தெற்குச் சீமையில் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற மதுரை மண்ணில் சூளுரை!
மக்களுக்குக் கொடுத்தால் அது #DravidianModel அரசு, மக்களிடம் இருப்பதையும��� பிடுங்கிக் கொள்வது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
மதுரை வர இருக்கும் மாண்புமிகு பிரதமர் அவர்களிடம், "எங்களுக்கான திட்டங்கள் எங்கே?" என்று கேள்வி எழுப்புவோம்!
பா.ஜ.க.வின் ரெய்டுகளுக்கும் வழக்குகளுக்கும் அஞ்சி, கட்சியையும் தமிழினத்தின் சுயமரியாதையையும் அடகு வைக்க நாம் என்ன அடிமை அ.தி.மு.க.வா? எமர்ஜென்சியையே எதிர்கொண்ட #MISA Batch!
தமிழ்நாடு vs NDA எனும் போரில் மக்களின் ஆதரவோடு #வெல்வோம்_ஒன்றாக!
தமிழ்த்தாத்தா உ.வே.சா. பிறந்தநாள்!
மண்ணோடு மண்ணாகப் போகவிருந்த பழந்தமிழ் இலக்கியங்களைச் சுவடிகளில் இருந்து அச்சுப்பதிப்பாகக் கொண்டு வந்த ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா. அவர்களின் பிறந்தநாளில், மண்ணுக்கடியில் இருக்கும் தமிழரின் தொல் நாகரிகத்தை வெளிக்கொணரும் நமது #DravidianModel அரசின் சார்பில் அவரைப் போற்றி வணங்குகிறேன்!
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போ���்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!
சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் @PremallathaDmdk அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.
கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வு��்குப் பங்களிக்கட்டும்!
#DravidianModel ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்!
#வெல்வோம்_ஒன்றாக!
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ��ுன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகு��்பாக ரூ.2 ஆயிரம்!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!
#DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
#வெல்வோம்_ஒன்றாக!
என்றென்றும் நினைவில் நிற்கும் சந்திப்பு!
தமிழ் மீதான பற்றும், பேரறிஞர் அண்ணா – தலைவர் கலைஞர் குறித்த நினைவலைகளும், வருங்காலம் குறித்த உரையாட��்களும் என நெகிழ்வூட்டி நெஞ்சம் நிறைந்தார் அறிவியலாளர் திரு. நம்பி நாராயணன்!
#VibeWithMKS
பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி!
நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு!
அண்ணா சாலை, அ���்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்ப��ி செய்தது கழக அரசு.
மொழித் திணிப்பு - பண்பாட்டுத் திணிப்பு - நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களைச் செய்துகொண்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் #GetOut-தான்!
ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்!
#AnnaForever #AnnaLivesOn #PerarignarAnna
🔥புதிய அறிவிப்பு: திருவொற்றியூர் நெடுஞ்சாலை, இனி வள்ளலார் நெடுஞ்சாலை!🔥
நமது #DravidianModel-இல்,
🔹வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாள்
🔹ஓராண்டு தொடர்கொண்டாட்டமாக வள்ளலார் முப்பெரும் விழா
🔹வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைப்பு என
வள்ளலாரின் புகழைப் போற்றுவதன் தொடர்ச்சியாக, அயல்நாட்டினரிடமும் வள்ளலாரின் உயரிய கருத்துகளைக் கொண்டு சேர்த்திட, வரும் பிப்ரவரி 15-ஆம் நாள் சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் பள்ளி வளாகத்தில் அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026 நடத்தப்படும் என்றும்,
மேலும், வள்ளலார் நெறியாள���்களின் கோரிக்கையை ஏற்று, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை எனப் பெயர் சூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்!
@TNHRCEDept @PKSekarbabu
#InternationalTextileSummit360: ஜவுளித் துறையில் தமிழ்நாட்டின் முதலிடம் தொடர ‘ஒருங்கிணைந்த புதிய ஜவுளிக் கொள்கை 2025-26’ வெளியீடு
#USTarrif, #IndiaEUTradeDeal என முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டு ஜவுளித்துறையின் எழுச்சிக்காக, கோவை மாநகர���்தில் நடைபெறும் சர்வதேச ஜவுளித் தொழில் மாநாடு 360-ஐத் தொடங்கி வைத்தேன்.
