பெங்களூர்ல வாழ்ற ஒரு millennial family மாசம் எவ்ளோ இன்வஸ்ட் பண்ணலாம்ங்கற clear வீடியோ இது. பாத்து அப்புடியே ஃபாலோ பண்ணினாலே 30வருசத்துல ஒரு அட்டகாசமான கார்பஸ் கைல நிக்கும்.
Bookmark பண்ணி வச்சுக்கோங்க!
1996-97 அருப்புக்கோட்டையில், விஜயகாந்த் ரசிகர் மன்ற நகரப் பொறுப்பில் இருந்தவர் ஒரு இஸ்லாமியர். அவரது திருமணம் அருப்புக்கோட்டை அப்போதைய புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே இருந்த ஒரு பெரிய இடத்தில் நடைபெற்றது.
முதல் நாளே மூட்டை மூட்டையாக பெல்லாரி வெங்காயங்கள் வந்து மலை போல குவிக்கப்பட்டு இருந்தன. இரவில் இருந்தே கிட்டத்தட்ட 40 பேர் வெங்காயம் உரிக்க, வெள்ளைப் பூண்டு, இஞ்சி உரிக்க,உருளைக்கிழங்கு அரிய என்று வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
உணவிற்கான பந்தல் மட்டுமே சில ஏக்கர்களில் போடப்பட்டிருந்தது. காரணம் திருமணத்தை நடத்தி வைக்க வரப்போகும் விஜயகாந்த் அவர்கள் சொல்லியிருந்தது தான்.
அவர் பத்திரிகை கொடுக்கும் பொழுது விஜயகாந்த் சொன்னது.. நீ எவ்வளவு பேருக்கு சாப்பாடு தயார் செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ அந்த அளவிற்கு மட்டும் செலவு ஏற்றுக் கொள். சில வருடங்கள் கழித்து இந்தப் பக்கம் வருகிறேன். இந்த மாவட்டம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் எப்படியும் வருவார்கள். அவர்கள் வெறும் வயிற்றுடன் திரும்பிப் போகக்கூடாது. மற்ற செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி இருந்தார்.
அதனால் அன்று ஒரு மகா விருந்து தயாராகிக் கொண்டிருந்தது. விஜயகாந்த் வந்தார் திருமணத்தை நடத்தினார். அவருக்கு அடுத்து செல்ல வேண்டிய வேலைகள் இருந்தன. சாப்பிட்டு முடித்துவிட்டு, ரசிகர்களிடம் கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, கிளம்பினார். தன்னுடன் வந்தவர்களில் இருவரை அங்கே நிறுத்திவிட்டார். கடைசி வரைக்கும் பந்தி பார்த்துவிட்டு தான் நீங்கள் என்னுடன் வந்து சேர வேண்டும் வேறு ஏதும் செலவுகள் ஏற்பட்டாலும் கொடுத்துவிட்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டு போனார்.
நேரடியாகவே, சில முறை விஜயகாந்தின் மக்கள் மீதான, தன் ரசிகர்கள் மீதான பாசத்தை பார்த்திருக்கிறேன். தற்போது இன்ஸ்டாரீல்களில் அவரால் பலனடைந்தவர்கள் சொல்வதைக் கேட்கும் பொழுதெல்லாம், அவர் மீதான மரியாதை உயர்ந்து கொண்டே போகிறது.
தமிழ்நாட்டு மக்களால் என்றும் நினைக்கப்படுவீர்கள் கேப்டன்.
ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால். உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்..!
1.முதன் முதலில் computerized EC 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும் 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டு பார்க்க வேண்டும்.
Zero value நிலம் EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூமிதான நிலம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம் எனவே zero value நிலம் வாங்காதீர்.
2.Double Document நிலம்.
Power of attorney(POA) double document
அதாவது power யில் வரும் நிலத்தை வாங்காதீர் இது double டாக்குமெண்ட் க்கு இட்டு செல்லும்.
POA நிலதை வாங்கியே தீர வேண்டும் என்றால் Power கொடுத்தவர் உயிரோட சுய நினைவோட இருக்கிறாரா என்று கண்டுபிடியுங்கள் POA agreement நகல் வாங்கி அதில் குறிப்பிடப்படுள்ள அட்ரஸ் இல் power கொடுத்தவரை நேரில் சந்தித்து விசாரியுங்கள்.
அடுத்து அந்த power பத்திரம் செல்ல கூடியாதா என்று கேளுங்கள் அதாவது power பத்திரம் எழுதி கொடுத்தவர் அதை ரத்து செய்து விட்டாரா என்றும் கேளுங்கள் முகவரும் (agent )விற்கலாம், principal (power எழுதி கொடுத்தவர்) ளும் விற்கலாம் விற்றால் அது double டாக்குமெண்ட்.
3.உயில் பத்திர நில double document.
உயில் மூலம் உரிமை மாறி இருக்கா
உயில் பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வரும் நிலமெனில்.
எது இறுதி/கடைசி உயில் என்று கவனமாக பார்க்க வேண்டும் பதிவு செய்யபட்ட உயில் மூலம் விற்பனை நடந்தால் அது ஒரு நில விற்பனை பத்திரம்.
பதிவு செய்யப்பட்ட உயிலுக்கு பிறகு ஏதாவது பதிவு செய்யாத உயில் இருக்கான்னு நிலம் விற்பவரின் உறவினர்களை கேட்க வேண்டும் இந்த பதிவு செய்யப்படாத உயில் மூலம் விற்பனை செய்யப்பட்டு இருந்தால் அது double டாக்குமெண்ட்.
4.Settlement பத்திர நிலம் double document .
