பா.ஜ.க இளைஞரணி மாநில செயலாளர் செல்வி ஜான்சி (எ) S.சவிதா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், எல்லா வளங்களுடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.
Visited the residence of BJP Tamil Nadu Youth Wing President Thiru @SuryahSG avl to offer my heartfelt condolences on the passing of his beloved mother.
I have personally witnessed the unwavering care and devotion with which Thiru Suryah stood by his mother through the most challenging times. I pray to the almighty to grant him and his family the strength to endure this irreplaceable loss, and to bless her soul with Sadgati.
Om Shanti.
A Wonderful meeting with party office bearers at my #Velachery Assembly constituency office.
கட்சி நிர்வாகிகளுடன் எனது #வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் இனிமையான சந்திப்பு.
A wonderful meeting with BJP Tamilnadu Youth Wing IT Department Co-Convenor, Thiru.@bala7762 at his residence in the #SouthChennai, #Sholinganallur Assembly Constituency.
தமிழக பா.ஜ.க இளைஞரணி தகவல் தொழில்நுட்பத் துறை மாநில இணை அமைப்பாளர் திரு.பாலாஜி சிவகுமார் அவர்களின் #தென்சென்னை, #சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அவரது இல்லத்தில் ஒரு அருமையான சந்திப்பு.
அரசியல் ஆதாயத்திற்காகச் சிலர் பரப்பும் பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பாஜக மாநில இளைஞரணி தலைவர் திரு. @SuryahSG அவர்கள் தகுந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
How u did this @SuryahSG bro..?
சில நாட்களுக்கு முன்பு இளைஞர் அணி மாநில தலைவர் சூர்யா அவர்களை சந்தித்தபோது, தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? என்று கேட்டேன். அவர் அன்று கணித்தது இன்று நடந்துள்ளது.
Really political genius brother..!
@BJP4TamilNadu
ரங்கநாதன் தாத்தா மறைந்து 14 நாட்கள் ஆகிறது. 34 வருடங்களாக என்னுடனே இருந்து என்னை வளர்த்த தாத்தா இன்று தெய்வமாக மாறி விட்டார். எனது 3 வயதில் சுசீலா பாட்டி இறந்து விட்டார். அதற்கு அடுத்த 31 ஆண்டுகளாக தாத்தா வாழ்ந்தது முழுக்க முழுக்க எனக்காக தான்.
தனது 103 வயதிலும் எந்த நோய்நொடி இல்லாது, சக்கரை, BP போன்று எந்த உடல் உபாதைகளும் இன்றி மிகவும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தவர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு முந்தைய நாள் கூட அவர் விரும்பிய சாம்பார் வடை, பிரியாணியை ருசித்து உண்டு தினமும் அவர் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை படிக்கக்கூடிய The Hindu ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ், Times of India, தினமலர் மற்றும் தினமணி ஆகிய ஐந்து நாளிதழ்களையும் முழுவதுமாக படித்து, தொலைகாட்சியில் விவாதங்களை பார்த்து மகிழ்வாக சென்றிருக்கிறார் என்று தான் நம்புகிறேன். இறப்பில் கூட யாருக்கும் எந்த தொந்தரவும் இன்றி நிம்மதியாக போய் சேர்ந்து விட்டார்.
1952-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பாராளுமன்ற தேர்தல் முதல் அனைத்து சட்டசபை தேர்தல்களிலும், பாராளுமன்ற தேர்தல்களிலும் வாக்களித்த பெருமைக்கு சொந்தக்காரர் ரங்கநாதன் தாத்தா. இந்தத் தேர்தலிலும் வாக்களிப்பதற்கு ஆவலுடன் இருந்த தாத்தா சரியாக தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்பு இந்த உலகை விட்டு பிரிந்து விட்டார்.
எனக்கும் தாத்தாவுக்குமான உறவு கோவையில் நான் வாழ்ந்த முதல் 21 ஆண்டுகள் உடன் பயனித்தவர்கள் அனைவருக்கும் மிகவும் நன்றாக தெரியும். 21 வயதுக்கு பிந்தைய எனது 13 வருட வாழ்க்கையில் சிலருக்கு தெரிந்திருக்கும்.
தாத்தாவின் சொந்த ஊர் திருவண்ணாமலை, என் தாய் பிறந்ததும் அங்கு தான். தாத்தா Health Inspector பணியில் தமிழகம் முழுக்க பல ஊர்களில் பணியாற்றியவர், கடைசியாக ஊட்டியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து ஓய்வு பெற்றதும் கோயமுத்தூருக்கு குடும்பத்துடன் குடி பெயர்ந்தார்.
