நாம் தமிழர் கட்சியை ஆதரிக்காத தமிழ்த்தேசியவாதி கூட இருக்கலாம் ஆனால் நாம் தமிழர் கட்சியை எதிர்ப்பவன் ஒருபோதும் தமிழ்த்தேசியவாதியாக இருக்க முடியாது.
அவன் தமிழ்த்தேசிய துரோகிதான்...
காவிரி நதிநீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்?
@CMOTamilnadu@TVKVijayHQ
காவிரி நதிநீர்ச்சிக்கல் உச்சம்பெற்று, மேகதாதுவில் அணை கட்டுவதில் மிகுந்த முனைப்போடு, அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கர்நாடக அரசும், அங்குள்ள எதிர்க்கட்சிகளும் ஒருமித்துச் செயல்பட்டு, முன்னெடுப்புகளைச் செய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் அரங்கேறி வரும் அரசியல் காட்சிகள் மிகுந்த ஏமாற்றத்தைத் தருகின்றன. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்ததுதான் அரசாங்கம் எனும் அடிப்படையை மறந்து, இருவரும் பகைமை பாராட்டுவதும், காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதும், அரசியல் பழிவாங்கல் செய்வதும்தான் ஆட்சி நிர்வாகமா? மக்களுக்கான அரசியலா? என்ற கேள்வி எழுகிறது. தற்போது நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமான தலைகுனிவாகும்.
காவிரி நதிநீர் சிக்கல் தொடர்பாக திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்வைத்த சில கருத்துகள் தேவையற்றவை; எதிர்க்கட்சித்தலைவர் எனும் பதவிக்குரிய மாண்பை மறந்து, கண்ணியக்குறைவான கருத்துக்களை பொதுஅவையில் வைத்திருக்க வேண்டியதில்லை. அதேசமயம், இதனையே வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, கைதுநடவடிக்கை எனும் பெயரில் தவெக அரசு இறங்குவதும் ஏற்புடையதல்ல.
அரசியல் மேடைப் பேச்சுக்கெல்லாம், தவெக அரசு கைது நடவடிக்கை எடுக்குமென்றால், என் மீதும், என் தம்பி, தங்கைகள் மீதும் தனிநபர் விமர்சனமும், அவதூறும், ஆபாசத்தாக்குதலும் நாள்தோறும் தொடுக்கும் தவெகவினர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது ஏன்? அவ்வாறு அவதூறு பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் மாண்புமிகு நீதியரசரே, சட்ட நடவடிக்கை எடுக்கச் சொல்லி, உத்தரவு கொடுத்துவிட்டப் பிறகும், கைது செய்யாது விட்டிருப்பதேன்? அவர்கள் தவெகவின் ஆதரவாளர்கள் என்பதாலா? இன்று காலை 9 மணிக்குப் புகார் கொடுத்து, இரண்டு மணி நேரத்தில் முற்பகல் 11 மணிக்கெல்லாம் உதயநிதியைக் கைதுசெய்கிற காவல்துறையினர், என்னைப் பற்றி அவதூறுப் பரப்பியவர்களை இத்தனை நாட்களாகியும் கைதுசெய்யாது, காப்பாற்றுவது ஏன்? என்னைப் பற்றி மேடையில் ‘சீமான் பழைய சாமான்’ என்று தரம்தாழ்ந்து பேசிய மதிப்புமிகு லயோலா மணி மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அப்படி பேசியதை ஊக்கப்படுத்தும் விதமாக பாடநூல் கழகத் தலைவராக அரசுப்பதவி கொடுத்து அழகுபார்ப்பதற்கு பெயரென்ன முதல்வர் அவர்களே? இதுதான் உங்களின் நாகரீக அரசியலா?