Settlement பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வந்தால் செட்டில்மெண்ட் ரத்து செய்ய பட்டு இருக்கிறதா என்று கவனமாக பார்க்கவும் 1990 முதல் 2015 வரை ரெஜிஸ்டர் ஆபீசில் செட்டில்மெண்ட் ரத்து செய்து நிலத்தில் மேலும் சொத்தை சிக்கல் ஆக்கிவிட்டர்கள்.
செட்டில்மெண்ட் பத்திரத்தை civil கோர்ட் மூலியமாக தான் ரத்து பண்ண முடியும் பத்திர ஆபீசில் செய்யும் ரத்து பத்திரம் சொல்லாது.
EC யில் SRO=Sub register Office)மூலம் ரத்து ஆகி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர்.
உயில் பத்திரம் தாய் பத்திரம் ஆக இருந்தால் அந்த தாய் பத்திர உயில் மூலம் கிரயம் நடைபெற்று இருந்தால் அந்த கிரய பத்திரத்துக்கு லிங்க் கவனமாக இறங்கியதா என்று பார்க்க வேண்டும்.
5. Update ஆகாத பட்டா மூலம் கிரயம்-double document.
1987-UDR, 1995-நத்தம் நிலவரி திட்டம் முன்பு நிலம் பத்திரத்தின் மூலம் வாங்கியவர் அதை revenue record எனப்படும் பட்டாவில் தான் தான் தற்போதைய உரிமையாளர் அதாவது current owner என்பதை update செய்யாமல் இருந்தால் 1987முந்தைய owner & அவரின் வாரிசுகள் பழைய பட்டா மூலம் கிரயம் செய்தால்.
அடுத்து நிலம் வாங்கி பட்டாவில் update செய்யாமல் விட்டுவிட்ட அசல் (எ ) original owner றோ இல்லை அவரின் வாரிசுகள் விற்று கிரய பத்திரம் ஆகி இருந்தால் அதுவும் double document.
6.Layout frame, வடிவம், உருவாமாற்றம் மாற்றிய நிலமா?
அடுத்து அந்த நிலம் நத்தம் நிலமா, layout பிளாட் ஆஹ் என்று பாருங்கள்.
DTCP approved or CMDA approved என்றால் DTCP & CMDA website யில் approval நம்பர் போட்டு approval ஒரிஜினல் தானா என்று உறுதி படுத்தி கொள்ளலாம். Website லே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நேரில் LPA(local planning authority என்னும் DTCP அல்லது CMDA அலுவலகத்திற்கு சென்று நிலத்தின் approval சரிதானா என்று கேளுங்கள்.
அது பழைய approved layout ஐ திருட்டுதனமாக redraw செய்து விற்பனைக்கு வந்திருக்கும் layout ஆஹ் என்றும் விசாரியுங்கள்.
Layout ப்ளூ பிரிண்ட் இருந்தால் கொண்டு சென்று park, ஸ்கூல் க்கு இடம் விட்டுட்டு layout போட்டு இருக்கிறார்களா என்றும் கேளுங்கள் நிறைய land ப்ரோமோட்டார்ஸ் park, ஸ்கூல் இடத்தை காட்டி approval வாங்கி விட்டு layout வரை படத்தை மறுபடியும் திருட்டுதனமாக வரைந்து(எ ) redraw செய்து park, ஸ்கூல் இடத்திலும் மனை போட்டு விடுவார்கள்.
எனவே ஜாக்கிரதை.
பஞ்சாயத்து approved இடங்கள் வாங்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் வாங்கிய பின்பு நீங்கள் தான் நிலத்தை frame work scheme இன் கீழ் வரையறை செய்ய அலைய வேண்டி இருக்கும்.
நத்தம் நிலம் என்றால் VAO வை பார்க்க வேண்டும் உங்கள் சர்வே நம்பர் இன் UDR காலத்து 1987 ஆம் ஆண்டின் சிட்டா அடங்கலை, FMB நேரில் சென்று கேளுங்கள்.
இனாம் கிராமம் ஆக இருந்து இனாம் ஒழிப்பின் மூலம் நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் பட்டா வழங்கபட்ட நிலமா என்றும் பார்க்க வேண்டும். அந்த பட்டா UDR காலத்து சிட்டா அடங்கல் ரெஜிஸ்டர் இல் ஏறி இருக்கா னும் பார்க்கணும்.
VAO நேரில் கேட்டும் கொடுக்கவில்லை என்றால் RTI மனுவில் கேளுங்கள் RTI யில் கட்டாயம் கொடுக்க வேண்டும்.
4. EB, சொத்து வரி விற்பவர் பெயரில் இருக்கா என்று பாருங்கள்.இல்லை என்றால் மாற்றி, பின்னர் விற்க சொல்லுங்கள் .
5.பட்டா விற்பவர் பெயரில் இருக்கானு பார்க்கணும்.
கூட்டு பட்டா நிலம் எனில், நிலம் பங்குதாரர்கள்குள் யாருக்கு எவ்வளவு இடம் & எந்த இடம் என்று பிரித்திருக்க வேண்டும் இல்லை என்றால் வாங்கும் உங்களுக்கு சிக்கல். விற்பவருக்கு உரிமை இல்லாத நிலத்தை விற்க வாய்ப்பு இருக்கு
பட்டா வாங்குறது பெரிய process, நிறைய அலைச்சல் & கஷ்டம்.
அதனாலே விற்பவர் பெயரில் பட்டாவை மாற்ற சொல்லுங்கள் அதன் பின்பு நிலத்தை வாங்குங்கள்.
6. நிலத்தின் வகைப்பாடு கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
நஞ்சை, புஞ்சை, நத்தம், நத்தம் புறம்போக்கு, மேய்ச்சல், வாய்க்கால், ஓடை புறம்போக்க்கா, நெல் போராடிக்கும் இடமா, park, விளையாட்டு திடல்,கோயில் க்கு ஒதுக்கப்பட்ட நிலமா,பொதுவில் மாடு கட்ட விடப்பட்ட இடமா, நிலவியல் பாதை(அரசு நிலம் ), நிலவியல் ஓடை etc.என்று பார்க்கிவேண்டும்.