தாத்தாவுக்கு நான்கு பிள்ளைகள். இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். இதில் மூத்த மகனான எனது பெரிய மாமாவும், கடைசி மகளான எனது அம்மாவும் பிறவியிலேயே வாய் பேச, காதுகேட்க முடியாதவர்களாக பிறந்தவர்கள். மற்ற இருவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பிறந்தவர்கள். 2 மாற்றுத்திறனாளி பிள்ளைகள் தன் சொந்தக்கால்களில் நிற்க வேண்டும் என உறுதியாக இருந்த தாத்தா இருவருக்கும் மத்திய, மாநில அரசாங்களில் இருந்த மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீட்டை பயன்படித்தி கடைநிலை அரசுப்பணியை பெற்றுக் கொடுத்தார். இருவருக்கும் திருமணம் ஒருவேளை நடக்கவில்லை என்றால் அவர் காலத்திற்கு பிறகு இவ்விருவர் வாழ்க்கை கேள்விக்குறி ஆகி விடுமோ என முன் யோசனையுடன் தாத்தா செய்த செயல் அது. ஆனால் விதி என்னவோ தாத்தாவின் மறைவுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே அவரது மூத்த மகளும், 6 ஆண்டுகளுக்கு முன்பே மூத்த மகனும் உயிர் பிரிந்து விட்டனர்.
எனது தந்தையின் ஊர் கும்பகோணம். திருமணத்திற்கு பிறகு எனது தாயும், தந்தையும் கோவைக்கு இடம்பெயர நானும் அங்கு தான் பிறந்தேன். என் தாய் தந்தையருக்கு 4-வது மகன் நான். முதல் மூன்று அண்ணன்களும் மருத்துவ காரணங்களால் மரணிக்க, நான்காவதாக பிறந்த என்னை முழுவதுமாக வளர்க்கும் பொறுப்பை என் தாயின் தந்தையான ரங்கநாதன் தாத்தாவும் – சுசீலா பாட்டியும் ஏற்றுக்கொண்டனர். நான் என் பாட்டி, தாத்தாவுடனே வளர்ந்தேன். நான் பிறந்தது முதல் அதற்கு பிறகான எனது 2011 வரையான 20 வருடங்கள் என்னை முழுக்க முழுக்க வளர்த்தது தாத்தா தான். எனது மூன்றாவது சகோதரரான லோகநாதன் மூளை காய்ச்சல் நோயால் மரணமடைந்தது எனது தாத்தாவை வெகுவாக பாதித்து இருந்தது. அவன் நியாபகமாக “லோகு நினைவு அறக்கட்டளை” என்ற தொண்டு நிறுவனத்தை 1989-ஆம் ஆண்டு நிறுவினார் தாத்தா, அதன் நீட்சியே இன்று நானும் எனது நண்பர்களும் நடத்தி வரும் “நமோ பவுண்டேஷன்".
இரண்டு பிள்ளைகளின் ஊனம், எனது 3 அண்ணன்களின் இறப்பு ஆகியவை தாத்தாவை வெகுவாக பாதித்ததினால் அவர் நிறுவிய அறக்கட்டளை மூலம் பல சேவைகளை கோவை செல்வபுரம் பகுதியில் செய்து வந்தார். அதில் முக்கியமானது இலவச பள்ளிக்கூடமும், டியூஷன் சென்டரும் நடத்தியது. இதன் மூலம் 1990-களில் பலர் அப்பகுதியில் பயன்பெற்றனர். சிறு வயதில் இருந்தே தாத்தாவுடன் கோவை சுற்றிலும் இருந்த RS புரம் காது கேளாதோர் பள்ளி, முதியோர் இல்லங்கள், அனாதை ஆஸிரமங்களுக்கு சென்று வந்த மலரும் நினைவுகள் கண் முன்னே வந்து செல்கிறது.