என் மீதும், என் தம்பிகள் மீதும் கடந்தகாலத்தில் முந்தைய திமுக அரசு பாய்ச்சாத வழக்குகள் இல்லை; ஏவிவிடாத கைது நடவடிக்கைகள் இல்லை. ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட வழக்குகளை திமுகவின் ஆட்சியிலேயேதான் பெற்றிருக்கிறேன். எல்லாவற்றிற்கும் கைது என்று முந்தைய திமுக அரசு, கடைப்பிடித்த அதிகார அடக்குமுறையையே தவெக அரசும் கடைப்பிடிக்குமென்றால், இதுதான் சனநாயக ஆட்சியா? இதுதான் மக்களுக்கான மாற்று அரசியலா? மக்களுக்குத் துளியும் நலன்பயக்காத, தரம்தாழ்ந்த அரசியல் நடைபெற்று வருவதைப் பார்க்கிறபோது மனவலியைத் தருகிறது. முந்தைய திமுகவின் ஆட்சிபோலவே, எல்லாவற்றிற்கும் கைது என தவெகவின் அரசு கிளம்புவது துளியும் சகிப்புத்தன்மையற்ற போக்காகும்.
மேடைதோறும் திமுகவை தீயசக்தியென விமர்சித்துவிட்டு, திமுக கடந்த காலத்தில் செய்த கொடுங்கோன்மையை நிகழ்காலத்தில் தவெக அரசு கட்டவிழ்த்துவிடுவது எந்தவிதத்தில் மாற்று அரசியலாகும்? திருவைகுண்டம் தொகுதியின் தவெகவின் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீதும், இன்னபிற தவெகவின் நிர்வாகிகள் மீதும் பாலியல் புகார்கள் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டு, இதுவரை விசாரணை செய்யக்கூடாத நிலையில், இந்த விவகாரத்தில் மட்டும் இவ்வளவு வேகம் காட்டுவதேன்? காவிரி நதிநீர் விவகாரத்தில் காட்டாத வேகத்தை, கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்?
காவிரிப்படுகையில் குறுவை சாகுபடிப் பொய்த்து, சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியிருக்கும் நேரத்தில், அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி நதிநீர் விவகாரத்தில் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வ முன்னெடுப்புகளைச் செய்யாது, தவெக அரசு தான்மையுடன் வறட்டுத்தனமான செயல்பாடுகளில் ஈடுபட்டு, தமிழ்நாட்டின் கவனத்தை ஒட்டுமொத்தமாகத் திசைதிருப்பி இருப்பது வெட்கக்கேடானது. காவிரி நதிநீர் விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு ஆளுங்கட்சி காட்டுவதும், காவிரிக்காக தீவிரமாக போராட வேண்டிய சமயத்தில் எதிர்க்கட்சியான திமுக கைதுக்கு எதிராக போராடிக் கொண்டிருப்பதுமான தமிழ்நாட்டின் அரசியல் நிலை சாபக்கேடானதாகும்.
சகிப்புத்தன்மையே சனநாயகத்திற்குத் தேவையான அடிப்படை என்பதை மறந்து, அரசியல் மேடைகளில் பேசுவதற்கெல்லாம் கைது நடவடிக்கை என்பதை எந்த அரசு செய்தாலும் அது மிகத்தவறானது; மேடைகளில் தவறாகப் பேசினால், அவதூறு வழக்கு தொடுக்க வேண்டுமே ஒழிய, எடுத்த எடுப்பிலேயே கைதென இறங்குவது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என தவெக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
முருகன் விஜய்யோ🛕
ஜோசப் விஜய்யோ⛪
முகமது விஜய்யோ🕌
யாராக இருந்தாலும் மதத்தின் அடிப்படையில் தமிழ் தேசியமும் சரி,நாம் தமிழர் கட்சியும் சரி அவர்களிடம் வேறுபாடு காட்டாது❗
ஆனால் தேர்தல் நேரத்தில்🗳️ மதச் சிறுபான்மையினரின் வாக்கை👆 குறிவைத்து தன்னுடைய
"மத அடையாளத்தை ⛪" வெளிப்படுத்தி தமிழ் தேசிய இனத்தை மதரீதியாக பிளந்து, பிரித்து, கூறு போட நினைக்கின்ற கயவர்களை😈
நாம் தமிழர் கட்சி🐯 கட்டாயம் அம்பலப்படுத்தும் ❗
இந்த உண்மை தெரிந்திருந்தும் அண்ணன் சீமானின் கருத்தைத் மதவாத கருத்து போல திரித்து பரப்பும் உள்நோக்கம் கொண்டவர்களை காலம் அம்பலப்படுத்து🤷
Only Reels தான் No Rules..! 3 கிலோ மீட்டர் ஓடிய ஒரே முதல்வரா..? 12 கிலோ மீட்டர் நான் ஓடுவேன்.. என்னோடு ஓட முதல்வர் விஜய் தயாரா..? போதைப்பொருளை ஓடி ஒழிக்க கூடாது.. தேடி ஒழிக்க வேண்டும் முதல்வர் அவர்களே.. சரி ஓடுனீங்களே அந்த போதை பொருள் எல்லாம் ஒழிந்துவிட்டதா..? எதற்காக கோடி கோடியாய் செலவு செய்து தெரு தெருவாக விளம்பரம் செய்கிறீர்கள்..? முதல்வர் விஜயை போல் சிரித்து காட்டி விமர்சித்த சீமான்..
