@TalkiesFriday டேய் அந்த கூட்டத்தில படிச்சவன ஒருத்தன காட்டு பாப்போம் கஞ்சா குடிக்கிகளும், அரசியல் படுத்தபடாத உன்ன மாதிரி பைத்தியங்கதான் இருக்கும் 😂😂😂 வந்துடான் கூட்டத தூக்கிட்டு
ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் தமிழ்நாடு அரசு – அதானியின் அல்லேரி நீரேற்றுப் புனல்மின் திட்டத்தை உடனடியாக ரத்து செய்க!
@CMOTamilnadu@drtkprabhu_TVK@CTR_Nirmalkumar@moefcc@byadavbjp
தமிழ் சமூகத்தின் நீண்ட பண்பாட்டுடன் தொடர்புடைய கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் முக்கிய அங்கமான ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களையும், அரிய உயிரினங்களையும் அழித்து, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முயலும் தமிழ்நாடு அரசின் மக்கள் விரோத, சூழல் விரோத நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட அரசம்பட்டு காப்புக்காட்டில் உள்ள அல்லேரி மலையில் 1800 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்றுப் புனல்மின் திட்டத்திற்காக 25.11.2025 அன்று தமிழ் நாடு பசுமை எரிசக்திக் கழக நிறுவனமானது அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி ஹைட்ரோ போர்டின் லிமிடெட் (ADANI HYDRO ENERGY FOURTEEN LIMITED) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.
கனிம வளங்களையும், இயற்கை வளங்களையும் சுரண்டி இலாபம் ஈட்டும் நிறுவனத்திடம் தமிழ்நாட்டின் அரிய காடுகளையும் நீராதாரங்களையும் ஒப்படைப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாதது. தமிழர்களின் வாழ்வாதாரத்தை விட, கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபம் தான் இந்த அரசுக்கு முக்கியமா என்கிற கேள்வி எழுகிறது.
இந்தத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள 337.452 எக்டேர் நிலப்பரப்பில் 228.352 எக்டேர் அரசம்பட்டு காப்புக்காடாகும். மேல் மற்றும் கீழ் நீர்த்தேக்கங்கள் அமைப்பதன் மூலம் இந்த அடர்ந்த காடுகள் நீரில் மூழ்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.
அரசம்பட்டு காப்புக்காடு வெறும் மரங்கள் நிறைந்த பகுதியல்ல; ஆயிரக்கணக்கான உயிரினங்களின் வாழ்விடமாகும். குறிப்பாக சாம்பல் இருவாச்சி, வெண்முதுகு ஆந்தை, புள்ளி ஆந்தை உள்ளிட்டப் பல அரிய பறவைகள், உலகிலேயே ஜவ்வாது மலையில் மட்டுமே காணப்படும் ஜவ்வாது இலைச்சருகு அரணை (Jawadhu leaf-litter skink), இலங்கை மரந்தாவும் பாம்பு, மலபார் குழி விரியன், எறும்புத்தின்னி, தேவாங்கு, மலபார் மலை அணில், செந்நாய், காட்டுமாடு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டக் கரடிகள் உள்ளிட்ட பல அரிய உயிரினங்களின் புகலிடமாக இப்பகுதி விளங்குகிறது. இவ்வளவு முக்கியமான உயிரியல் வளத்தை அழிப்பது இயற்கைக்கு எதிரான வரலாற்றுப் பிழையாகும்.
அல்லேரி மலையிலிருந்து பாயும் நீரை நம்பியே மலையடிவாரப் பகுதிகளில் உள்ள ஏரிகள், கிணறுகள் மற்றும் விவசாய நிலங்கள் செழித்து வருகின்றன. புவிசார் குறியீடு (GI) பெற்ற இலவம்பாடி முள் கத்தரிக்காய் உள்ளிட்ட விவசாய உற்பத்திகளும் இந்த மலைகளில் இருந்து கிடைக்கும் நீராதாரத்தைச் சார்ந்தே உள்ளன.