நான் பிறந்து வளர்ந்தது ஒரு நடுத்தர குடும்பம். எனது தாத்தா அவர் வாழ்வில் செய்ய முடியாத அனைத்தையும் என் மூலமாக சாதிக்க நினைத்தவர். அவர் வைத்திருந்த ஒரு TVS 50 பைக்கில் என்னை ஏற்றிக்கொண்டு பல இடங்களுக்கு சென்றிருக்கிறார். 5-ஆம் வகுப்பு வரை நான் கோவை வைசியாள் வீதியில் உள்ள வாசவி வித்யாலயா பள்ளியில் படித்தேன். இலவச பஸ் பாஸ் மூலம் பள்ளிக்கு சென்ற வந்த எனக்கு சனிக்கிழமைகளில் மட்டும் அப்படி ஒரு கொண்டாட்டம். ஏனனெனில் அன்று பள்ளி அரை நாள் செயல்படும். 11 மணிக்கு என்னை அழைத்து செல்ல TVS 50-யில் வரும் தாத்தா நேராக RS புரத்தில் உள்ள அன்னபூர்ணா உணவகத்திற்கு அழைத்துச் செல்வார். ஒரு பரோட்டா, ஒரு வெண்ணிலா ஐஸ் கிரீம். இதை சாப்பிடுவேன், இதை மட்டும் தான் சாப்பிடுவேன். திங்கள் முதல் வெள்ளி வரை அந்த சனிக்கிழமைக்காக காத்திருந்த நாட்கள் எண்ண ஓட்டங்களில் வந்துக்கொண்டே இருக்கிறது.
பள்ளிக்காலம் முதலே படிப்பை தவிர்த்து நான் Extra Curricular என்று சொல்லப்படும் பிற செயல்பாடுகளில் ஜொலிக்க வேண்டும் என்பது எனது தாத்தாவின் ஆசை. கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்ட என்னை நான்காம் வகுப்பு படிக்கும் போதே RS புரத்தில் உள்ள நேரு வித்யாலயா பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி வகுப்பில் சேர்த்து விட்டார். அந்த 9 வயதில் கிரிக்கெட் பேட், க்ளொவ்ஸ் என முறையாக பயிற்சி பெறும் வாய்ப்பை உருவாக்கி தந்தவர் எனது அன்பு தாத்தா. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் TVS 50-யில் அழைத்து சென்ற தாத்தா, 2 – 3 மணி நேரம் பயிற்சி முடியும் வரை அங்கேயே காத்திருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்வார்.
தினசரி நாளிதழ்களை படிப்பதை 1960-களில் இருந்து வழக்கமாக வைத்திருந்த தாத்த The Hindu ஆங்கில நாளிதழ், தினமணி மற்றும் தினமலர் நாளிதழ்களை முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை படிப்பவர். அதே பழக்கம் பள்ளி காலங்களில் இருந்தே எனக்கும் ஒட்டிக்கொண்டது.
எனது பள்ளிக் காலங்களில் காலையில் நடைபெறும் Prayer-ல் ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை “Thought for the Day” என்ற ஒரு பகுதியை தொடர்ந்து நான் தொகுப்பேன். அதற்காக தாத்தா தினமும் காலையில் எழுந்து புத்தகங்களில் இருந்து தேடி ஒரு நல்ல Quote-ஐ ஆங்கிலத்தில் எழுதி பிறகு தமிழில் எழுதி கொடுப்பார் – அதைத்தான் பல வருடங்களாக தொடர்ந்து பள்ளி Prayer-ல் படித்து வந்தேன்.
Parents Teacher Meeting எப்போது நடந்தாலும் என் பள்ளியில் உள்ள அனைவருக்கும் அவர்களது தாய் அல்லது தந்தை வருவார்கள், ஆனால் எனக்கு மட்டும் முதல் வகுப்பில் இருந்து 12-ஆம் வகுப்பு வரை வந்தது எனது தாத்தா தான். என் பள்ளி ஆசியர்கள் அனைவருக்கும், என் வகுப்பு தோழர்களுக்கும், பள்ளியில் படிக்கும் அனைவருக்கு பரிச்சியமான முகமாகவே தாத்தா திகழ்ந்தார்.
பத்தாம் வகுப்பில் 80% மதிப்பெண் எடுத்திருந்தாலும், என்னை அறிவியல் பிரிவில் படிப்பதற்கு(Science Group) பதிலாக கலை பிரிவில்(Arts Group) படிப்பதற்கு ஊக்குவித்தவர் தாத்தா. அதற்கு காரணம் சிறு வயதில் இருந்து அரசியல் குறித்து ஆழ்ந்த கற்பித்தலை அவர் வழங்கியதால் கலைப்பிரிவு படிப்பது வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது அவர் கருத்து. அக்காலத்தில் கலைப்பிரிவு என்பது படிக்காதவர்கள் எடுக்கக் கூடிய பிரிவு என்ற ஒரு பொது புத்தி இருந்தது, அதனால் என் பள்ளி ஆசிரியர்கள் சிலர் என்னிடம் பல மாதங்கள் பேசாமல் இருந்தது கூட நினைவு இருக்கின்றது. அந்த ஒரு முடிவு என் வாழ்வில் எடுத்த மிகச்சிறந்த முடிவாக நான் பார்க்கிறேன்.