7. பட்டாவின் பயனாளி யார்?.
முன்னோரு காலத்தில் அது ஜமீன் நிலமா அல்லது இனாம் நிலமா அல்லது ரயட்டுவாரி நிலமா ஆஹ் என்று பார்க்க வேண்டும்
மேஜர் இனாம்
ராயட்டு வாரி
1802 காலத்தின் permanent settlement record காலத்தின் ஜாகிர் இனாம் , ஜமீன் நிலமாக இருந்து ராயட்டுவாரி யாக மாற்றம் பெற்றதா என்றும் பார்க்க வேண்டும்.
வெள்ளைக்காரன் காலத்துல இனாம் ஒழிப்பில் இருந்து ஜமீன் நிலமாக மாறியதா என்றும் ஆராய வேண்டும்.
இதற்கு VAO, தாலுகா & கலெக்டர் அலுவலகத்தில் record section இல் இருக்கும் B-record, OSR, RSR, SLR இன் நகல் தேவை உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் குறிப்பிட்டு ஒரு மனு கொடுத்து, 50 ரூபாய் கட்டி வாங்கி கொள்ளலாம்.
------------
Minor இனாம்
சுதந்திரத்திற்கு முன் பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்த DC land (எ) (Depressed Class) நிலமா? என்று பார்க்க வேண்டும்
தொழில் முறை இனாம் நிலம்
----
தச்சர், கருமான், நாவிதர், காவக்காரன்,கர்ணம்,தலையாரி,
வெட்டியான், சக்கிலியர்,புதிரை வண்ணார் இனாம் நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.
வெள்ளைக்காரன் காலத்தில் மணியமாக அங்கீகாரிக்க பட்ட ஊழிய மானியங்களான பூசாரி, தேவதாசி,பூ கட்டும் மானியம் நிலமா? என்று பார்க்க வேண்டும்.
சோஸ்திராம் மானியம் ஒழிக்கப்பட்ட நிலமா?என்றும் பார்க்க வேண்டும்.
ஹாஜி இனாம் ஒழிக்கப்பட்ட நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.
------------
DC அல்லாத பிற இனதவர்க்கு கொடுக்கப்பட்ட குறவர், கள்ளர்(குற்றபரம்பரை)
settlement etc யா என்று பார்க்க வேண்டும்.
மேற்சொன்ன வகை பாடு அனைத்தும் வெள்ளைக்காரன் காலத்தாவை.
---------
சுதந்திரத்திற்கு பின் கொடுக்கபட்ட Assigment land.
Assignment land (எ ) ஒப்படை பட்டா நிலங்கள் எனில் அதற்கு உண்டான (HSD பட்டா , D-பட்டா, நமுனா பட்டா, TKT பட்டா,F-பட்டா, B-memo பட்டா, அனுபந்த பட்டா, Assignment land என்னும் ஒப்படை நிலம் ) யா என்று பார்க்க வேண்டும்.
SC & ST பிரிவினற்கு கொடுத்த AD assignment Land (Adi Dravidar )பட்டா உள்ள நிலமா என்றும் பார்க்க வேண்டும்.
F-பட்டா.
இது நிலசீர்திருத்த துறையால் வழங்க பட்டது.நிலசீர்திருத்த துறை வேறு revenue டிபார்ட்மென்ட் வேறு.
ஜமீன் ஒழிப்பில் இருந்த நிலங்களை பயனாளிக்கு கொடுத்தது என்பதை உறுதி படுத்தும் ஆவணமே F-பட்டா.
1970-B-Memo land =பீமா பட்டா.
B memo பட்டா நிலம் விற்பனை க்கு வந்தால் வாங்காதீர். ஏன் என்றால் B-memo என்பது நில உரிமை பட்டா அல்ல. அது நீ ஒரு அரசின் புறம்போக்கு நிலத்தின் ஆக்கிரமிப்பு செய்தவன் என்ற govt நோட்டீஸ் மட்டுமே. B-memo நிலத்தில் குடி இருப்பவர்களை எந்நேரமும் அரசு காலி செய்ய சொல்லும்.
Assignment பட்டாவில் உள்ள கண்டிஷன் பார்க்க வேண்டும். கண்டிஷன் பார்க்காமல் வாங்காதீர்.
ஒப்படை நிலங்களை அரசாங்கமே திருப்பி எடுத்து கொண்டு விட்டாதா என்றும் பார்க்க வேண்டும்.
--------
1956-பூமி தான நிலம்
Manual EC
கட்டாயம் 1950-1965 வரை manual EC போட்டு பார்க்க வேண்டும்.
manual EC யில் மட்டும் தான் பூமி தான போர்டுக்கு நிலங்களை பெரும் நில சுவாந்தார்கள் தான பத்திரம் (கிரயபத்திரம்) கொடுத்த அந்த entry காட்டபட்டு இருக்கும்.
பூமி தான போர்டு பெயரில் பட்டா, சிட்டா ஆகியவை மாறிவிட்டு இருந்தால் VAO அலுவலகத்தின் A-Record இல் காட்டும்.
ஏர் உழவன் பட்டா=பூமி தான நிலத்திற்கு ஆன குத்தகை பட்டா.
Manual EC யில் கிடைக்காத பூமி தான நிலங்களை பற்றிய தகவல்கள் revenue record யில் தான் கண்டுபிடிக்க முடியும்.
பூமி தான நிலம் என்றால் மெட்ராஸ் சைதாப்பேட்டை யில் உள்ள பனகல் மாளிகையில் உள்ள பூமி தான board க்கு சென்று வாங்க விரும்பும் நிலத்தின் சர்வே நம்பர் பூமி தான வரையறைக்குள் வருகிறதா என்று பார்க்க வேண்டும். Master ரெஜிஸ்டர் பார்க்க வேண்டும்.