மேலும், கீழணையிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விரிஞ்சிபுரம் பாலாற்றிலிருந்து குழாய்கள் மூலம் நீர் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் குழாய்கள் செல்லும் வழியிலுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, ஆண்டிற்கு மிகக் குறுகிய காலமே நீர் ஓடும் பாலாற்றின் நீர்வளமும் சுரண்டப்படும் அபாயம் உள்ளது.
சூழலியல் பாதிப்பு ஒரு புறம் இருக்க, பொருளாதார அடிப்படையிலும் இந்தத் திட்டம் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் சுமையாக அமையும். இத்திட்டத்தின் வழி உற்பத்தியாகும் மின்சாரத்தின் அடக்க விலை யூனிட்டுக்கு ரூ.9.10 எனக் கூறப்படுகிறது. நிறுவனத்தின் இலாபத்துடன் சேர்ந்து தமிழ்நாடு அரசுக்கு விற்கப்படும் விலை ரூ.10னைத் தாண்டும். அதே நேரத்தில், நவீன தொழில்நுட்பத்தில் சூரிய ஆற்றல், காற்றாலை மற்றும் மின்கல சேமிப்பு வசதிகள் மூலம் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஏற்கனவே பெரும் கடன் சுமையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மீது மேலும் பொருளாதாரச் சுமை ஏற்றுவது எந்த நியாயமும் இல்லை.
எனவே அல்லேரி, தென்மலை, ஆழியார் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நீரேற்றுப் புனல்மின் திட்டங்களை அமைப்பதற்காக அதானி குழுமத்துடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும், தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கினாலும், மாநில வனத்துறை இந்தத் திட்டத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும்.
தமிழர்களின் மண்ணையும், மலைகளையும், நீரையும், காடுகளையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபத்திற்காக அழிக்க முயன்றால், அதை ஒருபோதும் நாம் தமிழர் கட்சி அனுமதிக்காது. இயற்கையையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நாம் தமிழர் கட்சி மக்களைத் திரட்டி மக்களாட்சி வழியில் மாபெரும் அறப்போராட்டங்களை முன்னெடுத்து இந்தத் திட்டத்தை முறியடிக்கும் என்பதை தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நேற்று சென்னையில் நடந்த நாம் தமிழர் கட்சியின் சமூக ஊடகப்பிரிவு கலந்தாய்வு நிகழ்வில் என்னுடைய கோரிக்கையை அண்ணன் சீமானிடம் எடுத்துரைத்தேன்...
நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக பயணிக்கும் பல்வேறு நபர்களின் கருத்துக்கள் அண்ணன் சீமானிடம் முன்வைக்கப்பட்டது... அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென்று உறுதியளித்தார்... 😊
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
#வாய்ப்பில்லை_ராஜா!
எங்கள் அண்ணன் #சீமான் இருக்கும் வரையிலும், ஒரு அணு அளவு நாசக்காரத் திட்டத்தையும் இந்தத் தமிழ் மண்ணில் நடைமுறைக்குக் கொண்டு வர முடியாது! 🔥🔥🔥
ஜெகதீஷ்க்கு @TheRoute , விஜய் @CMOTamilnadu உடன் என்ன வேலை..?
ஜோசியக்காரருக்கு போடுவது போல அந்த Adviser பொறுப்பை இவருக்குப் போட்டிருக்காங்களா?
யாராவது ஒரு RTI போட்டு கேளுங்க!
யார் தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டேனென யாரோ எழுதிக் கொடுத்ததை உணர்ச்சிப்பொங்க மேடையில் ஒப்பிக்கும் முதல்வர் விஜய் அவர்களே! தனது கட்சிப்பெண்ணை வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்றத் துணைபோவதேன்?
தவெகவின் ஆட்சியில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் ஒருபுறமென்றால், தவெகவினராலே நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் மறுபுறம்! தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வேனென மேடையில் வீரவசனம் பேசி, தேர்தல் வாக்குறுதி கொடுத்து, ஆட்சியதிகாரத்திற்கு வந்த முதல்வர் விஜய் அவர்கள் இன்றைக்கு சொந்தக் கட்சியினரிடமிருந்து பெண்களைக் காக்க இயலாத கையறு நிலையிலிருப்பது வெட்கக்கேடானது.