நான் 12-ஆம் வகுப்பு படிக்கும் போது எனது தாத்தாவுக்கு நான் ஒரு Professional-ஆக உருவாக வேண்டும் என ஆசை. அதற்காக அவர் பலரிடம் பேசி என்னை படிக்க தேர்ந்தெடுக்க சொன்னது Company Secretary படிப்பு. ஆனால் கல்லூரியில் படித்துக்கொண்ட படிக்க வேண்டிய படிப்பாக CS இருந்ததால், கோவை PSG கலை அறிவியல் கல்லூரியில் BBA படிப்பில் சேர்ந்தேன். PSG கல்லூரியில் BBA படிப்பு முடிக்கும் தருவாயில் Company Secretary படிப்பும் Inter முடித்து இருந்தேன். அப்போது Company Secretary Institute-ல் Securities Law பாடத்தை சொல்லிக் கொடுத்த திருமிகு.ரேணுகா சந்திரன் என்ற ஆசிரியை நீ சட்டம் படித்தால் நன்றாக இருக்கும், Company Secretary + Law என்பது ஒரு மிகச்சிறந்த Combo என்று அறிவுறுத்தினார். அதே சமயம் எங்களது BBA துறை Head of the Department-ஆக இருந்த பேராசிரியர் திரு.கோபால கிருஷ்ணன் அவர்களும் நிச்சயமாக நீ சட்டம் படிக்க வேண்டும் என்ற அறிவுரை வழங்கினார்.
சரி சிறந்த சட்டக்கல்லூரிகள் என்னென்ன? அதற்கான சேர்க்கை முறை எவ்வாறு என்று பார்த்துக்கொண்டு இருந்த போது தான் சென்னை சட்டக்கல்லூரி மாணவர் கலவரம் எற்பட்டு பரபரப்பாக இருந்த தருணம். அதனால் தாத்தா சென்னையில் கண்டிப்பாக சட்டப்படிப்பு படிக்க ஒப்புக்கொள்ள மாட்டேன் என கூறி விட்டார். அதைத் தவர்த்து நான் தேர்வு செய்தது இரண்டு கல்லூரிகள் ஒன்று பெங்களூரில் உள்ள BMS சட்டக்கல்லூரி மற்றொன்று பூனாவில் உள்ள ILS சட்டக்கல்லூரி.
இதில் பூனா சட்டக்கல்லூரி இந்தியாவின் தலைசிறந்த சட்டக்கல்லூரிகளில் முதல் 5 இடங்களில் அப்போத இருந்தது, அதனால் இடம் கிடைப்பது மிகக்கடினம். இந்தியா முழுக்க இருந்து மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள். பெங்களூரு BMS சட்டக்கல்லூரியில் இடம் கிடைத்தது, பதிவு செய்து விட்டு பூனா சட்டக்கல்லூரி முடிவுக்காக காத்திருந்தேன். பூனாவில் இடம் கிடைத்தால் சிறந்தது இல்லையெனில் பெங்களூரு கல்லூரியில் படித்து விடலாம் என நினைத்திருந்தேன்.
