தமிழ்நாடு சட்டப்பேரவையில் #SofaModel அரசு அளித்த அறிக்கையை Comma, Full Stop கூட மாறாமல் ஆளுநர் அப்படியே வாசித்திருப்பது பாஜக - த.வெ.க-வின் மறைமுக கூட்டணியை அம்பலப்படுத்தி இருக்கிறது.
ஆளுங்கட்சியினர் Reels போடுவதற்கான Content Material-ஆக அமைந்துள்ள ஆளுநர் உரையில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் இல்லை.
தொடர் மின்வெட்டு - பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கெடு - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளுக்கு Sticker ஒட்டியும், த.வெ.க அரசின் சறுக்கல்களுக்கு கழகத்தின் மீது பழிபோடும் வகையிலும் அமைந்துள்ள ஆளுநர் உரையை கண்டிக்கிறோம். #TNAssembly
ஐந்தாண்டு கால #திராவிட மாடல் ஆட்சியில் நாம் செய்துள்ள சாதனைகளையும் அடைந்துள்ள வளர்ச்சியையும் எடுத்துக்கூறி, இன்றையதினம் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கழகத்தின் வெற்றி வேட்பாளர் நித்யா சுகுமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என நம் அரசின் வெற்றித் திட்டங்களையும், 2026 சட்டமன்றத் தேர்தலில், கழகத் தலைவர் @mkstalin அவர்களால் வெளியிடப்பட்ட #SuperStar தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற சிறப்பம்சங்களையும் எடுத்துக்கூறி பிரச்சாரம் மேற்கொண்டோம்.
காஞ்சித் தலைவர் பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணிலிருந்து கழகத்தின் வெற்றிக் கணக்கைத் தொடங்க அயராது உழைப்போம்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்நாடா? NDA-வா என முடிவெடுக்கும் 2026 தேர்தலில் மீண்டும் உதயசூரியன் தான், மீண்டும் கழக அரசுதான் என தமிழ்நாட்டு மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். செய்துமுடித்த சாதனைத் திட்டங்களும், செய்யப்போகும் தலைவரின் வாக்குறுதிகளுமே கழகத்தை மீண்டும் ஆட்சிபொறுப்பில் அமர்த்தும்.
மீண்டும் உதயசூரியன் உதிக்கட்டும்; தமிழ்நாடு மென்மேலும் வளரட்டும்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!
சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் @PremallathaDmdk அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.
கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!
#DravidianModel ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்!
#வெல்வோம்_ஒன்றாக!
திருவண்ணாமலை மாநகரில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் பெயரில் நெடுஞ்சாலை துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள எழில்மிகு பூங்காவினை இன்று காலை திறந்து வைத்தோம்.
சுமார் 2 கி.மீ சுற்றளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்கா திருவண்ணாமலை நகர மக்களுக்கு மட்டுமின்றி அங்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என அனைவருக்கும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது.
உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்வதற்கான வசதிகளுடன் பொழுதுபோக்கு அம்சங்களும் இந்த பூங்காவில் இடம் பெற்றுள்ளன. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி தங்கள் மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வாழ்த்துகிறோம்.
@evvelu@PitchandiK@MTharaniventhan@CNAnnaduraiMP
பாசிச கூட்டத்தை
வீழ்த்தி வேரறுப்பார்..
பாயும் திராவிடச் சிங்கமாக…
இங்கு மாநில சுயாட்சி நிலைநாட்டி
கொள்கை மன்னராய் இருந்திவர்
கோட்டையை ஆண்டிடுவார்…
வா..வா…
அண்ணணே வா…
வாகை சூடிடவே..வா…
மூச்சாய், பேச்சாய்
இயக்கமாய் இயங்கிக் கொண்டிருக்கும்
ஆருயிர் அண்ணன் இதய சூரியனை
இன்று நேரில் சந்தித்து அகம் மகிழ்ந்த
நெகிழ்ச்சிக்குரிய உன்னத தருணம்! 💪🔥🌅
@Udhaystalin
#HBDUdhay
#IlamThalaivar_Varugiraar
#இளம்தலைவர்_வருகிறார்
நம் பிறந்த நாளான இன்று, தந்தையும், கழகத்தலைவரும், மாண்புமிகு முதலமைச்சருமான @mkstalin அவர்களிடமும் - தாயாரிடமும் வாழ்த்துப் பெற்றோம்.
அவர்களின் வாழ்த்துகளோடு - தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் - #திராவிட_மாடல் ஆட்சி தொடரவும் எந்நாளும் உழைப்போம்.