#Seeman | #NTK | #PolimerNews
"நல்ல தகப்பன் எவனாவது உடம்பு சரியில்லாத குழந்தையை தூக்கிட்டு கிரிக்கெட் பார்க்க போவானா..?"
இவருக்கெல்லாம் அமைச்சர் பதவியை கொடுத்திருப்பதால் அவர் என்ன நிர்வாகம் செய்வார்..? மாத்திரையை நசுக்க எதுக்கும் 500 ரூபாய் கையில்..? அமைச்சர் சரத்குமார் விவகாரம்.. சீமான் சரமாரி கேள்வி
#Seeman | #TVK | #Sarathkumar | #PolimerNews
#WATCH | "நடிக்கும்போது வராத ‘ஜோசப்’ அரசியலுக்கு வந்ததும் எப்படி வந்துச்சு?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு
#SunNews | #Seeman | #TVKVijay
திரள் நிதி தவறான விஷயம் அல்ல . சீமான் பென்ஸ் கார் வாங்குவது குற்றச்செயல் அல்ல . அவரை அந்த விஷயம் குறித்து விமர்சிக்க எந்த அரசியல் கட்சித்தலைவருக்கும் யோக்கியதை இல்லை
என்னுடைய நேர்காணல் காணொளியை வெட்டி ஒட்டிப் பரப்பும் அரைவேக்காட்டு ஆச்சரியக்குறிகளுக்கு..
Context:
கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டுமெனும் நோக்கமெல்லாம் விஜய்க்கு இல்லை; அவர் நினைத்திருந்தால் முதல் வாரமே கரூருக்குச் சென்று இருக்கலாம். முதல் கையெழுத்தாக அரசு வேலை வழங்குவதைச் செய்திருக்கலாம்.
50 நாட்கள்வரை அதனைச் செய்யாதவர், எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியைவிட்டு விலகியவுடன், கரூர் இடைத்தேர்தலுக்காக வாக்குகளைப் பொறுக்கவே இதனைச் செய்கிறார் விஜய்.
கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை ஏன் கொடுக்கவில்லை? என முதலில் கேட்டதாகவும், பிறகு, அரசு வேலை அறிவித்தவுடன் அதனை விமர்சித்துப் பேசுவது போலவும் என்னுடைய நேர்காணல் காணொளியை வெட்டி, ஒட்டி திரித்துப் பரப்புகிறார்கள் ஆச்சரியக்குறிகள்.
கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை அளிப்பது தவறான முன்னுதாரணம்; அதிகார முறைகேடு என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.
அதேசமயம், கரூரில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலை மனதில் வைத்தே அரசு வேலையை அறிவித்திருக்கிறார் என்கிறோம். அதனைக் குறிப்பிடவே, முதல் நாள் கையெழுத்தாகவே அரசு வேலை வழங்கும் அறிவிப்பைச் செய்திருக்கலாமே, ஏன் செய்யவில்லை? எனக் கேட்டேன். அதனை மட்டும் வெட்டி, அரசு வேலை வழங்கக் கேட்டதுபோல பரப்பித் தன்னின்பம் அடைகிறது Vulgar Warriors!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தமிழ்நாட்டின் மதிக்கத்தக்க தலைவர்.
அவரை அவதூறாகத் திட்டி சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட நபரை இன்று இரவுக்குள் கைது செய்ய காவல்துறைக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
@thirumuruganntk
நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் அவர்கள்
தமிழ்நாட்டின் ஒரு மதிக்க கூடிய தலைவர்.
அவரை அவதூறாக திட்டி சமூக வலைதளத்தில் பதிவு செய்த நபரை இன்று இரவுக்குள் கைது செய்ய காவல்துறைக்கு
மதுரை உயர்நீதி மன்றம் தீர்ப்பானை.
