On Tamil Genocide Remembrance Day, I'm joining the Tamil people around the world in mourning the lives tragically taken during Sri Lanka's decades-long Civil War.
Today and every day, we must recognize this tragedy and seek justice for the victims and their families.
2009 மே 18 தமிழர் இனத்தில் பிறந்த ஒவ்வொரு தமிழனும் மறக்க கூடாத நாள்; 😢
ஈழ நிலத்தில் தமிழர்கள் சிந்திய ரத்தம் இன்னும் சிவந்தது கிடக்கிறது. எமது ஈழ மக்களின் கண்ணீரும் கதறுலும் எங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன!
#TamilsGenocideDay2026
17 years ago, Sri Lanka carried out a genocidal campaign against the Tamil people. Tens of thousands killed. Hospitals destroyed. Families starved.
I will continue to stand with the Tamil community in the fight for justice. We need genocide recognition, universal jurisdiction, & international accountability.
Chinese celebrate Tamil’s Maariamman festival and Chinese or Tamils in Singapore never celebrate anything like this to Ram (God responsible for Hindu slogan Jai Sree Ram)
Shows Tamil culture is way way different than any Hindu culture
பட்டினித் தீ மூட்டி இரண்டாம் நாள்!
உருகத் தொடங்கியது மெழுகுவர்த்தி!
திலீபனுடன் பன்னிரு நாட்கள் நூலிலிருந்து......
தியாக தீபம் திலீபனுடன் இரண்டாம் நாள்....
1987 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 16 ஆம் திகதி. இது திலீபனுடன் இரண்டாம் நாள். அன்று அதிகாலை 5.00 மணிக்கே திலீபன் உறக்கத்தைவிட்டு எழுந்துவிட்டார். முகம் கழுவித் தலை வாரிக்கொண்டார். அவர் முகம் சோகமாகக் காணப்பட்டாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல் எல்லோருடனும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.
சகல தினசரி பத்திரிகைகளையும் ஒன்றும் விடாமல் படித்து முடித்தார். பத்து மணியளவிலே பக்கத்து மேடையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. நிகழ்ச்சிகளுக்குத் தேவர் தலைமை தாங்கிக்கொண்டிருந்தார். கவிதைகளைப் படிப்பதற்காக இளம் சந்ததியினர் முண்டியடித்து தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொண்டிருந்தனர். "நிதர்சனம்" ஒளிபரப்பாளர்களின் வீடியோ கமராக்கள் நாலா பக்கமும் சுழன்று படம்பிடித்துக் கொண்டிருந்தன.
மேடைகளில் கவிதைகள் முழங்கிக்கொண்டிருந்த போது, திலீபன் என் காதுக்குள் கிசுகிசுத்தார். “நான் பேசப்போகிறேன். மைக்கை வேண்டித் தாங்கோ வாஞ்சி அண்ணை.” சாப்பிடாமல் குடிக்காமல் இருக்கிறிங்கள், களைத்து விடுவீர்கள்..என்று அவரைத் தடுக்க முயன்றேன். ”இரண்டு நிமிடம் மட்டும்.. நிப்பாட்டி விடுவன். ப்ளீஸ் மைக்கை வாங்கித் தாங்கோ” என்று குரல் தளதளக்க கூறினார். அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. கண்கள் குழி விழுந்து, முகம் சோர்ந்து காணப்பட்டாலும் அந்தப் பசுமையான சிரிப்பு மட்டும் இன்னும் மாறாமல் அப்படியே இருந்தது.
இரண்டு நிமிடத்திற்கு மேல் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் மேடையில் நின்ற தேவரிடம் மைக்கைப் பெற்றுக் கொடுத்தேன். திலீபன் பேசப்போவதை தேவர் ஒலிபெருக்கியில் அறிவித்ததும் மக்கள் கூட்டம் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தது. திலீபன் பேசுகிறார். ” எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மக்கள் அனைவருக்கும் வணக்கம். நின்றுகொண்டு பேசமுடியாத நிலையில் இருப்பதால் இருந்து பேசுகிறேன். நாளை நான் சுயநினைவுடன் இருப்பனோ என்று தெரியாது. அதனால் இன்று உங்களுடன் பேச வேண்டும் என்று விரும்பினேன். நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றோம். 650 பேர் வரையில் இன்று வரை மரணித்துள்ளோம்.