கழக இளைஞர் அணி முன்னெடுத்த #திமுக75_அறிவுத்திருவிழா-வின் ஒரு பகுதியாக நடைபெற்ற #இருவண்ணக்கொடிக்கு_வயது75 என்ற இருநாள் கருத்தரங்கின் முதல் அமர்வில், 'மொழிப்போர் இன்றும் என்றும்' என்ற தலைப்பில் கழகத் துணைப் பொதுச்செயலாளர் அண்ணன் @tiruchisiva அவர்கள், முதல் மொழிப்போர் தொடங்கி சமகாலத்தில் பாசிச பா.ஜ.க. அரசின் இந்தி திணிப்பு வரை விரிவாக எடுத்துரைத்து ஆற்றிய உரை முரசொலியில் மிகச்சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
அனைவரும் படித்து பயன்பெறவேண்டிய உரை.
நீண்ட நெடிய வரலாற்றை விளக்கியதுடன், @dmk_youthwing ஆற்ற வேண்டிய கடமையையும் சுட்டிக்காட்டிய அண்ணன் திருச்சி சிவா அவர்களுக்கு நன்றி.
#DMK75
அறிவுச்செயற்பாட்டை விரும்பும் அனைவரும் போற்றும் வகையில், கழக இளைஞர் அணியின் #திமுக75_அறிவுத்திருவிழா, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வந்த நிலையில், அதன் நிறைவு விழாவில் பங்கேற்றோம்.
தி.மு.கழகத்தின் 75 ஆண்டுகால வரலாற்றை உரையாடல் வடிவில் பறையிசையுடன் விவரித்த `மாற்று ஊடக மையம்' கலைக்குழுவின் நிகழ்ச்சி பெரும் எழுச்சியாக இருந்தது. மேலும் பிற்போக்குத்தனங்களை பின்னுக்கு தள்ளி, அவற்றுக்கு மாற்றாக அறிவை திருவிழாவாக கொண்டாட வேண்டியதன் அவசியத்தை வழக்கறிஞர் அக்கா அருள்மொழி அவர்கள் எடுத்துக்கூறி உரையாற்றினார்.
முற்போக்கு புத்தகக் காட்சியில் பங்கேற்ற பதிப்பாளர்களுக்கும், அறிவுத்திருவிழாவின் வெற்றிக்கு தங்கள் உழைப்பைச் செலுத்திய அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கி, நிறைவுரையாற்றினோம்.
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் விடுத்த கட்டளையை ஏற்று, ஆண்டுதோறும் முற்போக்கு அரசியல் இயக்கங்களின் பங்களிப்புடன் இந்த அறிவுத் திருவிழா இன்னும் சிறப்பான முறையில் தொடரும்!
#DMK75 @dmk_youthwing
சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமை மாண்புமிகு அமைச்சர் பாசமிகு அண்ணன் திரு பி.கே.சேகர்பாபு அவர்களுடன் நான்
கழகத்திற்கு அடித்தளமாகவும் - ஆணிவேராகவும் ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் வார்டு, கிளைக்கழக செயலாளர்கள் மற்றும் பாக முகவர்கள் திகழ்கின்றனர்.
பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகளை இன்று நேரில் சந்தித்தோம்.
ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தி மகிழ்ந்தோம்.
பெரியார் - அண்ணா - கலைஞர் வழியில் அயராது உழைத்து வரும் நம் தலைவர் அவர்கள் தலைமையில் மீண்டும் #திராவிட_மாடல் அரசை அமைத்திட அனைவரும் முழுமூச்சுடன் உழைக்க உறுதியேற்போம் என உரையாற்றினோம்.
@MRKPanneer@R_Gandhi_MLA@ksundarmla@EzhilarasanCvmp@AbdulmalikDmk@Prabhugajendran
❤️கழக இளைஞர் அணி செயலாளராக 7ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எங்களின் சின்னவர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் எங்கள் அன்பு அண்ணார் சின்னவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பணி சிறக்க நெஞ்சம்நிறைந்தவாழ்த்துக்கள் காஞ்சி மு முரளி தொண்டரணி துணை அமைப்பாளர்
நம் #திராவிட_மாடல் அரசால், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் மூலம், இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டிக் கொண்டிருக்கும், நம் ஒப்பற்றத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் பிறந்த நாளை மக்களுக்கு பயன்படும் விதமாக கொண்டாடி வருகிறோம்.
அதன் ஒருபகுதியாக, நம்முடைய #ChepaukTriplicane தொகுதி, திருவல்லிக்கேணி பகுதி, 116-ஆவது வட்டம், அயோத்தி தெரு பகுதியில் 1000 பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கி மகிழ்ந்தோம்.
@Dayanidhi_Maran@nchitrarasu@ARPMkamaraj@iamchsekar #Sasikumar
கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக என்னை நியமித்துள்ள மாண்புமிகு கழகத்தலைவர் அவர்களுக்கும், பரிந்துரை செய்த மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
களப்பணியாற்றி, பணிகளைத் துரிதப்படுத்தி கோவை மாவட்ட மக்களின் மனதை வெல்லும் இந்த அற்புத வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு கழகத்தலைவரின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்வேன்!