நான் தளபதி Fan. நேத்துதான் FdFs பாத்துட்டு வந்தேன்னு சொன்ன உடனே, கூட்டம் ஆர்ப்பரிக்கும்னு எதிர்பார்த்துச்சு அந்த அம்மா. இத எதுக்கு இங்க வந்து பேசணும்னு மொத்த கூட்டமும் எதிர்ப்புத் தெரிவிச்சுச்சு.
நீட்ட பத்தி பேசாம அங்கே கூடியிருப்பவர்களை சீண்டும் விதமாகப் பேசியதால் ஒலிவாங்கியை வாங்கினார்கள்.
அவ்வளவே!
பெயருக்குப் பின்னால் சாதியை வைத்துக் கொண்டு அதனைப் பெருமையோடு சொல்லித் திரியும்
அந்தப் பெண்மணி செய்தது மிக மிக மலினமான கவன ஈர்ப்பு அரசியல் !
சீமான் எம்பி யும் அல்ல எம்எல்ஏ வும் அல்ல
சீமான் ஓர் அரசியல் கட்சி தலைவர்
தமிழ் நாட்டில் சீமான் படத்தை காண்பித்தலே இவர் தான் சீமான் என்று 90% பேர் சொல்வார்கள்
ஆனால் நீ அமைச்சர் என்பதே நீ சொல்லி தான் எங்களுக்கு தெரியுது
அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் உன்ன மாதிரி பிளாக் டிக்கெட் வித்த கிராக்கி கிடையாது . உன் மேல பிக்பாகெட் கேஸ்லிருந்து என்னென்ன கேஸ் இருக்கு அதை எல்லாம் நீ எப்படி மறைச்சு நாமினேஷன் தாக்கல் செஞ்சிருக்கன்னு விரைவில் நீதி மன்றத்தில் பதில் சொல்லும் காலம் வரும் , அடக்கி வாசி , திடீர் புயல் காற்றில் கோபுரத்தில் போய் ஒட்டிக்கிட்ட குப்பைக்காகிதம் தான் நீ , அதை மறந்துடாத
நான் கல்லூரி முடித்த காலம் முதல் அறிவேன் “சீமான் ஏதாவது எங்கேயாவது போராட்டம் மேடைகள் என பேசி வருவது”. பின்னாளில் ஈழத்து போர் காலத்தில் தமிழகத்தில் பல கல்லூரிகளை இணைத்து போராட்டங்களை கட்டமைத்து கொண்டிருந்தார் என நியாபகம். ஒரு முறை நான் அண்ணா காசரே ஊழலுக்கு எதிரான போராட்டத்தை 20 நாட்கள் மேலாக மதுரையில் முன்னின்று நடத்தி கொண்டி இருந்த போது - ஒரு சிறுவன் பள்ளி சிறுவன் வந்து “அண்ணே 7 பேர் விடுதலைக்கு சீமான் அண்ணே செய்கிறார் - நீங்களும் மதுரையில் உங்கள் குழுவோடு இணைந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும்” என்று. இப்படி அப்போதே பள்ளி மாணவர்களுக்கு கூட தெரியும் சீமான் யார் என. நீ என்ன பண்ணிடு இருந்த ? “தொட்ட பெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்” என வாயை போலந்து சினிமா கவர்ச்சி பாடல் பாடிட்டு திறந்திருப்ப. உனக்கு எப்படி அவரை தெரியும்.
சித்தாந்தம் சண்டைகள் உண்டு கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் அவர் களத்தில் யார் என கேட்கும் தகுதி எவனுக்கும் இல்லை. முதலில் பிளாக் டிக்கெட் விற்றுக் கொண்டு திரிந்து - திடீரென்று அதிஷ்டத்தில் அதிகாரத்தில் கோட்டைக்கு போனவனுகளுக்கு இல்லையே இல்லை.
நாடு மக்கள் பொருளாதாரம் சித்ததம் என எந்த அறிவும் இல்லாமல் சினிமா தியாட்டர் பக்கம் திரிந்தவனை எல்லாம் மினிஸ்டர் ஆக்கினால் “யார் அவர்” என கேட்க தானே செய்வீர்.. எல்லாம் இந்த மக்களை சொல்லனும்..