மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (25.8.2026) தலைமைச் செயலகத்தில், மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 290 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் 250 புதிய பேருந்துகளின் சேவையைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்து, பேருந்திலுள்ள வசதிகளைப் பார்வையிட்டார்.
#CMJosephVijay
வரலாற்றுல இன்னைக்கு என்ன நாள் ?
சட்டசபை அவைக்குறிப்புல
"VIRTUAL WARRIORS" என்று எழுதப்பட்ட நாள்.💥💥💥💥
எங்கள ஏன் தலைவா இப்படி பெரும படுத்திட்டே இருக்க! 😭
மக்கள் கொண்டாடும் அரசு!
மக்களுக்கான அரசு!🇪🇦
தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் 100 நாட்களில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில், விருதுநகரில் சட்டமன்ற உறுப்பினர் @selvamVNR அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாபெரும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.💥
@TVKVijayHQ | @CMOTamilnadu
#தமிழகவெற்றிக்கழகம் #100daysofvijay
எங்கள் அனைவரது நெஞ்சிலும் குடியிருக்கும் அன்புத் தளபதி
our honourable chief minister #Vijay sir அவர்களுக்கு கோடிக் கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 😍
We always love u sir 😍🤗❤️
@TVKVijayHQ@actorvijay
ரெண்டு வருஷம் முன்ன இந்த ID க்கு Bday wish பண்ணோம் @actorvijay 🖐️
போன வருஷம் இந்த ID க்கு விஷ் பண்ணோம் @TVKVijayHQ 🔥
இப்போ இந்த ID விஷ் பண்ற @CMOTamilnadu 🥵🥵🥵🔥
ஆனா ஆளு ஒன்னு தான் பேரு ஒன்னு தான் ஒரு பேரே வரலாறு #HBDCMJOSEPHVIJAY
மதிப்பிற்குரிய கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், பாசத்திற்குரிய அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் கொடுத்த உயரத்தை அதே மக்களுக்காக உதறிவிட்டு சேவையாற்ற வந்தீர்கள்; "மக்கள்தானே மன்னர்கள்" என்ற மக்களாட்சியின் மகத்துவத்தை அறிவித்தீர்கள்; மக்கள் விரும்பிய முதல்வராக, மக்களில் ஒருவராகத் தேர்தலில் வென்று, மக்களாட்சித் தலைமையை ஏற்றீர்கள்!
இப்போது, காலை முதல் இரவு வரை நேரம் காலம் பார்க்காது "மக்கள் ஊழியனாக" அலுவல் பணியை செய்துக்கொண்டிருக்கிறீர்கள். அன்று நாயகனாக உங்களைக் கொண்டாடிய மக்களுக்கு, இன்று ஜனநாயகனாக தன் வாழ்வை ஒப்படைத்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறீர்கள்.
"மக்களிடம் செல்" என்று கூறி பல சாமானியர்களையும் தலைவர்களாக்கி அழகு பார்த்தார் பேரறிஞர் அண்ணா. "மக்கள் கொடுத்த பொறுப்பை ஒருபோதும் மறக்காதே" என்று கூறி, அரைநூற்றாண்டுக்கு பிறகு எளிய வீட்டுப் பிள்ளைகளின் கைகளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என மக்கள் பணியை வழங்கி மக்களாட்சியை அலங்கரித்திருக்கிறார் எங்கள் அண்ணன்.
உங்கள் கொள்கை பாதையிலும், அரசியல் உறுதியிலும், மக்கள் பணியிலும் என்றும் உங்களோடு உடன் பயணிப்போம்.
#HBDCMJosephVijay
விருதுநகர் மேற்கு பாண்டியன் காலணியில் வசிக்கும் 101 ஏழை எளிய பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பள்ளி உபகரணங்களை வழங்கினார் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் @selvamVNR அவர்கள், மேலும் அப்பகுதியில் உள்ள குறைகளை பொதுமக்களிடம் கேட்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.🙏🏻
#CMJosephVijay #Virudhunagar
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில்,
லார்சன் & டூப்ரோ (Larsen & Toubro) லிமிடெட் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே, 18,600 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 8,200 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
#CMJosephVijay
இந்தக் கல்வி ஆண்டின் முதல் நாளை, புதிய நம்பிக்கையோடு தொடங்கும் என் அன்பிற்குரிய மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
கல்விதான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி. உயரிய கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அதற்கேற்ப கடினமாக உழையுங்கள். பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமாக இருக்கட்டும்.
மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும்!
#CMJosephVijay