இதற்கிடையில் தாத்தாவிடம் பூனா சென்று படிக்க வேண்டும் என்று சொன்னதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. கோவையில் இருந்து மிகத்தொலைவாக இருக்கிறது, பெங்களூரு கல்லூரியில் படித்தால் போதும், தோன்றும் போதெல்லாம் பேருந்து ஏறி வந்து விடலாம் என்பது அவரது வாதம். எனக்கோ வெளியூருக்கு சென்று படிக்க போகிறோம் என முடிவாகி விட்டது, படிப்பது சிறந்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற விருப்பம். இந்த பிரச்சனையை எனது ஆசிரியை திருமிகு.ரேணுகா சந்திரன் அவர்களிடம் கூறினேன். அவர் அச்சமயத்தில் குமரன் தங்கமாளிகையில் மிக உயரிய பொறுப்பில் இருந்துக் கொண்டே எங்களுக்கு பாடம் எடுத்து வந்தவர். அவர் உடனடியாக வீட்டிற்கு வந்து தாத்தாவிடம் பல மணி நேரம் பேசி ஒப்புக்கொள்ள வைத்தார். தாத்தாவும் ஒரு வழியாக பணிந்தார். 2011-ஆம் ஆண்டு கோவையில் இருந்து பூனா படிக்க சென்றதோடு கோவையுடனான என்னுடைய உறவு முடிந்து விட்டது. 3 ஆண்டுகள் பூனா சட்டப்படிப்பு, ஓராண்டு புது டெல்லி வாழ்க்கை என 2011 முதல் 2015 வரை தாத்தா கோவையில் என்னைப் பிரிந்து வாழ்ந்தார்.
அந்த பிரிவே மிகக்கடினமாக இருந்ததால் 2015-ஆம் ஆண்டு இறுதியில் நான் புது டெல்லியில் இருந்து சென்னை குடிபெயர்ந்தவுடன் அடுத்த மாதமே தாத்தாவையும், அம்மாவையும் சென்னைக்கு அழைத்து வந்து என்னுடனே வைத்துக்கொண்டேன். கடந்த 11 ஆண்டுகள் தாத்தாவை கவனித்துக் கொள்வதற்காக தனியாக இரண்டு பணி ஆட்களை நியமித்து அவரை எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்டேன். நெருங்கிய உறவினர்கள் முதல் நண்பர்கள் வரை பெரியவர்களை வீட்டில் வைத்து பார்த்துக்கொள்வது கடினம், அம்மாவும், தாத்தாவும் கோவை இல்லத்திலேயே பணியாட்களை நியமித்து பார்த்துகொள்ளலாம், சென்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறினர். ஆனால் என்னுடனே வைத்து அம்மாவையும், தாத்தாவையும் நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். அந்த விருப்பம் தாத்தாவுடன் கடந்த 11 ஆண்டுகள் உடனிருக்கும் மாபெரும் பாக்கியத்தை வழங்கியது என்று தான் சொல்ல வேண்டும்.
பள்ளி படிக்கும் போது எனக்கு சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்று ஆசை. குறிப்பாக IAS அதிகாரி ஆக வேண்டும் என்று. அதற்கு தாத்தா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். காரணம் வினோதமானது. அந்த பொறுப்பில் இருப்பவர்கள் அரசியல்வாதிகளுக்கு கூஜா தூக்கியே பிழைக்க வேண்டும். நிம்மதி இருக்காது, நிறைய தவறுகள் செய்ய வேண்டியது வரும் என்பது அவர் கருத்து. அரசியல் ஞானத்தை சிறு வயது முதலே புகுட்டிய அவர் நான் ஒரு முழு நேர அரசியல்வாதி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. அதற்கு காரணம் அவர் உடனிருந்து பார்த்த அவரது இளைய சகோதரர் திருக்கோவிலூர் சுந்தரம் தாத்தாவின் அரசியல் வாழ்க்கை. சுந்தரம் தாத்தா மீது நடைபெற்ற தீவிரவாத தாக்குதல், முழுக்க முழுக்க அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் குடும்பத்தை சரியாக கவனிக்க முடியாமல் போனது, 50 வருடங்களுக்கு மேல் பொது வாழ்க்கையில் இருந்தும் எந்த அங்கீகாரமும் அவருக்கு கிடைக்காதது போன்றவற்றை பார்த்து நான் அரசியலில் ஈடுபடுவதை சுத்தமாக விரும்பவில்லை.
பல முறை அவர் என்னிடம் புலம்பியதுண்டு, “நீ இது போன்று உருப்படாமல் அரசியலில் இருப்பதற்கு பதில் சிவில் சர்வீஸ் தேர்வாவது எழுதி இருக்கலாம்” என. 2012-ஆம் ஆண்டு நான் சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த போது தான் நான் முதன்முதலில் அப்போது குஜராத் முதல்வராக இருந்த திரு.நரேந்திர மோடி அவர்களை நேரில் சென்று சந்திப்பதற்கு அழைப்பு வந்தது. அச்சமயம் மகிழ்ச்சியின் உச்சத்தில் தாத்தாவுக்கு அலைபேசியில் இத்தகவலை தெரிவித்த போது அவர் கிஞ்சித்தும் மகிழ்ச்சி அடையவில்லை. அரசியல் புரிதல் இருந்தால் மட்டும் போது நம் போன்ற மிடில் கிளாஸ் குடும்பத்தினருக்கு அரசியல் என்பது ஒத்து வராத துறை என்பது என் கணக்கு. கடந்த 11 ஆண்டுகளில் நான் கட்சிப்பணிக்காக ஊர் ஊராக சுற்றும் போதெல்லாம் “சுந்தரம் போல தான் உருப்படாமல் போக போற” என்ற வசவு தான் விழுந்துக்கொண்டே இருக்கும்.
