@BossTVK@TVKVijayHQ //ஆட்சிக் கவிழ்ந்தால்.. பெரும்பான்மை மக்களால்
தவெக மீண்டும் ஆட்சி அமைக்கும் !!//
Nambitu irungadaa Loosundaigalaa… Already yeanda ivan kaila aatchiya koduthomnu ellarum Guilt la irukanunga… Reality theriyama Dream la vaazhnthutu…..🤦🏻♂️
சமீபத்தில், ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு சென்று இருந்தேன். இதே அலுவலகத்திற்கு திமுக ஆட்சியிலும் சென்று இருக்கிறேன்.
திமுக ஆட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகமானது மிகவும் பரபரப்பாக காணப்படும். ஏதாவது ஒரு நலத்திட்டம் அல்லது வளர்ச்சித் திட்டம் அறிவித்திருப்பார்கள். அது சம்பந்தமான விபரங்கள் சேகரிக்க, பயனாளிகளை கண்டறிய என அலுவலர்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள்.
துறை ரீதியான ரிவியூ மீட்டிங்குகள் அடிக்கடி நடத்தப்படும். எனவே அதற்காக, விவரங்கள், பதில்களை தயார் செய்து கொண்டே இருப்பார்கள். இப்படி ரிவ்யூ மீட்டிங் ஸ்ட்ரிக்டாக நடத்தப்படும் பொழுது, ஏதாவது முன்னேற்றத்தை காட்டியாக வேண்டிய கட்டாயம் இருக்கும்.
எனவே யாரெல்லாம் மனு கொடுத்திருக்கிறார்களோ அவர்களுக்கு அவர்களது நிலைமைக்கு ஏற்ப நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். சில ஸ்கீம்களுக்கு பயனர்களை தேடி கண்டுபிடிப்பது கூட உண்டு.
அந்த அளவிற்கு கடையனுக்கும் கடைத்தேற்றம் என்னும் கொள்கையுடன் செயல்பட்டது திமுக அரசு. தலைமை அப்படி ஒரு சிந்தனையுடன் இருக்கும் பொழுது துறை செயலாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் என எல்லோருமே அதை பின்பற்ற வேண்டிய கட்டாயம்.
ஆனால் தற்போது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள், திருமணம் முடிந்த கல்யாண மண்டபம் போல வெறிச்சோடிக் கிடக்கின்றன.
தமிழ்நாடு தழுவிய எந்த ஒரு மக்கள் நலத்திட்டமும் இந்த ஆறு மாதங்களில் கொண்டு வரப்படவில்லை. ஒருவரின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்காக கொண்டு வரப்படும் திட்டங்களே எந்நாளும் சிறந்தது. அதுபோல எந்த திட்டமும் கொண்டு வரப்படாமல், ஏற்கனவே இருக்கும் திட்டங்கள்தான் தொடர்கின்றன.
அதிலும் கூட்டலும் கழித்தலும் இல்லை. எனவே பெரிய வேலை எதுவுமில்லை. மக்களும் கோரிக்கை மனுக்களுடன் வருவதில்லை.
தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தால் மருத்துவர்கள் மட்டும் பிஸியாக இருக்கிறார்கள்.