வழக்கறிஞர் #பேரறிவாளன் விவகாரம்:
திடீர் தேச பக்தர்களான காங்கிரஸ்காரர்கள்
தோழர் பேரறிவாளன் சட்டப்படிப்பை முடித்து, தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளதற்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் செய்யாத குற்றத்துக்கு தோழர் பேரறிவாளன் தனது 19வது வயதில் கைது செய்யப்பட்டு, 16 ஆண்டுகள் தூக்குக் கயிற்றின் நிழலிலும், 31 ஆண்டுகள் தனிமைச் சிறையிலும் கழித்தார். அந்த காலகட்டத்தில் வேலூர் மத்திய சிறையில் அவரை சந்திக்கும்போது என்றும் மாறாத அதே புன்னகையோடும், கொடுஞ்சிறைவாசம் ஏற்படுத்தும் எந்தவித கசப்புணர்வும் இல்லாது இருப்பார். தான் குற்றமற்றவன் எனும் தெளிவு தரும் அமைதி அவரிடம் இருக்கும்.
’முழுமையான நீதியை’ (Complete Justice) உறுதி செய்யும்பொருட்டு, அரசியலமைப்பு சட்டத்தின் உறுப்பு 141ஐ பயன்படுத்தி பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய தோழர்களை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. தமிழ் தேசிய இனத்தின் எழுச்சிகரமான தொடர் மக்கள் திரள் - சட்டப் போராட்டத்தின் விளைவாக 6 தமிழர்களும் தூக்கு கொட்டடியிலிருந்து மீட்கப்பட்டனர்.
சிறை மீண்ட தோழர் பேரறிவாளன் சட்டப்படிப்பை முடித்து, பார் கவுன்சிலில் பதிவு செய்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியை தொடங்கியுள்ளார்.
’போதிய சட்ட அறிவும், விழிப்புணர்வும் இல்லாததாலேயே நான் இந்த வழக்கில் பொய்யாக சிக்க வைக்கப்பட்டேன். சிறையில் இருந்தபோதே குற்றவியல் சட்டத்தை விருப்பத்துடன் படித்து தெரிந்துகொண்டேன். எந்தவித சட்ட உதவியும் கிடைக்காமல் தவிக்கும் சிறைவாசிகளுக்கு உதவ வேண்டும். சட்டம் குறித்த அறிவை பரவலாக்க பள்ளி கல்லூரிகளில் சட்டப் படிப்பையும் சொல்லித்தர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார் பேரறிவாளன்.
வழக்கம் போல, காங்கிரஸ் தேச பக்தர்கள் கொதித்தெழுந்துள்ளனர். குறிப்பாக நான் பெரிதும் மதிக்ககூடிய வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரி சுதா அவர்கள் உள்ளிட்ட சில காங்கிரஸ் தேசபக்தர்கள், கொலை குற்றவாளி சட்டம் படிப்பதா? கொலை குற்றவாளி வழக்கறிஞர் ஆகலாமா? கொலை குற்றவாளியை மன்னிக்கலாமா? என்று கேள்வி கேட்டுள்ளனர்.
இது குறித்து ‘மோடி - அமித்ஷா’ தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
என்னவொரு நகைமுரண்!
கடந்த 2008ஆம் ஆண்டு ஒன்றியத்திலும் மராட்டியத்திலும் காங்கிரஸ் ஆட்சியின்போது மாலேகான் குண்டுவெடிப்பு மூலம் இஸ்லாமியர்களை கொன்றவர்கள் பிரக்யா சிங் தாகூர், ராணுவ அதிகாரி புரோஹித் உள்ளிட்ட சனாதன பயங்கரவாதிகள். தீவிரவாத வழக்கு நிலுவையில் இருக்கும்போதே மக்களவை உறுப்பினராக தேர்வானார் பிரக்யா சிங். கடந்த ஆண்டு இந்த வழக்கிலிருந்து அனைவருமே விடுவிக்கப்பட்டனர். கர்னல் புரோஹித் மீண்டும் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு பிரிகேடியர் என கடந்த மாதம் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய காங்கிரஸ் ஆட்சியில் தீவிரவாதி பிரக்யா சிங், சாமியார் அசீமானந்தா, ராணுவ அதிகாரி புரோஹித் கும்பல் இணைந்து நடத்திய பல்வேறு தீவிரவாத சம்பவங்களில் அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இன்று அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த அநீதி குறித்து எங்காவது காங்கிரஸ் தலைவர்கள் வாய் திறந்து பார்த்துள்ளோமா? இவர்களின் விடுதலைக்கு எதிராக ஏதாவது முனகலாவது வந்ததுண்டா?
