இன்று 14.06.2026 திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழாவில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்,திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மதிப்புமிகு அண்ணன் #உயர்திரு_ஐ_பி_செந்தில்குமார்_MA_BL_MLA* அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து ஆசி பெற்றபோது...
வியாசர்பாடி குட்செட் பகுதியில் உள்ள மாநகராட்சி குளத்தை தூர்வாரி விரிவுபடுத்தும் பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிகளவிலான மழைநீர், அந்த குளத்துக்குச் சென்று சேரும் வகையில், அந்த குளத்தை 9.5 ஏக்கர் அளவிற்கு பெரிய குளமாக அகலப்படுத்திடும் பணி குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து அதனை விரைவாக முடித்திட உத்தரவிட்டார்.
#DyCMUdhay #NorthEastMonsoon #NEMonsoon #Vyasarpadi #KalaignarSeithigal
கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. @mkstalin அவர்கள் அண்ணா அறிவாலயத்தில், "உடன்பிறப்பே வா" என்ற தலைப்பில் சட்டமன்றத் தொகுதி வாரியாக கழக நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்வில், தென்காசி மாவட்டம் - வாசுதேவநல்லூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் - ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட கழக நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார்.
#உடன்பிறப்பே_வா
திண்டுக்கல் மாவட்டம் வருகை தந்த தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு @Anbil_Mahesh அவர்களை திண்டுக்கல் மாவட்ட கழகத்தின் சார்பில் வரவேற்றபோது.
‘வெல்வோம் இருநூறு - படைப்போம் வரலாறு’ என்று நம் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தந்த முழக்கத்தை ஏந்தி, விருதுநகர் தெற்கு மாவட்டக்கழகம், திருவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகிகளை இன்று சந்தித்து உரையாடினோம்.
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்க நினைக்கும் பாசிஸ்ட்டுகளையும், அவர்களுக்குத் துணை நிற்கும் அடிமைகளையும் மீண்டும் வீட்டுக்கு அனுப்ப கலைஞரின் உடன்பிறப்புகள் தயாராவோம் என்று உரையாற்றினோம்.
நம் தலைவர் அவர்கள் தலைமையில் மீண்டும் கழக ஆட்சியை அமைத்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வோமென கேட்டுக் கொண்டோம்.
@KKSSRR_DMK@TThenarasu
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி, மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு எ.வ. வேலு அவர்கள், தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
#KalaignarForever
முத்தமிழறிஞர் கலைஞரின் 7ஆம் ஆண்டு நினைவுநாளையோட்டி, கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் வரையிலான அமைதி பேரணியில் கழகத் தலைவர் அவர்களுடன் ஆயிரக்கணக்கான கழக உடன்பிறப்புகள் கலந்துகொண்டனர்!
#KalaignarForever
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுடைய நினைவு நாளை முன்னிட்டு கலைஞர் அவர்கள் வாழ்ந்த கோபாலபுரம், சி.ஐ.டி காலனி இல்லங்களுக்குச் சென்று மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம்.
"எல்லோர்க்கும் எல்லாம்" எனும் கொள்கை வழியிலான மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் சீரிய முன்னெடுப்பான #உங்களுடன்_ஸ்டாலின் சிறப்பு முகாம் என்னுடைய #திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பத்தாளப்பேட்டை மற்றும் கிளியூர் ஊராட்சிகளில் வசிக்கும் மக்களுக்காக இன்று நடைபெறுகிறது. அதனை நேரில் பார்வையிட்டு, மக்களின் கோரிக்கைகள் மீது தீர்வு காணப்பட்டதற்கான ஆணைகளையும் பயனாளிகளிடம் வழங்கினோம்.
#DravidianModel
#அன்பில்_in_திருவெறும்பூர்
முத்தமிழறிஞர் கலைஞரின் 7ஆம் ஆண்டு நினைவுநாளையோட்டி, கழகத் தலைவர்,மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றது!
#KalaignarForever
தலைவர் கலைஞர் அவர்களின் 7-வது நினைவு நாளையொட்டி, கழகத் தலைவர் - முதலமைச்சர் அண்ணன் திரு. @mkstalin அவர்களது தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் பங்கேற்றபோது.
தி.மு.க. வழக்கறிஞர் அணி மாநில நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் பயிற்சிக் கூட்டம்.
- கழக சட்டத்துறைச் செயலாளர் திரு @nrelango_dmk , எம்.பி., அவர்கள் அறிக்கை
தி.மு.க. வழக்கறிஞர் அணி மாநில நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ((DLC)), சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் (CLC) ஆலோசனைக் கூட்டம் வருகிற 26-07-2025 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மேற்கூறிய பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில், எனது தலைமையில், சட்டத்துறைத் தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.விடுதலை அவர்கள் முன்னிலையில் நடைபெறும்.
இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ((DLC)), சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் ((CLC)) அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இப் பயிற்சிக் கூட்டத்தில் வருகைப் பதிவேடு வைக்கப்பட இருப்பதால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என்.ஆர்.இளங்கோ, எம்.பி.,
செயலாளர்,
தி.மு.க. சட்டத்துறை.
********
#DMK