வரலாற்றுச் சாதனை படைத்து FIFA உலகக் கோப்பையைக் கைப்பற்றிய ஸ்பெயின் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
களத்தில் காட்டிய அபாரமான கூட்டுமுயற்சி, தளராத நம்பிக்கை ஆகியவற்றால் இன்று உலகக் கோப்பையைத் தன்வசமாக்கி அரியணை ஏறியிருக்கிறது ஸ்பெயின் அணி.
சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் இவர்களின் இந்த வெற்றிப் பயணம் ஒரு சிறந்த வழிகாட்டி.
சமூகத்தில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் விரும்பும் இளைஞர்கள், விளையாட்டு மைதானத்திலும் தங்கள் திறமையால் உலகை வெல்ல முடியும் என்பதற்கு ஸ்பெயின் அணியின் இந்த வரலாற்று வெற்றி சான்றாகும்.
சாம்பியன் பட்டம் வென்று உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ள ஸ்பெயின் அணிக்கும், அவர்களுக்குப் பின்னால் நின்று உழைத்த பயிற்சியாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-முகம்மது முபாரக்
தலைவர், SDPI கட்சி - தமிழ்நாடு.
தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,
சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!
ஏஆர் ரஹ்மான்
அன்பும் அறமும் தழைக்கட்டும்!
சகோதரத்துவமும் சமாதானமும் மலரட்டும்!
-எஸ்டிபிஐ மாநில தலைவரின் ஈகைப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
புண்ணியம் பூத்த புனித ரமலான் மாதத்தில், பசியறிந்து நோன்பிருந்து, மறைநூலாம் திருக்குர்ஆனை ஓதி, இறையோனைத் தொழுது, ஏழைகளுக்கு ஈந்து, இறையருளைப் பெற்று, ஈதுல் ஃபித்ர் எனும் ஈகைத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும், என் இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருக்குர்ஆன் அருளப்பட்ட இந்த புனித மாதம், வெறும் வழிபாட்டுக்கானது மட்டுமல்ல; அது நமக்கான மகத்தான ஒழுக்கப் பயிற்சிக்களம். இம்மாதம் நமக்குக் கற்றுத்தந்த கடமையுணர்வும், சுயக்கட்டுப்பாடும் நம் வாழ்நாள் முழுவதும் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இஸ்லாம் போதிக்கும் உன்னதமான சகோதரத்துவத்தை நெஞ்சில் ஏந்தி, அன்பு, கருணை, சகிப்புத்தன்மை மற்றும் சமாதானத்தோடு அண்டை அயலாரோடு இணைந்து வாழ்வோம். மத நல்லிணக்கத்தையும், மனிதநேயத்தையும் போற்றி, இறைத்தூதரின் வழியில் நடைபோட உறுதியேற்போம்.
புத்தாடை மணமும், அறுசுவை உணவின் மகிழ்வும் உங்கள் இல்லங்களில் என்றும் நிலைத்திருக்கட்டும். உங்கள் வாழ்வு என்றென்றும் அமைதியாலும், அருளாலும் நிறைய மனதாரப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Dammam – the first city in the Kingdom where the crescent moon of Eid al-Fitr is sighted.
Tabuk – the last city in the Kingdom where the sighting ends.
Until now:
Cloudy conditions continue at most observation sites across the Kingdom.
Rain is currently heading toward observation sites across the Kingdom.
அரசியலமைப்பின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்!
குடியரசு தின வாழ்த்துக்கள்
- S.அகமது நவவி
மாநில பொதுச்செயலாளர்
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா - தமிழ்நாடு
அரசியலமைப்பின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்!