பிந்திரன்வாலே தலைமையிலான காலிஸ்தான் போராளிகளை ஒடுக்குவதற்காக, ‘ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார்’ என்ற பெயரில் சீக்கியர்களின் புனிதத்தலமான தங்க கோவிலுக்குள் இந்திய ராணுவத்தை அனுப்பி அவர்களை கொன்று குவித்தது இந்திரா காந்தி அரசு. இதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்திரா காந்தியின் சீக்கிய பாதுகாவலர்கள் 1984 அக்.31ஆம் தேதி அவரை சுட்டுக் கொன்றனர். அதற்கடுத்த 5 நாட்கள் தலைநகர் டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறை கட்டவழித்து விடப்பட்டது.
அரசு அறிவித்த கணக்குப்படி 2733 அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் காயம்பட்டு, வீடுகள் இழந்து அகதிகளாகினர். 4000க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டதாகவும், இதனை சீக்கிய இனப்படுகொலை என்றே மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
1985ஆம் ஆண்டு வெளியான PUCL அமைப்பின் அறிக்கை முதல் கடைசியாக வந்த ‘நானாவதி’ஆணையம் வரை பல்வேறு விசாரணை ஆணையங்கள் காங்கிரஸ் நிர்வாகிகள் திட்டமிட்டு சீக்கியர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டனர் என்று குற்றம் சுமத்தின.
1984ல் டெல்லி தலைநகர் பகுதி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்களான ஜெகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார், எச்.கே.எல்.பகத், தரம் தாஸ் சாஸ்திரி, லலித் மேக்கன் ஆகியோர் நேரடியாக கொலை கும்பலை வழிநடத்தியதாக சீக்கிய அமைப்புகள் குற்றஞ்சாட்டின.
நீதி கோரும் சீக்கிய அமைப்புகளின் சட்டப்போராட்டம் முடங்கி இருந்த சூழலில், ஒன்றிய பாஜக அரசு இந்த வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டது. கொலை மற்றும் கலவரம் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கு 2018ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2025ல் மற்றொரு கொலை வழக்கில் மீண்டும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஜெகதீஷ் டைட்லர் மீது இன்றும் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு எதிராக மூடப்பட்ட 186 வழக்குகளை உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் 2018ஆம் ஆண்டு முதல் சிறப்பு புலனாய்வு குழு இன்றும் விசாரித்து வருகிறது.
இந்த இனப்படுகொலை குற்றவாளிகளை காங்கிரஸ் கட்சி என்ன செய்தது?
தொடர்ந்து கட்சி பதவியும் - ஆட்சி பதவியும் கொடுத்து அழகுபார்த்தன. 2009ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வழக்கம் போல சஜ்ஜன் குமார், ஜெகதீஷ் டைட்லருக்கு சீட்டை முதலில் ஒதுக்கியது காங்கிரஸ் தலைமை, ஆனால் சீக்கியர்களின் கடும் எதிர்ப்பால் அவற்றை திரும்பப்பெற்றது. சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி என சீக்கிய இனப்படுகொலைக்கு மன்னிப்பு கோரியிருந்தாலும், சீக்கியர்களால் குற்றஞ்சாட்டப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை அவர்கள் பாதுகாத்தே வந்துள்ளனர்.
சீக்கியர்களுக்கு எதிராக அடக்குமுறை ஏவிய பஞ்சாப்பின் காங்கிரஸ் முதல்வர் பியாண்ட் சிங், 1995ஆம் ஆண்டு சீக்கிய போராளிக் குழுவால் மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 6 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது நீதிமன்றம். அதில் பல்வண்ட் சிங் ரஜோனா என்பவருக்கு மட்டும் தூக்கு விதிக்கப்பட்டது.
