அரசர்க்கரசன் அருண்மொழிச்சோழன் பிறந்தநாளையே சதய விழா ஆண்டாக கணக்கிட தமிழ்நாடு அரசு ஆவன செய்திட வேண்டும்!
@CMOTamilnadu@mkstalin
தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு அடையாளம் அரசர்க்கரசன் அருண்மொழிச்சோழன் பிறந்த ஆண்டையே சதய விழா ஆண்டாக கணக்கிடாமல் பதவியேற்ற ஆண்டினை கணக்கிட்டு கொண்டாடி வருவது வரலாற்றுப்பிழையாகும். தமிழ்நாடு அரசே அத்தவறை தொடர்ச்சியாக செய்து வருவது மக்களிடம் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தவே வழிவகுக்கிறது.
ஏற்கனவே தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட தமிழின வரலாற்று பெருமைகள் பலவற்றில் இரண்டு தரவுகள் கூறப்பட்டு, இரண்டில் எதனை கடைப்பிடிப்பது என்ற குழப்பம் இன்றுவரை நீடிக்கின்றது. அதே போன்று தமிழ்நாடு தனிப்பெரும் நிலப்பரப்பாக உருப்பெற்ற நவம்பர் முதல் நாளினை தமிழ்நாடு நாள் என கொண்டாடுவதை மாற்றி, ஜூலை 18ஐ தமிழ்நாடு நாள் என கொண்டாடுமாறு தவறாகத் திணித்துள்ளது திமுக அரசு.
தமிழர் பெருமை கொள்ளும் அடையாளங்கள் ஒவ்வொரு ஒவ்வொன்றிலும் இதுபோன்ற வரலாற்றுத் திரிபுகள் திட்டமிட்டுத் திணிக்கப்படுகிறதோ என்ற ஐயமும் எழுகிறது. தமிழினத்திற்கு பின்னந்தோன்றிய பல இனங்களும், வரலாற்று தகவல்கள் ஏதும் சரிவர கிடைக்கப்பெறாத இனங்களும்கூட தங்கள் இனத்தின் பெருமையை எவ்வித குழப்பமும் இன்றி தெள்ளத்தெளிவாக கொண்டாடி வரும் நிலையில், தமிழினத்தில் மட்டுமே காணப்படும் இத்தகு குழப்பநிலை மிகுந்த மன வருத்ததை தருகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) அடிப்படையில் பெறப்பட்ட தகவலின்படி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டைய கால வரலாறு மற்றும் தொல்லியல் துறை, தமிழ்ப்பெரும்பாட்டன் அரசர்க்கரசன் அருண்மொழிச்சோழன் என்கின்ற இராஜராஜ சோழரின் பிறந்த ஆண்டை கி.பி.947 என உறுதிப்படுத்தியுள்ளது.
அதே போன்று தொல்லியல் துறை பரிந்துரை செய்த இராசராசன் துணுக்குகள் நூறு மற்றும் Indian Council of Historical Research பதிப்பகத்தில் வெளிவந்த நீலகண்ட சாஸ்திரி எழுதிய சோழர்கள் எனும் வரலாற்று நூலிலும் மாமன்னர் அருண்மொழிச் சோழன் அரியணை ஏறிய நாள் 25 ஜூன் 985 என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐப்பசி சதய விழாவானது அருண்மொழிச் சோழன் பிறந்த கி.பி.947ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டு, தற்போது 1078வது சதய விழா என்பதற்கு மாறாக, அவர் பேரரசராக முடி சூட்டிய 985ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டு, நடப்பாண்டு 1040வது சதய விழா என்று தவறாக கொண்டாப்பட்டு வருவது ஏற்கவியலாத வரலாற்றுத் திரிபாகும். அறியாமையால் இதுவரை நடந்துவரும் தவறைத் திருத்தி, இனியேனும் சரியான ஆண்டினை கணக்கிட்டு சதய விழா எடுப்பதே உண்மையான புகழ் வணக்கமாக இருக்க முடியும். மாறாக தவறான கணக்கீடு அப்பெருமன்னனை அவமதிப்பு செய்வதாகவே இருக்கும்.
ஐப்பசி சதயம் என்பது பெரும்பாட்டன் அரசர்க்கரசர் அருண்மொழிச்சோழன் பிறந்த நாள், ஆண்டு, நேரத்தையே குறிப்பதாகும். ஒருவேளை பேரரசராக ஐப்பசி சதயம் அன்றே முடி சூடி இருந்தாலும்கூட அதுவும் பிறந்த நாளினை அடிப்படையாகக் கொண்டே ஏற்படுத்தப்பட்ட நிகழ்வாகவே இருக்க முடியும்.
மாமன்னர் அரேந்திரச்சோழர் எடுப்பித்த திருவாரூர் கல்வெட்டு, ‘அய்யர் பிறந்து அருளிய ஐப்பிகைச் சதயத் திருவிழா வரைவுக்குத் திருமுளையட்டவும், தீர்த்தத்துக்குத் திருச்சுண்ணம் இடிக்கவும், நாம் பிறந்த ஆடித் திருவாதிரை நாளில் திருவிழா வரைவு குருமுளையட்டவும், தீர்த்தத்துக்குத் திருச்சுண்ணம் இடிக்கவும்’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐப்பசி சதயத்தில் அருண்மொழிச் சோழரும், ஆடித் திருவாதிரை நாளில் அவரது அருமை மகன் பேரரசன் அரசேந்திரச் சோழரும் பிறந்தவர்கள் என்பதையும், பிறந்தநாள், ஆண்டினை அடிப்படையாக வைத்தே கோயில்களில் விளக்கேற்றவும், விழாக்கள் எடுக்கவும், உரிய தானங்கள் வழங்கப்பட்டதற்கு திருவாரூர் கல்வெட்டு உறுதியான வரலாற்றுச் சான்று பகர்கிறது. எனவே ஐப்பசி சதயம் என்பது பிறந்த நாளினை குறிப்பது என ஆதாரப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது.
