நான் பொது வாழ்வில் இருக்கிறேன் என்ற ஒரே காரணத்திற்க்காக என்னை பற்றி ஆபாசமாகப் பேசுவதும், என்னை இழிவாக தொடர்ந்து பேசுவதும் தான் த.வெ.க அரசின் கொள்கையா?
ஏன் பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட கூடாதா?
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
த.வெ.க virtual warriors என்று சொல்லிக்கொண்டு,
Virtual abusers உருவாக்குவது நியாயமா?
என்மீது, தொடுக்கப்பட்ட அத்தனை, ஆபாச, கேலி இழி செயலுக்கும் தலைமை காவல் நிலையத்தில் புகாரளித்தும் உரிய நடவடிக்கை இல்லையே ஏன்?
கொள்கை ரீதியாக எதிர்காமல் இப்படி ஆபாச ரீதியாக பெண்களை சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்?
த.வெ.க வை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் தான் மாண்பு உள்ளதா?
இல்லை மற்ற பெண்களுக்கு மாண்பு இருக்க கூடாது என்பது தான் த.வெ.கா. அரசின் நிலைபாடா?
காவல்துறை: சட்டத்தை நிலைநாட்டும் அமைப்பு மட்டுமல்ல; நமது சமூகத்தின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு அரண்!
காவலர்கள் ஆற்றும் கடமையையும் அவர்களது அளப்பரிய தியாகத்தையும் #PoliceCommemorationDay-இல் நன்றியோடு நினைவுகூர்வோம்!
மக்களின் பாதுகாப்புக்காகவும் அமைதியான வாழ்வுக்காகவும் ஆபத்துகளை எதிர்கொண்டு, அர்ப்பணிப்புணர்வோடு கடமையாற்றி இன்னுயிர் ஈந்த காவலர்கள் அனைவருக்கும் எனது வீரவணக்கம்!
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சகோதரி கார்த்திகாவை இந்த Circus அரசாங்கம் கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தேர்தல் நேரத்தில் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில், அரசியல் பழிவாங்கலோடும் - த.வெ.க.வினரின் போதைப்பொருள் கடத்தல் செய்திகளை திசைத்திருப்பவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசியலில் விமர்சனங்களும் - ஜனநாயக ரீதியான போராட்டங்களும் தவிர்க்க முடியாதவை. அதற்காக எதிர் வரிசையில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கைது செய்வது என்பது கடைந்தெடுத்த பாசிசம்.
இந்த ரீல்ஸ் முதலமைச்சர், பா.ஜ.க-வின் Carbon Copy-ஆக செயல்படாமல், சகோதரி கார்த்திகாவை விடுவிக்கத் தேவையான நடவடிக்கையை செய்ய வேண்டும்.
கேட்டாரு பாரு கேள்வி🔥🔥
தவெக ஆட்சியில் புதிய திட்டங்களுக்கு செலவிட்டது எவ்வளவு.?
முதலீட்டு செலவுகளை மேற்கொள்ளமுடியாமல் இந்த அரசு திணறுவதால் மட்டுமே கடன் தேவை குறைந்துள்ளது
அண்ணன் @TThenarasu
இருந்தது ஒன்னே ஒன்னு
இப்ப இதுவும் போச்சி😃😃
2021ல் சென்னையில் 700 ஆக இருந்த தண்ணீர் தேங்கும் என கருதப்படும் இடங்கள் தற்போது 291 ஆக குறைந்ததாக தவெக ஆட்சியின் மாநகராட்சி ஆணையரே தெரிவித்துள்ளார்
சுபம்
₹4,000 கோடி எங்கே என்று கேட்பவர்கள், முதலில் இந்தத் திட்ட விவரங்களைப் படியுங்கள்.
1. வடசென்னை - கோசஸ்தலையாறு வடிநிலத் திட்டம்
*திட்ட மதிப்பீடு: ₹3,059 கோடி | திட்ட நீளம்: 641 கி.மீ.
ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், வடசென்னையின் வெள்ளப் பாதிப்பைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது.
*பணிகள் தொடங்கிய ஆண்டு: 2022
- முக்கியப் பகுதிகள்:அம்பத்தூர், மணலி, மாதவரம், திருவொற்றியூர்.
