அமைச்சர் ரமேஷ் பித்தலாட்டம் எங்கே உடைகிறது என்றால் !
பழனி பத்திரபதிவாளர் லீவில் சென்றால் அருகே 12 கிமி தூரத்தில் தொப்பம்பட்டி அருகே கீரணூர் SRO அவரை கூப்பிடலாமே, இல்லை சத்திரப்பட்டி SRO 15 கிமி தூரத்தில் இருக்கு அவரை கூப்பிடிருக்கலாமே , அட 20 கிமி தூரத்தில் கள்ளிமந்தையம் SRO இருக்கார் அவரை கூப்பிடலாமே... இது தானே வழக்கம். அது என்ன 100 கிமி வெளியில் கொடைக்கானல் SRO வந்து தான் பதிவு செய்ய எவன் திட்டம் போட்டான்?
பிரச்சனை இப்படி இருக்க - அமைச்சர் ரமேஷ் எப்படி அந்த பத்திர பதிவாளார் தெரியாமல் செய்துவிட்டார் என்பது போல் பேட்டியில் கூறுகிறார்? ரமேஷ் யாரையே காப்பாற்றுவதற்கு முயற்சிகிறார்.
100 கோடி கோவில் நிலம் - அதை எதிர்த்து போராட வேண்டிய அதிகாரி நிலம் பதிவான உடனே சென்னைக்கு புரோமோஷன் வாங்கிட்டு போவார் : அது ரமேஷ்க்கு தெரியாது? கோவில் நிலம் பதிவு செய்த மாவட்ட பதிவாளார் அந்தா ஆளை நாங்கள் காட்டு கத்து கத்திய பின் இடை நீக்கம் செய்வீர்.. கைது இல்லை.. பதிவு செய்தவன் விவரம் சொல்லவில்லை. இதற்கெல்லாம் முழு பொறுப்பாக வேண்டிய IAS ஆபிஸர் எங்கே ஆளை காணம்... இதற்கு பதில் சொல்ல வேண்டிய அமைச்சர் ரமேஷ் வெக்கம் கூச்சம் இல்லாமல் பதிவு செய்த பத்திர பதிவாளருக்கு வக்காலத்து வாங்குவார்... ஆனால் கேள்வி கேட்க கூடாது?
கொடுமை அந்த கொடைக்கானல் பத்திரபதிவாளர் சொத்து ஆவணங்கள் பதிவு செய்யும் Core Function சார்ந்த SRO கிடையாது.. அவருக்கு இந்த பத்திர பதிவு செய்ய உரிய தகுதியும் இல்லை..
ரமேஷ் வெளிய வாப்பா வாயை திற...
திமிரா ஆணவமா பேசிவயே வா வெளியே...
தமிழ்நாட்டின் கல்வி, தொழில், வேளாண் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்!
மாற்று இயக்கத்தில் இருந்தாலும் தந்தை பெரியாரால் பச்சைத் தமிழர் எனப் பாராட்டப்பட்டு, அவரது எண்ணங்களைச் செயல்படுத்தியவர் காமராசர்.
பேரறிஞர் அண்ணாவால் பெரிதும் மதிக்கப்பட்டவர்.
நெருக்கடி நிலையை அறிவித்தபோது அதை எதிர்த்து முத்தமிழறிஞர் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்.
உடல்நிலை சரியில்லாதபோதும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்திய பெருந்தகையாளர்.
காமராசர் அவர்களின் பிறந்தநாளை் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.
அவரது வழியிலான நமது #DravidianModel அரசிலும்,
*காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்,
*பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்த அவருக்குத் திருவுருவச் சிலை,
*திருச்சியில் உலகத்தரத்தில் தயாராகி வரும் மாபெரும் நூலகத்துக்குக் காமராசர் அவர்களின் பெயர்
எனப் பெருந்தலைவரின் புகழ்போற்றும் அரசினை நடத்தினோம்!
தலைமுறைகள் தழைக்கக் கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் தமிழ்நாடுள்ள மட்டும் நிலைத்திருக்கும்!
பத்திரிகையாளர் திரு. விஜயன் அவர்களை விசாரணை என்னும் பெயரில் அராஜகமான முறையில், அவரது தொலைப்பேசியைப் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் அடைத்து வைத்திருக்கும் தவெக அரசின் காவல்துறையின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஜனநாயக அடிப்படையில் விமர்சிக்கும் மாற்றுக் கட்சியினரைப் பழிவாங்கும் கீழ்மையான அரசியலை, தற்போது பத்திரிகையாளர்கள் மீதும் செய்யத் தொடங்கிவிட்டது தவெக அரசு.
உடனடியாக பத்திரிகையாளர் விஜயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
பத்திரிகையாளர் திரு.விஜயனை விசாரணை என்ற பெயரில் அழைத்து அவருடைய செல்போனை பறிமுதல் செய்துள்ள காவல்துறையின் அராஜக நடவடிக்கை.
