@sahay_victory முழுநேர வேலையே இதுதான் போல, துணையாக இருக்கலனாலும் பரவால்ல, நண்டு போல கீழே புடிச்சு இழுக்காம இருங்கடா.
எல்லாத்துலயும் நக்கல் நையாண்டி கிண்டல் கேலி தான்.
கோழியை பிடிக்க விரும்புவோர் “பெப் பெப்பே” என அழைப்பர்.
கோழியும் தன் மொழி பேசுகிறார்களே என நம்பிவந்து மாட்டும் .
ஆனால் நம்பி ஏமாறுவதற்கு தமிழர் கோழிகள் இல்லை. அழைப்பவர்களை இனங்காணும் அறிவு உள்ளது
All Doors Closed.
திமுக,தவெக,நாம் தமிழர் எல்லோருமே ஓசிகவின் அல்லையிலே மிதிக்கிறாங்க.
ஒசிகவுக்கு என்று தனியான வாக்குவங்கி இல்லை.
அப்படி இருப்பதுபோல ஒரு போலி பிம்பத்தை உருவாக்கியது திமுக,திராவிட தெலுங்கு உபிஸ் கும்பல்தான்.
#தற்குறி_தவெக மொத்தமாக சனாதன கும்பலோட ஐக்கியமாயிடுச்சி
ஊத்துக்குளி கிளி சோசியக்காரன் சொல்றத அப்படியே கேட்டா தமிழ்நாடு எப்படி விளங்கும்
இதுல வேற ராமசாமி கொள்கை தலைவர்
தவெக+பாஜக= ஆர்எஸ்எஸ்.
தக்கலை தாலுகாவுக்கு உட்பட்ட சாலையை பட்டா போட்டுக் கொடுத்த, கிள்ளியூர் தாலுகா அதிகாரிகளை கண்டித்து காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை பொதுமக்கள், மன்ற உறுப்பினர்கள் மற்றும் மன்ற துணைத்தலைவருடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி பேச்சு வார்த்தையில் முடிவு எட்டியதை தொடர்ந்து போராட்
அடுத்த முறை சாட்டை பேர சொல்லி சேனலை Subscribe பண்ணி Bell பட்டன் அழுத்தச் சொல்லுங்க. @thirumaofficial
😂😂😂
விசிக 24×7×365 நாளும் சாதி,சாதி,சாதின்னு சாதியைத் தவிர வேற ஒன்றையும் பேசுறதில்ல.இதுல ஐயயோ வேற,அம்மம்மா வேற.
#சாதிதேசியம்
தினமும் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது நீங்கள் அனைவரும் பார்ப்பது பேருந்துகளும், இருசக்கர வாகனங்களும், மகிழுந்துகளும், மக்களையும் தான்.. ஆனால் என் கண்களில் படுவதோ சாலைகளில் செத்து கிடக்கும் வண்ணத்து பூச்சிகளும், பேருந்துகளில் அடிபட்டு இறந்து கிடக்கிற நாய்களும், தான்.. அப்போது நான் மன நோயாளி தானே??
இந்த அரசியல் வேண்டாம் என்று விலகிச் செல்லவும் முடியவில்லை.. வேறு கட்சியை மனமும் சிந்திக்கவும் விடுவதில்லை.. காரணம் நான் மன நோயாளி தானே?
எல்லாரும் மக்களுக்கு என்ன தேவைனு அரசியல் பண்ணிட்டு இருக்கும் போது உலக உயிர்களுக்கும் அடுத்த தலைமுறைக்கும் அரசியல் பண்ணிட்டு இருக்குற உன்னை நான் பின் பற்றுவதும் மன நோய் தானே?
சமயத்தில் உன் மீது கோவம் வரும்.. மற்றவர்களை போல பிழைக்க தெரியாத ஆளாக இருக்கிறாயே என்று.. சிறிது நேரத்தில் உன் முகத்தை பார்த்ததும் அந்த கோவங்கள் அனைத்தும் பறந்து போய் இருக்கும்.. இதுவும் மன நோய் தானே?
மொத்தத்தில் இந்த மனநோயை என்னில் தள்ளிய உன் மீது நியாயமாக வெறுப்பு தானே வரணும்? ஏன் அன்பு வருகிறது? இதுவும் மன நோய் என்றால் அந்த மன நோய் எனக்கு இருப்பதில் பெருமையே 🙏🙏🙏
அன்பையும், இரக்கத்தையும் போதிக்கும் மகத்துவம் மிக்க மனிதநேய மார்க்கமான இசுலாத்தை அரச மதமாக ஏற்றிருக்கும், இறைதூதர் நபி பெருமானார் பிறந்த பெருமைமிக்க சவுதி அரேபிய நாடு மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் சிவராசா அனோஜனை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்!
