கொடிய இறப்பாவே இருந்தாலும் ஜாதி பார்த்து தானே கண்டனம் தெரிவிக்குறீங்க @mari_selvaraj ?
இதே கண்டனம் அஜித்குமாருக்கு ஏன் இல்லை ? ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ? ஏன் தமிழ்நாடு அரசுக்கு இதே அழுத்தம் தரவில்லை ?
பிரச்சனையின் ஆரம்பப்புள்ளியே நீங்க தான் !
கள்ளச்சாராய ஆட்சிக்கு!
கள்ளக்குறிச்சியே சாட்சி!
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி!
பெண்கள் பாதுகாப்பின்மைக்கு
அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி!
போதைப் பொருள் கடத்தலுக்கு
திமுக அயலக அணியே சாட்சி!
போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் திமுக இளைஞரணி கூட்டமே சாட்சி!
ஸ்டாலின் மாடல் சமூக (அ) நீதிக்கு வேங்கைவயலே சாட்சி!
Already ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே Failure.
இதில் இன்று Version 2.0 Loading ஆம்!
@AIADMKOfficial ஆட்சியில்
தலை நிமிர்ந்து இருந்த தமிழ்நாட்டை, ஜாமினில் வந்தவர்க்கெல்லாம் தியாகி பட்டம் கொடுத்து தலைகுனிய வைத்ததற்கு பொம்மை முதலமைச்சரே சாட்சி!
2026-ல் ஒரே version தான் -
அது #TN_AIADMK version தான்!
மக்கள் வருகின்ற 2026 சட்டமன்ற
பொதுத் தேர்தலில் பெரிய 'ஓ' (0) வாக போட்டு #ByeByeStalin…
என்று சொல்லும்போது தாங்கள் சட்டையை கிழித்துக்கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி. @mkstalin
குடியிருப்புப் பகுதியில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட, பல்லடம் சட்டமன்றம் பொங்கலூர் மேற்கு ஒன்றியம் மாதப்பூர் பஞ்சாயத்து கிளை @BJP4Tamilnadu தலைவர் சகோதரர் திரு.மோகன்ராஜ் அவர்கள் சமூகவிரோதிகளால் குடும்பத்துடன் வெட்டிக் கொல்லப்பட்ட செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். திரு. மோகன் ராஜ் அவரது தம்பி, அம்மா, சித்தி என நான்கு பேரையும் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். சகோதரர் மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தெருவுக்குத் தெரு மதுக் கடைகளைத் திறந்து வைத்து, கட்டுப்பாடற்ற மது விற்பனையை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் திமுக அரசின் சாராய வியாபாரிகள் பணம் சம்பாதிக்க, இன்னும் எத்தனை பொதுமக்கள் உயிர் பலியாக வேண்டும்?
தினம் ஒரு கொலை தமிழகத்தில் நடந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கையில், அதற்குப் பொறுப்பான காவல்துறையைக் கையில் வைத்துக்கொண்டு, நம்பர் ஒன் முதல்வர் என்று விளம்பரம் செய்ய வெட்கமாக இல்லையா முதலமைச்சர் @mkstalin அவர்களே.
குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கைகள் கட்டப்பட்டு இருக்கும் காவல்துறையை ஆளுங்கட்சி பிடியிலிருந்து விடுவித்து அவர்கள் பணி செய்ய அனுமதித்து, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் வீட்டின் முன் மது அருந்தியவர்களை தட்டி கேட்டதற்காக மோகன்ராஜ் என்பவரையும், அவரது தாயார் சகோதரர் மற்றும் சித்தி என நான்கு பேரை குடும்பத்துடன், போதை கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விடியா அரசு பதவியேற்றதிலிருந்து நாள்தோறும் நம் மாநிலம் கொலை கொள்ளை என கொலை மாநிலமாகவும் ,சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்த தமிழகமாகவும் , போதை பொருட்களின் தலைநகரமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது, இதனை சரி செய்ய வேண்டிய இடத்தில் உள்ள முதலமைச்சரோ வெற்று விளம்பரத்தில் மட்டும் தனது முழு கவனத்தையும் செலுத்தி கொண்டிருப்பது வெட்கக்கேடானது.
காவல் துறையை கையில் வைத்துக்கொண்டு மக்களைக் காப்பாற்ற துப்பு இல்லாமல், நிர்வாக திறனற்ற பொம்மை முதலமைச்சருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனியாவது காவல் துறையை தனது ஏவல் துறையாக மட்டும் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி, சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டுமென்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
மேலும் இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த விடியா அரசை வலியுறுத்துவதோடு, உயிரிழந்த மோகன்ராஜ் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் , வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.