பூமி தான நிலம் வாங்காதீர்.
பூமி தான நிலத்தை பயனாளி விற்கு அதிகாரம் இல்லை. பயனாளிக்கு குத்தகை உரிமை மட்டுமே உண்டு.
எனவே அது பூமி தான நிலம் என்று தெரியவந்தால் வாங்காதீர்.
-----------
Zero value நிலம்
-EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூதிதானம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம்.
-----------
கோயில் நிலம் -HR&CE நிலமா
வாங்க விரும்பும் நிலம் கோயில் நிலம் ஆஹ் என்று பார்க்க வேண்டும்.
கோயில் நிலம் என்றால் பயந்து விட கூடாது அது இறையிலி(100% கோயிலுக்கு சொந்தம்), தேவதானம், தர்மதாயம் ஆக இருக்க கூடாது அவ்வளவே.
கோயில் நிலத்தில் கட்டளை என்று ஒரு பிரிவு உண்டு இதையும் வாங்க கூடாது. கட்டளை எப்படி உடைக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் மட்டுமே வாங்கலாம்.
கோயில் மணியமாக இருந்து ரயத்துவாரி நிலமாக 1963 இல் மாறி இருந்தால் அது கண்டிஷன் பட்டாவா என்று பார்க்கனும்.
இந்த நிலம் வாங்கும் போது கவனம் தேவை. ஏன்னா HR&CE நிறைய நிலங்களை திருப்பி எடுத்து கொண்டு உள்ளது.
-----------
ஜமீன் & மானியம் முற்றாக ஒழித்தது 1950 to 1960 களில்.
land reforms act.
இதற்கு நில சீர்திருத்தம் என்று பெயர். ஜமீன் இடம் இருந்து அரசு எடுத்த உபரி நிலம் கிராம கணக்கில் B register லே இருந்து A-register க்கு மாறும் போது உபரி நிலம் , அனாதீனம், உரிமையாளர்கள் பெயர்கள் மாறி உள்ளது போன்ற சிக்கல் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.
-----
1963 minor இனாம் ஒழிப்பு சட்டம்
இனாம் ஒழிப்பு to ரயட்டுவாரி பட்டா. உழுபவனுக்கே நிலம் சொந்தம் scheme.
RSLR இல் "கிராமத்தார்" என்று பட்டா தாக்கல் செய்யப்பட்டு 1963 minor இனாம் ஒழிப்பு சட்டம்
மூலம் ரயட்டுவரி பட்டாவாக மாறி பின்பு 1987 UDR இல் மீண்டும் RSLR இல் உள்ளது போன்று "கிராமத்தார்" என்று மாறி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர்.
அது தனி நபர் பட்டா என்று மாறி இருக்கா என்றும் பார்க்க வேண்டும்.
-------
1963 கோவில் நிலம் (இனாம் ஒழிப்பு சட்டம், ஒழிப்பு மற்றும் ரயட்டுவாரியாக மாற்றுதல்) சட்டம்
தேவதாசி மானியம் to நிபந்தனை பட்டாவாக உள்ள நிலத்தை பயன்படுத்தி கொள்ளலாமே தவிர சொந்தம் கொண்டாட முடியாது.
ஊழிய மானிய நிலங்கள் கண்டிஷன் பட்டா வா இல்லை normal ராயட்டுவாரி பட்டா நிலமா? ன்னு பார்க்கணும்.
இந்த நிலம் வாங்கும் போது மிகுந்த கவனம் தேவை. தமிழ் நாட்டின் நில நிர்வாக பற்றிய அறிவு உள்ள ஒரு சிவில் லாயர் தான் உங்களை காப்பாற்ற முடியும்
--------
1961(center)to 1972(TN)Land ceiling act நிலம்
நில உச்சவரம்பு வரையறைகுள் மாட்டிக்கொண்ட நிலமா என்று பார்க்க வேண்டும்.
UDR லே celing இடம் என்று இருக்கானு பார்க்கணும்.
Section 37B இல் வந்த நிலாமா என்று பார்க்க வேண்டும்.
--------
1976 களின் Urban land seiling act
ULC ஆக்ட் இல் மாட்டி கொண்ட ULC நிலமா என்று பார்க்க வேண்டும். ULT என்று note இருந்தால் மெட்ராஸ் பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் உள்ள உச்சவரம்பு ஆபீசில் சர்வே நம்பர் கொடுத்து விசாரிக்கணும். Innocent buyer என்று சொல்லி land கமிசினர் க்கு மனு செய்யனும்.
ULC நிலம் தவறுதலாக நீங்கள் வாங்கினாலும் நிலத்திற்கு revenue department(டாசில்தார், VAO )பட்டா மாற்றம் செய்து கொடுக்க மாட்டார்கள். எனவே ஜாக்கிரதை.
8. கோர்ட் attached property வாங்காதீர்.
9. டிவோர்சஸ் கேஸ் உள்ளவரிடம் நிலம் வாங்காதீர்.
அந்த நிலத்தை அவர் மனைவி maintenance (ஜீவனாம்சம்) வேண்டி மனு செய்து இருந்தால் நீங்கள் போட்ட பணம் காலி.
எனவே விற்பவர் இடம் இந்த விவரத்தை கேளுங்கள். ஒரிஜினல் பத்திரதை காட்டச்சொல்லி பத்திரத்தின் பின் புறம் கோர்ட் சீல் இருக்கா என்று பாருங்கள்.
---------------
10.அடுத்த step, அந்த நிலத்தின் சர்வே என்னை கொண்டுபோய் நிலம் அமைந்துள்ள கிராம VAO கிட்ட அந்த நிலத்தோட FMB, பட்டா, சிட்டா, A ரெகார்ட் வாங்குங்கள்.