2012ஆம் ஆண்டு ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சியில் ரஜோனாவுக்கு தூக்கு தண்டனைக்கு தேதி குறிக்கப்பட்டதும் பஞ்சாப் கொந்தளித்தது. சீக்கியர்களின் உச்சபட்ச அமைப்பான ‘அகால் தக்த்’ ரஜோனாவுக்கு ‘தியாகி’ எனும் உயர் பட்டத்தை வழங்கி, அவர் சார்பில் குடியரசுத்தலைவருக்கு கருணை மனு போட்டது. ஆனால் தியாகி பட்டத்தையும், கருணை மனுவையும் ரஜோனா ஏற்கவில்லை. ’நான் செய்த செயல் குறித்து பெருமைப்படுகிறேன். கருணை வேண்டாம். தூக்கு தான் வேண்டும்’ என்று அறிவித்தார்.
ரஜோனாவை தூக்கிலிடக் கூடாது என்று அகாலி தள அரசு (பாஜக கூட்டணி) ஒன்றிய காங்கிரஸ் அரசை வலியுறுத்தியது. இதனை காங்கிரஸ் தலைமை எதிர்த்தது. ஆனால் அப்போதய பஞ்சாப் காங்கிரஸின் தலைவராக இருந்த கேப்டன் அமரிந்தர் சிங், ரஜோனாவுக்கு ஆதரவாக பஞ்சாப் அரசு நிலைப்பாட்டுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார். மேலும் தனிப்பட்ட விதத்தில் தாம் மரண தண்டனைக்கு எதிரானவன் என்று பின்னாளில் முதல்வராக இருந்தபோதும் தெரிவித்தார்.
இறுதியில் பல்வண்ட் சிங் ரஜோனாவின் தூக்கை நிறுத்தி வைத்தது ஒன்றிய காங்கிரஸ் அரசு. 2022ல் ரஜோனாவின் தூக்கு தண்டனையை குறைக்க ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டபோது, சட்டப்பிரிவு 432 கீழ் அவரை விடுவிக்க வேண்டும் என்றவர் காங்கிரஸ் மூத்த தலைவரும் பஞ்சாப் எம்.பியுமான மணிஷ் திவாரி.
இப்போது அவர்கள் மொழியில் யார் தேச விரோதிகள் என்று காங்கிரஸ் விளக்குமா? பஞ்சாப் என்றால் பணிவதும், தமிழ்நாடு என்றால் சிலிர்ப்பதும் தான் காங்கிரஸின் கொள்கை நிலைப்பாடா?
இந்திரா காந்தியை கொன்ற சீக்கிய பாதுகாவலர்களில் ஒருவரான பியாண்ட் சிங் என்பரின் மகன் சரப்ஜித் சிங் கல்சா, ஃபரித்கோட் (தனி) மக்களவை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக 2024ல் வென்றுள்ளார். இவரது தாத்தா மற்றும் தாயும் முன்னாள் எம்.பிக்கள் தான். பல பத்தாண்டுகள் கழித்தும் இது தான் பஞ்சாப் மக்களின் நிலைப்பாடு.
இதில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன? இது குறித்து ஏதாவது கருத்து தெரிவித்ததுண்டா காங்கிரஸ் தலைமை?
தமக்கு இழைக்கப்பட்ட அநீதி போல் வேறு யாரும் பாதிக்கப்படக் கூடாது என்ற உயரிய நோக்கில் சட்டப்படிப்பு முடித்து, அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்றி வழக்கறிஞராக பதிவு செய்துள்ள
தோழர் பேரறிவாளனுக்கு எதிராக கூச்சலிடுவதைக் காட்டிலும், ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் - பாசிச பாஜகவை வீழ்த்துவதற்கான முக்கிய பணி நமக்கு காத்திருக்கிறது என்பதை காங்கிரஸ் ’நண்பர்கள்’ நினைவில் கொள்ள வேண்டும்.
சட்டத்தின் துணை கொண்டு எளிய மக்களுக்காக களம் காணவுள்ள வழக்கறிஞர் பேரறிவாளனால் நீதி முழுமை பெற்றது!
வழக்கறிஞர் பேரறிவாளன் அவர்களுக்கு
விடுதலைச் சிறுத்தைகள் எப்போதும் துணை நிற்போம்!