நாட்டு மக்கள் அனைவருக்கும் 77வது இந்திய குடியரசு தினத்தின் சிறப்பு நிகழ்வில், உள்ளார்ந்த மகிழ்ச்சியுடன் இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் மிகச் சிறந்த அரசியலமைப்புச் சட்டங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நமது இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறப்பு நாளே குடியரசு தினமாகும். டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையிலான அரசியலமைப்பு சபை உருவாக்கிய இந்தப் புனிதமான ஆவணம், ஜனநாயகம், சமத்துவம், சுதந்திரம், நீதி, சகோதரத்துவம், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை ஆகிய உன்னதக் கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டு, நமது நாட்டின் ஆன்மாவாக விளங்குகிறது.
சாதி, மதம், மொழி, பிராந்தியம், பால், பொருளாதார நிலை ஆகிய எதனாலும் பாகுபாடு காட்டாமல், அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்யும் இந்த அரசியலமைப்பு, ஒரு முற்போக்கான, நியாயமான, சமத்துவ சமூகத்தை உருவாக்குவதையே தன் இலட்சியமாகக் கொண்டுள்ளது. "சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம்" என்ற மூன்று பெருங் கோட்பாடுகளை மையமாகக் கொண்டு, அனைத்து இந்தியர்களும் ஒரே குடிமக்களாக இணக்கமாக வாழும் சமூகத்தை கனவு காண்கிறது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்றைய சூழலில் இந்த அடிப்படை மதிப்புகள் பல்வேறு வகையில் சவால் விடப்படுகின்றன. பன்முகத்தன்மைக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரான போக்குகள் வலுப்பெறுகின்றன. கூட்டாட்சி தத்துவம் சீரழிக்கப்பட்டு வருகின்றது. அரசியலமைப்பால் உத்தரவாதம் செய்யப்பட்ட மத சுதந்திரம், கல்வி உரிமை, சம உரிமை, பாதுகாப்பு உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் பல்வேறு கொள்கைகள், சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் மூலம் பாதிக்கப்படுகின்றன. இது நமது ஜனநாயக அமைப்பின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்கிறது.
அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரான ஜனநாயக விரோத, மதவாத, பாகுபாடான நடவடிக்கைகளை நாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. குடிமக்கள் ஒன்றிணைந்து இந்த அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டிய காலம் இது.
ஆகவே, இந்த 77வது குடியரசு தினத்தில், நமது முன்னோர்கள் நம்மிடம் ஒப்படைத்த இந்த அரசியலமைப்பின் புனிதமான விழுமியங்களைப் பாதுகாக்கவும், அதன் கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்! ஜெய்ஹிந்த்!
- நெல்லை முபாரக்,
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு.
சட்டமன்ற மரபுகளை தொடர்ந்து அவமதிக்கும் தமிழக ஆளுநரின் செயல் கண்டிக்கத்தக்கது! - எஸ்டிபிஐ
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு சட்டமன்றத்தின் 2026-ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 20) தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நான்காவது ஆண்டாகத் தொடர்ச்சியாக வெளிநடப்பு செய்தது கண்டனத்திற்குரிய செயலாகும்.
சட்டமன்றத்தின் தொடக்க வழிமுறையின்படி, முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு, அதன் பின்னர் ஆளுநர் உரை நிகழ்த்தப்பட்டு, நிகழ்வின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது நீண்டகால மரபாக இருந்து வருகிறது. ஆனால், ஆளுநர் இந்த மரபை மதிக்காமல், தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து, அதை ஏற்க மறுத்த சபாநாயகர் மற்றும் அவை நடைமுறையை எதிர்த்து, தனது மைக் ஆஃப் செய்யப்பட்டதாகவும், தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாகவும் கூறி வெளிநடப்பு செய்துள்ளார். ஆளுநரின் இந்தச் செயல் வழக்கமான நடைமுறைக்கு மாறானது மட்டுமல்லாமல், ஆளுநரின் பதவியின் தன்மைக்கும் முரணானது.