11.அடுத்து VAO கிட்ட govt அந்த இடத்தில் ரோடு போட , டேங்க் அமைக்க .i e., பிற்காலத்தில் govt project க்கு எடுத்து கொள்ளுமான்னு கேளுங்கள்?.பாலுமாகேந்திரவின் "வீடு " படத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
அவர்(VAO) டாக்குமெண்ட் தர வில்லை என்றால்,
12. மேற்கூறிய டாக்குமெண்ட் அனைத்தின் அட்டெஸ்ட் copy வேண்டும் என்று VAO office மற்றும் டாசில்தார் ஆபீஸில் RPD போஸ்ட் அல்லது நேரடி மனுவோ அல்லது RTI யில் கேட்டு டாக்குமெண்ட் நகல் வாங்கி கொள்ளுங்கள்.(கண்டிப்பாக attest copy வேண்டும் )
13.அடுத்து நிலத்தின் 1858 காலத்து OSR, RSR A-Record எடுக்க முடிந்தால் இன்னும் நல்லது.
1908,1936 ஆண்டின் SLR, RSLR A- Record, FMB ஒரு 80 to 100 வருடத்திற்கு வேண்டும்.
1987 ஆம் ஆண்டின் FMB, A-record, சிட்டா அடங்கல் கட்டாயம் எடுக்கணும்.
இதன் நகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேளுங்கள்.இது ஏன் கேட்க சொல்றோம் என்றால்
1.அது வெள்ளைக்காரன் காலத்தில் DC land @பஞ்சமி நிலம் ஆக இருந்தால் போட்ட பணம் எல்லாம் காலி. சுப்ரீம் கோர்ட் போனாலும் கேஸ் நிக்காது.
2. அடுத்து அது ஜமீன் ஒழிப்பு & கோயில் மானிய ஒழிப்பில் அரசால் எடுக்கப்பட்டு ஆனால் revenue record இல் அரசு நிலம் என்று பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்கும் நிலமா என்று பார்க்க வேண்டும்.
ஏன் என்றால் இவர்கள் revenue record இல் பதிவேற்றம் செய்யாத ஓட்டையை பயன்படுத்தி UDR சர்வே செய்ய வந்த தனியார் கம்பெனி அதிகாரிகளை கரெக்ட் செய்து UDR இல் திரும்பவும் ஜமீன் பெயரே ரயத்துவாரி யாக மாற்றி கொண்டார்கள்.
14.அடுத்து ரெஜிஸ்டர் ஆபிசில் அந்த நிலத்தின் மீது யாராவது பத்திரம் பண்ண கூடாதுனு தடை மனு கொடுத்து இருக்காங்களா கேட்டு confirm(உறுதி )பண்ணிக்கணும்.
15..அடுத்து அந்த பத்திரம் முழுமையானா ஆவணமா அதாவது பத்திரம் முழுமையான ஸ்டாம்ப் டூட்டி கட்டி இருக்கிறதா என்று confirm பண்ணுங்க.
16.அடுத்து நிலம் இருக்கும் இடத்தை குறைந்தது 10தடவை பாருங்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் நிலத்தின் மீது ஏதாவது பிரச்சனை, வில்லங்கம், ஆக்கிரமிப்பு இருக்கிறதா என்று கேளுங்கள் இதை ஏற்கனவே யாராவது வாங்கி இருக்கிறார்களா தற்போதைய owner யார் என்றும் கேளுங்கள்
17.அடுத்துநிலம் விற்பவர் வீட்டுக்கு அருகில் இருப்பவர்களிடம் அவருக்கு எத்தனை உடன்பிறத்தோர்,மனைவி, குழந்தைகள், விற்பவருக்கு இந்த நிலம் எப்படி வந்தது . அந்த சொத்தில் விற்பவரின் உடன் பிறந்தோர் க்கு பங்கு இருக்கா?என்று கேளுங்கள்
18.அடுத்து நான் கூறிய டாக்குமெண்ட் எல்லாம் வாங்கி விட்டு உங்கள் நிலத்தின் ரெஜிஸ்ட்டர் ஆபிஸ் ஏரியாவின் நல்ல சிவில் lawyer பாருங்கள்.
நல்ல லாயர் எப்படி கண்டு பிடிப்பது?.
உங்களுக்கு lawyer refer செய்கிறவரிடம்,
லாயர் எங்கு படித்தார் எந்த ஆண்டில் இருந்து practice செய்கிறார் எத்தனை பத்திரம் பதிந்து இருக்கிறார், எத்தனை லீகல் ஒப்பீனியன் கொடுத்து இருக்கிறார் போன்ற கேள்விகள் கேளுங்கள் புரோக்கர் சொல்லும் லாயர் இடம் செல்லாதீர்.
மேற்கூறிய கேள்விகளுக்கு உங்களால் பதில் கண்டுபிடிக்க முடியும் என்றால் நல்ல லாயாரை கண்டுபிடித்தீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம்.
கண்டுபிடிப்பது உங்கள் சாமர்த்தியம்.
Lawyer க்கு பணம் கொடுக்க அழுக கூடாது. அந்த பணம் தான் நிலத்தின் முதலீடு நீங்கள் விற்பவருக்கு கொடுக்கும் பணம் அல்ல.
19. எல்லாம் சரியாக அமைந்து விட்டால் அடுத்து ஒரு govt registered surveyor பாருங்க. அவர் நிலத்தை அளந்து, encroachment, deviation எல்லாம் சொல்லுவார் பின்பு படத்தை வரைந்து தருவார்.
