தமிழ்த் திரையுலகில் ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த, என் ஆசிரியர் கே.பாலசந்தர் அவர்களின் பிறந்த நாள் இன்று. என்றும் அவரது முதன்மை மாணவன் என்பதில் பெருமையுண்டு எனக்கு.
Precious minerals are not more precious than human lives or our environment. The extraction of any mineral, however valuable, must rest on two non-negotiables: informed consent of local communities and rigorous scientific assessment of its environmental and public health impacts. Without these, development loses its legitimacy.
I stand with the people of Kanyakumari in seeking a re-examination of the IREL project and the Government Order extending its land allocation. A one-year extension on paper can leave generations with irreversible health consequences. Tamil Nadu's coasts are living ecosystems, not just mineral deposits. Listen to the people. Protect our shores.
சுற்றுச்சூழலைவிட, மனித உயிர்களைவிட எந்த ஒரு கனிமமும் தாதுக்களும் மதிப்புக் கூடியதல்ல. எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதென்றாலும் அது இரண்டு முக்கியமான நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஒன்று, அப்பகுதியில் வாழும் மக்களின் அனைத்து ஐயங்களும் தீர்க்கப்பட்டு, பெறப்படும் முழுமையான சம்மதம். மற்றொன்று அந்தத் திட்டம் சுற்றுச்சுழலிலும் பொது சுகாதாரத்திலும் ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் குறித்த அறிவியல்ப���ர்வமான துல்லியமான ஆய்வு. இவை இரண்டும் இல்லையென்றால் அந்தத் திட்டம் தனது தார்மீக உரிமையை இழந்துவிடும்.
மணவாளக்குறிச்சி அருகே அணுக்கனிமச் சுரங்கம் அமைக்கும் ஐ.ஆர்.இ.எல் (IREL) திட்டத்தையும், அதன் நில ஒதுக்கீட்டை நீட்டித்துப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையையும் தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். கன்னியாகுமரி மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்.
காகிதத்தில் கொடுக��கப்படும் ஒரு வருட கால நீட்டிப்பு, வரவிருக்கும் தலைமுறையினருக்கு மீட்டெடுக்க முடியாத பாதிப்புகளை ஏற்படுத்திவிடக் கூடும். தமிழ்நாட்டின் கடற்கரைகள் வெறும் தாதுக்கள் நிறைந்த பகுதிகள் மட்டுமல்ல, அவை உயிரோட்டமுள்ள சுற்றுச்சூழல் அரண்கள்.
மக்களின் குரலுக்குச் செவி கொடுங்கள். நம் கடற்கரைகளைப் பாதுகாத்திடுங்கள்.
@CMOTamilnadu
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்,
நாளை (04-07-2026) ஶ்ரீ ரங்கபூபதி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறவிருக்கும் "NAYAGAN FEST 2026" நிகழ்வில் கலந்துகொள்கிறார்.
#KamalHaasan#KamalHaasan_MP#MakkalNeedhiMaiam
#NayaganFest2026
விளையாட்டு வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கபாடி வீராங்கனையை, பயிற்சியாளர் பால��யல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக வெளியாகியுள்ள செய்தி, விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ��ற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விரைந்து விசாரணை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட வீராங்கனைக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். மேலும், வீராங்கனைகள் அச்சமின்றியும், பாதுகாப்பாகவும், உரிய மரியாதையுடனும் பயிற்சி பெறக்கூடியச் சூழலை உருவாக்க வேண்டியது அரசு மற்றும் விளையாட்டு அமைப்புகளின் பொறுப்பாகும்.
அரசு மற்றும் தனியார் விளையாட்டு அகாடமிகள், பயிற்சி மையங்கள் மற்றும் விளையாட்டு விடுதிகளில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கு ஒருங்கிணைந்த பாதுகாப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் புகார்களைத் தெரிவிக்க பிரத்யேகக் குழுவை அமைத்து, வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அளி்க்கும் புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் கொடுப்பவர்களின் பெயரை ரகசியமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
அனைத்துப் பயிற்சியாளர்களின் பின்னணியை சரிபார்ப்பதுடன், குறிப்பிட்ட காலஇடைவெளியில் அவர்களுக்கு ஒழுக்கப் பயிற்சி வழங்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகளின் பாதுகாப்பு அம்சங்கள், பெற்றோர் தொடர்பு முறை மற்றும் பயிற்சிக் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும்.
