அரசியலமைப்பின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்!
நாட்டு மக்கள் அனைவருக்கும் 77வது இந்திய குடியரசு தினத்தின் சிறப்பு நிகழ்வில், உள்ளார்ந்த மகிழ்ச்சியுடன் இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் மிகச் சிறந்த அரசியலமைப்புச் சட்டங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நமது இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறப்பு நாளே குடியரசு தினமாகும். டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையிலான அரசியலமைப்பு சபை உருவாக்கிய இந்தப் புனிதமான ஆவணம், ஜனநாயகம், சமத்துவம், சுதந்திரம், நீதி, சகோதரத்துவம், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை ஆகிய உன்னதக் கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டு, நமது நாட்டின் ஆன்மாவாக விளங்குகிறது.
சாதி, மதம், மொழி, பிராந்தியம், பால், பொருளாதார நிலை ஆகிய எதனாலும் பாகுபாடு காட்டாமல், அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்யும் இந்த அரசியலமைப்பு, ஒரு முற்போக்கான, நியாயமான, சமத்துவ சமூகத்தை உருவாக்குவதையே தன் இலட்சியமாகக் கொண்டுள்ளது. "சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம்" என்ற மூன்று பெருங் கோட்பாடுகளை மையமாகக் கொண்டு, அனைத்து இந்தியர்களும் ஒரே குடிமக்களாக இணக்கமாக வாழும் சமூகத்தை கனவு காண்கிறது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்றைய சூழலில் இந்த அடிப்படை மதிப்புகள் பல்வேறு வகையில் சவால் விடப்படுகின்றன. பன்முகத்தன்மைக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரான போக்குகள் வலுப்பெறுகின்றன. கூட்டாட்சி தத்துவம் சீரழிக்கப்பட்டு வருகின்றது. அரசியலமைப்பால் உத்தரவாதம் செய்யப்பட்ட மத சுதந்திரம், கல்வி உரிமை, சம உரிமை, பாதுகாப்பு உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் பல்வேறு கொள்கைகள், சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் மூலம் பாதிக்கப்படுகின்றன. இது நமது ஜனநாயக அமைப்பின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்கிறது.
அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரான ஜனநாயக விரோத, மதவாத, பாகுபாடான நடவடிக்கைகளை நாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. குடிமக்கள் ஒன்றிணைந்து இந்த அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டிய காலம் இது.
ஆகவே, இந்த 77வது குடியரசு தினத்தில், நமது முன்னோர்கள் நம்மிடம் ஒப்படைத்த இந்த அரசியலமைப்பின் புனிதமான விழுமியங்களைப் பாதுகாக்கவும், அதன் கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்! ஜெய்ஹிந்த்!
- நெல்லை முபாரக்,
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு.
SDPI இளைஞரணியான YOUNG DEMOCRATSன்
தேசிய கமிட்டி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள வழ.அப்துல்லா ஹஸ்ஸான் பைஜி&கோவை ஹனீப் கான்&தேசிய ஒருங்கிணைப்பாளர் வழ.ரேணு தேவி சிங் உள்ளிட்ட அனைத்து கமிட்டியினருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்💐💐💐
#youngdemocrats#Youth#SDPINRC2026
பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் அரசியலமைப்பு நெறிமுறைகளைச் சீர்குலைக்கின்றனர்! - எஸ்டிபிஐ
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் தேசிய செயல் தலைவர் முகமது ஷஃபி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பாஜக அல்லாத எதிர்கட்சிகள், மாநிலக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர் பதவி திட்டமிட்டு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; இதனால் அரசியலமைப்பு மரபுகள் சீர்குலைக்கப்படுகின்றன. மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு தடையாக இருக்கும் இத்தகைய போக்கு வளர்ந்து வருவது மிகவும் கவலைக்குரியது. தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் சமீபத்திய நிகழ்வுகள், சட்டமன்ற அதிகாரத்தைக் குறைப்பதற்கும், நிறுவன மோதல்களைத் தூண்டுவதற்கும், கூட்டாட்சியின் உணர்வைச் சீர்குலைப்பதற்கும் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளைச் சுட்டிக்காட்டுகின்றன.
தமிழ்நாட்டில், ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜனவரி 20 அன்று, நடைமுறை ஆட்சேபனைகளை எழுப்பி, வழக்கமான ஆளுநர் உரையை முழுமையாக நிகழ்த்தாமல் சட்டமன்றத்திலிருந்து வெளியேறினார். இந்தச் செயல் சட்டமன்ற மரபை மீறியதாகவும், அவையின் மாண்புக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகவும் பரவலாக விமர்சிக்கப்பட்டது. இந்த நடத்தை, அமைச்சரவையின் உதவியுடனும் ஆலோசனையுடனும் செயல்படக் கடமைப்பட்ட ஒரு நடுநிலையான தலைவராக ஆளுநரின் அரசியலமைப்புப் பாத்திரத்தைப் புறக்கணிப்பதாக அமைந்தது.
