தமிழ்நாடு அரசுக்கு கண்டனம்
Condemnation of the Government of Tamil Nadu
Attention, Comrades!
The NEET Abolition Two-Wheeler Rally scheduled to be held today has been postponed.
The revised date of the rally will be announced later.
#Dravidar_Kazhagam
Headquarters, Chennai
தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் तमिलनाडु सरकार की निंदा
साथियों के ध्यानार्थ!
आज आयोजित होने वाली नीट उन्मूलन दोपहिया वाहन रैली स्थगित कर दी गई है।
रैली की नई तिथि बाद में घोषित की जाएगी।
द्रविड़र कड़गम
मुख्यालय, चेन्नई
#BanNEET#AbolishNEET 🌑🔥🌑 #DravidianStudentsFederation#NEET#DSF#EDUCATION#திராவிடர்கழகம்#HigherEducation பாதுகாப்பின் நம்பிக்கை சக்திகள்
தமிழ்நாட்டில் @Dravidarkazagam ஒரு போராட்டத்தை முன்னெடுத்தால் அது இந்தியாவிற்கான போராட்டமாக மாறும் என்பதுதான் வரலாறு என்பார் @AsiriyarKV அவர்கள். #NEET நுழைவுத்தேர்வை கொண்டுவந்ததில் @Congress கட்சியின் தொடக்கம் முதல் #BJP யின் அழுத்தம் வரை வட இந்தியாவில் அது வரவேற்புக்குள்தான் இருந்தது. தந்தை #பெரியார் மண்ணான தமிழ்நாட்டில்தான் பெரும் நெருக்கடியை சந்தித்தது.காரணம் அதனை நுழையும்போதே தடுக்கும் பிரச்சாரத்தை போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியது #திராவிடர்கழகம் .
#சமூகநீதி மாணவர்களின் கல்விக்கு எதிராக ஒரு ஆபத்து நுழைகிறது என்றால் ஆட்சியாளர்களுக்கே அதை தெரியப்படுத்துவது #AsiriyarKV அறிக்கைகள்தான்.மக்களிடம் அதன் ஆபத்தை விளக்கும் பிரச்சாரத்தையும் #கருஞ்சட்டை வீரர்களைக் கொண்டு அவரே முன்னெடுப்பார். அந்த விழிப்புணர்வு நீட் எதிர்ப்பை பரவலாக்கியது.
ஒரு மரணம் நிகழும்போதுதான் வெகுமக்கள் உணரும் என்கிற கேவலமான அரசியல் சூழல் தமிழ்நாட்டில் உண்டு. அப்படித்தான் தங்கை அனிதாவின் மரணமும். அனிதாவின் மரணம் நிகழ்ந்தபோது தமிழ்நாடு ஒன்றிணைந்தது வடமாநிலங்கள் ஆபத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை. என்றாலும் #Dravidarkazagam மற்றும் #DMK வும் கடந்த காலங்களில் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளும் தொடர்ந்து அதன் நெருப்பை அணையாமல் பாதுகாத்தனர்.
10 ஆண்டுகளுக்குள் வடமாநிலங்களில் பல #அனிதா க்கள் இறந்திருக்கிறார்கள். இதுவரை #பாஜக ஆட்சியில் 89 முறை வினாத்தாள் கசிந்திருந்தது 48 முறை மறுதேர்வு நடத்தப்பட்டுள்ளது. முதலில் கண்டுகொள்ளாத #காங்கிரஸ் கட்சி #திராவிடர்கழகம் மறறம் #திமுக வின் டில்லி போராட்டத்தின் விளைவாக ஒருங்கிணைந்தார்கள்.வடமாநிலத் தலைவர்கள் வந்திருக்கும் ஆபத்தை உணர்ந்தார்கள்.இன்று வடமாநிலங்கள் போராடுகிறது.
23 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வை ரத்து செய்கிறது பாஜக.பணம் கட்டி படித்து தயாரான மாணவர்கள் மாறு தேர்வு என்கிறபோது அவர்களின் மனநிலை என்னவாக இருக்கும் #கோவை யை சேர்ந்த #கீர்த்தனா என்கிற மாணவி இறந்துவிட்டார்.
ஒன்றிய கல்வி அமைச்சர் தன்மேந்திர பிரதானை பதவி விளக்க வேண்டும் என்று #CJP_for_India போராட்டத்தை ஒருங்கிணைக்கிறது. அவர்களை நம்பமுடியாது என்றாலும் #BAN_NEET வேகமெடுத்திருக்கிறது.
ஆனால் தமிழ்நாட்டில் நீட் நுழைவுத்தேர்வு எதிர்ப்பு மனநிலையில் மாணவர்களின் பக்கம் உறுதியாக நின்று மாநிலம் முழுவதும் போராட்டத்தை நடத்தியது #திராவிடர்கழகம் . தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் மாணவர் நலனில் ஒன்றிணைய வேண்டுமென்று திமுக - விசிக - இடதுசாரிகளை அழைத்து மே 16 ஆம் தேதி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தார்.
