தீய சக்தி தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர் மிஸ்டர் ஸ்டாலின் சார்… மாண்புமிகு முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் சார், பொறாமையில் புகைச்சலில் அழுது வடிந்திருக்கிறார். கத்திக் கதறி இருக்கிறார்.
எங்கள் தலைவர், தமிழ்நாட்டின் Confident force; Corruption-free force. இப்போது மட்டுமன்று. எப்போதும் எங்கள் தலைவர்தான் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பார். இதை 2026 தேர்தல் முடிவின் வாயிலாகக்கூடத் தெரிந்துகொள்ளாமல் பேசுகிறார்.
பெண்கள் பாதுகாப்பில் முனைப்புடன் இருப்பதால்தான் instant action-இல் இறங்கி நடவடிக்கை எடுக்கிறது, நமது வெற்றித் தலைவரின் அரசு. ஸ்டாலின் சார் போல, அரசியலை மறந்து, இன்ஸ்டா ரீல்சுக்குள் மூழ்கச் சொல்லி, மூச்சு திணறவில்லை.
எந்நாளும் எதற்கும் அடிபணியாத நம் தலைவரின் நிதி ஆயோக் கூட்ட உரையை நாடே பாராட்டுகிறது. விசாரணையை நேரில் எதிர்கொண்டவர், நம் தலைவர். டாஸ்மாக் ரெய்டுக்காக நடுங்கிப்போய் டெல்லி சென்ற ஸ்டாலின் சார், இதைப் பேசவே கூடாது.
வாய்ப்பு கிடைக்கும் துறையில் எல்லாம் Party Fund என மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக மக்களே சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டனர்.
எங்கள் தலைவரின் பேச்சு பாணியைக்கூட copy-paste செய்வது தி.மு.க. கூடாரம்தானே தவிர, எங்கள் தலைவருக்கு அவர்களை copy அடிக்க வேண்டிய அவசியமே இல்லை.
தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்து சுருட்டிய தன் குடும்பம் போல, நம்மையும் நினைத்துவிட்டார் போல. ஊழலற்ற நிர்வாகம், லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகம் என்று தில்லாக அறிவித்த நம் தலைவரைப் போல அறிவிக்கத் திராணி இல்லாத மிஸ்டர் ஸ்டாலின் சார், ஏதேதோ பேசி ஒப்பேற்றி இருக்கிறார்.
நம் தலைவரின் ஒரே ஓர் ஊழல் குற்றச்சாட்டுக்குக்கூட வாய் திறக்க முடியாத ஸ்டாலின் சார், இப்போது வாய்க்கு வந்தபடி வன்மத்தில் வடை சுடுகிறார்.
பா.ஜ.க.வின் மறைமுக அடிமையாக இருந்து, நேர்முக அடிமையாக மாறத் துடிப்பவர்கள் எல்லாம், நம்மைப் பார்த்துப் பேசலாமா? மக்களிடமே இந்தக் கேள்வியை விட்டுவிடுகிறோம்.
டெல்லியில் பேசியது விஜய்..இன்று இந்தியா முழுவதும் பேசப்படுவது தமிழ்நாடு& விஜய்!!
7 நிமிடம் தான் சந்தித்தார்… 4 கோரிக்கைகள் தான் வைத்தார்… இதுதான் அரசியல் அனுபவமா? என்று திமுக எக்கோசிஸ்டமும், அவர்களது ஆதரவு ஊடகங்களும் கேலி செய்தன.
ஆனால் இன்று நடந்த நிதி ஆயோக் கூட்டம் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியுள்ளது.
பதவிக்காக அரசியல் செய்வதற்கும், மக்களுக்காக அரசியல் செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தை முதல்வர் விஜய் காட்டியுள்ளார்.
இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்கள், பிரதமர், மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் முன்னிலையில் தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகளை ஒவ்வொன்றாக முன்வைத்துள்ளார்.
NEET விலக்கு… கோவை AIIMS… தமிழுக்கு உரிய அங்கீகாரங்கள்…
திருக்குறளை தேசிய நூலாக அறிவித்தல்… கல்வி நிதி… சாலை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள்… மாநில உரிமைகள்… தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான அனைத்து அம்சங்களும் அவரது உரையில் இடம்பெற்றுள்ளன.