கர்நாடகாவில், ஆளுநர் தாவர்சந்த் கெஹ்லோட் ஜனவரி 21 அன்று, அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட உரையை கடுமையாகக் குறைத்து வாசித்தார். இது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துடன் தவிர்க்க முடியாத முரண்பாட்டிற்கு வழிவகுத்தது. இதேபோன்ற பதட்டங்கள் கேரளாவிலும் அரங்கேறியுள்ளன. அங்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஜனவரி 20 அன்று, அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட உள்ளடக்கங்களைத் தேர்ந்தெடுத்து நீக்கியதாகவும், சட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதைத் தாமதப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தச் செயல்கள் நடுநிலைமை மற்றும் அரசியலமைப்பு முறைமை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன.
ஆளுநர் உரை அமைச்சரவையின் கூட்டு விருப்பத்தைப் பிரதிபலிக்க வேண்டும். இந்த ஆணையில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவது அரசியலமைப்பிற்கு முரணானது. ஆளுநர் பதவி ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காகவே உள்ளது; அது ஒரு இணையான அதிகார மையமாகவோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்கள் மீது ஒரு கட்சி சார்பான கட்டுப்பாட்டு அமைப்பாகவோ செயல்படுவதற்காக அல்ல என்பதை அரசியலமைப்பின் 163 மற்றும் 176வது பிரிவுகள் சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவுபடுத்துகின்றன.
மோடியின் ஆட்சி காலத்தில், ஆளுநர்கள் காலனித்துவ கால ஆளுநர் ஜெனரல்களைப் போலவே செயல்படுகின்றனர். அவர்கள் நடுநிலையான அரசியலமைப்புப் பாதுகாவலர்களாக இல்லாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக அல்லாத அரசாங்கங்களைச் சீர்குலைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட அரசியல் அமலாக்க அதிகாரிகளாகச் செயல்படுகின்றனர். இன்று அவர்களின் பங்கு, அரசியலமைப்பைக் காப்பதை விட, சட்டமன்றங்களைச் சீர்குலைப்பது, நிர்வாகத்தைத் தடுப்பது, ஒப்புதல் அளிப்பதைத் தாமதப்படுத்துவது மற்றும் மத்திய ஆளும் கட்சி சார்பாக நெருக்கடிகளை உருவாக்குவது போன்றவையாகவே தெரிகிறது.
இந்த முறை தற்செயலானதும் அல்ல, அரசியலமைப்புக்கு உட்பட்டதும் அல்ல. இது மாநிலங்களை பலவீனப்படுத்துவதற்கும், மக்களின் ஆணையைச் சீர்குலைப்பதற்கும், அதிகாரத்தை மையப்படுத்துவதற்கும் திட்டமிட்ட ஒரு உத்தியைப் பிரதிபலிக்கிறது. இது இந்தியாவின் கூட்டாட்சி ஜனநாயகத்தின் உணர்வையே சீர்குலைக்குகிறது.
ஆளுநர்களாக நியமிக்கப்பட்ட பாஜக-ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளால் ராஜ்பவன்கள் திட்டமிட்டுத் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சிகளும் பாஜக அல்லாத மாநில அரசுகளும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி அழைப்பு விடுக்கிறது. தனித்த எதிர்ப்பு இனி போதுமானதல்ல; கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான இந்தத் தாக்குதல், அரசியல், சட்ட மற்றும் அரசியலமைப்பு ரீதியான ஒரு ஒன்றுபட்ட ஜனநாயகப் பதிலடியைக் கோருகிறது.
இந்திய ஜனநாயகம் அரசியலமைப்புப் பதவிகளுக்கான மரியாதையைச் சார்ந்துள்ளது. நிர்வாகத்தின் நாடகங்கள் மூலம் சட்டமன்ற இறையாண்மையைச் சிதைக்க முடியாது. ராஜ்பவன்கள் பாஜகவின் புறக்காவல் நிலையங்களாக மாற்றப்பட்டால், கூட்டாட்சித் தத்துவம் நிலைத்திருக்காது.
ஆகவே, ஒன்றிய அரசு ஆளுநர்களின் கட்சி சார்பு மீறல்களை உடனடியாக தடுக்கவும் கூட்டாட்சியை நிலைநிறுத்த ஒன்றிய அரசை எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது.
#SDPI #SDPITN #YoungDemocratsSDPI #YouthWithSDPI #Sdpipositivepolitics #India #SecularIndia #ProtectMinorities_Marginalised
#JusticeDignityEquality #UnityInDiversity