இன்று 68 ஆவது பிறந்தநாள் விழா காணும் அதிமுகழக இணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதலமைச்சர், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் திரு @EPSTamilNadu அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றேன்.
#HBDஎடப்பாடியார் ❤️👑
#EPS
மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுப்பதற்குத் தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கர்நாடக மாநில முதலமைச்சர் திரு. டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இதுவரை கள்ள மௌனம் காத்து வருகிறது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் உத்தரவு தொடர்பாக தமிழ்நாடு அரசின் முடிவை தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதற்காவது முதலமைச்சர் வாய் திறப்பாரா? @CMOTamilNadu
#பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழகத்தின் எத்திசையை நோக்கினாலும் கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.
கடந்த திமுக ஆட்சியின் மறுபதிப்பாகவே தற்போதைய இந்த 'பொய்க்கால் குதிரை' அரசின் செயல்பாடுகளும் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.
#பொய்க்கால்_குதிரை_அரசு
மின்துறை தலைமை அலுவலகத்தில் Hard Disk-கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக, யூடியூபர் திரு. @SavukkuOfficial பல்வேறு தகவல்களைக் கூறி #பொய்க்கால்_குதிரை_அரசு நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
எப்போதும் மைக்கைப் பிடித்துக்கொண்டு அப்படிப்பட்ட ஆட்சி, இப்படிப்பட்ட ஆட்சி, Transparency என்றாலே நாங்கள் தான் என்ற ரேஞ்சுக்கு பேசும் மின்துறை அமைச்சராக இருக்கும் @CTR_Nirmalkumar, ஏன் தனது துறையில் நடந்துள்ள இந்த மிகப்பெரிய திருட்டை பற்றி செய்திகளில் வெளிவருவதற்கு வருவதற்கு முன் கூறவில்லை? எங்கே போனது Transparency?
இதுபோன்ற அதிமுக்கியமான வழக்கை உடனடியாக CBCID-யிடம் ஒப்படைக்காமல், ஏதோ சாதாரண திருட்டு வழக்கு போல அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறுவது பொறுப்புள்ள செயலா? இந்த விவகாரத்தை அப்படியே அமுக்கி விடலாம் என்று நினைத்தீர்களா?
திரு. சவுக்கு சங்கர் கூறுவது உண்மையெனில், மின்துறை Vigilance இயக்குனர் அறையில் இருந்தே திருட்டு நடக்கிறது என்றால், இந்த ஆட்சி எப்படி Vigil ஆக இருப்பதாக கருத முடியும்?
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் கூறியது போல, இந்த திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கிறது.
Data Theft நடந்திருக்கிறது.
எதை மறைக்க? யாரைக் காப்பாற்ற?
தூயசக்தி என்கிறார்கள்… ஆனால் செயல்பாடுகளை பார்த்தால் நாம் வைத்த #பேரசக்தி என்ற பெயருக்கான பத்து பொருத்தமும் பக்காவாக இருக்கிறது!
இந்த ஆட்சியில தான் மருத்துவ அணி கூட ஆய்வுக்கு போறாங்க…
ஆனா நம்ம ப்ரோ @actorvijay மட்டும் தான் ஆய்வுக்கு போறதே இல்ல.. அப்படி போனா எப்படி இருக்கும் ன்னு ஒரு சின்ன Reality!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
நடக்கும் நிகழ்வுகள் இளைஞர்களுக்கான பல பெரிய வாய்ப்புகளை,
Parent Body-யிலேயே அளிப்பதற்கு நல்ல Oppourtunity-ஆக அமைந்துள்ளது.
#NexGenAIADMK கட்டமைக்க இதுவே நல்ல நேரம்!
வழி வருகிறது.
நம் தலைமை வழி காட்டுவார்
@EPSTamilNadu@AIADMKOfficial
பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் தெரிவித்துள்ள தவறான கருத்துக்களுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
-கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. கே.பி. முனுசாமி அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்த தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தீர்ந்துபோன கட்சி அல்ல… மக்கள் குறைகளை தீர்த்த கட்சி!
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#என்றென்றும்_அஇஅதிமுக
தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்து இட்டிருந்த Mazagon Dock நிறுவனம், தற்போது ஆந்திர மாநிலத்திற்கு திரும்பியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஒரு ஆட்சி வந்த முதல் மாதத்தில் புதிய முதலீடுகளை எடுக்க முடியவில்லை என்றாலும், ஏற்கனவே உள்ள முதலீடுகளை தக்க வைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.
ஆனால், எதிர்க்கட்சி MLA-க்களை குதிரை பேரத்தில் இழுப்பதை காட்டிய வேகம், இதில் காட்டவில்லை #பொய்க்கால்_குதிரை_அரசு .