காவல்துறையின் கருத்துச் சுந்திர ஒடுக்குமுறை நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திரு. இளையராஜா, தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று பேரம் பேசப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு என்பவர் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதியதலைமுறை தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றி வரும் பத்திரிகையாளர் திரு.விஜயன் அவர்கள் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்று (15.07.2026) நேரில் ஆஜராக வேண்டும் என்று இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு அவருடைய அலுவலகத்திற்கு சென்று நேரடியாக சம்மன் வழங்கியுள்ளனர்.
சம்மன் வழங்கிய கையோடு அன்று (15.06.26) இரவே காவல்நிலையத்திற்கு வர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். காவல்துறையின் அழைப்பின்பேரில் நேற்று இரவு 10 மணியளவில் பத்திரிகையளார் திரு.விஜயன் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்திய காவல்துறையினர் நள்ளிரவு 12.30 மணியளவில் விசாரணையை முடித்துள்ளனர். அதன்பிறகு வீட்டிற்குப் புறப்பட்டு சென்ற பத்திரிகையாளர் விஜயனை மீண்டும் காவல்நிலையத்திற்கு வரச்சொல்லியுள்ளனர்.
நள்ளிரவு 2 மணியளில் விஜயன் மீண்டும் காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, காவல்துறையினர் எந்தவித சட்ட விதிகளையும், வழிகாட்டுதல்களையும் பின்பற்றாமல் விஜயன் அவர்களின் செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (16.07.26) காலை பத்திரிகையாளர் விஜயன் அவர்களை மீண்டும் விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்தனர். விசாரணைக்காக சென்ற விஜயன் அவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை. காவல் நிலையத்திலேயே வைக்கப்பட்டுள்ளார்.
எந்த வழக்காக இருந்தாலும் விசாரணைக்காகவும், சாட்சியம் வழங்கவும் சம்பந்தப்பட்டவர்களை அழைக்க காவல்துறையினருக்கு உரிமை உள்ளது.
ஆனால், அதை சட்டத்தின் வழியில், அதன் வரம்பிற்கு உட்பட்டு செய்ய வேண்டும். அதேபோல், விசாரணைக்கு வந்த பத்திரிகையாளரிடம் செல்போனை பறிமுதல் செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
காவல்துறையின் இந்த நடவடிக்கை பத்திரிகையாளர்களை மிரட்டி, பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கையாகவே சென்னை பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது.
பத்திரிகையாளர் விஜயனை விசாரணை என்ற பெயரில் உடனடியாக அழைத்துச் சென்றது, வீட்டிற்கு சென்றவரை மீண்டும் அழைத்து எந்தவித விதிகளையும் பின்பற்றாமல் செல்போனை பறித்துள்ளது,
மறுநாளும் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்தில் மணிக் கணக்கில் காக்க வைத்திருப்பது போன்ற அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
பத்திரிகையாளர் விஜயனை உடனடியாக விடுவிக்கவும், அவரிமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போனை உடனடியாக காவல்துறை திரும்ப ஒப்படைக்கவும், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்தவும் காவல்துறையினருககு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்ற சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் ரமேஷ் "நான் வழக்கு போடுவேன்" என்று மிரட்டலுக்கு என் பதில் - எங்கே போடு பார்க்கலாம்... அதுக்கு முன்பு மக்கள் கேள்விக்கு பதில் சொல்லு மேன்..
பழனி கோவில் இணை ஆணையராக இருந்த மாரிமுத்துக்கு - இந்து அற நிலைத்துறை இணை ஆணையர் செயல் அலுவலர் பதவி உயர்வு கொடுத்தது நீங்களா இல்லையா? (ஆதாரம் இணைத்துள்ளேன்)
100கோடி நிலம் கைமாறியவுடன் அடுத்த 2 நாளில் அந்த ஆளுக்கு பதவி உயர்வு கொடுத்தது எதனால்? அதற்கு என்ன அர்த்தம்? பழனி கோவில் சொத்து விவகாரத்தில் முறையிட்டு அதை மீட்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் மாரிமுத்து, ஆக சரியா முடிந்த உடனே பதவி உயர்வு என்று கொடுத்து சென்னை நகர்த்த என்ன அவசியம் அவசரம் உங்களுக்கு?
கோவில் நிலம் விற்பனை செய்யப்பட்ட தேதி 06 ஆம் தேதி ஜுலை இந்த மாதம் முடித்துள்ளனர். (ஆதாரம் இணைத்துள்ளேன்)
மாரிமுத்து பதவி உயர்வு அறிவிக்கப்பட்டு சென்னைக்கு செல்வதற்கு ஆணையை ஜுலை 9ஆம் தேதி வெளியிடுகிறீர்!