சினிமா மோகத்தால் CM பதவியில் உட்காரவைக்கப்பட்டிருக்கும் விஜய் அவர்களுடன் #ஒட்டிக்கொண்டவர்கள் ஆட்சிக்கு அவகாசம் கொடுத்து மாணவர்களின் நலனையும் தள்ளிப் போட்டுக்கொண்டார்கள். #NEET நுழைவுத்தேர்வு #CBSC தேர்வு முறைகேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மாணவர்கள்.அந்த பள்ளி குழ்ந்தைகளிடம் ஓட்டு கேட்டு நாகரீகமற்ற அரசியலை செய்த #விஜய் அவர்களுக்காக வாய் திறக்கவில்லை.
கோவையில் நீட் நுழைவுத்தேர்வால் 19 வயது மாணவி இறந்துள்ளார்.முதல்வரிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை. கடந்த திமுக ஆட்சியில் ஆளும் கட்சியாக இருந்தபோதும் நீட் எதிர்ப்பை வலுவாகப் பேசியவர் @mkstalin அவர்கள்.இன்று வாய்திறக்காத முதல்வர் விஜயுடன் காங்கிரஸ் விசிக இடதுசாரிகள் சேர்ந்துவிட்டதால் அவர்களும் வாய்திறக்கவில்லை.
#DSF திராவிடர் மாணவர் கழகம் உடனடியாக எதிர்வினையாற்றியுள்ளது. ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மாணவர்களின் கல்வியை குறிவைத்து நடத்தப்படும் ஆர்.எஸ்.எஸ் துரோணாச்சாரிகளின் படையெடுப்பை அம்பலப்படுத்தும் பொறுப்பு #பெரியார் இயக்கத்திற்கு உண்டு.
#AsiriyarKV அவர்களின் தலைமையில் நீட் எதிர்ப்பு போராட்ட களத்தில் மறியல் செய்து கைதான
திராவிடர் மாணவர் கழகத்தோழர்கள்தான் நம்பிக்கை சக்திகள்.
#முகநூல்பதிவு
#தோழர் #தமிழமுதன் #திராவிடர்கழகம்
திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்கத்தின் தலைவராக தொடர்ந்து 11வது முறையாக பொறுப்பேற்கும்
#MVK.S.செந்தில்குமார்
அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்....
சு.கிருஷ்ணமூர்த்தி
மாவட்ட செயலாளர்
திராவிடர் கழகம்,
டிசம்பர் - 2
சுயமரியாதை நாள்
சமூக நீதியின் காவலர், தமிழர் தலைவர், மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆம் பிறந்த நாள்!
#Asiriyar93#HBDAsiriyar93#ஆசிரியர்93
தமிழ்நாடு முதலமைச்சரின் @CMOTamilnadu முக்கிய கவனத்திற்கு...!
மீண்டும் ஒரு வடமொழி– சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பிற்கு ஒன்றிய அரசின் புதிய ஏற்பாடு?
நமது வன்மையான கண்டனத்திற்குரியது!!
---------------------------------------------------------------
இந்திய ஒன்றிய அரசு, இந்தியா முழுவதும் உள்ள மரபார்ந்த ஓலைச்சுவடிகளைப் பேணிப் பாதுகாப்பதற்கும், பரப்புவதற்கும் தொழில்நுட்பத்துடன் இணைப்பதற்கும் ஒரு திட்டத்தை அறிவித்தது. அதன் பெயர் க்யான் பாரதம் (Gyan Bharatam). இத்திட்டத்திற்கு ரூ.482.85 கோடி (2024-2031) ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் பண்பாட்டுத் துறையின் சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம்!
இதன் ஒரு பகுதியாக, ஒன்றிய அரசின் பண்பாட்டுத் துறை செப்டம்பர் 11 முதல் 13 வரை – ஓலைச்சுவடி பாரம்பரியத்தின்மூலம் ‘‘இந்திய அறிவு மரபை மீளுரிமைக் கோருதல்’’ (Reclaiming India’s Knowledge Legacy Through Manuscript Heritage) என்ற தலைப்பில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கை புதுடில்லியில் ஒருங்கிணைத்து நடத்தியுள்ளது.
இதன் தலைமைப் புரவலராக ஒன்றிய பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு.கஜேந்திர சிங் செகாவத், புரவலராக ஒன்றிய பண்பாட்டுத் துறை செயலாளர் விவேக் அகர்வால் இடம்பெற்றுள்ளனர்.