- 2025 ஜூலை நிலவரப்படி முடிக்கப்பட்டது: 611.94 கி.மீ.
- அப்போது பதிவான முன்னேற்றம்: 96%.
- பயன்பெறுவார்கள் எனக் கணிக்கப்பட்ட மக்கள்: சுமார் 30 லட்சம்.
ஆதாரம்: The New Indian Express, 03.11.2025.
https://t.co/LVwz2Ccr1j
2. தென்சென்னை - கோவளம் வடிநிலத் திட்டம்
மொத்தத் திட்ட மதிப்பீடு: ₹1,357.6 கோடி | திட்ட நீளம்: 298.5 கி.மீ.
ஜெர்மனியின் KfW வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் மூன்று கட்டங்களாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கட்டம் 1
- நீளம்: 40.5 கி.மீ.
- மதிப்பீடு: ₹150.45 கோடி.
- 2025 நவம்பர் செய்தியின்படி, பணிகள் முடிக்கப்பட்டிருந்தன.
கட்டம் 2
- நீளம்: 118 கி.மீ.
- மதிப்பீடு: ₹447 கோடி.
- 2025 நவம்பர் நிலவரப்படி, 93% முன்னேற்றம்.
கட்டம் 3
- நீளம்: 140.1 கி.மீ.
- மதிப்பீடு: ₹760.1 கோடி.
- 2025 நவம்பர் நிலவரப்படி, 27% முன்னேற்றம்.
பயன்பெறும் பகுதிகள்: பெருங்குடி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர்.
ஆதாரம்: The New Indian Express, 03.11.2025.
3. மையச் சென்னை - 2021 வெள்ளத்திற்குப் பிந்தைய வடிகால் பணிகள்
அனுமதிக்கப்பட்ட மொத்தத் தொகை: ₹1,000 கோடி
2021 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், திருப்புகழ் தலைமையிலான ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
- முடிக்கப்பட்ட பணிகள்: 225 கி.மீ.
- அந்தப் பணிகளின் மதிப்பீடு: ₹699 கோடி.
- தொடர்ந்து நடைபெற்ற பணிகள்: 70.26 கி.மீ.
- நடைபெற்று வந்த பணிகளின் மதிப்பீடு: ₹276.54 கோடி.
- நிதி ஆதாரங்கள்: சிங்காரச் சென்னை 2.0, வெள்ள நிவாரண நிதி, உலக வங்கி நிதி, மூலதன நிதி உள்ளிட்டவை.
ஆதாரம்: சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ மழைநீர் வடிகால் துறை.
https://t.co/bLhsPHOf85
4. வடசென்னை வளர்ச்சித் திட்டம்
திட்ட மதிப்பீடு: ₹23.8 கோடி
வடசென்னையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ்:
- திட்டமிடப்பட்ட வடிகால் நீளம்: 5.79 கி.மீ.
- முடிக்கப்பட்டதாகப் பதிவான நீளம்: 5.51 கி.மீ.
- நிறைவேற்றப்பட்ட அளவு: 95.2%.
ஆதாரம்: The New Indian Express, 03.11.2025.
5. சென்னை மாநகராட்சியின் சொந்த மூலதன நிதி
மதிப்பீடு: ₹760.7 கோடி
மாநகராட்சியின் மூலதன நிதியிலிருந்து 199.2 கி.மீ. நீளத்திற்கான மழைநீர் வடிகால் பணிகள் ஐந்து கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டதாகச் செய்தி தெரிவிக்கிறது.
இது ADB மற்றும் KfW நிதியுதவித் திட்டங்களிலிருந்து தனியாகக் குறிப்பிடப்பட்ட பணித் தொகுப்பாகும்.
6. கால்வாய் மேம்பாடு மற்றும் தூர்வாரும் பணிகள்
மொத்த மதிப்பீடு: ₹302.38 கோடி
சென்னை மாநகராட்சியின் 44 கால்வாய்களில் 69.8 கி.மீ. நீளத்திற்கான மேம்பாடு மற்றும் தூர்வாரும் பணிகள் திட்டமிடப்பட்டன.
2025 ஜூலை நிலவரப்படி:
- முடிக்கப்பட்டது: 7.3 கி.மீ.