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2.5.2026
@INCIndia@INCTamilNadu@TNCCITSMDept@AdvtSudha
#Perarivalan
அண்ணன் எவிடன்ஸ் கதிர் அவர்களுடைய பதிவு..
🤷🤷
நண்பர்களே !
மிகுந்த வருத்தத்துடன் இந்த பதிவினை எழுதுகிறேன்.கடந்த 13 மார்ச் 2016 அன்று தம்பி உடுமலைப்பேட்டை சங்கர் கொடூரமான முறையில் ஆணவ படுகொலை செய்யப்பட்டார்.அடுத்த வருடமே 2017 டிசம்பர் மாதம் குற்றவாளிகள் அனைவருக்கும் அமர்வு நீதி மன்றம் கடும் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது.ஆனால் உயர் நீதி மன்றம் 22 ஜூன் 2020 அன்று முதன்மை குற்றவாளியை விடுதலை செய்தது.இதற்கு எதிராக மகள் கவுசல்யா உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து இருந்தார்.இந்த வழக்கினை உச்ச நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு தலையீடு செய்து துரித படுத்த வேண்டும் என்று நானும் கவுசல்யாவும் பல்வேறு மனுக்கள்/ஊடக சந்திப்புகள் என்று நடத்தி வந்தோம்.இந்நிலையில் இன்று உச்ச நீதி மன்றத்தில் தமிழ் நாட்டின் அரசு வழக்கறிஞர் எங்களுக்கு மொழி பெயர்க்க இன்னும் ஆறு மாதம் அவகாசம் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.அதாவது தேர்தல் முடியும் வரை இந்த வழக்கினை எடுத்து வர கூடாது என்று நினைக்கிறார்களா?
5 வருடங்களாக மொழி பெயர்க்காமல் என்ன செய்து கொண்டு இருந்திர்கள்? மனசாட்சி வேண்டாமா?
@TVKVijayHQ தமிழர் நலன் சார்ந்து பேசும் விஜய் அவர்களே ... மேனாள் அமைச்சர் செங்கோட்டையன்தான் வாத்தாச்சி சம்பத்தின் போது அமைச்சர்... அதை நினைவில் வைத்து கொள்க.
#Thandakaaranyam Review: A socio-political drama with emotional depth
What works ✅ • Director #athiyanathirai handles a real event inspired story with strong conviction, exploring communism and the struggles of marginalized voices. • Climax leaves a solid impact, questioning state power, oppression and the branding of Naxals. • #justinprabhakaran score elevates several sequences, giving both the songs and background a strong emotional pull. • #pratheepkaliraja cinematography captures forest landscapes, aerial shots of elephants, hills & villages beautifully. • #Kalaiyarasan delivers a heartfelt performance, especially in emotional breakdowns while #Dinesh and #shabeer brings intensity to their roles. • The screenplay keeps you invested and the emotional connect works more often than not.
What doesn’t ❌ •. Could have gone rawer. unlike #Viduthalai or #visaranai some struggles are toned down, giving a slightly commercial feel. •Kalaiyarasan’s character, though strong on paper, doesn’t always land especially in the first half.
• Lip sync issues in multiple places including Dinesh’s opening dialogue which break immersion.
• Emotional intensity sometimes undercuts by over commercial touches.
Verdict 🎯
More than just a film, Thandha Karanayam feels like a mirror to struggles that rarely reach the screen. Despite minor flaws, its message and emotions hit hard.
#Thandakaaranyam #ThandakaaranyamFromSept19 @NeelamSocial@beemji@KalaiActor@justin_tunes@doppratheep@AthiraiAthiyan
#வேடன்
நவீன கலாச்சாரம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் ஆதிக்குடி இசையை அழித்து, ஜண்டா மேளத்தை அரங்கேற்றி கொண்டிருந்த வேலையில்,
கேரளத்தில் ஆதிகுடி இசையான பறையிசையை அதிரவிட்டான் ஒருவன்..
அவன் வேடன்...💙❤️
- இரா.இளம்பெருவழுதி
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒட்டு மொத்த OBC மக்களின் இடஒதுக்கீட்டிற்காக முதலில் குரல் கொடுத்தவர் அண்ணன் திருமா...😎 @thirumaofficial
அண்ணன் வேல்முருகன்....🔥