கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத் தேர்வு முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்திட வேண்டும்!
தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!
-------------------------------------------
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு 'ஆசிரியர் தேர்வு வாரியம்,' கடந்த 2025ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 27ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தியது. அத்தேர்வின் முடிவுகள் 2026 ஜூன் 25 ஆம் தேதி வெளியானது. இம்முடிவுகள், தேர்வு எழுதியவர்களில் ஏராளமானவர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளன.
இதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக்க் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே,
இத்தேர்வு முடிவுகளை அரசு ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்துள்ளன என்பதற்கு தேர்வர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களே சான்றாக உள்ளன. எடுத்துக்காட்டாக,
தமிழ் -முதல் தாளில் ஒருவர்
150-க்கு 111 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார். ஆனால், அதே நபர் தமிழ் -இரண்டாம் தாளில் 50க்கு பூஜ்ஜியம் மட்டுமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொருவர் தமிழ்-முதல் தாளில் 150-க்கு 54 மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில், இரண்டாம் தாளில் 50-க்கு 49 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இது போல பலருக்கு நடந்துள்ளது. பூஜ்யம் மட்டுமே வாங்கும் அளவுக்கா தேர்வு எழுதக் கூடியவர்களின் தகுதி இருக்கும்? முனைவர் பட்டம் பெற்றவர்களா பூஜ்யம் பெறும் நிலையில் தேர்வு எழுதி இருப்பார்கள்? இது நம்பக்கூடிய ஒன்றாக இல்லை. எனவே, தேர்வுத் தாள்களை மதிப்பீடு செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளன என்கிற வலுவான அய்யத்தை உருவாக்கியுள்ளது.
இது உள்நோக்கமின்றி நடந்த குளறுபடியாகத் தோன்றவில்லை; மாறாக, திட்டமிட்டு செய்யப்பட்ட முறைகேடாகவே தோன்றுகிறது.
இத்தேர்வுகள் நியாயமாக நடத்தப்படும் என்று நம்பிக்கை வைத்து பல்லாயிரக்கணக்கானோர் எழுதியுள்ளனர். அவர்களின் நம்பிக்கைகள் சிதைக்கப்பட்டுள்ளன.
எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்திட அரசு ஆணையிட வேண்டும். விசாரணை முடியும் வரை பணிநியமன நடைமுறைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையப் பொறுப்பாளர் மகாலிங்கம் ( எ) தமிழ்மாறன் அவர்களின் தாயார் லட்சுமி அவர்கள் காலமானார். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன் அவரது திருஉடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினேன்!
மதுரை மாவட்டம் மேலவளவில் 1997 ஆம் ஆண்டு அரசியல் உரிமைகளுக்காக உயிர்நீத்த போராளிகள் மாவீரன் மேலவளவு முருகேசன், செல்லத்துரை, முருகேசன் தம்பி க.ராசா, சேவுகமூர்த்தி, கொ.மூக்கன், மூ.பூபதி, ஆ.சவுந்தரபாண்டி ஆகிய அரசியல் உரிமை மீட்புப் போராளிகளின் 29 ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று மேலவளவில் விசிக சார்பில் அமைக்கப்பட்டுள்ள விடுதலைக் களத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினேன்!

பின்னர் அங்கே நடைபெற்ற வீரவணக்க நினைவேந்தல் கூட்டத்தில் உரையாற்றினேன்!
மதுரை மாவட்டம் மேலவளவில் 1997 ஆம் ஆண்டு அரசியல் உரிமைகளுக்காக உயிர்நீத்த போராளிகள் மாவீரன் மேலவளவு முருகேசன், செல்லத்துரை, முருகேசன் தம்பி க.ராசா, சேவுகமூர்த்தி, கொ.மூக்கன், மூ.பூபதி, ஆ.சவுந்தரபாண்டி ஆகிய அரசியல் உரிமை மீட்புப் போராளிகளின் 29 ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று மேலவளவில் விசிக சார்பில் அமைக்கப்பட்டுள்ள விடுதலைக் களத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினேன்!
மேலூர் தொகுதியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாவட்ட துணைச் செயலாளர் தம்பி வெள்ளரிப்பட்டி வெள்ளைகல்லு அவர்கள் அண்மையில் காலமானார். இன்று அவரின் படத்திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினேன்.
ஒரு கட்சியோட தலைவர் மாதிரி எதுவும் பேசுறார் பாருங்க
தலித் மக்களை குறிப்பிட்ட வழியாக வரகூடாது கோவில்களில் வழிபடகூடாது என்று பொதுவெளியில் பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் இவரை எப்படி காவல்துறை @tnpoliceoffl அனுமதிக்கிறது…?
என்ன திருமா பொளக்குறார் 🤣
திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற நாங்கள் தான் தவெக வை ஆட்சியில் அமர வைத்திருக்கிறோம் 🔥🔥
ஏப்பா நீ சட்டசபைல அப்படி பண்ணி இருக்க கூடாது சீக்கிரம் பீல் பண்ணுவே..
புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு இந்து மத துண்டு தலையில் கட்டி அவமதிப்பு செய்துள்ளார்கள் சாதிய வாதிகள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@PDKpolice@pdkt_collector