அவருக்கு விருப்பம் இருக்கின்றதோ இல்லையோ சென்னையில் நான் செய்யும் பணிகள் அனைத்தும் அவருக்கு எடுத்து சொல்வேன். 2024-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போன போது சிறு மன வருத்தம் தான் அவருக்கு. குறிப்பாக இந்த வருடம் ஜனவரி மாதம் தந்தி அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு விவாத மேடையின் போது ஏற்பட்ட கலவரம் அதைத்தொடர்ந்து 3 போலி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது, அதன்பொருட்டு தலைமறைவாக கிட்டத்தட்ட 20 நாட்கள் இருந்ததால் அவரை பார்க்க, பேச முடியாமல் போனது போன்றவை அவரை வெகுவாக பாதித்து இருந்தது. இந்த 2026 சட்டசபை தேர்தலிலும் வாய்ப்பு கிடைக்காமல் போனது அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கடைசியாக நான் அவருடன் மேற்கொண்ட நீண்ட உரையாடல் ஏப்ரல் 3-ஆம் தேதில் வேட்பாளர் அறிவிப்பன்று இரவு நடைபெற்றது. “முனைவர் பட்டம் பெற்றுள்ளாய், நம் சித்தாந்தம் சார்பாக பல புத்தகங்களை எழுதியுள்ளாய், தி.மு.க அரசின் அடக்குமுறையால் 12 பொய் வழக்குகளை பெற்று சிறைவாசம், தலைமறைவு வாழ்க்கை, முழு நேர அரசியல்வாதியாக தொடர்ந்து பயணங்கள், உழைப்பு என 24 மணி நேரமும் கட்சி கட்சி என பணி செய்தும் ஏன் உனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை?” என்பது அந்த உரையாடல். “தேசிய கட்சிகளில் பல வாய்ப்புகள் நிச்சயம் வரும், நமக்கான அங்கீகரமும், வாய்ப்பும் நிச்சயமாக விரைவில் வரும் – அதை நீங்கள் பார்த்து சந்தோஷப்பட போகின்றீர்கள். இது நிச்சயமாக நடக்கும்” என்று கூறியிருந்தேன். ஆனால் காலன் அவர் உயிரை ஏப்ரல் 19-ஆம் தேதி எடுத்துச் சென்று விட்டான்.
அவர் நான் Company Secretary படிப்பை கண்டிப்பாக முடித்து விட வேண்டும் என்று வற்புறுத்தியதால் தான் இன்று எங்கள் Suryah and Dinesh & Co Practicing Company Secretary நிறுவனம் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்றைய எனது வாழ்வாதாரம் இந்த தொழிலையே நம்பி இருக்கிறது. அதை உருவாக்கி தந்தவர் தாத்தா. அவர் வாழ்ந்த கடைசி நாள் வரை எனக்காகவே வாழ்ந்தார். கடைசி காலத்தில், இறப்பில் கூட என்னை எந்த வகையிலும் தொந்தரவு செய்யாமல் நிம்மதியாக போய் சேர்ந்து விட்டார் மனுஷன்.
தமிழ் திரையுலகலில் தாய் பாசத்திற்கு மன்னன், எம் குமரன் S/o மகாலட்சுமி திரைப்படங்களை போன்றும், தந்தை பாசத்திற்கு தவமாய் தவமிருந்து, வாரணம் ஆயிரம் திரைப்படங்களை போல தாத்தா பாசத்தை, தாத்தா – பேரன் உறவு குறித்து என்றேனும் ஒரு திரைப்படம் எடுத்தால் நிச்சயமாக தாத்தாவும் நானும் வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து பல குறிப்புகள் அத்திரைப்படம் எடுப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதில் எனக்கு ஏதொரு மாற்றுக்கருத்தும் இல்லை.