மில்லர் இறுதியாகப் போகும்போது என்னிடம் ஒரு வரி கூறினான். நான் அவனுடன் இறுதி வரை இருந்தேன். “நான் எனது தாய் நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணும்போது மகிழ்ச்சியும், திருப்தியும் அடைகிறேன். மக்கள் விடுதலை அடையும் காட்சியை என் கண்களால் காண முடியாது என்பதே ஒரே ஏக்கம் ” என்று கூறிவிட்டு வெடிமருந்து நிரப்பிய லொறியை எடுத்துச்சென்றான். இறந்த 650 பேரும் அனேகமாக எனக்கு தெரிந்துதான் மரணித்தார்கள். அதனை நான் மறக்கமாட்டேன். உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்குத் தலைவரின் அனுமதியைக் கேட்டபோது, அவர் கூறிய வரிகள் என் நினைவில் உள்ளன.
"திலீபா நீ முன்னால் போ.. நான் பின்னால் வருகிறேன்." என்று அவர் கூறினார். இத்தகைய ஒரு தெளிவான தலைவனை, தனது உயிரைச் சிறிதும் மதிக்காத தலைவனை நீங்கள் பெற்று இருக்கிறீர்கள். அந்த மாபெரும் வீரனின் தலைமையில் ஒரு மக்கள் புரட்சி இங்கு வெடிக்கட்டும். அது நிச்சயமாகத் தமிழீழத்தினை, தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தரும். இதனை வானத்தில் இருந்து இறந்த மற்றப் போராளிகளுடன் சேர்ந்திருந்து நானும் பார்த்து மகிழ்வேன்.
நான் மனரீதியாக, ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். விடுதலைப்புலிகள் உயிரினும் மேலாக....., சிறுவர்களை, சகோதரிகளை, தாய்மார்களை, தந்தையர்களை நினைக்கிறார்கள். உண்மையான உறுதியான இலட்சியம். அந்த இலட்சியத்தினை எமது தலைவருடன் சேர்ந்து நீங்கள் அடையுங்கள். எனது இறுதி விருப்பமும் இதுதான்.”
மிகவும் ஆறுதலாக சோர்வுடன் ஆனால் திடமுடன் பேசிய அவரின் பேச்சைக்கேட்டு மக்கள் கண்ணீர் சிந்தினர். அன்றிரவும் தலைவர் வந்து திலீபனைப் பார்த்தார். சோர்வுடன் படுத்திருந்த திலீபனின் தலையைத் தனது கரங்களால் வருடினார். ஒரு தகப்பனின் அன்பையும் தாயின் பாசத்தையும் ஒன்றாகக் குழைத்தது போலிருந்தது அந்த வருடல். இரண்டு இமய மலைகளையும் என் கண்கள் விழுங்கிக்கொண்டிருந்தன. இரவு பன்னிரெண்டு மணிக்கு திலீபன் உறங்கத் தொடங்கினார்...
தொடரும்......
மு.வே.யோ. வாஞ்சிநாதன்.....
15.09.1987 ❤️💛 #day1 A 23-year-old young man began a hunger strike at Nallur Temple. No water. No food. For 12 days, he endured in silence.
His name was Thileepan — and he chose death over betrayal. Not for fame. Not for power. But for the freedom of his people.
#thileepan
🚨 Mass rally in Geneva demands justice for Tamil genocide
A mass rally was held today in Geneva, Switzerland, to renew demands for justice and international accountability for the Tamil genocide, as Sri Lanka features on the agenda of the 60th session of the United Nations Human Rights Council (UNHRC).
Read more⬇️
https://t.co/VlbR4wjTLD