திமுக ஆட்சியில் நீண்ட நாள் ஒப்பந்தம் எதையும் செய்யவில்லை என எப்போதும் போல பொய்யான தகவலை சொல்ல வேண்டாம் மின்துறை அமைச்சர் Collectionகுமார், Sorry, CTR நிர்மல் குமார் அவர்களே, ஒரு நாளாவது உண்மை பேசுங்கள்..
நடைமுறையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின்சார கொள்முதலில் நீண்ட கால கொள்முதல் / நடுத்தர கால கொள்முதல் மொத்தம் 6240 MW.. அதில் 2021-2026ல் தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட நீண்ட கால கொள்முதல் / நடுத்தர கால கொள்முதல் 2825 MW..
தெரியாவிட்டால், மின்துறை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்..
தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக்கொண்டு இருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கோவை மாவட்டம், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, காந்திபுரம் பகுதி, ராம் நகர் பட்டேல் சாலை பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது..
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#கோவை_தெற்கு
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
இந்நிகழ்வில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோழமை கட்சி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்துக்கொண்டனர்.. (2/2)
தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த, கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களை இன்று சந்தித்து வாழ்த்து பெற்ற போது..
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அறிவித்தபோது இது சாத்தியமில்லை; முடியாது என்றவர்கள் இப்போது வேறு குரல் எழுப்புகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி அவர்கள் ரூ.1000 எப்படி சாத்தியம் என்று கேட்டுவிட்டு இப்போது 2000 கொடுக்கிறேன் என்கிறார்.
அதிமுக எவ்வளவு கொடுப்பதாக கூறினாலும் பாசிச பிஜேபியுடன் உறவாடும் உங்களை மக்கள் 10 முறை நிராகரித்தது போலவே 2026-லும் நிராகரிப்பார்கள்.
பி. கு : எடப்பாடி பழனிசாமி அப்படி கூறவில்லை என்பவர்களுக்காக வீடியோ ஆதாரம் கொடுக்கப்பட்டது.
தென் மண்டல கழக இளைஞர் அணி நிர்வாகிகள் போர்க்கள வீரர்களாகக் குழுமி இருக்கும் கல்குறிச்சி கலைஞர் திடலில் பிரம்மாண்டமாக விழா தொடங்கியது!
ஒன்று கூடுவோம்! வரலாறு படைப்போம்!
#Youth4DMK2026
நமது மண்ணையும், நமது மொழியையும், நமது உரிமைகளையும் காத்திடும் மகத்தான தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று, கரூர் கலைஞர் அறிவாலயத்தில், அன்னை தமிழை காத்திட தன்னை தமிழ் மண்ணுக்கு ஈந்த தியாக சுடர்களான மொழி போர் தியாகிகளின் திருவுருப் படங்களுக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது..
இந்நிகழ்வில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்..