20. தயவு செய்து டாக்குமெண்ட் writer வைத்து பத்திரம் எழுதலாமா என்று நிதானமாக யோசிக்கவும்..பத்திரம் எழுதிற license govt 1990களில் இருந்து தரவில்லை என்று கேள்வி . சந்தேகம் என்றால் லைசெஸ் நம்பர் கேளுங்கள்.
பாதி பேர் 10வது தாண்டதவர் . மீதி பேர் காலேஜ் ஹே போகாமல் 700KM தள்ளி இருக்கும் ஆந்திர, கருநாடகவில் பணம் கொடுத்து LLB டிகிரி வாங்கினவர் எல்லாம் பழைய டாக்குமென்டில் இருந்து copy paste செய்கிறார்கள் உங்களுக்கு என்று draft செய்வது குறைந்த நபர்களே.
========
காசு போனாலும் நல்ல சிவில் லாயர் வைத்து எழுதுங்கள்.சில ஆயிரம் advocate பீஸ் க்கு கஞ்ச படாதீர்கள். கொஞ்சம் மிஸ் ஆனாலும் பல லட்சம், கோடி நஷ்டம்.
திரும்பவும் சொல்றேன் நல்ல லாயர் கண்டு பிடிப்பது உங்கள் சமர்த்தியம்.
========
நாம் டாக்குமெண்ட் வேண்டி govt ஆபிஸ் க்கு நடப்பது நமது வருங்கால நன்மைக்கே நான் சொன்ன ஆவணங்கள் இல்லாமல் நிலம் வாங்காதீர்.
அடுத்து லாயர், surveyor consulting, நிலம் விற்கும் நபரின் அண்டை வீட்டார், நிலம் இருக்கும் இடத்தின் அண்டை வீட்டார் இடம் பேசாமல் இல்லாமல் புதிய சொத்து வாங்காதீர்.
இதுதான் நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை...
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #நிலம்வாங்கும்முன்
நண்பர் @cinee_mazhaii_ கேட்டாருனு Refer பண்ண போனப்ப தான், சரி நாமளும் கொஞ்சம் உடைஞ்சு போவோமேனு தோனுச்சு ! நம்ம x மறக்க பல வழி இருந்தாலும் நினைக்க ஒரு சில காதல் படங்கள் தான் இருக்கும் அதுல ஒன்னு தான்
🎞️ Sapta Sagaradaache Ello Side A ✨
📢 தமிழ் டப் ✅
#cinephile#Thread 👇
My play list.... 30 பாடல்கள் இருக்கு, இரண்டாவது பல்லவில இருந்துதான் தொடங்கும், பிடிச்ச பாடல்களை முழுசா டவுன்லோட் போட்டுக்கோங்க.
ராஜா ராகம்... Happy weekend
2004ஆம் ஆண்டு கமல்ஹாசன் எழுத்து, இயக்கத்தில் உருவான விருமாண்டி, கிராமத்து அரசியல் மற்றும் மரபுவழி நீதிமுறைகளை துல்லியமாக சித்தரித்து தமிழ் சினிமாவின் புதிய வரலாறு எழுதியது. இப்போது அந்தப் படத்தைச் சுற்றியுள்ள சுவாரஸ்யமான மற்றும் ரகசியமான தகவல்களை பார்ப்போம்!
A Thread 🧵👇
🎬 Predator படத்தின் பின்னணி: தொழில்நுட்ப அதிசயங்கள் மற்றும் திகில் சவால்கள்!
1/10 🎥 Predator எப்படி உருவானது என்பதைப் பற்றிய விரிவான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன். இந்த திரைப்படத்தின் பின்புலம் மிகுந்த சவால்களை நிறைந்தது, அது எப்படி சாதனை படைத்தது என்பதை பார்ப்போம்.
#Predator #Cinema
கண்டிப்பாக பக்திமான்கள் கவனமாக கேளுங்கள்...🙏அறிவியல் கண்டுபிடிப்புகளில் இந்தியா முன்னேறாமல் போனதற்கு இதுதான் காரணம்.
உண்மையான காரணம் சொல்லி அழகாக எடுத்துரைத்தார் எழுத்தாளர் பேச்சாளர் கவிஞர் நந்தலாலா.... கண்டிப்பாக பக்திமான்கள் கவனமாக கேளுங்கள்...🙏
🚢⚓️சமுத்திரத்தில் மூழ்கிய ஒரு கப்பல், சினிமாவில் எழுந்த ஒரு அற்புதம் – டைட்டானிக் படத்தின் தொழில்நுட்ப ரகசியங்கள்!
ஜேம்ஸ் காமெரன் டைட்டானிக் படத்தை உணர்ச்சி பூர்வமான கதையுடன் தொழில்நுட்ப சாதனைகளை ஒருங்கிணைத்தார். இதற்கு பெரிய அளவிலான செட் அமைப்புகள், மேம்பட்ட VFX, சிக்கலான சிமுலேஷன்கள் மற்றும் சரியான வரலாற்று துல்லியம் தேவைப்பட்டது
🧵1/3
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
2015 இல் வேளையில் இருந்து ராஜினாமா செய்தாகி விட்டது,
அதன் பிறகு எடுத்த UPSC தேர்வு முயற்சிகள் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் ஏற்பட்ட அதிகார அமைப்புகள் மீதான வெறுப்பினால் கை விட்டாச்சு , ஆனால் வாழ்ந்ததாக வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் மட்டும் இருந்தது.
பின் புலம் எதும் இல்லை, யாருக்கும் என் மீது நம்பிக்கையும் இல்லை, சொந்தக்காரர்கள் எங்காவது டிரைவர் வேலைக்கு சேர்த்து விடவா என்று அக்கறையுடன் கேட்டு கொண்டு இருந்தார்கள்.