ஏற்கனவே முந்தைய ஆட்சியில் பேசி முடிக்கப்பட்ட L &T நிறுவன ஒப்பந்தத்தை ஏதோ தனது கோட் சூட் ஸ்டைலைக் கண்டு மயங்கி வந்தது போல போஸ் கொடுத்து போட்டோ எடுத்த இன்றைய முதல்வர், தற்போது விட்டுப் போகும் முதலீட்டுக்கும் பொறுப்பு ஏற்பாரா?
அல்லது, “என் மேல பழி போடுறாங்க” என்று வழக்கம் போல புலம்புவாரா?
@CMOTamilNadu
ஆட்சிக்கு வந்த உடனே கட் ஆகிடுச்சு சார்…
எது, கமிஷனா?
இல்ல.. கரண்ட்டு..!!!
நேற்று இரவு இசிஆர் சாலையில் ஏற்பட்ட மின்வெட்டால் மக்கள் நடுரோட்டில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.
வாவ். What a மாற்றம் @CMOTamilNadu@CTR_Nirmalkumar ?
#பொய்க்கால்_குதிரை_அரசு
அட ஆச்சரியக்குறிகளே…
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அண்ணா தோற்றுவித்த திமுக-வின் போர்வாளாகத் திகழ்ந்து, அக்கட்சியின் பொருளாளராக உயர்ந்தவர். அண்ணா மறைவிற்கு பிறகு திரு. கருணாநிதியை திமுக தலைவர் ஆக்கிய கிங்மேக்கர்.
தான் தேர்ந்தெடுத்த தலைமை தடம் புரண்டதைக் கண்டு, அண்ணாவின் கொள்கை காக்க உண்மையான திராவிட இயக்கம் @AIADMKOfficial-ஐ தோற்றுவித்தவர்.
மாண்புமிகு அம்மா அவர்கள் கழகத்தின் கொள்கை பரப்ப தமிழகமெங்கும் பயணித்தவர். சத்துணவு திட்டத்தை செயல்படுத்த அரும்பணியாற்றியவர். புரட்சித் தலைவர் மருத்துவமனையில் இருந்தபோது கழகத்தின் முகமாய் தமிழகத் தெருவெங்கும் சென்று கழகத்தின் வெற்றிக்கு வித்திட்டவர் புரட்சித் தலைவி அம்மா.
வரலாற்றை “படிடா பரமா, படிடா பரமா” என்று சொன்னால் கேட்டா தானே?
தமிழக வரலாற்றின் ஒப்பில்லா தலைவர்களின் திருப்பெயரோடு உங்கள் தலைவர் பெயரை எழுதுவதே ஒரு வரலாற்று அசிங்கம்.
உங்கள் தலைவருக்கு என்ன வரலாறு இருக்கிறது?
அப்பா தயவால் சினிமாவுக்கு வந்துவிட்டு, பதிவிடவே கூச்சப்படும் காட்சிகளில் தன் ஆரம்பகாலத்தில் கூச்சமின்றி நடித்த நடிகர் தானே?
8 படங்கள் அப்பாவின் இயக்கத்தில்,
பெரிய இயக்குனர்கள் படங்கள் அப்பாவின் சிபாரிசில்,
தெலுங்கு பட ரீமேக் ரைட்ஸ் அப்பாவின் செல்வாக்கில்,
உங்கள் அப்பா இல்லையென்றால் நீங்கள் யார் @actorvijay ?
அதே அப்பா மீதும், பெற்ற அம்மா மீதும் வழக்கு போட்டவர் தானே நீங்கள்?
இலங்கைத் தமிழருக்காக நிதி கேட்டு வந்த இன்றைய அமைச்சர் வன்னி அரசு அவர்களை கொச்சைப்படுத்தி அனுப்பியது தானே உங்கள் அரசியல் வரலாறு?
ஈழத் தமிழர்களுக்கான நடிகர் சங்கப் போராட்டத்தின் பொது எல்லா நடிகர்களும் அள்ளிக் கொடுக்க, 500 ரூபாயை கஞ்சத் தனமாக கிள்ளிக் கொடுத்தவர் தானே நீங்கள்?
நீங்களாக ஒரு மேடை போட்டு, “நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட” என்று பாடியதால் தான் இலங்கைப் போர் நின்றது என்று உங்கள் ரசிகர்கள் வேண்டுமானால் உருட்டலாம். தமிழக மக்கள் இதையெல்லாம் கண்டு சிரித்ததே வரலாறு.
ஒரு Twitter ID விமர்சனம் செய்ததை தாங்கிக் கொள்ள முடியாமல், கமிஷனர் ஆபீசுக்கு சென்று கதறிய உங்கள் இயக்கத்தின் “மாபெரும் அரசியல் வரலாறு” எங்களுக்கு தெரியாதா என்ன?
