Thalaivar Superstar Rajinikanth Bakthan, @annamalai_k follower, Proud Hindu🕉, Single, non drinker/Smoker by Choice, easygoing, nicest and caring person.
இன்று கரூர் மாவட்ட @WTLFoundation சார்பாக வேலாயுதம்பாளையம் புகழி மலை முருகன் கோவில் முழுவதும் மக்காத குப்பைகள் ,பிளாஸ்டிக் , பாட்டில்கள் எடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டது.
பின் மரக்கன்றுகள் நடப்பட்டன..
அதிக அளவில் தன்னார்வலர்கள் பங்கேற்று இந்த சமூக பணியில் இணைந்து செயல்பட்டனர் .
மாறுவோம் ..!!
மாற்றுவோம்..!!
சுற்றுச்சூழல் பாதுகாப்போம்..!!
@annamalai_k@experienceluv@arulascent
#WeTheLeaders #Annamalai #Karur
கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக ஒன்றிய செயலாளர் திரு. வினோத் அவர்கள், வீ லீடர்ஸ் இயக்கத்தில் இணைந்தார்.
அதனைத் தொடர்ந்து, குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் ஏரி ஓரங்களில் விதைப்பந்துகள் மற்றும் மரவிதைகளை தூவி பசுமை விழிப்புணர்வு பணியை முன்னெடுத்தார்.
#WeTheLeaders#Cuddalore#Kurunjipadi_Assembly
கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக ஒன்றிய செயலாளர் திரு. வினோத் அவர்கள், வீ லீடர்ஸ் இயக்கத்தில் இணைந்தார்.
அதனைத் தொடர்ந்து, குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் ஏரி ஓரங்களில் பனை விதைகளை விதைத்தனர்.
தன் உயிரைக் கொடுத்து பல உயிர்களைக் காப்பாற்றிய அமரர் திரு. சண்முகசுந்தரம் அவர்களுக்கு வீரவணக்கம்!
கோயம்புத்தூர் இருகூர் பகுதியைச் சேர்ந்த, தியாகி S.T. சண்முகம் அவர்களின் புதல்வரும், சிங்காநல்லூர் கார் வேன் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான திரு. சண்முகசுந்தரம் (70) அவர்கள், இருகூர் தனியார் பள்ளியில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த ஆகஸ்ட் 27 மாலை, மாணவர்களை ஏற்றிக்கொண்டு இருகூர் ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, திரு. சண்முகசுந்தரம் அவர்களுக்கு எதிர்பாராதவிதமாகத் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.
அந்நேரத்தில் வாகனத்தில் 2 குழந்தைகள், 1 பள்ளி ஊழியர் மற்றும் 1 ஆசிரியர் பயணம் செய்தனர். நெஞ்சு வலியும் மயக்கமும் சூழ்ந்த அந்த அணுவளவு நேரத்திலும், தனது உயிரைப் பற்றிப் பொருட்படுத்தாமல், வாகனத்தில் இருக்கும் குழந்தைகளின் பாதுகாப்பையே முதன்மையாகக் கருதிய அவர் மனவுறுதியோடு வாகனத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, பாலத்தின் ஓரத்தில் பாதுகாப்பாக நிறுத்திய பின்னரே தனது கடைசி மூச்சை விட்டார்.
இறக்கும் தருவாயிலும் கடமை உணர்ச்சியோடு செயல்பட்டு, பல உயிர்களைக் காப்பாற்றிய அவரது இந்த தியாகம் என்றும் போற்றத்தக்கது.
இன்று We The Leaders Foundation தொண்டர்கள் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதலையும், ஆதரவையும் தெரிவித்தனர். மேலும், நமது அமைப்பின் முதன்மை சேவகர் திரு.K.அண்ணாமலை அவர்களும் தொலைபேசி வாயிலாகக் குடும்பத்தினரிடம் பேசித் தனது ஆழ்ந்த இரங்கலையும், குடும்பத்திற்கு எப்போதும் உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
சுற்றுசூழல் விழிப்புணர்வு மாதத்தில் @WTLFoundation அமைப்பினர் மதுரை நகரின் மையப்பகுதி வழி செல்லும் வைகையை சுத்தம் செய்து தரைப்பாலம் சுவர்களில் ஆர்வத்துடன் வெள்ளை அடித்து மதுரையின் அப்பகுதியை தூய்மை இடமாக மாற்றி வருகின்றனர். @annamalai_k@ikkmurugan@Bagavathprathee
#Dharman update : shoot will be wrapped by October eyeing for Pongal 2027 release 🔥
The dedication and professionalism towards his craft at age of 76 🔥
Royal salute 🫡 Love you 3000 times Thalaivaaa @rajinikanth#SuperstarRajinikanth
கார்ணம்பாளையம் தடுப்பணையிலிருந்து புகளூர் வாய்க்காலுக்கு உடனடியாக பாசன நீர் திறந்துவிட வேண்டும்! @CMOTamilnadu, @BussyAnand
ஈரோடு மாவட்டம், கார்ணம்பாளையம் தடுப்பணையின் தென்பகுதி/வலதுகரை வழியாக புகளூர் வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த புகளூர் வாய்க்கால் வேலாயுதம்பாளையம் பகுதியில் வந்து மூன்று முக்கிய வாய்க்கால்களாகப் பிரிகிறது.
