I Belong to Dravidian Stock நான் திராவிட இனத்தை சேர்ந்தவன் 🖤❤️
திருப்பூர் வடக்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் (SM) தகவல் தொழில் நுட்ப அணி திராவிட முன்னேற்ற கழகம்
🙏🏾நன்றி தலைவரே 🖤❤️
“தொடர்ந்து பயணியுங்கள்” என்ற உங்கள் ஒற்றை வார்த்தை, என்னைப் போன்ற ஒரு சாதாரண தொண்டனின் கொள்கைப் பயணத்திற்கான மிகப்பெரிய உத்வேகம்.
கடைக்கோடி தொண்டனையும் கைவிடாது கழகம் என்ற கழகத்தின் தாரக மந்திரத்தை, தங்கள் செயல்பாட்டின் மூலம் மெய்ப்பித்து, என்னைப் போன்ற விளிம்புநிலை மக்களையும் உயர்த்திப் பிடிக்கும் தங்களின் பண்பு, இன்று என்னைப் போன்ற பல இளைஞர்களை திராவிட இயக்கத்தின் கொள்கைப் பாதையை நோக்கி ஈர்த்திருக்கிறது.
கழகத்தின் மீது நம்பிக்கை வைத்து, கழகக் கொள்கையை ஏற்று, தங்களுடன் பயணிக்கத் தயாராக நிற்கும் இளைஞர்கள் இன்று ஏராளம். அதில் நானும் ஒருவர்.
விளிம்புநிலை மக்களும் முன்னேற வேண்டும் என்று தலைவர் கலைஞர் விதைத்த சமூகநீதியின் விதையின் சிறு வேராய் முளைத்த என்னைப் போன்ற பலரும், இந்த இயக்கத்தால் பயனடைந்திருக்கிறோம்.
பெற்றதைத் திரும்பக் கைம்மாறு செய்ய, இயக்கத்தால் பயனடைந்த ஒவ்வொருவரும் இயக்கத்திற்காக உழைக்க வேண்டும் என்ற உணர்வுடன், இளைஞர்களாகிய நாங்கள் தயாராக இருக்கிறோம் தலைவரே.
தாங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி தலைவரே. 🖤❤️
தாங்கள் காட்டும் பாதையில்…
இளைஞரணி செயலாளர் அண்ணன் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடன்…
கழகக் கொள்கையுடன்… தொடர்ந்து பயணிப்பேன்..
நன்றி தலைவரே 🖤❤️🙏🏾
கடந்த ஆண்டு இதே நாளில், அப்போதைய மாண்புமிகு துணை முதலமைச்சரும், இன்றைய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருமான அண்ணன் திரு. @Udhaystalin அவர்களின் கரங்களால் அரசு மருத்துவ அலுவலராக எனது நியமன ஆணையைப் பெற்றேன்.
அந்த நாள், என் மருத்துவப் பயணத்தில் மறக்க முடியாத ஒரு மைல்கல்.
மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பை எனக்கு வழங்கிய திராவிட மாடல் அரசின் நம்பிக்கையை, வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் நினைவுகூர்வேன்.
ஆனால், சில மாதங்களிலேயே, கழகமும் (@arivalayam) கழகத் தலைவர் @mkstalin அவர்களும், மேற்கு மண்டல பொறுப்பாளர் அண்ணன் @V_Senthilbalaji அவர்களும் என்மீது வைத்த மற்றொரு நம்பிக்கையின் அடையாளமாக, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அப்போது மனதில் எத்தனையோ கேள்விகள்...
“இத்தனை கஷ்டப்பட்டு பெற்ற அரசுப் பணியை விட்டுவிட வேண்டுமா?”
இந்த வேலைக்காக எத்தனை வருடங்கள் நம்ம குடும்பம் கனவு கண்டிருக்கும்...
நம்ம ஊர்லயே பச்சை மையில கையெழுத்து போடுற அரசு வேலை கிடைச்ச முதல் ஆள் நான்தானே...
அதுவும் எவ்வளவு பெரிய கனவு!
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று கிடைக்கும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் சம்பளம்...
அந்தப் பாதுகாப்பை விட்டுட்டு போயிட்டா?
நாளைக்கு தேர்தலில் ஜெயிக்கவில்லை என்றால் என்ன செய்வோம்?
இப்போது ஓய்வூதியத்திற்கான பாதுகாப்பும் இருக்கிறது...
வாழ்க்கையின் கடைசி வரை ஒரு நிம்மதி இருக்கும்.
இத்தனை பாதுகாப்பையும் விட்டுவிட்டு, உறுதியில்லாத ஒரு பாதையை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
ஒரு பெண்ணாகவும், எங்கள் குடும்பத்தின் சூழ்நிலையை அறிந்தவளாகவும், இந்தக் கேள்விகள் என்னை இன்னும் அதிகமாக யோசிக்க வைத்தன.