கோரிக்கை வைத்ததோடு நிற்காமல் கல்வி நிதியை எவ்வாறு பெறலாம் என்பதற்கான தீர்வுகளையும் முன்வைத்து மத்திய அரசின் மீது நேரடியான அழுத்தத்தை உருவாக்கியுள்ளார்.
இன்று இந்திய ஊடகங்களில் பேசப்பட்டது மற்ற மாநில முதல்வர்களின் பேச்சுகள் அல்ல.
விஜய் என்ன பேசினார்? விஜய் என்ன கோரிக்கை வைத்தார்? தமிழ்நாட்டுக்காக விஜய் என்ன அழுத்தம் கொடுத்தார்?
என்பதுதான் தேசிய விவாதமாகியுள்ளது.
ஒரு தலைவரின் வெற்றி அவர் எவ்வளவு நேரம் பேசினார் என்பதில் இல்லை.
அவர் பேசியதை இந்தியா முழுவதும் எவ்வளவு நேரம் பேசுகிறது என்பதில்தான் இருக்கிறது.
இன்று தமிழ்நாட்டின் குரல் டெல்லியில் ஒலித்தது. அந்த குரலின் பெயர் - விஜய்
அரசியல் என்பது சத்தமாக பேசுவதல்ல.. சரியான மேடையில் தமிழ்நாட்டின் உரிமைகளை அழுத்தமாக வைப்பது.
எங்கே பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதை முதல்வர் விஜய் மீண்டும் நிரூபித்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்கள் மக்களுக்காகப் பேசும் முதலமைச்சரையே தேர்ந்தெடுத்துள்ளனர்..
@TVKVijayHQ@CMOTamilnadu
முதல்வர் விஜயின் கோரிக்கைக்கு வெற்றி… சென்னை நதிகள் மறுசீரமைப்புக்கு ₹7,500 கோடி!
மாநில முதல்வர் தலைவர் விஜய் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, சென்னை கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மறுசீரமைப்பு உள்ளிட்ட CMIUTM திட்டங்களுக்கு முதல் கட்டமாக ₹7,500 கோடி மத்திய நிதி ஒப்புதல்!
24×7 குடிநீர், 100% கழிவுநீர் இணைப்பு, பசுமை நகரங்கள், நவீன உள்கட்டமைப்பு என தமிழ்நாட்டின் நகர்ப்புற வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம்.
மக்கள் வாழ்க்கையை மாற்றும் திட்டங்களுக்கே முன்னுரிமை கொடுக்கும் தலைவர் விஜயின் வளர்ச்சி அரசியலுக்கு இது மேலும் ஒரு அங்கீகாரம்.
தமிழ்நாட்டில் நிர்வாகப் புரட்சி தொடங்கிவிட்டது.
கோரிக்கை வைத்தது மட்டும் அல்ல…
மக்களுக்கு தேவையானதை பெற்று தருவதுதான் நிர்வாகம். @TVKVijayHQ
🔴சிங்கப் பெண் அதிரடி படையில் 270 பிரிவுகள் தொடங்கப்படும். இதில் தற்போது முதல் கட்டமாக 70 பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.
கார் டிரைவர் மட்டும் ஆணாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.(முடிந்த அளவு பெண் காவலர்கள் தான்). மத்தபடி பெண்கள் மட்டுமே இந்த படையில் இருக்கப் போகிறார்கள்.
இதற்காக 319 நான்கு சக்கர வாகனங்கள், 101 இரண்டு சக்கர வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும்.
24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் காவலர்கள் இந்த பணியில் இருப்பார்கள். விரைவில் இந்தப் படையை பிரத்யோகமாக தொடர்பு கொள்ள தனி எண்கள் உருவாக்கப்படும்.
போன ஆட்சியில் நிர்பயா நிதியில் ஒரு பகுதியை ஒதுக்கி இந்த மாதிரி ரோந்து வாகனங்கள் மட்டும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இங்கு 350 கோடி என்ற பெரிய தொகையை ஒதுக்கீடு செய்து, புதிய காவலர்கள் மற்றும் புதிய வாகனங்கள் அதிநவீன இயந்திரங்கள் மூலம் இந்த படை பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யப் போகிறது.