அனைத்து பயிற்சி மையங்களிலும் பொதுப் பகுதிகளில் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும். வருகைப் பதிவு மற்றும் கண்காணிப்பு நடைமுறைகளை கட்டாயமாக்க வேண்டும். அதேநேரத்தில், தனியுரிமை மதிக்கப்பட வேண்டும். வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஆண்டுதோறும் பாலியல் தொந்தரவு தடுப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, தொழில்முறை ஒழுக்கம் மற்றும் சட்ட விழிப்புணர்வு தொடர்பான பயிற்சிகளை வழங்க வேண்டும்.
விளையாட்டு வெறுமனே பதக்கங்களை வெல்வதற்கான தளம் மட்டுமல்ல; நம்பிக்கை, ஒழுக்கம், பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் மனிதநேயத்தை வளர்க்கும் உயர்ந்த சமூக அமைப்பு என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை மூலம் நீதி கிடைக்கச் செய்வதே ஜனநாயக சமூகத்தின் அடிப்படை கடமையாகும்.
-திரு. E.T.அரவிந்ராஜ், @ET_Aravindraj
மாநிலச் செயலாளர் - விளையாட்டு மேம்பாட்டு அணி,
மக்கள் நீதி மய்யம்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை மனு!
சைதாப்பேட்டை ம.நீ.ம மாவட்டம் சார்பில், தொகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை, சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. அருள் பிரகாசம் அவர்களிடம், சென்னை மண்டல செயலாளர் திரு. T.மயில்வாகனன் @imayilvagan மற்றும் சைதாப்பேட்டை மநீம மாவட்டச் செயலாளர் திரு. ஜெ. கதிர் @SaidaiKathir வழங்கினர்.
இந்தக் கோரிக்கை மனுவில், திறக்கப்படாமல் உள்ள அம்மா பூங்காவை உடனடியாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வருதல், அம்பேத்கர் கால்பந்து மைதானம் (140 வது வட்டம்) மற்றும் இதர கால்பந்து மைதானங்களை மேம்படுத்தி விளையாட்டு வீரர்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருதல், ஒலிம்பியா பார்க���கிலுள்ள (168 வது வட்டம்) மாநகராட்சிப் பூங்காவை சீரமைத்தல், கலைமகள் நகரில் உடற்பயிற்சிக் கூடம் அமைத்தல், அம்மா பூங்கா பின்புறமுள்ள ஃபுட்பால் மைதானம் சீர் செய்தல் மற்றும் 139 வது வட்டம் R6 விளையாட்டுத் திடலில் உடற்பயிற்சி செய்யும் தளவாடங்கள், அங்குள்ள மோசமான இருக்கைகள் ஆகியவற்றை விரைந்து சரி செய்தல் உள்ளிட்ட சாராம்சங்கள் அடங்கியுள்ளன.
சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்
திரு. அரு���்பிரகாசம் அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளைப் பரிசீலித்து, நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாக உறுதியளித்தார்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் திருமதி.பாக்கியம், திரு. போலீஸ் மோகன், திரு. முத்துக்குமார், மாவட்ட அமைப்பாளர் திரு.சந்தர், மாவட்ட துணை அமைப்பாளர் திரு. சுல்தான் பாய், பகுதி செயலாளர் திரு. செல்வகுமார், வட்டச் செயலாளர்கள் திரு. ராஜேஷ், திரு. முனுசாமி, திரு. ஆறுமுகம், திரு. சத்திய நாராயணன், திரு. பரந்தாமன், திரு. தனசேகரன், திருமதி. புவனா சுரேஷ், திரு. ஹரிஷ், திரு. கார்த்திக், திருமதி. ஜெனிபர் உள்ளிட்ட மய்ய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
கும்மிடிப்பூண்டியில் மூன்று வயதும் நிரம்பாத பெண்குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும் கொடூரமான காயங்களால் இறந்தே போனதும் மனித குலத்தையே தலைகுனியவைக்கும் அவலம்.
நாகரிகம் அடைந்த சமூகம்தானா நாம் என்கிற கேள்வியை முகத்திலறைந்தாற்போல் எழுப்புகிறது இந்த துயரச்சம்பவம்.
இனியொரு சம்பவம் இப்பட�� நடக்காதிருக்க தமிழ்நாடு அரசாங்கம் உடனடியாக செயலில் இறங்கியாக வேண்டும்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Happy Birthday, Rahul ji.
You’ve walked the length of India, carrying a message of love, secularism, and progress, reminding us that politics must connect, not divide.
Keep walking, keep listening.