“கோட் சூட் போட்டோஷூட்” நடத்தினால் அதை சொல்லத் தான் செய்வோம். உங்களைப் போல “Wow… How Cute?” என்று சிலாகிக்க நாங்கள் என்ன ஆச்சரியக்குறிகளா?
கரூரில் 41 மக்கள் பரிதாபமாக உயிரிழந்த போது கூட அதற்கு பதில் சொல்ல வக்கில்லாமல் ஓட்டம் பிடித்த சக்தி, அன்றும் இன்றும் மக்களுடனே நிற்கும் மக்கள் சக்தியான நம்மைப் பார்த்து பேசுவதா?
கீழ்மாடியில் ராஜினாமா, மேல்மாடியில் இணைப்பு விழா என உங்கள் குதிரை பேரத்திற்காக கண்ணியமிகு தலைமைச் செயலகத்தை பனையூர் பங்களா போல மாற்றிய கேவலத்திற்கு சொந்தக்காரர்கள், உயிரை விட இயக்கம் மேலென நிரூபிக்கும் தொண்டர்கள் உள்ள ஒரு மாபெரும் இயக்கத்தைப் பற்றி பேச என்ன அருகதை உள்ளது?
அஇஅதிமுக தீர்ந்து போன சக்தியாம்.
விபரீத யோகத்தால் ஆட்சிக்கு வந்துவிட்டு தமிழகத்தை அலங்கோலப் படுத்தும் உங்களை தீர்த்துக் கட்டப் போகும் சக்தி இந்த அஇஅதிமுக தான் என்பதை நினைவிற்கொள்க.
@TVKHQITWingOffl
HELLO பனையூரா!
எப்ப சார் பெரம்பூர் தொகுதிக்கு நன்றி சொல்ல வர்றீங்க!
Content இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு...
நேத்து sunday வேற...
office Leave...
கொஞ்சம் சீக்கிரம் பாத்து பண்ணுங்க சார்!
Sorry For The Disturbance 😊
யூட்யூபர் திரு. @MaridhasAnswers அவர்களை கைது செய்ய காவல்துறையினர் அவரது வீட்டின் முன் குவிந்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் பாசிச திமுக அரசின்….
Wait a minute…
ஆட்சி மாறி விட்டதோ?
ஆனால், காட்சிகள் மாறாதது ஏன்?
பாசிசம், பாயாசம் என்று வாய்கிழிய டயலாக் பேசியவர்களின் ஆட்சி செய்யும் இந்த நடவடிக்கை என்ன? பாசிசமா? பாயாசமா?
நீங்களும் பிரஸ் மீட் கொடுக்கவும் மாட்டீங்க… செய்தி நிறுவனங்கள் கேள்வி கேட்டால் Black Out பண்ணுவீங்க… யூட்யூப்-ல பேசினால் கைது பண்ணுவீங்க…
What bro… It’s very wrong bro..!!
அப்படி என்ன மாரிதாஸ் பேசினார் என்று பார்த்தால், விஜய் ஒரு பொம்மை முதல்வர் என்று கூறியுள்ளார். மேலும், இன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ என்பவர் @dir_ed-யால் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் Mastermind என கூறப்பட்டுள்ளது பற்றி பேசியுள்ளார்.
@AadhavArjuna அவர்களே…
ஜான் பிரிட்டோ உங்கள் உறவினர் தானே? ED ரெய்டில் 258 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது உண்மை தானே? அதில் உங்கள் நெருங்கிய உறவினர் தான் Mastermind என ED கூறியுள்ளது தானே? தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களுக்கு நீங்கள் தான் அமைச்சர் என்பதும் உண்மை தானே?
இந்த உண்மைகளை தொடர்பு படுத்தி தானே திரு. மாரிதாஸ் பேசினார்? அதில் உண்மை இல்லை என நீங்கள் நினைத்திருந்தால், அவதூறு வழக்கு தொடுத்திருக்கலாமே? அல்லது, செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கலாமே?
திரு. மாரிதாஸ் அவர்களை விசாரிக்க வேண்டும் என்றால் நோட்டீஸ் கொடுத்து அழைத்திருக்கலாமே? எதற்கு காவலர்களை அவர் வீட்டின் முன் நிறுத்தி கைது செய்ய துடிக்கிறீர்கள்?
அப்படி என்ன அச்சம்? மடியில் கனமிருப்பதால் வழியில் பயம் இருக்கிறதா?
ஜனநாயகக் குரலை நெறிக்க முயலும் பொய்க்கால் குதிரை அரசின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
உடனடியாக திரு. மாரிதாஸ் அவர்கள் மீதான அராஜக நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
#பொய்க்கால்_குதிரை_அரசு