ஆளுநர் உரை என்பது ஆளும் அரசின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை மக்கள் மன்றத்தில் எடுத்துரைக்கும் முக்கியமான அரசியல் நிகழ்வு ஆகும். அதை வாசிப்பது ஆளுநரின் அரசியலமைப்பு கடமை. ஆனால், ஆளுநர் அதைப் புறக்கணித்து, எதிர்க்கட்சிகளைப் போல உரையில் "பிழைகள்" உள்ளன என்று குற்றம் சாட்டுவது அல்லது தனிப்பட்ட கோரிக்கைகளை முன்வைப்பது, அவர் ஏற்றுக்கொண்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயலாகும்.
அரசியலமைப்பின் 153-வது மற்றும் 200-வது பிரிவுகளின்படி, ஆளுநர் சுயேச்சையாகச் செயல்படும் அதிகாரம் இல்லை. மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு உட்பட்டே அவர் செயல்பட வேண்டும். உச்சநீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளில் இதைத் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது. ஆயினும், ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து இதே போக்கைப் பின்பற்றி வருவது, மாநில அரசுடனான மோதலை வளர்த்து, அரசியலமைப்பு நிறுவனங்களுக்கு இடையேயான உறவை சீர்குலைப்பதாகவே தோன்றுகிறது.
ஆளுநரின் இந்தச் செயல் சட்டமன்றத்தின் நீண்டகால மரபுகளை அவமதிப்பதோடு, தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், ஆளுநர் பதவியின் அடிப்படை நடுநிலைத்தன்மையை சந்தேகத்திற்கு உள்ளாக்குவதாகவும் அமைந்துள்ளது கண்டனத்திற்குரியதாகும்.
தமிழக அரசு மற்றும் மக்கள் இத்தகைய அரசியலமைப்பு மீறல்களைத் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. ஆளுநரின் இந்த நடவடிக்கைகள், அரசியலமைப்பு நெறிமுறைகளை மதிக்கும் போக்கை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, அரசியல் மோதலைத் தூண்டுவதாகவே உள்ளன.
இத்தகைய செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆளுநர் தனது அரசியலமைப்பு பொறுப்புகளை உணர்ந்து, மாநில அரசின் ஆலோசனைக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்துவதோடு, அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது ஒன்றிய அரசு அவரை திரும்பப்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்திய இராணுவ தினத்தை முன்னிட்டு, SDPI கட்சி நமது நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் அங்கீகாரத்தை காக்கும் வீரத் தளபதிகள் மற்றும் வீரச் சிப்பாய்களின் தைரியம், தியாகம் மற்றும் தளராத அர்ப்பணிப்புக்கு வணக்கம் செலுத்துகிறது.
தங்கள் உயிரை தியாகம் செய்த வீர உயிர்தியாகிகளையும், இன்றும் எங்களுக்கு ஊக்கமாகத் திகழும் முன்னாள் ராணுவ வீரர்களையும், கடினமான சூழ்நிலைகளில் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சேவையில் உள்ள ராணுவத்தினரையும் நாம் மரியாதையுடன் நினைவுகூருகிறோம்.
இந்திய இராணுவம் ஒழுக்கம், தன்னலமற்ற சேவை மற்றும் தேசிய பெருமையின் ஒரு அடையாளமாகத் திகழ்கிறது.
இந்த நாள், அமைதியைப் பாதுகாப்பதும், அரசியலமைப்பின் செம்மையான மதிப்புகளைப் பேணுவதும், சீருடை அணிந்துள்ளவர்களுக்கு உரிய மரியாதையை வழங்குவதும் நமது அனைவரின் கூட்டு பொறுப்பாகும் என்பதை நினைவூட்டுவதாக இருக்கட்டும்.
முகம்மது ஷபி
தேசிய துணை தலைவர்
#Sdpi #Sdpitn #SDPIRealAlternative
#YouthWithSdpi
*Tamil Nadu SDPI IT Wing State Conference Held in Pudukkottai*
The Tamil Nadu SDPI IT Wing State Conference was successfully held today (January 11, 2026) in Pudukkottai.