- பணிகள் நடைபெற்றது: 47.4 கி.மீ.
- தொடங்கப்படாதது: 17.5 கி.மீ.
இந்தப் பணிகளுக்கு ADB, KfW மற்றும் மாநகராட்சியின் சிறப்பு மற்றும் மூலதன நிதிகள் பயன்படுத்தப்பட்டதாகச் செய்தி தெரிவிக்கிறது.
ஆதாரம்: The New Indian Express, 03.11.2025.
7. மொத்தச் செலவு குறித்த மாநகராட்சியின் கணக்கு
The New Indian Express வெளியிட்ட மாநகராட்சித் தரவுகளின்படி, 2021 முதல் 2025 வரையிலான நான்கு ஆண்டுகளில்:
- மொத்தச் செலவு: ₹5,201 கோடி.
- திட்டமிடப்பட்ட வடிகால் நீளம்: 1,144.5 கி.மீ.
- 2025 ஜூலைக்குள் முடிக்கப்பட்டது: 845.43 கி.மீ - 74%.
2024 மழைக்காலத்திற்குப் பிறகு வெள்ள அபாயம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட 87 இடங்களில் 85 இடங்கள் முக்கிய அபாய நிலையிலிருந்து வெளியே வந்ததாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
₹4,000 கோடி எங்கே என்று கேட்பவர்களுக்கு, திட்ட வாரியான விவரங்களை முன்வைக்கிறோம். எங்கள் கணக்கில் தவறு இருந்தால் ஆவணங்களுடன் சுட்டிக்காட்டுங்கள். முறைகேடு இருந்தால் ஆதாரத்துடன் நிரூபியுங்கள்.
இப்போது ஆறு மாத ஆட்சிக்குப் பிறகு உங்கள் சாதனைகளுக்கான கணக்கை மக்களிடம் வையுங்கள்!
2026–27 திருத்திய பட்ஜெட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ₹29,863 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
₹4,000 கோடிக்குக் கணக்கு கேட்டவர்களே… இப்போது ₹29,863 கோடி ஒதுக்கீட்டுக்கான உங்கள் கணக்கைத் திட்டம் வாரியாக வெளியிடுங்கள்!
#DMK
"திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது, 731-இடங்கள் பள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டன.. தற்போது 231-ஆக குறைந்து விட்டது என சென்னை மாநகராட்சி ஆணையரே சான்றிதழ் கொடுத்துவிட்டார்.. தவெக ஆட்சி நல்ல பெயர் வாங்குவதற்கு காரணமாக இருந்தது திமுக ஆட்சி தான்".. - திமுக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு
#SekarBabu | #DMK | #TVK | #CMVijay | #ChennaiRains
அலட்சியத்தால் தொடரும் கொலைகள், போதை உற்பத்தி மையமாகும் தமிழ்நாடு, தள்ளாடும் காவல்துறை..
🚨 சில நாட்களுக்கு முன்புதான், திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் ஜாமின் கையெழுத்து போட்டுவிட்டு வந்தவர் மனைவி முன்பே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அப்போதே, "ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா?" என நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.
🚨 அப்படி உருப்படியான எதுவும் செய்யப்படுவதில்லை எனச் சிவகங்கையில் நேற்று நடந்துள்ள மற்றுமொரு கொலைச் சம்பவம் காட்டியுள்ளது.
🚨 கொலை வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்த மதன் எனும் ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
🚨 முழுக்க முழுக்க காவல்துறையின் அலட்சியத்தால் நடந்துள்ள கொலை இது.
🚨 பெருந்துறை அருகே செவிலியர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 5 நாட்களுக்குப் பின்புதான் அவரது சடலத்தையே கண்டறிந்திருக்கிறார்கள்.
🚨 நடப்பது நம் ஆட்சிதானே என நினைத்து த.வெ.க. நிர்வாகிகளின் போதைப் பொருள் கடத்தலும் கொடிகட்டிப் பறக்கிறது.
🚨 வேதாரண்யத்தில் த.வெ.க. ஒன்றியச் செயலாளர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இப்போது, அதே மாவட்டத்தில் உலகத்துக்கே மெத் தயாரித்து விற்பனை செய்யும் மையமாகத் தமிழ்நாட்டை மாற்ற முயன்ற த.வெ.க. நிர்வாகி 'மெத்' பூபாலனும் கைதாகியுள்ளார்.
