்பற்றை கலந்து வைத்திருப்பவர். நம்பிக்கை இருக்கிறது. காலமும் இருக்கிறது. வாருங்கள் கரம் கோர்ப்போம்.
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
கட்சியில் எந்த ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு edapaadiyar அவர்களுக்கு எவ்வளவு தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்து முடிவெடுக்க வேண்டும்,
அதில் சந்தேகம் இருந்தால் social மீடியாவில் அவருக்கான இளைஞர் விசுவாசிகளை பார்க்க முடிகிறது, அவர் இல்லையென்றால் கட்சியில் 75 சதவீதம் தொண்டர்கள் கட்சியில் இருந்து விலகுவார்கள் அல்ல ஒருசிலபேர் அரசியல் ஆதாயத்திற்காக மாற்று கட்சிக்கு செல்வார்கள்.
இவ்வளவு தொண்டர்களும் மற்றும் இளைஞர்கள் திரும்ப கட்சியில் சேர்க்க முடியுமா என்று நினைத்து பார்த்தால் நல்லது..
@Balagutz @prof_vinodkumar @EPSTamilNadu
பெருமதிப்பிற்குரிய கழகப்பொதுச்செயலாளர்@EPSTamilNadu நாம் கழகத்தின் உள்ள கட்டமைப்பை Update பண்ண வேண்டும்.
அதில் மிக முக்கியமானது இவை மூன்றும் தான்.
இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை
தகவல் தொழில்நுட்ப பாசறை
மாணவ மாணவியர் பாசறை
இதில் நாம் அதீத கவனம் செலுத்த வேண்டும்.