தாராபுரம் இடைத்தேர்தலில் இந்த பேச்சளாரின் பிரச்சாரம் அருமையா இருக்கு “சும்மா விஜய்க்கு ஓட்டு போட்டோம்” என வாக்களித்த மக்களுக்கு வாக்கு செலுத்துவதின் அவசியத்தை விளக்கி பேச இருக்கிறார்
ஓட்டு போடுறாங்க இல்ல அது ஒரு பக்கம் இருக்கட்டும் ��ெளிவான கொள்கை விளக்கம்யா 🔥🔥
#திமுக🖤♥️
Every choice made by women in public life shouldn't be met with constant scrutiny and mockery. Breaking into politics in a patriarchal society is tough enough; doing so from an oppressed community is even harder. Targeting women who push through these barriers is completely unacceptable. I strongly condemn these relentless, orchestrated controversies against Mayor Ms. Priya Rajan.
CM Vijay says he “won’t let anyone speak wrongly about any woman.” But why, then, has he allowed these attacks on Mayor Priya by his fans and cadres?
Why is it always me?
Whatever I do seems to become a controversy. From day one until today, even the simplest things become an issue. If I eat a burger, it’s an issue. If I cut my hair, it’s an issue. Every personal choice I make seems to be questioned and judged.
Sometimes I wonder is it because I am a woman, or because I belong to a particular community?
When it comes to me, I have no idea where the feminists and those who claim to stand up for women disappear.
Women in politics are not characterless or any less deserving of respect. Being a woman in public life does not give anyone the right to judge her based on her appearance, lifestyle, or personal choices.
Every woman has her own dignity, self-respect, and right to live her life on her own terms.
Beyond the position of Mayor, please remember to respect the woman.
மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுத்து
மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்திய நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பயணம் 78-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
பேரற��ஞர் அண்ணா விதைத்து - தலைவர் கலைஞர் வளர்த்து - நாம் காத்து நிற்கும் தமிழ்நாட்டின் தனித்துவத்தையும் வளர்ச்சியையும் பாழாக்கிட யாரையும் அனுமதியோம்!
மழையில் பிறந்து, புயல்களை வென்ற நாம், சமூகநீதி - சுயமரியாதை -
தமிழ்நாட்டின் உரிமை உள்ளிட்டவற்றில் சமரசமின்றிக் களத்தில் நிற்போம்! பயணத்தில் வெல்வோம்!
#DMK78
மாநில உரிமை, மொழி உரிமை, சமூகநீதி, மதச்சார்பின்மை ஆகியவற்றை வெறும் அரசியல் முழக்கங்களாக அல்லாமல், தமிழ்நாட்டு அரசியலின் தவிர்க்க முடியாத அடிப்படைக் கொள்கைகளாக நிலைநிறுத்திய தலைவ��்.
அரசியல் எதிரிகளாக இருந்தபோதிலும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரித்து மதிப்பளிக்கும் கண்ணியத்தைக் கற்பித்த முன்னோடி.
எல்லாச் சூழ்நிலைகளிலும் தமிழர் நலனைச் சமரசமின்றி முன்னிறுத்தி உழைக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் உயிரோட்டமுள்ள பேரியக்கத்தின் நிறுவனத் தலைவர்.
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாள் இன்று.
அவர்தம் பெரும்புகழ் என்றும் நிலைத்திருக்கு��்!
அவர் பதித்த வரலாற்றுத் தடங்கள் என்றென்றும் நம்மை வழிநடத்தும்!
ஆதாயத்திற்காக அண்ணாவின் பெயரை உச்சரிப்பவர்கள் அதிகரித்துவிட்ட இக்காலத்தில், அவர் உள் ஒளியாக ஏற்றுக்கொண்ட திராவிடத்தையும், பெரியாரியத்தையும், தமிழறத்தையும் ஆழ்மனதில் ஏந்திப் பயணிப்பவர்கள் அதிகம் வர வேண்டும்.
கொள்கைகளாலும், செயல்களாலும் அன்று அண்ணா விதைத்து பெருமரமாக்கிய நம் தி.மு.கழகம், இன்னும் பல தலைமுறைகளுக்கு நின்று பயன் தர வேண்டும்!
சிரித்த முகம் - சிந்தையைக் கவரும் தமிழ் – மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.
திருக்குறளுக்கு உரை கண்டவர், புறநானூற்றுக்குப் புதிய வரிசை கண்டவர், கம்பனையும் ஆய்ந்தறிந்தவர் எனப் பண்டைத் தமிழிலக்கியத்தில் எந்த அளவுக்கு விற்பன்னராகத் திகழ்ந்தாரோ, அதே அளவுக்கு எளிய மொழியில் நகைச்சுவையாகப் பேசும் திறனும் கைவரப் பெற்றவராகப் பாப்பையா அவர்கள் திகழ்ந்தார்.
பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் எனும் ��ளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்துவிட்ட பெருமைக்குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள். பட்டிமன்றம் என்றாலே பாப்பையாதான் எனக் கூறும் அளவுக்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் பல்லாயிரம் பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்தவர். தற்கால மதுரையின் பெருமைமிகு அடையாளமாகவே மாறிப் போனவர். பாப்பையா பரம்பரை எனச் சொல்லத்தக்க அளவுக்குத் த���்னைப் போலவே பல பேச்சாளர்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்தவர்.
தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் மிகுந்த அன்பைப் பொழிந்தவர் பேராசிரியர் பாப்பையா அவர்கள். கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் எங்கள் மீது காட்டும் அன்பில் எந்த மாற்றமும் இருந்ததில்லை. எப்போது சந்தித்தாலும் புன்னகையோடும் வாஞ்சையோடும் கரங்களைப் பற்றிக்கொள்ளும் அன்பிலான உறவை நாங்கள் கொண்டிருந்தோம��.
கடந்த ஆண்டு மே மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நான் மதுரை சென்றிருந்தபோது நடந்த மக்கள் சந்திப்பில் அவரது வீட்டு வாசலுக்கு வந்து என்னை வரவேற்றார். சில மாதங்களுக்கு முன்புதான் துணைவியாரை இழந்திருந்த பேராசிரியரிடம், “உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது.
தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள். பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கும் மதுரை மக்களுக்கும் உலகெங்கும் வாழும் அவரது இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
MKS has been a statesman through & through. Every time an opportunity was presented he took the high-road even to his own detriment.
To mock him for his physical frailties incurred under police brutalities is the lowest of the low & you do it at your own peril.
வரலாறு பேச வேண்டுமென்றால், நீதிக்கட்சி காலத்திலிருந்து தொடங்க வேண்டும். இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக நாங்கள் என்ன செய்தோம் என்பதிலிருந்து தொடங்க வேண்டும். ஆனால், தவெகவிற்கும், அதன் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும் அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தலைவர் கலைஞரைப் பற்றியோ, தி.மு.க.வைப் பற்றியோ அவதூறாகப் ��ேசுவதையே அரசியல் தகுதியாக இன்னும் எத்தனை காலத்திற்கு நினைத்துக் கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாவற்றையும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கும் வரை, எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு ஒரு கூட்டமும் இருந்துகொண்டுதான் இருக்கும்.
காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை அளிக்க வேண்டிய முதலமைச்சர், எழுதிக் கொட��த்ததைப் படிப்பதைத் தவிர, கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல், நீண்ட சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு, எதிர்வினை வந்துவிடுமோ என்ற பயத்தில் விவாதத்தையே சபாநாயகர் தவிர்த்திருக்கிறார்.
கடந்த மூன்று நாட்களாக காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்க ஒத்திகை பார்த்தும், அந்த மானியக் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் பேசியது சொற்பமே. மற்றவை எல்லாம் காலம் காலமாகப் பரப்பப்பட்ட வதந்திகளையும், சமீபத்திய WhatsApp factory பொய்களையும் கலந்து, முதலமைச்சருக்கு ஒரு பிரதியைக் கொடுத்துவிட்டார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
சட்டம்-ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் & பெண்களின் பாதுகாப்பு குறித்தும், பிற மக்கள் பிரச்சனைகள் குறித்தும் பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது.
ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது...
Not everything loud is true
@CMOTamilnadu
அம்மி மிதித்ததில்லை; அருந்ததியும் பார்த்ததில்லை.
வட்டாரங்களைக் கடந்து,
சாதியையும் மதத்தையும் தூர தேசத்து எல்லை கோடுகளாய் வரையரை செய்து என் தோழி
என் துணைவியானாள்.
என்னில் பாதியாய் வந்தால்
என் வலியைச் சுமந்தாள்;
வழியும் காட்டினாள்.
எனக்குப் பிடித்த அரசியல்
என்னை ஊரறிய நிறுத்தி,
ஆடைகளை பிய்த்து
நிர்வாணமாய் நிற்கச் செய்து, வ���சாரணையின்றி, வலுக்கட்டாயமாகத் தூக்கிலேற்றி, துடிதுடிக்க என்னைக் கொலை செய்தபோது…
என் வெற்றுடலைச் சுமந்து, தன் கருவறைக்குள் வைத்து பாதுகாத்து, மீண்டும் என்னை “பிரசவித்தாள்”
தோழியாய்…
துணையாய்…
இரண்டாம் தாயாய்…
இருக்கும் என்னவளுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
தமிழ்போல் வாழ்க என் யாழ்!!💜🫂
சக மனுஷங்க கஷ்டப்படும் போது வருத்தப்படணும் தான். ஆனா அவங்க எங்க குழந்தை செத்தாலும் பரவாயில்ல, விஜயை பாத்தா போதும், என் புருஷன் தேவையில்ல எங்கண்ணனுக்குப் பொண்டாட்டியா இருப்பேன்ற மாதிரி சொல்ற ஆளுங்க ��தே விஜய் ஆட்சியில மத்த விஷயங்கள்ல கஷ்டப்பட்டா உனக்கு ஆவணும்னு தான் சொல்லமுடியும்.
மக்களவை தலைவர் கொடுத்த தேநீர் விருந்தில் @KanimozhiDMK பங்கேற்றதன் மூலம், "திமுக பாஜக கூட்டணியா?" என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய கேள்வி தவெகவை நோக்கி வராமல் இருக்க, சுதந்திர தினத்தில் ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தை @CMOTamilnadu புறக்கணிப்பார் என்று நம்புகிறேன்.