ஆனால்...
மனது மட்டும் வேறொன்றைச் சொன்னது.
“கலைஞர் போட்ட ஏணியில் ஏறி வந்தவள் நீ.
ஏறிவிட்டோம் என்று அந்த ஏணியை மறந்துவிடப் போகிறாயா?
இல்லை... அந்த ஏணியைத் தாங்கி நிற்கும் கரங்களில் ஒன்றாக, நம் கழகத் தலைவருக்கு உறுதுணையாக நிற்கப் போகிறாயா?”
அந்தக் கேள்விக்கான பதில்தான் என் முடிவு.
திராவிடம் என்ற கனிமரத்தின் கனியைத் தின்று வளர்ந்தவள் நான்.
என்னைப் போன்ற எத்தனையோ எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் கல்வி, சமூகநீதி, இடஒதுக்கீடு, வாய்ப்பு என வாழ்க்கையின் கதவுகளைத் திறந்த இயக்கம் இது.
அப்படியிருக்கும்போது, அந்த மரத்தின் நிழலில் வளர்ந்த நான், எனக்கான இடத்தை மட்டும் பாதுகாத்துக்கொண்டு நின்றுவிட முடியுமா?
எனக்குக் கிடைத்த வாய்ப்பை மட்டும் அனுபவித்துவிட்டு, அந்த வாய்ப்பை உருவாக்கிய பாதையில் நான் ஒரு பங்காக இருக்காமல் போக முடியுமா?
அதனால்தான், அரசு மருத்துவர் என்ற பாதுகாப்பான பொறுப்பிலிருந்து விலகி, மக்களுக்காக இன்னொரு களத்தில் நிற்கும் முடிவை எடுத்தேன்.
அது ஒரு பதவியை விட்டுச் சென்ற முடிவு அல்ல.
என்னைப் போலவே, வருங்கால தலைமுறையினரும் பயனடைய வேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்த முடிவு.
அன்று கிடைத்த நியமன ஆணை என் வாழ்க்கையின் ஒரு முக்கிய அத்தியாயத்தைத் தொடங்கியது.
இன்று அந்த அத்தியாயம் முடிந்திருக்கலாம்.
பதவி மாறலாம். பாதை மாறலாம்.
ஆனால் மக்களோடு என் பயணம் தொடரும்.
என் பயணத்தில் உடன் நின்ற, இன்றும் உடன் நிற்கும் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.🙏🏾
சுத்தமான காற்று, நீர், சுற்றுச்சூழல் ஆகிய அடிப்படை உரிமைகளுக்குப் போராடிய எளிய மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.
ஸ்டெர்லைட் ஆலையை மூடிடப் போராடியப் போராளிகளை, அதிகாரவெறியில் கொலை செய்தது அன்றைய அதிமுக அரசு. வருங்காலத் தலைமுறையினரின் நலனையும் சூழலியல் பாதுகாப்பையும் உறுதிசெய்ய போராடி உயிர்நீத்த அப்போராளிகளுக்கு வீரவணக்கம்!
தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்குத் தள்ளியது போல், தமிழ்நாட்டையும் தள்ளிவிடாதீர்கள்.
சட்டப்பேரவை கூடும் போது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் என்னும் மரபை உறுதி செய்யுங்கள்.
தமிழ்நாடு முதலமைச்சராகும் திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கும் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்போருக்கும் வாழ்த்துகள்.
கடந்த திமுக ஆட்சியில் திரு.கோவி செழியன், திரு.அன்பில் மகேஸ் ஆகியோரிடம் கல்வித்துறை இருந்தது. கல்வி மறுக்கப்பட்ட சமூகப் பின்னணியில் இருந்து சமூகநீதி அடிப்படையில் மேலெழுந்து வந்தவர்களின் கைகளில் அத்துறை இருப்பதே நன்று. தவெக அமைச்சரவையிலும் அந்நிலை தொடர வேண்டும்.
தமிழ்நாட்டின் கல்வி வரலாறும் அரசியல் வரலாறும் வேறு வேறல்ல. கல்வியே நம் அரசியல். கல்விக்காகவே நம் அரசியல்.
#TVKVijayCM #TVKGovt
‘’சில தடைகள் பனிகளாகலாம். சில தடைகள் மலைகளாகலாம். ஆயினும் மலை தகர்க்கும் உளிகளாய் உங்களின் ஒவ்வொரு முயற்சியும் அமையட்டும் ‘’
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 🏴🚩
அன்றும் இன்றும் என்றும் உங்களுடன் ‘’ நான் ‘’✨
#இப்படை_தோற்கின்_எப்படை_வெல்லும் 💪🏻
@dmkethangaraj