இத்துடன் ஒருங்கிணைப்புக் குழு, ஆலோசகர் குழு என இரண்டு குழுக்கள் உள்ளன. இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் ஒன்றிய அரசின் பண்பாட்டுத் துறை கூடுதல் செயலாளர் திருமிகு. அமிதா பிரசாத் சார்பாய், கலைகளுக்கான இந்திரா காந்தி தேசிய மய்யத்தின் உறுப்பினர் செயலாளர் முனைவர் சச்சிதானந்த் ஜோஷி, அதன் நிர்வாகத் தலைவர் பேரா.ரமேஷ் சி.கர், இந்தியத் தொல்லியல் கழகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் பேரா. அலோக் திரிபாதி, ஒன்றிய பண்பாட்டுத் துறையின் இணை செயலாளர் திரு. சமர் நந்தா, ஞான பாரதம் திட்ட இயக்குநர் பேரா. அநிர்பன் டாஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஓலைச்சுவடி பாரம்பரியத்தின்மூலம் ‘‘இந்திய அறிவு மரபை மீளுரிமைக் கோருதல்’’ (Reclaiming India’s Knowledge Legacy Through Manuscript Heritage) என்பதன் ஒரு பகுதியாக பணிக்குழு அறிக்கைகள் (Working Group Reports) வெளியிடப்படுகின்றன. அதில் ஒன்று ‘‘Decipherment of Ancient scripts: Indus, Gilgit and Sankha’’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
சிந்துவெளியின் பன்மைத்துவத்தை அறியாதவர்கள்!
இந்த அறிக்கை ஒருங்கிணைப்பில் இந்தியத் தொல்லியல் கழகத்தின் பேரா. அலோக் திரிபாதி, திருமிகு. பிரியங்கா சந்திரா, டி.ஜெ. அலோனி, திரு. ஹேமசகார் ஏ. நாயக், முனைவர் புவன் விக்ராமா, முனைவர் கவுதமி பட்டாசார்யா, முனைவர் அப்ரஜிதா ஷர்மா, முனைவர் தீப்தி அக்னிஹோத்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களில் யாருமே சிந்துவெளியின் பன்மைத்துவத்தைப் பற்றியோ, அதற்கும் திராவிடத்திற்கும் இடையே உள்ள தொடர்பு பற்றியோ ஆய்வை மேற்கொண்டவர்கள் அல்லர். சிந்துவெளிப் பண்பாடு உலகிற்கு அறிவிக்கப்பட்ட நாள் முதலே அது திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையது என்று ஜான் மார்ஷல் தொடங்கி, சுனிதி குமார் சட்டர்ஜி, அருட்தந்தை ஹென்றி ஹீராஸ், அய்ராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா, ஆர். பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். ஆனால், இந்தியத் தொல்லியல் கழகம் தனி உலகத்தில் உள்ளது. அது ஆட்சியாளர்களின் அரசியல் நோக்கத்திற்காகவும், ஒற்றைவாத அரசியல் செயல்பாட்டிற்காகவும் செயல்படுகிறது.
ஒற்றைவாதத்தைத் தூக்கிப்பிடிப்போரே உள்ளனர்!
இந்தியத் துணைக்கண்ட வரலாற்றின் பண்பாட்டின் தோற்றத்திற்கு அடிப்படையாக உள்ள சிந்துவெளி குறித்து அரசு மேற்கொள்ளும் ஆலோசகர் குழுவில், பாரதிய பாஷா சமிதியின் தலைவர் பேரா. சாமு கிருஷ்ண சாஸ்திரி, சிம்லா மேம்பட்ட ஆய்வுகளுக்கான இந்திய நிறுவனத்தின் தலைவர் பேரா. ஷாஷி பிரபா குமார், ஒன்றிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேரா. சிறீனிவாச வரகேடி, அய்அய்டி கரப்பூர் பேரா. ஜோய் சென், ஜெஎன்யு பேரா. கிரிஷ் நாத் ஜா, அய்அய்டி ஜோத்துபூர் மேனாள் இயக்குநர் பேரா. ஷாந்தனு சவுதரி, சென்னை திட்ட ஆய்வுகளுக்கான மய்யத் தலைவர் எம்.டி. சிறீனிவாஸ், அகமாதாபாத் எல்.டி. இந்தியவியல் நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் முனைவர் ஜிதேந்திர பி. ஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பெயர்களைப் பார்த்தாலே தெரிகிறது இந்தியத் துணைக்கண்டத்தின் பன்மைத்துவத்தை வலியுறுத்தும் எவரும் இதில் இல்லை என்பது. இத்துடன் ஒற்றைவாதத்தைத் தூக்கிப்பிடிப்போரே இதில் உள்ளனர் என்பது வெளிப்படை.
(1/2)
நாளை (18.06.2025) காலை* வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் *மானமிகு ஆசிரியர்* அய்யா தலைமையில் நடைபெறும்
ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்று உரிமை
முழக்கமிடுவோம்
வருக!வருக!!(6)
நாளை (18.06.2025) காலை* வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் *மானமிகு ஆசிரியர்* அய்யா தலைமையில் நடைபெறும்
ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்று உரிமை
முழக்கமிடுவோம்
வருக!வருக!!(5)
நாளை (18.06.2025) காலை* வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் *மானமிகு ஆசிரியர்* அய்யா தலைமையில் நடைபெறும்
ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்று உரிமை
முழக்கமிடுவோம்
வருக!வருக!! (3)
நாளை (18.06.2025) காலை* வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் *மானமிகு ஆசிரியர்* அய்யா தலைமையில் நடைபெறும்
ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்று உரிமை
முழக்கமிடுவோம்
வருக!வருக!! (2)