@rahulgandhi
ஆளுநர் உரை: எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்!
தங்கள் அரசின் அடிப்படைப் பணிகள் என்னவாகயிருக்கும் என்பதன் தொகுப்பாகத்தான் ஆளுநர் உரை அமைந்துள்ளது. உரையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்த அரசானது கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவருதல், உச்சநீதிமன்றத்தின் அமர்வை சென்னையில் அமைத்தல், உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்குதல் போன்ற நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்ற முழுமூச்சுடன் பாடுபட வேண்டும். பன்னாட்டு முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ‘‘தமிழ்நாடு முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையம்’’ என்ற முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது.
ஒன்றிய அரசானது தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதிப்பகிர்வை சட்ட ரீதியாகப் போராடிப் பெறுவதற்கு சட்ட வல்லுனர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்படும் என்பது அவசியமா��தொரு நடவடிக்கையாகும். அதேசமயத்தில் நிதிப்பகிர்வு உள்ளிட்ட ‘‘கூட்டாட்சி மற்றும் மத்திய மாநில உறவுகள்” குறித்து மறுஆய்வு செய்து தீர்வுகளைத் தருவதற்காக 2025ல் தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி. த��ரு.குரியன் ஜோசப் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் வழங்கிய பரிந்துரைகளை தவெக அரசு பரிசீலித்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
நகரமயமாதல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் குடிநீர், உள்கட்டமைப்பு உள்ளிட்ட சில திட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் கிராம பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக கூடுதல் நிதி மற்றும் கிராம சபைகளுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படுவது, உள்ளாட்சித் தேர்தல் குறித்து எந்தக்குறிப்பும் இல்லாதது வருத்தமளிக்கிறது.
ஆளுநர் உரையில் காவிரிப்பிரச்னை, போதை கலாச்சாரம் ஒழிப்பு, பாலியல் வன்முறை போன்றவற்றைக் கையாள்வதில் மென்மையான போக்கே காணப்படுகிறது. இவற்றில் கடுமையான நிலைப்பாட்டை - செயல்பாட்டை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரின் ஆளுநர் உரை என்பதால் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ஆளுநர் உரை நிறைவேற்றவில்லை.
ஆ. அருணாச்சலம் MA., BL., @Arunachalam_Adv
பொதுச்செயலாளர்,
மக்கள் நீதி மய்யம்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
உங்க இசை உங்க வயசைப் போல பல நூறு மடங்கு வாழும். நீங்களும் எங்கள் பேராசைகளையெல்லாம் கடந்த ஆயுளைப் பெற்று வாழவேண்டும், இசையோடு.
உங்கள்
கமல்
@ilaiyaraaja#HBDIlaiyaraaja
Years may pass, but the artist in you continues to surprise and inspire us. It has been a privilege to witness your remarkable journey, my friend. Happy Birthday, @mohanlal.
நான் கிராமசபையில் வலியுறுத்திய பின்னர் அணிகிறார்கள்! தனிப்பட்ட முறையில் அவர்கள���டம் கேட்டேன் (காணொளி உள்ளது), பயந்து கொண்டு கூறினார்கள் "எங்களுக்கான சுகாதார ஏற்பாடுகள் எதுவும் இல்லை, கேட்டால் போ போ என்கிறார்கள்", வெளியில் சொல்லிவிட வேண்டாம் என்றும் கெஞ்சினார்கள் 🥺
#TVKVijayHQ
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது.
என் சகோதரர் திரு. @mkstalin அவர்கள் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்க��றார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன்.
இப்போது அரசியலமைப்ப��� பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும். இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல்.
திரு. @TVKVijayHQ தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள். இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம்.
‘பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.
நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும்.
— கமல் ஹாசன்.
ஜனநாயக அரசியலில் தேர்தல் ஓர் அங்கம்தான். அருமை நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. @mkstalin அவர்கள் வெற்றியில் ஆர்ப்பரிப்பவரும் அல்ல. தோல்வியில் துவள்பவரும் அல்ல. மீண்டும் போராடுவார். மீண்டும் வெல்வார்.
காடு திருத்தி நாடாக்கியது உழைப்பு
உண்ணத் தந்து உயிர்கொடுப்பது உழைப்பு
உலக மாந்தரை ஒன்றாக்கியது உழைப்பு
உழைப்பு இன்றேல் உயிர் இல்லை உயர்வில்லை
உழைப்பையே மூச்சாய்க்கொண்ட உழைப்பாளர்க்���ு என் வணக்கம்.