அவை:
1. பாப்புலர் ராஜமுதலியார் வாய்க்கால்
2. பள்ள வாய்க்கால்
3. வாங்கல் வாய்க்கால்
இந்த மூன்று வாய்க்கால்கள் மூலம் வேலாயுதம்பாளையம், புகளூர், செம்படாம்பாளையம், அய்யம்பாளையம், வரப்பாளையம், கடம்பகுறிச்சி, என்புதூர், சிந்தாயூர், நல்லகுமாரம்பாளையம், வேல்ரம்பாளையம், வாங்கல், சக்கரபாளையம், ஒத்தகடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சுமார் 15,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
தற்போது கார்ணம்பாளையம் தடுப்பணையின் மறுகரையில் அமைந்துள்ள ஜேடர்பாளையம் வாய்க்கால் மற்றும் ராஜா வாய்க்கால் ஆகியவற்றிற்கு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆனால், வலதுகரை பகுதியில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு முக்கியமான புகளூர் வாய்க்காலுக்கு மட்டும் நீர் திறந்துவிடப்படாமல் உள்ளது.
இதனால் புகளூர் வாய்க்கால் மற்றும் அதனுடன் இணைந்த மூன்று முக்கிய வாய்க்கால்களை நம்பியுள்ள சுமார் 15,000 ஏக்கர் விவசாய நிலங்களின் பாசனம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் பெரும் சிரமத்தையும், பயிர்கள் பாதிக்கப்படும் அபாயத்தையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், சுமார் 15,000 ஏக்கர் விவசாய நிலங்களின் பாசனத்தையும் கருத்தில் கொண்டு, கார்ணம்பாளையம் தடுப்பணையிலிருந்து வலதுகரை பகுதியில் அமைந்துள்ள புகளூர் வாய்க்காலுக்கு உடனடியாக பாசன நீர் திறந்துவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று #WeTheLeaders அமைப்பு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
“ஒரு வாய்க்காலில் திறக்கப்படும் நீர், 15,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கும் ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கும் வாழ்வாதாரமாக அமையும். புகளூர் வாய்க்காலுக்கு உடனடியாக நீர் திறந்துவிட வேண்டும்!”
இந்த மிக முக்கியமான மற்றும் அவசரமான கோரிக்கைக்கு உடனடியாக உரிய தீர்வு காணப்படாவிட்டால், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், கரூர் We The Leaders Foundation அமைப்பு ஜனநாயக மற்றும் சட்டப்பூர்வமான வழிமுறைகளில் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
மேலும், மக்களின் வாழ்வாதாரம், விவசாயம் மற்றும் பாசன நீர் தொடர்பான இத்தகைய அவசரமான பிரச்சினைகளில், போராட்டங்கள் நடைபெற்ற பின்னரே தீர்வு காணப்படும் என்ற நிலை உருவாகக் கூடாது. மக்களின் கோரிக்கைகளையும், அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே கவனத்தில் கொண்டு, உடனடியாக ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும் என்றும் இந்த நேரத்தில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
விவசாயத்தைக் காப்போம்!
பாசன நீரை உறுதி செய்வோம்!
புகளூர் வாய்க்காலுக்கு உடனடியாக நீர் திறந்துவிட நடவடிக்கை எடுப்போம் ! - @annamalai_k
WeTheLeaders,
#Karur District.
#Annamalai @WTLFoundation@experienceluv@arulascent
புதுக்கோட்டை மாவட்டம் We The Leaders Foundation சார்பாக அறந்தாங்கியில் மரக்கன்று நடும் விழா நடைப்பெற்றது.ஏற்பாடு செய்த அண்ணன் அறந்தை சசி கணேஷ் போன்ற தன்னார்வலர்களுக்கும் வாழ்த்துகள் .இதில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து தலைவர்களுக்கும் வாழ்த்துகள்
வயது ஒரு எண் மட்டுமே!
84 வயதிலும் சமூகப் பணியில் உற்சாகத்துடன் செயல்படும் பெசன்ட் நகர் வாழ், வேளச்சேரி வாக்காளரும், மூத்த #WeTheLeaders தன்னார்வலருமான திருமதி. ஜெயலட்சுமி தேவராஜன் அவர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறார்! 🙏
#WeTheLeaders#Velachery#Annamalai
1/2