2018 , மாத வாடகை மின் கட்டணத்தோடு சேர்த்து 4000 ரூபாய் , 10× 12 அடி அளவுகளில் அறை என்று பெருங்களத்தூர் , விஷ்ணு நகரில் துவங்கப்பட்டது என் அலுவலகம் . காலை 10-6 வரை அது என் அலுவலகம் , மாலை ஆறு மணிக்கு பிறகு அதுவே நான் தங்கும் வீடு.
அதை start-up என்று கூட சொல்ல முடியாது, வாழ்வதற்கான ஒரு முயற்சி அவ்வளவுதான்.
நிறுவனர், ஊழியர், office boy எல்லாமே நான் தான். அவ்வப்போது உதவியாக நண்பர் திரு. விக்னேஷ். கடற் பொறியாளர், நான் சோர்வடையும் போது உடன் நிற்கும் நண்பன்.
எங்கிருந்து துவங்குவது , எப்படி செய்வது என எதுவும் தெரியாது. வழிகாட்ட யாரும் இல்லை.
தொழில் செய்வதற்கும், தொழில் நுட்ப அறிவோடு இருப்பதற்கும் இடையே நிறைய தூரம்.
கணினி, design softwares, soldering machines, pcb boards, micro controllers , electronic components, என நிறைய வாங்க வேண்டி இருந்தது. முதலீடு எதுவும் இல்லை.
ரிச்சி தெருவில், நண்பர்களுக்கு கணினி வாங்கி assemble செய்து தருவது, பழுது பார்பது, os , softwares installation என வேலைகளை செய்தேன்.
முதல் வருமானம் 150 ரூபாய் , பிரபாகரன் என்ற நபரிடம் இருந்து, அடுத்த வருமானம் 500 ரூபாய் என செய்து வந்தேன்
2 மாதத்தில்
ஒரு பழைய டெஸ்க்டாப் கணினி 8000 ரூபாய்க்கும், மத்த component சிலவும் வாங்கும் அளவிற்கு பணமும் அதனுடன் முன்பை விட கொஞ்சம் நம்பிக்கையும் கிடைத்தது.
மறுபடியும் ரோபோடிக்ஸ்.
இருக்கின்ற components வைத்து சிறிய சிறிய automation செய்தேன்.
அதை ஆர்வமுள்ள நபர்களுக்கு கற்று கொடுத்தேன்.
அதற்கு பணம் வாங்கினேன்.
மறுபடியும் தானியங்கு நீர் தெளிப்பான், தானியங்கு மீன் உணவு தரும் அமைப்பு என robotic உருவாக்கம், அதையும் கற்று கொடுத்து மீண்டும் பணம் வாங்கினேன்.
இப்படியாக நாட்கள் ஓடியது,
இன்னும் கொஞ்சம் அதிக ஆராய்ச்சி,
Automations தவிர்த்து iot, miniature humanoid என உருவாக ஆரம்பித்தேன்.
பின் offline GPS, man hole gas analyser என உருவாகி அதை பொது வெளியில் பகிர்ந்தேன். அப்படி ஒரு பதிவு 2018 இல் trending ஆனது , நியூஸ் 18 தொலைகாட்சியில் இருந்து பேட்டி கேட்டார்கள்.
தரலாமா வேணாமா என கூச்சம்.
திரை படங்களை TV யிள் பார்த்த நாம் ஒரு நாள் டிவி யில் வர போகிறோம் என்ற படபடப்பு ஆனாலும் கூச்சம்.
ஒரு நிமிடம் யோசித்தேன், பேட்டி கொடுக்க சம்மதம் சொன்னேன்.
நல்ல வரவேற்பு.அடுத்து big FM நிகழ்ச்சியில் அழைப்பு, அடுத்து விகடன், புதிய தலைமுறை , the ஹிந்து, jaya tv என பெரும்பான்மை ஊடகங்களில் அறிவியல் சார்ந்த நிகழ்சிகள், பேட்டிகள், கண்டு பிடிப்புகள் என பேச வாய்ப்புகள்.
அந்த அறிமுகத்தை பயன்படுத்தி புதிய மனிதர்களின் தொடர்புகள், அவர்கள் மூலம் புதிய புராஜெக்ட் என வாழ்க்கை நகர ஆரம்பித்தது.
அடுத்த இரண்டு வருடங்களில் ஓரளவிற்கு நல்ல நிலை அடைந்தேன்.
பின் குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களில் சேர்ந்த சில அரசியல் நண்பர்கள் தேர்தல் சார்ந்த சில தொழில் நுட்ப உதவிகளை கேட்க, முதல் முறை அரசியல் களத்தில் எனது தொழில் நுட்பத்தை புகுத்தினேன்.
அவர்களின் தேவை நிறைவேறியது. அவர்களின் நம்பிக்கை பெற்றேன் கூடவே கொஞ்சம் பணமும் கிடைத்தது.
மீண்டும் முதலீடு,தொழில்நுட்ப வடிவமைப்பு , புதிய மனிதர்கள் என வாழ்கை நகர ஆரம்பித்து சென்றது.
கல்வி என் வாழ்வை மாற்றிய விதம் என்னை என்னவோ செய்தது.
இந்த மந்திர கல்வியை , கல்வி எனும் மந்திர கருவியாய பற்றி பிறருக்கும் சொல்ல விரும்பினேன். அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்தேன், தொழில் நுட்பம் குறித்தும், கல்வி குறித்தும் அது செய்யும் வாழ்வியல் மாற்றம் குறித்தும் பேச ஆரம்பித்தேன்.
நல்ல வரவேற்பு மாணவர்களிடம். அதை விட மேலாக மன நிறைவு. இப்படியா 6 வருடங்கள் ஓட விட்டது.
இன்று அலுவலகத்தில் எனது கேபின் மட்டும் 200 சதுர அடி,
தமிழகத்தில் மூன்று இடங்களில் அலுவலகம், பணியாளர்கள்,
மாதத்திற்கு 2 அரசு பள்ளிகளுக்கு உதவிகள் என வாழ்கை நன்றாக போய்கொண்டு இருக்கிறது.