இந்த உலகிலேயே தாத்தா என்ற சொல்லிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் ரங்கநாதன் தாத்தா.
You were the Best Thatha in this World, I will definitely make you proud one day. Continue blessing me please.
Good Bye My Dear Thatha…
- அன்புடன், பேரன்புமிக்க பேரன் SG சூர்யா...
உயிரினும் மேலான நமது கட்சி கொடி வானளாவப் பறக்கும் பெருமித நாள்!
பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன தினமான இன்று, இலட்சக்கணக்கான தொண்டர்களின் தியாகத்தாலும், மாசற்ற தேசபக்தியாலும் உருவான நமது புனிதமான கட்சிக் கொடியை சென்னை கமலாலயத்தில் மத்திய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான திரு.@PiyushGoyal அவர்கள் நமது பெருமைமிகு கொடியை ஏற்றி வைத்துச் சிறப்பித்தார்.
இந்த உணர்வுபூர்வமான நிகழ்வில், மாநில துணைத் தலைவர் திரு.@Chakravarthy257, மாநில பொருளாளர் திரு.@SRSekharBJP மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு, தேசப்பணியாற்றத் தொடர்ந்து உழைப்போம் எனச் சூளுரைத்தோம். தேசத்தின் நலனுக்காகத் தங்களை அர்ப்பணித்த முன்னோடிகளை நினைவுகூர்ந்து, பாரத மாதாவின் சேவையில் நம் பயணமும் உழைப்பும் தொய்வின்றித் தொடரும்!
Immensely proud to see our beloved party flag fly high at Kamalalayam on BJP Foundation Day, hoisted by Honorable Union Minister and TN Election In-Charge Thiru.Piyush Goyal.
Engaged in an intense election campaign today in the Raj Bhavan constituency for the Puducherry assembly elections, supporting @BJP4Puducherry State President Thiru.@RamalingamMla. The phenomenal response from the people makes it evident that the NDA will surely form the government again.
இன்று புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்காக, பா.ஜ.க மாநிலத் தலைவர் திரு.VP ராமலிங்கம் அவர்கள் போட்டியிடும் ராஜ் பவன் தொகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டோம். பிரதமர் திரு.@narendramodi அவர்களின் நல்லாட்சி தொடர, தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டாவது முறையாக புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் என்பது மக்களின் ஆதரவில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.
நிச்சயமாக இந்த முறையும் புதுச்சேரியில் தாமரையின் ஆட்சியே!
#NDA alliance candidate for #Velachery Assembly constituency Thiru.Ashok visited my Velachery Assembly Constituency Office to seek support for the upcoming elections. We will secure a resounding victory in this constituency and our team will do intensive field work to achieve it.
All our NDA partners will work with full coordination to secure this victory. I also handed over a comprehensive report detailing the long-standing issues of the Velachery constituency along with the practical solutions we have compiled over the years.
We are certain to receive the overwhelming support of the people in our victorious journey towards a prosperous future for Velachery
#வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி NDA கூட்டணி வெற்றி வேட்பாளர் திரு.அசோக் எனது வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி அலுவலகத்திற்கு வருகை தந்து ஆதரவு கோரினார். நிச்சயம் நம் NDA கூட்டணி வேட்பாளர் இத்தொகுதியை வெல்வார், அதற்காக நாங்கள் தீவிர களப்பணியாற்றுவோம்.
எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாபெரும் வெற்றியை உறுதி செய்வோம். வேளச்சேரி தொகுதியின் நீண்டகாலப் பிரச்சனைகள் மற்றும் கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் தொகுத்து வைத்துள்ள அதற்கான தீர்வுகள் குறித்த விரிவான அறிக்கையை அவரிடம் வழங்கினேன்.
வேளச்சேரியின் வளமான எதிர்காலத்தை நோக்கி நாம் முன்னெடுக்கும் இந்த வெற்றிப் பயணத்திற்கு மக்களின் பேராதரவு நிச்சயம் கிடைக்கும்!
#NDA4TN
Glimpses of the productive interaction with #Velachery Assembly Constituency NDA candidate Thiru.Ashok at my #Velachery Assembly Constituency office.
Handed over a comprehensive report detailing the constituency's long-standing issues and our practical solutions. Working together with full coordination to secure a resounding victory for a prosperous Velachery!
#வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி NDA கூட்டணி வேட்பாளர் திரு.அசோக் அவர்களுடனான சந்திப்பின் சில துளிகள்.
