தேர்தலுக்கு ஆயத்தமாகிட #தமிழகம்_மீட்போம் கூட்டங்கள்!
7.5% இடஒதுக்கீடு, பள்ளி - கல்லூரிகள் திறப்பு, ஆன்லைன் சூதாட்���த்திற்கு தடை என திமுக முன்னெடுத்த பிறகு ஆளுங்கட்சிக்கு புத்தி தெளிகிறது.
தமிழகத்தின் உரிமைகளைத் தொலைத்த அதிமுக-விடமிருந்து தமிழகத்தை மீட்போம்!
#LettertoBrethren
#GajaCyclone பாதித்த திருவாரூர் மாவட்டப் பகுதிகளை இன்று பார்வையிட்டு, பாதிப்புக்குள்ளான மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கினேன்.
பல கிராமங்களில், ‘இழப்பீட்டை ஆய்வு செய்ய அரசு தரப்பில் இருந்து ஒருவர் கூட வரவில்லை’ என மக்கள் வேதனை தெரிவித்தனர்.
இனியாவது அரசு செயல்படுமா?
காவிரி என்பது வெறு��் ஆறு அல்ல; நம் தமிழ்நாட்டுக்குத் தாய். தாயை காக்க வேண்டியது நம் பொறுப்பு. மாநில அரசை மட்டுமல்ல, மத்திய அரசையும் மிரள வைத்த நேற்றைய திருச்சி கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்த அனைவருக்கும் நன்றி.
திருச்சியில் தொடங்கியது திக்கெட்டும் பரவட்டும்!
நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்வியலை பேசும் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய ”சஞ்சாரம்” நூலுக்கு இந்திய அரசின் #SahityaAkademi விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழுக்கும், தமிழ் எழுத்துலகிற்கும் பெருமை சேர்த்திருக்கும் அவர் ��ென்மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன்.
தமிழ்நாட்டின் மண் வளம் காக்க தன் வாழ்வை அர்ப்பணித்த ‘நெல் ஜெயராமன்’ மறைவெய்திய செய்தியறிந்து அவரது உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தினேன்.
இயற்கையை சீர்கெடச் செய்யாமல் அதனை மேம்படுத்தும் வழிகளை நாம் மேற்கொள்வதே நெல் ஜெயராமனுக்கு என்றென்றும் புகழ் சேர்க்கும் பணியாக அமையும்!
இன்று நடைபெற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் #Mekedatu தடுப்பணைக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து - மத்திய அரசின் பழ��வாங்கல் நடவடிக்கைகளையும், மாநில அரச�� இவ்விவகாரத்தில் செய்யத் தவறிய விஷயங்களையும் குறிப்பிட்டு உரையாற்றினேன்!
சட்டமன்றத்தில் #CycloneGaja பாதிப்பு குறித்தும், மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணம் குறித்தும் விவாதிக்க சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை நாளை வரை நீட்டிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தேன்.
மக்களின் வலியை உணராமல் இந்த அரசு அக்கோரிக்��ையை ஏற்காதது கடும் கண்டனத்துக்குரியது!
மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியான நம்பிக்கை உடைய மூத்த தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு இ���ிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
கழக ஆட்சியின் கோரிக்கையை ஏற்று தமிழ்மொழிக்கு ‘செம்மொழி’ அந்தஸ்து பெற்றுத்தர அடித்தளமிட்ட இவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்!
#HappyBirthdaySoniaGandhi
Thank you Thiru @RahulGandhi for your warm words.
Likeminded ideologies lead to meaningful discussions and fruitful outcomes.
The Congress and DMK alliance will always work towards strengthening the unity and inclusivity of our country.
2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருதுபெறும் திருமதி @KanimozhiDMK அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள்.
கழக MP-க்கள் அனைவரும் ஜனநாயக கடமையில் சிறப்பாக செயல���படுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த விருது! அவர் மென்மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன்.
டிசம்பர்-3 மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
ஆட்சியில் இருப்போர் இவர்களது நியாயமான போராட்டங்களை மனிதாபிமானத்தோடு அணுகுவதோடு, மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய சம வாய்ப்பை உறுதி செய்யும் நிலையான சமுதாய வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்!
#MekedatuDam பிரச்னையில் தமிழகத்துக்கு துரோகமிழைத்த மத்திய அரசைக் கண்டித்து, திருச்சியில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
போராடுவோம்! உரிமையை நிலைநாட்டும் வரை போராடுவோம்!
தேர்தல் ஆணையத்தையும், உயர் நீதிமன்றத்தையும் அவமதிக்கும் விதத்தில் #RKNagarByElection ‘பணப்பட்டியல்’ வழக்கின் FIR-யை ரத்து செய்திருக்கிறது எடப்பாடி அரசு.
இந்தச் சதிக்கு காரணமான முதல்வர் உள்ளிட்ட அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுப்பதோடு, விசாரணையை #CBI -க்கு மாற்ற வேண்டும்!
நாட்டுக்கே உணவளித்த டெல்டா மக்கள் #CycloneGaja க்குப் பிறகு, தங்களின் 30 ஆண்டுகால சேமிப்பை தொலைத்து உணவுக்காக நடுவீதியில் தவிக்கும் அவலம் பிரதம���் @narendramodi க்கு கேட்கவில்லையா?
சொல்லொண்ணாத் துயரத்தில் மக்கள் தவிக்கிறார்கள். இனியாவது மத்திய,மாநில அரசுகள் விரைந்து செயலாற்றவும்!
படிப்பது, எழுதுவது, பிரசாரம் செய்வது, பத்திர��கை பணி, கல்விப்பணி என ‘தமிழினப் பல்கலைக்கழகமாக’ செயல்பட்டு அகவை 86 காணும் ஆசிரியர் ஐயா அவர்களை வணங்கி மகிழ்கிறேன்.
மதவாத ஆபத்தும், சாதிவெறியும் தலைதூக்கும் இந்தக்
காலக்கட்டத்தில் ஆசிரியரின் வழிகாட்டுதல்��ள் அதிகம் தேவை!
#Sterlite ஆலையை சில நிபந்தனைகளோடு செயல்பட அனுமதிக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தருண் அகர்வால் குழு பரிந்துரைத்திருப்பது தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் அவமானம்!
இப்படி நடக்கும் என்பதால் தான், அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்!