915 கோடி ரூபாய் மதிப்பிலான 55 MoU-கள் கையெழுத்தாகும் இந்தச் சிறப்புமிகு மாநாட்டில், அதிநவீன நெசவு & பின்னலாடை இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய 20 விழுக்காடு மூலதன முதலீட்டு மானியம் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சிமிகு புதிய அறிவிப்பையும் வெளியிட்டேன்!
#களம்2026: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி vs NDA அல்ல; தமிழ்நாடு vs NDA!
மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்பட்ட கூட்டணியை, உடைந்து போனதை எல்லாம் ஒட்ட வைத்துக் கொண்டு வந்திருக்கிறது NDA. எந்த get-up-இல் வந்தாலும் அவர்களுக்கு Get Out-தான்!
அடுத்து, வாராவாரம் பிரமாண்ட மாநாடுகளைத் தமிழ்நாட்டின் அனைத்து மண்டலங்களிலும் நடத்த இருக்கிறோம். பிப்ரவரி 28 வரை தொகுதிகள்தோறும் #தமிழ்நாட்டை_தலைகு��ிய_விடமாட்டோம் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன். #InternationalWomensDay வரை @DMKWomensWing பரப்புரை உள்ளது.
#வெல்லும்_தமிழ்ப்பெண்கள்-ஏ புறப்படுங்கள்! #DravidianModel ஆட்சி தொடர உழைத்திடுங்கள்!
#வெல்வோம்_ஒன்றாக!
ஈராயிரம் ஆண்டுகள் கடந்து இன்றளவும் நிலைத்து நிற்கும் இலக்கி��மாய், உலக மாந்தர்க்கெல்லாம் பொதுவான உயரிய நற்கருத்துகள் கொண்ட திருக்குறளைப் படைத்திட்ட வள்ள���வப் பெருந்தகையைப் போற்றுவோம்!
அறம் - பொருள் - இன்பம் என்ற முப்பாலையும் ஈரடியில் தந்து மூவாத் தமிழுக்குப் பெருமை சேர்த்த அய்யன் வள்ளுவர் சொன்ன அறநெறிவழியில் நம் வாழ்வு அமையட்டும்!
#திருவள்ளுவர்_நாள் #வள்ளுவம்_போற்றுதும்
#ThiruvalluvarDay
பறை முழங்க, நிலம் அதிர, தொடங்கியது #ChennaiSangamam2026
நம் மண்ணின் மரபுக் கலைகளையும் கலைஞர்களையும் போற்றும் சென்னை சங்கமம் கலைவிழாவுடன் இந்தப் பொங்கலைக் கொண்டாடுவோம்!
உண்மையான அக்கறையோடும் உயர்வான நோக்கோடும் ஒவ்வொரு ஆண்டும் இதனை மேலும் மேலும் ��ிறப்பாக ஒருங்கிணைத்து வரும் தங்கை @KanimozhiDMK அவர்களுக்குப் பாராட்டுகள்!
இந்த ஆண்டு பாடலாசிரியராகவும் களமிறங்கியதற்காக இந்த அண்ணனின் special வாழ்த்துகள்...
#DravidaPongal #Pongal2026 #வெல்வோம்_ஒன்றாக
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன்.
மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், அதுவே நாடாளுமன்றத்தில் நம் பலம் குறையக் காரணமாகி விடும்; நம் குரலை நசுக்கிவிடக் கூடும் என்றால் அது எவ்வகையில் நியாயமாகும்?
ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் எந்த நடவடிக்கையினையும் செய்யவே கூடாது என்பதல்ல எங்கள் வாதம். அதற்காக, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை!
கூட்டாட்சியியல் கோட்டுபாடுகளைப் பாதுகாக்கும் விதத்தில், நியாயமான, வ���ளிப்படைத்தன்மை மிக்க ஒரு வழிமுறையைப் பின்பற்றுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.
இச்சூழ்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கிறேன்.
நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணி��ில் திரள்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்!
#FairDelimitationForTN
#HappyNewYear2026
மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்; தமிழ்நாட்டு மக்களான நாம் அனைவரும் வெற்றி பெறுவோம்!
Marching ahead towards a resounding victory; we, the people of Tamil Nadu, will rise together and succeed.