ஆகவே, அரசர்க்கரசன் அருண்மொழிச்சோழன் பிறந்த ஆண்டு முதலே சதய விழாவினை கணக்கிட்டு அறிவித்து, அதனையே ஆண்டுதோறும் அனைவரும் கொண்டாடிட தமிழ்நாடு அரசு ஆவன செய்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
மாமன்னர் இராஜராஜ சோழ தேவர் தெலுங்கராக இருந்திருந்தால்,
சதய விழா அன்று தேசிய விடுமுறை ஆகி இருக்கும்!
ஆனால் அவர் தூய தமிழ் மன்னர்,
அதனால்தான் 1040 வது பிழை ஆண்டை கொண்டாடி,
1078 வது உண்மையை புதைத்து வைக்கிறார்கள்! 🤦♂️
@mkstalin@CMOTamilnadu@DMKThanjavur
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி,
📜 பிறப்பு: கி.பி 947
👑 முடிசூட்டு: 25-06-985
👉 பிறந்த நாளை விட முடிசூட்டிய நாளை அடிப்படையாகக் கொண்டாடுவது விழா வரலாற்றைச் சிதைக்கும் நடைமுறை
✅ உண்மையான வரலாற்று அடிப்படையில் 2025 நவம்பர் 1 அன்று 1078-வது சதய விழா கொண்டாடப்பட வேண்டும்
அரசு ஆவணத்தில் புதிய
புவியியல் கண்டுபிடிப்பு 🌍
நம்பிவயல் – பட்டுக்கோட்டை தாலுகா – தஞ்சாவூர் மாவட்டம்
ஆனா கோப்புல: தூத்துக்குடி தாலுகா – பட்டுக்கோட்டை 🤦♂️
இப்படியே போனால்
நாளை...
👉 கொரோனா ஊராட்சி
👉 அப்பளக்கடை மாவட்டம்
👉 சிங்கப்பூர் தாலுகா
ன்னு வந்துடும் போல! 🤣🤣 @mkstalin
இராஜராஜ சோழ தேவரின் தவறாக கொண்டாடப்படும் சதய விழா வரலாற்றை வெளிக்கொணர உதவிய சாணக்யா சேனலுக்கு தமிழ்நாடு கள்ளர் படைபற்று நலசங்கம் சார்பில் நன்றியினை தெரிவித்து கொள்வதோடு வரலாற்று அடிப்படையில் சதய விழா கொண்டாட வேண்டி அன்புடன் கோருகிறோம்@CMOTamilnadu@mkstalin@collrthanjavur
வழக்கு தொடர்பாக நாம ஒரு புகார் கொடுத்தால், புகாரை விசாரிக்கும் காவல் துறை அதிகாரி மேல் புகார் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது, அந்த அளவுக்கு இருக்கிறது புதுக்கோட்டை காவல் துறையின் செயல்பாடு @tnpoliceoffl@CMOTamilnadu@pdkt_collector
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மனுவினை பரிசீலிப்பவர்கள் கல்வியறிவுயற்றவர்களா என்ற சந்தேகம் எழத்தோன்றுகிறது, இராஜராஜ சோழ தேவரின் பெயரை திருச்சி விமான நிலையத்திற்கு வைக்க கோரி சட்டமன்றத்திற்கு வைக்கப்பட்ட கோரிக்கை சம்பந்தமில்லாமல் TASMAC துறைக்கு மாற்றம் @CMOTamilnadu@mkstalin
நேர்மையும்,உன்மையும் கொண்ட "ஆன்மீக செம்மல்" மண்ணின் மைந்தன் "குற்றப்பரம்பரையை உடைத்து, முதல் IPS அதிகாரி" பெருமதிப்பிற்குரிய ஐயா விஜயகுமார் IPS அவர்கள் கடைமை கன்னியத்துடன் நடந்து கொண்டவர்.
வருந்தங்களுடன் போய்வாரும் போர்வீரரே..!
தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச்சங்கம்
#ஸ்ரீ_இராஜராஜ_சோழ_தேவர் என்று உறுதிபடுத்தும் ஆவணம்
1) தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆவணம்
2) சென்னை பல்கலைக்கழக ஆவணம்
3) அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆவணம்
4) மாவட்ட ஆவண காப்பக ஆவணம்
5) தொல்லியல் துறை ஆவணம்
6) தமிழ்நாடு பாடநூல் கழக நிறுவனத்தின் ஆவணம்
#நிர்வாக_குழு#கள்ளர்_படைப்பற்று
"கலிநிருப கள்வரான கோக்கண்டன் ரவி" என்று சேர மன்னரை நேரடியாகவே கள்ளர் என கோயம்புத்தூர் கல்வெட்டில் குறித்துள்ளார்.
இன்றும் கள்ளரில் #பழுவேட்டரையர் , #கண்டர், #கண்டபிள்ளை என்ற பட்டத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்..!
Video - https://t.co/VYsOZ1DFvN
பண்ணி வளர்த்தா அசிங்கம் இல்லை...
மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் கார் வாங்கி கொடுத்ததற்கு பதிலாக பத்து பண்ணி வாங்கி கொடுத்திருக்கலாமே⁉️
@Udhaystalin#Coopercar