சென்னை, ஆலந்தூரில் கணவனை இழந்தப் பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தவெக நிர்வாகி வேம்புலி பாலியல் தொல்லை கொடுத்ததும், சேலத்தில் தவெக நிர்வாகி மணிகண்டன் ஐம்பதுக்கும் மேற்பட்டப் பெண்களைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி, ஆபாசக் காணொளிகளை எடுத்து அலைபேசியில் வைத்துக் கொண்டு அவர்களை மிரட்டியதும், திருவைகுண்டத்தில் வேலைகேட்டு வந்த பெண்ணுக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தவெக நிர்வாகிகளே கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததுமான கொடுஞ்செய்திகள் தவெகவினரால் நிகழும் சமூக அவலங்களுக்கான சரிநிகர் சான்றுகளாகும். இரண்டு பெண் தலைவர்களைக் கொள்கைத் தலைவர்களாகக் கொண்டிருக்கிறோமென மேடைதோறும் சுயதம்பட்டம் அடித்தக் கட்சியின் உண்மையான முகம் இதுதான். பெண்களின் வாக்குகளைப் பெருவாரியாகப் பெற்று, அதிகாரத்திற்கு வந்த தவெகவாலேயே இன்றைக்குப் பெண்களின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகி இருப்பது மிக மோசமான இழிநிலையாகும்.
திருவைகுண்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணை உடனடியாகக் கட்சியைவிட்டு நீக்கிய தவெக, அதில் தொடர்புடைய தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணன் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? யார் தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டேனென யாரோ எழுதிக் கொடுத்ததை உணர்ச்சிப்பொங்க மேடையில் ஒப்பிக்கும் முதல்வர் விஜய் அவர்கள், தனது கட்சிப்பெண்ணை வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்றத் துணைபோவதேன்? நீங்கள் திரையில் செய்த வீரப்பராக்கிரமங்களைத் தரையிலும் செய்வீர்களென்று நம்பி, உங்களை அண்ணனென்றும், தம்பியென்றும் விளித்து உங்களுக்கு வாக்குச் செலுத்திய பெண்களுக்கு நீங்கள் செய்கிற நன்றிக்கடன் இதுதானா? அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் செய்து, கட்சியைவிட்டு வெளியே வரச் செய்த நீங்கள், குற்றமிழைத்த உங்களது கட்சியின் சட்டமன்ற உறுப்பினரைப் பதவிவிலகச் செய்து, கட்சியைவிட்டு வெளியேற்ற மட்டும் ஏன் தயங்குகிறீர்கள்? எல்லாவற்றையும்விட ஆட்சியைத் தக்க வைப்பதற்கான ‘பெரும்பான்மை’ கணக்குதான் உங்களுக்குப் பெரிதாகத் தெரிகிறதா? ‘எல்லாம் மேலிடத்துக்குத் தெரியும்’ எனக் குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அதிகாரத்திமிரில் பேசியிருக்கிறார்களே, யார் அந்த மேலிடம் முதல்வரே? நீங்கள்தான் அந்த மேலிடமா? இல்லை! உங்களுக்கு மேலேயும் ஒரு மேலிடம் இருக்கிறதா? என்னப் பதில் வைத்திருக்கிறீர்கள்?
