#WATCH | “டெல்லி ஜந்தர் மந்தரில் மோடி அரசே போராட அனுமதி கொடுத்திருக்கு.. ஆனா தமிழ்நாட்டில் இருக்கும் தவெக அரசு..”
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர் கார்த்திக் பேட்டி
#SunNews | #DelhiProtest | #JantarMantar | #TVKVijay
அதிமுக திமுக ஆட்சியில் தொடர்ந்த காவல்துறை மரணங்கள், மாற்றம் என்று சொல்லி மக்களிடம் வாக்கை பெற்று ஆட்சிக்கு வந்த தவெக விலும் தொடரும் கொடுமை?
https://t.co/b1Au02BlrD
வாழ்த்துகள் தம்பி லயலாமணி!
லயோலாவில் இளங்கலை பயின்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பை முடித்து, முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட இருக்கும் உங்களின் கல்வித் தகுதிக்கு,தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் வாரியத் தலைவர் பொறுப்பு மிகவும் பொருத்தமானது தம்பி.
EVM மோசடியை மறைப்பதற்காக கொல்கத்தாவில் 4000 EVM எந்திரங்களை பாஜக பாசிச கும்பல் தீயில் எரித்துள்ளது.
(சமீபத்தில் நடந்த மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட EVM எந்திரங்கள்)
இந்தப் பிரச்சனையை எதிர்கட்சிகள் தீவிரமாக கையிலெடுத்து போராடினாலே EVM க்கு எதிராக நாடு தழுவிய பெரும் கிளர்ச்சியை உருவாக்க முடியும். பாசிச ஆட்சியை வீழ்த்த முடியும். ஆனால்
எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இதை கண்டுகொள்ள மாட்டார்கள். காரணம் இவர்கள் எல்லோரும் பாஜக-RSS பார்ப்பண கும்பலின் அடிமைகள்.
EVM க்கு எதிரான மக்கள் புரட்சி ஒன்றே தீர்வு..
-நந்தினி ஆனந்தன்
ஒருங்கிணைப்பாளர்
மக்களுக்காகப் போராடும் கட்சி.
பாரதிராஜா
இயக்குநர் இமயம் மட்டுமல்ல
தமிழர் உரிமைப் போராளியும் ஆவார்!
===========================================
பெ. மணியரசன், தலைவர்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===========================================
தமிழ்த் திரை உலகத்தைத் தமிழர் மரபோடு இணைத்துப் புதுமைகள் செய்து, புதுத்திருப்பம் உண்டாக்கியவர் தமிழ்த் தாயின் இனிய மகனாகிய இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள்! உறவோடு – உரிமையோடு, “என் இனிய தமிழ் மக்களே” என்று அவர் விளித்துப் பேசுவது செவியில் இனிக்கும்!
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் இன்று (10.06.2026) காலை காலாமானார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன். வயது மூப்பின் முடிவுதான் என்றாலும் மனம் ஆறுதல் கொள்ள மறுக்கிறது.
தமிழ்த் திரைத்துறையை தமிழ்நாடு திரைத்துறை என்று கூடச் சொல்ல முடியாது; தென்னிந்திய திரைத்துறை என்றுதான் சொல்ல வேண்டும் என்ற நிலை அன்றும் இருந்தது; இன்றும் இருக்கிறது. அண்டை அயல் மாநிலங்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது – இன்றும் பறக்கிறது.
இத்திரைத் துறையில்தான் தமிழர் மரபு வாழ்வு – தமிழ் மண் சார்ந்த கதைகள் – சித்தரிப்புகள் – கலை வடிவங்கள் என்று தமிழ்ப் புரட்சி செய்தவர்.
இயக்குநர் பாரதிராஜா திரைத்துறை சாதனைகளுக்காக இந்திய அரசின் உயர்நிலை விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றவர்! இவருடன் இசை இமயம் இளையராஜா – கவிப்பேரரசு வைரமுத்து என்ற மூன்று தனித்திறன் ஆளுமைகளும் தமிழ்த்திரையுலகை தமிழர் மரபு நோக்கி – தமிழர் வாழ்வியல் நோக்கித் திருப்பினர்.
தமிழ்நாட்டின் மண்வாசனையோடு திரைப்படங்கள் எடுத்திட பாரதிராஜாவின் கலைவாரிசுகளாக பல இளம் இயக்குநர்கள் உருவானார்கள்!
கலைத்துறையோடு ஒதுங்கி கொண்டவர் அல்லர் பாரதிராஜா! தமிழ் ஈழவிடுதலை ஆதரவு, ஏழு தமிழர் உயிர்காப்பு, காவிரி உரிமை மீட்பு எனக் களப் போராட்டங்களிலும் பங்கேற்றவர் பாரதிராஜா!
காவிரி உரிமை மீட்புக்காக – இயக்குநர் பாரதிராஜா ஒருங்கிணைப்பில் போராட்டங்கள் நடத்திய அனுபவங்கள் நினைவுக்கு வருகின்றன. நானும் காவிரி உரிமை மீட்புக்குழுவினரும் அவற்றில் கலந்து கொண்டோம்.
காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் 16.02.2018 அன்று இறுதித் தீர்ப்பு வழங்கியது.
அத்தீர்ப்பை செயல்படுத்தித் தராத இந்திய அரசைக் கண்டித்து எமது காவிரி உரிமை மீட்புக்குழுவும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவையும் இணைந்து 10.04.2018 அன்று சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மறியல் செய்து போராடிக் கைதானோம். இயக்குநர் களஞ்சியம் காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கபபட்டார் மற்றும் சில இளைஞர்களும் காவல் துறையினரால் தாக்கப்பட்னர். அப்போராட்டத்தில் பாரதிராஜா, சீமான், திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், ராம் உட்பட கைதானார்கள் நானும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும் அதில் கைதானோம்.
அடுத்து காவிரி உரிமைக்காக மீனம் பாக்கம் வானூர்தி நிலையத்தில் தலைமை அமைச்சர் மோடிக்குக் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தி இயக்குநர் பாரதிராஜா அவர்களுடன் நாங்களும் கைதானோம்.
பின்னர் – கல்லணையில் பாரதிராஜா அவர்களுடன் நாங்கள் இணைந்து கூட்டம் நடத்தி – காவிரி உரிமை மீட்பைக் கோரினோம்.
தமிழீழ இனப்படுகொலையைக் கண்டித்து பாரதிராஜா தலைமயில் இராமேசுவரத்தில் திரைத்துறையினர் நடத்திய போராட்டம் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. அதில்தான் சீமானும் அமீரும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
தமிழ்த்திரைத் துறையில் மட்டுமல்ல – தமிழர் உரிமை மீட்புத் துறையிலும் போராடி முன்னோடிப் பாத்திரம் வகித்தவர் பாரதிராஜா!
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கட்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வீரவணக்கம்! வீரவணக்கம்!!
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==============================
பேச: 9840848594
புலனம் : 9841949462
முகநூல் : https://t.co/Rm3OTXafKD
ஊடகம் : https://t.co/kYqtmUASQD
இணையம் : https://t.co/IZDxchd0Lf
சுட்டுரை : https://t.co/9LNpr25XDb
காணொலிகள் : https://t.co/XVc9CRqVmh
=============================