கோட்டையில் முதல்வர் விஜய்யின் தினசரி வேலை இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள்
பொதுவாகவே அரசியல் தலைவர்களின் வருகை என்பது நேரத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்பது ஒரு எழுதப்படாத விதி. ஆனால், முதல்வர் விஜய் அதனை உடைத்தெறிந்துள்ளார். காலை 10 மணி அடித்தால் போதும், முதல்வரின் கார் தலைமைச் செயலகத்தின் வாசலில் வந்து நிற்கிறது. சரியாக 10 மணிக்குத் தனது இருக்கையில் அமர்ந்துவிடும் அவர், மாலை 5 மணி வரை இடைவிடாது மக்கள் பணிகளில் மூழ்கிவிடுகிறார்.
இதில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த விஷயம் என்னவென்றால், அவரது மதிய உணவு இடைவேளைதான். பல மணி நேரம் மதிய உணவிற்காகச் செலவிடும் வழக்கமான நடைமுறையை மாற்றி, வெறும் 30 நிமிடங்களில் தனது மதிய உணவை முடித்துக் கொள்கிறார். அதுவும் வெளியில் எங்கும் செல்லாமல், அலுவலகத்திலேயே எளிமையாகச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் கோப்புகளைப் பார்க்கத் தொடங்கிவிடுகிறார்.
முதல்வரின் இந்த அதிரடி மாற்றத்தைக் கண்டு அமைச்சர்களே வாயடைத்துப் போயுள்ளனர்.
ஆனால், ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் சி.இ.ஓ போல, இவ்வளவு துல்லியமாக நேரத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு முதல்வரை இப்போதுதான் பார்க்கிறோம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் உழைப்பது சாதாரண விஷயம் அல்ல. இதற்கு முன்பு எந்த முதல்வராவது இப்படி செயல்பட்டு இருக்கிறார்களா?" என அவர்கள் வியப்புடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முதல்வரின் இந்த 'ஷார்ப்' டைமிங், அரசு அதிகாரிகளையும் சுறுசுறுப்பாக்கியுள்ளது. முதல்வர் இவ்வளவு சீக்கிரம் அலுவலகம் வரும்போது, நாமும் நேரத்திற்கு வர வேண்டும் என்ற கட்டாயம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தலைமைச் செயலகமே ஒரு புதிய உத்வேகத்துடன் இயங்கத் தொடங்கியுள்ளது.
"நேரம் என்பது மக்களுக்குச் சொந்தமானது, அதை வீணடிக்கக் கூடாது" என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. இந்த 'புதிய கலாச்சாரம்' தமிழக அரசியலில் ஒரு ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. !
🔥THALPATHY VIJAY is not just another voice — he’s a true GOAT political analyst who cuts through the noise with clarity, depth, and bold statements. 👏💥
தமிழக அரசியலுக்கான அவரது தொலைநோக்குப் பார்வை,
உண்மையான வளர்ச்சிக்கான வழித்தடம், நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் நீண்டகாலத் திட்டமிடல் ஆகியவைதான் இப்போதைய சூழலில் மாநிலத்திற்கு மிகவும் அவசியமானவை. 🚀📈
தலைமைத்துவப் பண்புகள், கூட்டணி அரசியலின் எதார்த்தங்கள் அல்லது மக்கள் நலனை மையமாகக் கொண்ட உண்மையான அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பது என எதைப் பற்றியானாலும், உறுதியுடனும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் விஜய் அவர்கள் செயல்படுகிறார். 👊💥
கூர்மையான அறிவுத்திறன் மற்றும் நேரடியான, தெளிவான பகுப்பாய்வு மூலம் செயல்படும் ஒரு சக்திவாய்ந்த ஆளுமை அவர். ⚡️💫
ஒரு சிறந்த அரசியல் வியூகவாதிக்கான அனைத்துத் தகுதிகளையும் கொண்டவர்! 💡🔥
#CMJosephVijay #TVKVijay @TVKVijayHQ