State General Secretary Nijam Mohaideen inaugurated the conference by hoisting the flag. State Treasurer Kovai Mustafa launched the volunteer registration process through QR code and Google Forms.
The event was presided over by State IT Wing In-charge and State General Secretary Ahmed Navavi.
IT Wing State Deputy Coordinator Shafiq Ahmed delivered the welcome address, while State Deputy Coordinator Saddam Hussain conducted the proceedings.
During the conference, State General Secretary Abubakkar Siddiq launched the Twitter (X) campaign, which created a significant impact by generating over 3,000 posts on the X platform within a short time.
State General Secretary A.K. Kareem unveiled the official IT Wing Logo.
State Secretary Mrs. Najma inaugurated the SDPI ONE LINK platform.
The conference was attended and graced by several dignitaries, including State Secretaries Shafiq Ahmed, Pastor V. Mark, Pudukkottai West District President Salahuddin, and various zonal IT Wing office-bearers.
Special addresses were delivered by SDPI State President Nellai Mubarak, State Deputy Presidents Abdul Hameed, and Asa. Umar Farook.
The vote of thanks was proposed by State Secretary Advocate Hassan Faizy.
More than thousands of IT Wing office-bearers and members participated in this conference, which focused on strengthening the party's digital presence ahead of the 2026 elections.
#SDPI #SDPIITWing #SDPIவெல்லும் #sdpitn #YouthWithSDPI #SdpiRealAlternative
கொங்கு மாநகராம் கோவையில் — களத்தை தயார் செய்வோம்!
2026ல் நிச்சயம் வெல்வோம்!
நவம்பர் 25, செவ்வாய்க்கிழமை. கோவை NSK கிராண்ட் பேலஸ்
SDPI கட்சியின் மாபெரும் கோவை மண்டல
பூத் பொறுப்பாளர்கள் மாநாடு!
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாட்டில்
SDPI கட்சியின் மாநில தலைவர்,
இளைஞர்களின் எழுச்சி நாயகர்
நெல்லை முபாரக் அவர்கள் சிறப்பு உரையாற்றுகின்றார்!
2000 க்கும் மேற்பட்ட பூத் பொறுப்பாளர்கள்
கூடும் திருவிழாவாக
இம்மாநாடு நடைபெற உள்ளது!
இம்மாநாடு சிறப்படையவும் வெற்றிபெறவும்
வாழ்த்தி மகிழும்
#SDPITamilnadu
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக, மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு எஸ்ஐஆர் தொடர்பான கருத்துக்களை முன்வைத்தனர்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் பேசுகையில், “மிகப்பெரும் அளவிலான வாக்காளர் திருத்த நடவடிக்கைக்கு மிகக் குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டதன் நோக்கம் ஐயத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே பீகாரில் குளறுபடிகளுடன், விளிம்புநிலை மக்களின் வாக்குரிமையை பறித்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை கேள்விக்குட்படுத்தப்பட்டு, அது உச்சநீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையில், அதன் மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டாத நிலையில் தமிழகத்தில் இதனை மேற்கொள்வது ஏற்புடையதல்ல. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணைய நடவடிக்கையின் மீது நம்பிக்கை இல்லாத சூழல் நிலவுவதால் தமிழக அரசு சட்டரீதியாக இதனை எதிர்கொள்ள வேண்டும், இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தின் முடிவை எஸ்டிபிஐ கட்சி ஆதரிக்கிறது” என தெரிவித்தார்.
இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் உள்ள குறைகள் களையப்பட்டு, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை வெளிப்படையாகக் கடைப்பிடித்து, உரிய அவகாசம் தந்து, 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பின்பு, எக்கட்சிக்கும் சார்பற்ற நிலையில் தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை நடத்த வேண்டும் எனவும், அதுவரையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
#SIR #AllPartyMeeting #SdpiTamilnadu #SDPI