@sethubala16@gkarthikeyan58@Lakshmivva1@Gandeeban6 நன்றி சேது தம்பி.
எழுதிவைத்து மூன்றாண்டுகள் ஆயின.
அதை நீங்கள் படித்து இங்கு பகிர்ந்து ஈராண்டுகள் கடந்தன.
ஐயா நாறும்பூ நாதன் படித்துப் பாராட்டி ஓராண்டும் முடிந்து விட்டது.
ஆயினும் இன்று புத்தம் புதிதாக உங்கள் கைகளில் புத்தகமாக!
எளிய மனிதர்களின் எளிய வாழ்வியல் எழுத்துக்களாக!
@banup_0803@gkarthikeyan58 நன்றி மா. மிக்க மகிழ்ச்சி.
என் பெற்றோர் உறவுகள்
பேசிய இம்மொழி வழக்கு, சில பழக்க வழக்கங்கள் என் பிள்ளைகளுக்குத் தெரியாது. அவற்றை இப் புத்தகம் வழி மீண்டும் அறிமுகப்படுத்தியதில் எனக்கு மகிழ்வே.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
@Lakshmivva1 படித்தேன்..சுவைத்தேன்.. குறிஞ்சித் தேன்!
முதலில் கபிலர் பாரி நட்பை விவரித்து, பூ கொய்வதுபோல் மனம் கொய்து விட்டீர்கள். (பேராசிரியர் கூற்று மிகச் சரி) பிறகென்ன ? கதை படிப்பது போல் படித்தாகிவிட்டது. கனி பிழிந்து சாறு தருவதுபோல் எளிய நடையில் மென்மேலும் படிக்கத் தருக!
@Lakshmivva1 நன்றி மா. முழுவதும் படித்து விட்டுச் சொல்லுங்கள். இது எங்கள் உறவுகள் பேசும் வட்டார மொழி. முதலில் "வானவில் வண்ணங்கள்" என்று பெயரிட்டிருந்தேன். சந்தியா நடராஜன் ஐயாவின் கருத்துப்படி மம்மது என்று மாற்றிவிட்டேன்.
@Gandeeban6 எழுத்தாளர் நாறும்பூ நாதன் அவர்கள் இன்று காலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு கலங்கினேன்.
சித்திக் ஐயாவின் அயற்சொல் அகரமுதலி புத்தக வெளியீட்டின்போது சிரிக்கச் சிரிக்கப் பேசியது நினைவிலாடுகிறது.
இறைவனின் நிழலில் அவர் அமைதி பெறட்டும்.