🚨 முதலமைச்சரின் திரைப்படங்களைப் பார்த்து இதைத்தான் அவரது கட்சிக்காரர்கள் கற்றுக்கொள்கிறார்களா?
🚨 மாநிலக் காவல்துறையினரால் இவர்களைப் பிடிக்க முடியவில்லையா அல்லது ஆளும்கட்சி நபர் என்பதால் இத்தனை நாள் கண்டும் காணாமல் விட்டனரா?
🚨 Drug control செய்ய வேண்டுமென்றால், முதலில் தன் கட்சியினரை முதலமைச்சர் control-இல் வைக்க வேண்டும்.
🚨 அதற்கு, காவல்துறை முதலில் அவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன?
🚨 துறைக்குப் பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் பொறுப்பு வகிக்கிறார். தன்னிடமுள்ள பல துறைகளின் பொறுப்புகளை மற்ற அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுத்ததைப் போல, காவல்துறையையும் outsource செய்துவிட்டாரா?
🚨 காவல்துறையில் அவர் உரிய கவனம் செலுத்துவதில்லை என்பதைத்தான் நிற்காமல் தொடரும் அரிவாள் வெட்டுகளும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளிடம் பிடிபடும் போதைக் கடத்தல்களும் காண்பிக்கின்றன.
🚨 CM sir, your negligence is costing lives. Drugs-ஐ விடு, Sports-ஐ எடு என்று சொன்ன நீங்கள் முதலில் Rest-ஐ விட்டுவிட்டு, உங்கள் துறையைக் கையில் எடுங்கள்.
சைதை துரைசாமின்னு சென்னையில் அதிமுக புள்ளி ஒருத்தர் இருக்கார்!17-10-2026 அதிமுக தொடக்க விழாவை முன்னிட்டு சபதம் எடுத்துள்ளார்.திமுக தற்போது ஆட்சியில் இல்லை.தவெக ஆட்சியில் உள்ளது! ஆனால் இந்த அறிஞர் திமுகவை ஒழிப்போம் என சபதம் எடுக்கிறார்! அதிமுக எம்எல்ஏக்களை தவெக ஒவ்வொன்றாக விழுங்கிக் கொண்டிருக்கிறது! ஆனால் இவர் திமுகவை ஒழிப்போம் என்று சபதம் எடுக்கிறார் என்றால் கள்ள லாட்டரி இவரையும் வளைத்து விட்டது என்று அர்த்தம்! அதிமுகவில் இருந்து கொண்டே தவெகவிற்கு ஆதரவாக செயல்படும் இவர்களை களையெடுக்க வேண்டிய பொறுப்பு எடப்பாடியாருக்குத்தான் இருக்கிறது! ஆனால் திமுகவை சீண்டினால் வாங்கி கட்டிக்கொள்ள வேண்டும்! 1977ல் எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்த புதிதில் அவரை ஏமாற்றி கோடி கோடியாக கொள்ளையடித்த முக்கியமானவர்களில் சைதை துரைசாமியும் ஒருவர்! அப்போது சாதாரண ஏழை எம்.ஜி.ஆர் ரசிகராக இருந்த அவருக்கு எப்படி கோடிக்கணக்கில் சொத்துக்கள் வந்தன? அந்த காலகட்டத்தில் இவர் அதிமுகவைப் பயன் படுத்தி கொள்ளையடித்தது பற்றி எம்.ஜி.ஆர் உடல் நலம் பாதிக்கப் பட்டு மருத்துவமனைகளில் இருந்தபோது நாளிதழ்களில் செய்தியாக வந்தது!
இன்று கோடிக்கணக்கான சொத்துக்கு அதிபதி!
ஆட்சியில் இல்லாத திமுகவை அழிப்போம் என சபதம் எடுக்கிறார்!
திமுகவை அழிப்போம் என சபதம் எடுத்தவர்களில் பாதிபேர் உலகத்தை விட்டே சென்று விட்டார்கள்!
திமுகவைத்தான் அழிக்க முடியவில்லை!😁