சவுதி நாட்டில் பணிபுரிந்து வந்த ஈழத்தமிழரான தம்பி சிவராஜா அனோஜனுக்கு அந்நாட்டு அரசு மரணத்தண்டனை விதித்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தனது தாய்நிலத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து பொருளாதாரத்தேடலுக்காக சவுதி நாட்டுக்குச் சென்ற தம்பி அனோஜன், மதம் சார்ந்தும், இறைக்கோட்பாடுகள் சார்ந்தும் விமர்சனத்தை வைத்து, சமூக வலைத்தளத்தில் விவாதித்ததற்காக அந்நாட்டு அரசால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். தம்பி அனோஜன் சமூக வலைத்தளத்தில் தான் எழுதியவைகளை உடனடியாக நீக்கியதோடு, அத்தவறுக்காக வருந்தி மன்னிப்பும் கோரியிருக்கிறார்.
விளைவை அறியாது, மற்றவர் உணர்வை காயப்படுத்தும் விதமான தன்னுடைய புரிதலற்றச் செயல்பாட்டுக்கும், பெருந்தவறுக்கும் முழுமையாக வருந்தித் திருத்திக் கொள்ள வாய்ப்புக் கோரும் தம்பி அனோஜனைத் தண்டிப்பது என்பது ஏற்புடையதல்ல! அதுவும் உச்சபட்ச தண்டனையாக மரணத்தண்டனை விதித்திருப்பது துளியும் நியாயமில்லை. சிறுபிள்ளைத்தனமாக தம்பி அனோஜன், சமூக வலைத்தளத்தில் மதம் சார்ந்து தவறாக எழுதியிருந்தாலும் தன்னுடைய கருத்தின் விளைவை உணர்ந்து, பதிவுகளை நீக்கி, சவூதி அரேபிய அரசிடமும், இசுலாமிய உறவுகளிடமும் மனம்திறந்து மன்னிப்புக் கோரியபோதே அச்சிக்கல் முற்றுப்பெற்றுவிட்டதாக ஆகிவிடுகிறது. அப்படியிருக்க, அவருக்கு மரணத்தண்டனை அளிப்பது என்பது எவராலும் ஏற்க முடியாதது. மனித உரிமை குறித்துப் பெரிதும் விவாதிக்கப்பட்டுப் பேசப்படும் இருபத்தோறாம் நூற்றாண்டில் வாழும் தற்காலச்சூழலில் இணையதளத்தில் எழுதிய அவதூறானக்கருத்துக்கு மரணத்தைத் தண்டனையாக விதிப்பது என்பது மிக மோசமான முன்னுதாரணமாகும். அன்பையும், இரக்கத்தையும், கருணையையும், பரிவையும் போதிக்கும் மகத்துவம் மிகுந்த மனிதநேய மார்க்கமான இசுலாத்தை அரச மதமாக ஏற்றிருக்கும், மக்களை நன்னெறிப்படுத்தி வழிகாட்டிய போற்றுதற்குரிய இறைதூதர் நபி பெருமானார் பிறந்த பெருமைமிக்க சவுதி நாடு இத்தகையத் தவறை செய்து, வரலாற்றுப்பிழையை நிகழ்த்திவிடக்கூடாது. ஒரு தவறுக்கு அதனைவிடப் பெருந்தவறு என்பது ஒருபோதும் நீதியாகாது என்பதை சவுதி நாட்டின் ஆட்சியாளர் பெருந்தகைகள் உணர வேண்டும்.
‘நீங்கள் பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்’ எனவும், ‘பிறரை மன்னிப்பதன் மூலம் நம்முடைய பாவங்களுக்கு இறைவனின் மன்னிப்பைப் பெற முடியும்’ என்று போதித்த போற்றுதற்குரிய பெருமகனார் இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள், தமது இறுதிப் பேருரையில், “தனது நாவாலும், கைகளாலும் சக மனிதர்களுக்குத் தீமை விளைவிக்காதவரே மனிதர்களில் சிறந்தவர்!” என்கிறார். மேலும், மன்னிப்பை இறைவனின் உயர்ந்த பண்புகளில் ஒன்றாகவும், மனிதன் தன்னுள் வளர்த்துக் கொள்ள வேண்டிய குணாதிசயமெனவும் உலகுக்கு உரைக்கிறார். நபி பெருமானார் காட்டிய அத்தகைய உயர்ந்த அன்பு வழி நின்று, அந்த மன்னிப்பை தம்பி அனோஜனுக்கு சவுதி நாட்டின் அரசு வழங்க வேண்டும் என்பதுதான் உலகெங்கும் வேர்பரப்பி வாழும் தமிழ்த்தேசிய இனத்தின் எதிர்பார்ப்பும், கனிவானக் கோரிக்கையுமாகும்.
ஆகவே, உலகம் தழுவி வாழும் மானுடப்பற்றாளர்களும், சனநாயகவாதிகளும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தம்பி அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் இம்மரணத்தண்டனைக்கு எதிராகக் குரலெழுப்ப வேண்டும் எனவும், தம்பி சிவராசா அனோஜனை மரணத் தண்டனையிலிருந்து விடுவிக்க உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் அவையும் சவூதி அரசோடு பேசி, தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சியை எம் மக்கள் நிராகரிக்கவில்லை,💯
நமக்கான இயற்கை வளத்தை அழிக்கும் கொடுங்கோலிடம் ஆட்சி அதிகாரத்தை ஏமாந்து கொடுத்து விட்டது, கொடுமை🤦 @Seeman4TN@_ITWingNTK