சரி நிலம் விற்பனை உங்களுக்கு தெரியாது என வைத்துக் கொள்வோம் - இந்த அதிகாரி பதவி உயர்வுமா உங்களுக்கு தெரியாது ? இணை ஆணையராக உங்கள் அமைச்சரவையில் பெரிய பொறுப்பில் வரும் நபரை கூட தெரியாது என்றால் - பின் என்ன வேலை பார்த்துட்டு இருக்க? உங்கள் விஜய் வார்தையில் சொல்வது என்றால் "நல்லா வருது வாயில".
சரி இந்த மாரிமுத்து மீது என்ன என்ன புகார் இதுவரை உள்ளது சொல்லுங்க! இல்லை நான் சொல்லவா?
மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல துப்பு இல்லை "வழக்கு போடுவேன் " என்றி மிரட்டல்? வழக்கு போடுங்க.. அதற்கு முன் பதில் சொல்லுங்க...
இப்போ அப்படியே சார் பதிவாளார் பக்கம் மொத்தமா திருப்பி மொத்த விவகாரதை ஒருத்தர் மேல் வைத்து முடிக்க பார்கிறீர்? அதற்கும் கேள்வி - அதிலும் சிக்குவீர்... இதற்கு பதில் சொல்லு Next அதை வெளியிடுகிறேன்.
கரூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நான்கு கோவில்களின் நிலத்தை அவசரக் கதியில் அறநிலையத்துறை இணை கமிஷனர் பரிந்துரையில் ஒரே நாளில் தனியாருக்கு பட்டா போட்டு வழங்கியுள்ளது முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு
அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன
குறுவை , சம்பா சாகுபடிகளுக்கு தேவையான தண்ணீர் இல்லாமல் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர்!
தண்ணீர் தானே இல்லை இதற்கு எதற்கு புலம்புகிறார்கள்?
கர்நாடகா தண்ணீர் தரவில்லை என்றால் என்ன, செயற்கை மழையை பெய்ய வைத்தால் எல்லாம் சரி ஆகிவிடுகிறது!
பின்னணியில் என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச வா மழையே பாடல் ஒலிக்கிறது..
🌧🌨☔🌫🌪🌬🌈⚡
நியாயமான கேள்வி.
5 நிமிஷம் பேசுனதுக்கே.. கொளத்தூர் கொத்து பரோட்டா ஆகிடுச்சி என பஞ்ச் பேசியவர்..
இதுபோன்ற மிக முக்கிய கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டார்.
Talk less. Work more ஆம்.
இதுதான் அந்த வொர்க்கா?
பள்ளி மாணவர் ஒருவர் ஆசிரியரை மோசமான சொற்களால் , கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார்
அதை அந்த ஆசிரியர் கண்டித்த போது, ஒரு மாநில முதல்வரே ஆயிரக்கணக்கானவர்கள் முன்பு கோடிக்கணக்கானவர்கள் பார்க்கும் நேரலையில் Dash ..... போட்டு பேசும்போது நான் பேசினால் என்ன தவறு என அந்த மாணவன் பதில் கூறியதால் பூரித்து போன ஆசிரியர் தன்னைத் திட்டிய மாணவனை உச்சி முகர்ந்து பாராட்டியுள்ளார்...
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் நிர்வாகம் 2025 செப்டம்பரில் தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது
அந்த நிலம் இலவச வாகன நிறுத்துமிடமாக உள்ளது.2026 ஜூலை 6 தனி நபர்கள் இருபது பெயரில் அந்த நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது
சூப்பரே...
முதல்வர் விஜய் கரூரில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஊடகத்தினரை அனுமதிக்க முதல்வர் விஜயின் கீழ் இயங்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது
நிகழ்ச்சிக்கு பந்தக்கால் நடுவது தொடங்கி தகர பெட்டி அடிப்பது வரை அனைத்தையும் நேரலை செய்த ஊடகத்தினர் இதனால் மகிழ்ச்சி
பாசிசமா பாயாசமா என பேசிய முதல்வர் விஜயின் பேச்சை மீண்டும் மீண்டும் கேட்டு தமிழக மக்களும் மகிழ்ச்சி
. @arivalayam should file a case on this journalist who spreads disinformation on natiknal media to tarnish the image of the party on vijays karur visit. Hope sth is done just to set the record straight
முதலமைச்சர் விஜய்யை கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் அக்யூஸ்ட் என கூறிய திமுக மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமாருக்கு உச்சநீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்து,FIR ல்கூட பெயர் இல்லையே என்பதைச் சுட்டிக் காட்டி, கேள்வி கேட்டிருக்கிறது.
விஜய்யை வழக்கில் A 1 ஆகச் சேர்த்து, கைதுசெய்து சிறைக்குத் தள்ளாத கையாலாத்தனத்துக்குதான் இப்போது உச்ச நீதிமன்றத்தில் செருப்படி வாங்கிக் கொண்டிருக்கிறது வெட்கங்கெட்ட திமுக.
தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல!
மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்.
தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும் 💐❤️