தொகுதியின் நீண்டகாலப் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த விரிவான அறிக்கையை வழங்கி ஆலோசனை நடத்தினோம். வேளச்சேரியின் வளமான எதிர்காலத்திற்காக ஒருங்கிணைந்து செயல்பட்டு மாபெரும் வெற்றியை உறுதி செய்வோம்!
உலகின் மிகப்பெரிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் திரு.@NitinNabin அவர்களைச் சந்தித்ததில் எல்லையில்லா மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன்.
என்னை நேரில் பார்த்த மறுகணமே முகம் மலர அடையாளம் கண்டுகொண்டு, நான் செய்து வரும் அமைப்புப் பணிகளையும் கட்சியின் வளர்ச்சிக்கான எனது முன்னெடுப்புகளையும் அவர் மனதாரப் பாராட்டினார்.
அதுமட்டுமின்றி, இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க முடியாமல் போனது குறித்து மிகவும் அக்கறையுடனும், ஒரு மூத்த சகோதரனின் பரிவுடனும் பேசி என்னை ஆசுவாசப்படுத்தினார்.
ஒரு மாபெரும் தேசியத் தலைவர், என்னை பெயர் சொல்லி அழைத்து, நலம் விசாரித்து, எனது உழைப்பை அங்கீகரித்து அக்கறையோடு ஆலோசனைகள் வழங்கியது எனக்குக் கிடைத்த மாபெரும் வாழ்நாள் பாக்கியம்.
தொண்டர்களின் உழைப்பிற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அரவணைக்கும் இந்த உன்னதக் கலாச்சாரம் நமது பா.ஜ.க-வில் மட்டுமே சாத்தியம். பதவிகளைத் தாண்டி, ஒரு தொண்டனின் அர்ப்பணிப்புக்குக் கிடைக்கும் இத்தகைய அன்பான வார்த்தைகளே நம்மைப் போன்ற எண்ணற்ற தொண்டர்களுக்கு மிகப்பெரிய உந்துசக்தி.
தேசியத் தலைமை என் மீது வைத்துள்ள இந்த நம்பிக்கையும் அங்கீகாரமும் எனக்குப் புதிய ரத்தத்தைப் பாய்ச்சியுள்ளது.
இனி வரும் காலங்களில் கட்சிப் பணியை என் உயிரினும் மேலாக நினைத்து, தேசத்திற்காக இன்னும் பலமடங்கு திறம்படச் செய்வேன்.
Delighted to meet BJP National President Thiru.Nitin Nabin. Deeply touched by his instant recognition of my work and his brotherly words.
Such genuine personal care from our top leadership is what makes BJP truly unique.
2001 ➡️ 2026.
#Mylapore is ready for a change!
After 25 long years, the Lotus is set to bloom again in this historic soil.🪷
Our @BJP4Tamilnadu cadres are on the ground, ready to make it happen!
Suryah is a great ground level organizer who is able to connect with all sections of society in Chennai very well and is popular amongst traditional Chennai and UMC ADMK base. He should be natural choice for Mylapore candidacy, my constituency and as Ive been telling others offline, would gladly vote for him.
Hopefully BJP gives him the ticket and best chance for them to re-enter Chennai. @NainarBJP
Something special about you suryah. Velachery wasn't there after all your hardwork. You would have got dejected. But keeping that aside and continuing your social service as if nothing happened. BJP TN is blessed to have you as a karyakarta and a person who connects to people.
Had a pleasant discussion regarding the #Velachery assembly constituency and election works with Tmt. Vijayalakshmi, Mandal Vice President of Velachery West. Enjoyed a wonderful lunch at her residence during this detailed consultation.
The #NDA will undoubtedly capture this constituency in the upcoming 2026 elections!
#வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி குறித்து, வேளச்சேரி மேற்கு மண்டல் துணைத் தலைவர் திருமதி.விஜயலட்சுமி மற்றும் மண்டல் நிர்வாகிகளுடன் அவர்களுடன் அவரது இல்லத்தில் இனிமையான கலந்துரையாடல் அமைந்தது.
அவரது இல்லத்தில் அருமையான மதிய உணவுடன் இது தொடர்பாக விரிவாகக் கலந்தாலோசித்தோம். வரும் 2026 தேர்தலில் இத்தொகுதியை தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) நிச்சயம் கைப்பற்றும்!
#NDAforTN