எந்த ஒரு காரை காட்டி அதற்கு டிரைவர் ஆக சேர்த்து விடவா என சொன்னார்களோ, அதே நிறுவனத்தின் கார் என் வீட்டு வாசலில்.
புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கு சுஜாதா சொன்ன பத்துக் கட்டளைகள்!
~~~~~~~~
2009 ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சியின்போது சுஜாதா சொன்ன பத்துக் கட்டளைகள் உங்களுக்காக..
1) என்ன புத்தகம் வாங்குவது என்று யாரிடமும் அட்வைஸ் கேட்காதீர்கள். நீங்கள் படித்த நல்ல புத்தகம் என்ன என்று வேண்டுமானால் கேட்கலாம். அது உங்களுக்கும் பிடிக்குமென்பது உறுதியில்லை.
2) படித்து முடிக்கவேண்டும் என்ற உறுதியோடு புத்தகம் வாங்குங்கள். உங்கள் அலமாரியின் எடைகூட்டவோ, அடுக்கி வைத்து அழகு பார்ப்பதற்கோ புத்தகம் வாங்காதீர்கள். அது பர்ஸுக்கு வந்த கேடு.
3) வாங்கும் புத்தகம் எதைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறதோ.. அந்த சப்ஜெக்டை, எழுதிய ஆசிரியர் குறித்து கொஞ்சமாவது தெரிந்து கொண்டு வாங்குங்கள். ‘சுடிதார் தைப்பது எப்படி? - சுஜாதா’ என்று அட்டையில் கண்டால், ‘சுஜாதாவுக்கு சுடிதார் தைப்பது பற்றி என்ன தெரியும்?’ என்று கடந்து போய்விடுங்கள்.
4) உங்கள் தனிப்பட்ட வாசிப்பு அடர்த்தியானதா, லைட் ரீடிங்கா என்று தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ற புத்தகங்களாக வாங்குங்கள்.
5) வாங்கிய புத்தகங்களை இத்தனை நாட்களுக்குள் படித்து முடிப்பேன் என்று உறுதியோடு படிக்க ஆரம்பியுங்கள். இப்போதெல்லாம் ‘பல்லைக் கடித்துக் கொண்டு இத்தனாம் பக்கம்வரை படித்தால், அதன் பிறகு ஸ்பீடெடுத்து முழுதும் படித்துவிடலாம்’ என்கிற ரேஞ்சில் பல புத்தகங்கள் வருகின்றன. நான் சமீபத்தில் படித்த புத்தகத்தை, ‘132வது பக்கம் வரை எப்படியாவது படியுங்கள்’ என்று கொடுத்தார் நண்பர். பாக்கி இருந்தது ஒரே ஒரு பக்கம். அதுவும் குறிப்புகளுக்கு. அதில் ‘வேஸ்ட்’ என்று எழுதி, புத்தகத்தைப் பரணில் போட்டுவிட்டேன்.
6) முற்றிலும் நீங்கள் அறியாத விஷயங்கள் குறித்த புத்தகம் ஒன்றேனும் வாங்கிவிடுங்கள். அது ஏலியன்ஸ் பற்றியதாக இருக்கலாம், கார்ப்பரேட் கம்பெனிகள் குறித்த ரகசியங்களாக இருக்கலாம். இந்த வருடம் புதிதாக ஒரு சப்ஜெக்டைத் தொடப்போகிறேன் என்று ஆரம்பியுங்கள்.
7) கவிதை என்றொரு சிக்கலான சமாச்சாரம் இருக்கிறது. அதைப் பற்றிப் படிப்பதாக இருந்தால் மட்டும், ஒன்றிரண்டைப் புரட்டிப் பார்த்து புரிகிறதா என்று சோதித்துவிட்டு வாங்குங்கள். ‘ஓடியோடி வந்து போகும் ஊழ்வினை போல பிரபஞ்சமெனும் கடலிலிருந்து வண்ணப் பிம்பத்தை வெளிச்சமாய் வீசியபடி..’ என்றெல்லாம் ஜல்லியடிக்கிற கவிதைகளின் படிமங்கள், பரிமாணங்கள் எல்லாம் உங்களைக் குழப்பினால் ‘உன் கண்களில் மீன்.. கனவினில் நான்’ டைப் கவிதைகளுக்கே போகலாம். ஆனால் என் அட்வைஸ் என்னவென்றால்.....
சரி, வேண்டாம்.
8) டெல்லி அப்பளம் கிண்டலுக்குரியதல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எல்லா இடங்களிலும் இப்படி கவன ஈர்ப்புக்கான ஏதோ ஒன்று இருந்தே தீரும் என்பது நியதி. பிடித்தால் சாப்பிடுங்கள். அதைச் சாப்பிடத்தான் வருகிறார்கள் என்று ஏளனம் செய்யாதீர்கள்.
9) திரும்பத் திரும்ப சொல்வதுதான். குழந்தைகளுக்கு வாசிப்பை போதியுங்கள். கட்டாயமாக்காமல், படிக்கும் ஆர்வம் அவர்களுக்காக வர ஆவன செய்யுங்கள். அதற்கு அவர்கள் வீட்டில் இருக்கும்போது செல்ஃபோனை நோண்டாமல், நீங்களும் தினமும் ஒன்றிரண்டு மணிநேரம் புத்தகம் வாசிக்க வேண்டும்.
10) முக்கியமாக ’சுஜாதா சொன்னார்’ என்று என்
ஸ்டைலிலேயே எவனாவது எழுதியதை அப்படியே பின்பற்றாமல், அவை சரியா என்றாராய்ந்து பின்பற்றுங்கள்.
#மீள்