வழக்கம்போல, ‘பழி போடுகிறார்கள்’ எனப் பொதுமேடையில் ஒப்பாரி வைத்துப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கப் போகிறீர்களா? இல்லை! ‘சிங்கப்பெண் படை’ எனும் பல்லில்லா படையை வைத்துக் காலங்கடத்தப் போகிறீர்களா? குற்றவாளிகளைக் கைதுசெய்யும் அதிகாரமோ, குற்றத்தின் பின்புலத்தைப் புலனாய்வு செய்யும் அதிகாரமோ, விசாரணை செய்யும் அதிகாரமோ என எவ்வித அதிகாரமுமற்று வெறும் ரோந்துப்பணி செய்வதற்கு மட்டும் எதற்கு ஒரு தனிப்படை? 4 கோடி பெண்களின் தொகையைக் கொண்டுள்ள மாநிலத்தில் 5,000 பேரைக் கொண்ட சிங்கப்பெண் படை வெறும் ரோந்துப் பணிகளின் மூலமே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமென்பது ஏமாற்று வாதமில்லையா? ஏற்கனவே, காவல்துறை வைத்திருந்த ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ என்பதற்கும், ‘சிங்கப்பெண்’ படைக்கும் என்ன பெரிய மாறுபாடு? சட்டவிரோதப் போதைப்பொருட்களின் புழக்கத்தைத் தடுக்கவோ, மதுக்கடைகளை முற்றாக மூடவோ, போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவோ என எந்த முயற்சியும் எடுக்காதுவிட்டுவிட்டு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவேன்; பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வேன் என மேடையில் வாய்ச்சவடால் விடுவது எதற்கு முதல்வரே? குற்றமிழைக்கும் குற்றவாளிகள் எவராயினும் பாரபட்சமின்றி சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது ஒரு பொறுப்புள்ள அரசின் தலையாயக் கடமை. அதனை இனியாவது உணர்வீர்களா?
“தமிழ்நாடு முழுவதும் மாறுவேடத்தில் செல்லும்
முதல்வர் தடுத்த குற்றங்கள் எத்தனை?
தமிழ்நாடு பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக
உருவெடுத்திருப்பது வேதனையின் உச்சம்.
என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு?
தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா?
ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா?
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
கடலூர் பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் புதிதாக 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக்கூடாது!
@CMOTamilnadu@TVKVijayHQ
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகிலுள்ள கடற்பகுதியில் புதிதாக மேலும் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது என்று போராடி வரும் நிலையில் ஹிந்துஸ்தான் நிறுவனம் 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு விண்ணப்பித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
நிலத்தையும், நீரையும் மாசுபடுத்திச் சுற்றுச்சூழலை சீர் கெடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் அனுமதிக்கக்கூடாது என்று நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போராடி வருகின்றது. காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள் திட்டங்களை அனுமதிக்கமாட்டோம் என்று உறுதியளித்தது. அதனையடுத்து, திமுக ஆட்சிக்காலத்தில் திருவாரூர் மாவட்டம் பெரியகுடி, இராமநாதபுரம் கடற்கரை பகுதி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் தொடங்கவிருந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களும் கடும் எதிர்ப்புப்போராட்டங்கள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் கடலுக்குள் ரூ.425 கோடி மதிப்பீட்டில் 4 புதிய ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகள் அமைக்க ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் (TNCZMA) சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பித்துள்ளது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கடற்பகுதி பாரம்பரிய மீன்பிடித் தொழில் பகுதி மட்டுமல்லாது சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இப்பகுதியில் தொடங்கப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டமானது கடல் நீரை மாசுபடுத்தி, மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் பல்லுயிர் பெருக்கத்தை அழித்து, பாரம்பரிய மீன்பிடித் தொழிலுக்கே பேராபத்தை ஏற்படுத்தும்.
தனியார் பெருநிறுவனங்களின் நலனுக்காக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், பல்லுயிர் பெருக்கத்தையும், கடல் வளத்தையும் அழித்தொழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தவெக அரசு அனுமதியளிக்க வேண்டாமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியைவிட்டு நீக்கிட்டு, குற்றத்துக்குத் துணைபோன சட்டமன்ற உறுப்பினரை காப்பாத்தும் இந்த மானங்கெட்ட அரசு மனுநீதிச்சோழன் அரசா?
வாய்ல வந்துரும்.. வேண்டாம் முதல்வரே!
@CMOTamilnadu@TVKVijayHQ