தங்கள் சொந்த நிலங்களை காக்க போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்கும் அரச பயங்கரவாதத்தை கூட்டணி கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால்.. நாளை பரந்தூர் உட்பட எல்லா மக்கள் போராட்டத்தையும் இப்படிதான் தமிழ்நாடு அரசு நசுக்கும்..
திருவண்ணாமலையில் மேல்மா சிப்காட்டிற்கு தன்னுடைய நிலத்தை கையகப்படுத்த கூடாது என தொடர்ந்து போராடிய பச்சயப்பன் என்ற விவசாயி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சில விவசாயிகள் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மக்களிடம் கற்போம் குழுவின் சார்பாக திருவண்ணாமலையில் தீஸ்தா செதல்வாத், முகமது சுபேர் உள்ளிட்டவர்களை பொய் வழக்கிட்டு கைது செய்துள்ள ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #freeteestasetalvad#FreeZubair