இன்றைய தினம், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள, உலகம் போற்றும் விஞ்ஞானிகளில் ஒருவரும், மக்களின் பேரன்பைப் பெற்றிருந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான, பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்தில், அவரது குடும்பத்தினருடன் இணைந்து நினைவஞ்சலி செலுத்தும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
"கனவு காணுங்கள்; அந்தக் கனவுகள் எண்ணங்களாக மாறட்டும், எண்ணங்கள் செயல்களாக மாறட்டும்" என்ற அவரது வாழ்வியல் தத்துவம், நமது இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக உள்ளது. இந்தியாவின் அறிவியல் முன்னேற்றம், தன்னம்பிக்கை மற்றும் இளைஞர்களின் கனவுகளுக்காக அவர் விதைத்த விதைகள், நம் தலைமுறைகளைத் தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருக்கின்றன.
வளர்ந்த இந்தியா என்ற அவரது கனவை நனவாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் உயர்ந்த லட்சியங்களைப் பின்பற்றி, வலிமையான, தன்னிறைவு பெற்ற, உலகிற்கு வழிகாட்டும் இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்.
Honoured to be in Rameswaram today on the 11th Remembrance Day of our former President Dr APJ Abdul Kalam avl for the ‘Ignite India 2026’ event organised by the APJ Abdul Kalam International Foundation.
It was a privilege to share the stage with distinguished guests and an absolute delight to witness the brilliant STEM projects showcased by our young students.
From a phenomenal technologist to a visionary defence strategist, Dr. Kalam’s life is a masterclass in nation-building. His ultimate dream was a truly self-sustaining India, and guiding our youth in this direction is the only way to achieve it. (1/3)
ஏலத்துக்கு போன அடகு நகையான தாலியை மீட்டு தரக்கோரி அண்ணாமலையிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த பெண்..! அடுத்த நாளே அதை விட அதிக எடையுடன் கூடிய புதிய தாலியை வாங்கி கொடுத்த அண்ணாமலை..!!
#Annamalai | #BJP | #Woman | #PolimerNews
தமிழக முன்னாள் முதலமைச்சர், புரட்சித் தலைவி செல்வி. ஜெயலலிதா அவர்கள் பிறந்த தினம் இன்று.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்த முதலமைச்சராக விளங்கியவர். பெண்கள் முன்னேற்றம், சமூக நலத்திட்டங்கள், குழந்தைகள் நலனுக்காக அவர் கொண்டு வந்த திட்டங்கள், தலைமுறைகள் கடந்தும் பேசப்படும்.
உறுதியான தலைவராகத் திகழ்ந்த புரட்சித் தலைவி செல்வி. ஜெயலலிதா அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்.
எனது நண்பர் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அளித்த மதிய விருந்தில், பாடப்பட்ட பாடல்களில் ஒன்றாக மகத்தான மனிதர் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாளை நமதே' என்ற பாடலும் இருந்தது!
இந்தியாவில் உள்ள நம்மில் பலரைப் போலவே, பிரதமர் அன்வர் இப்ராஹிமும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ஆவார்!
@anwaribrahim