@mkstalin நீங்கள் போடும் காலை உணவு தேவையில்லாத திட்டம் அதை யாரும் சாப்பிட வில்லை முழுவதும் வேஸ்ட் ஆகுது முதலவரே இந்த திட்டத்தை திரும்ப பெற ஆலோசோனை பண்ணவும் முதலவரே அதில் முதலீடு போடும் பணம் ஆகியவை எல்லாமே வெஸ்ட் முதலவரே...
@mkstalin எது திரவிட நாடு அதுக்கு ஒரு இனம் ,மொழி உண்டா முதல்வரே இருந்தால் அந்த இனத்தை வைத்து அரசியல் பண்ணுங்க முதல்வரே நாங்கள் தமிழக மக்கள் சாதி மத கொள்கை கோட்பாடு உடன் வாழ்ந்து வருகிறோம் அப்படிபட்ட மக்களை வைத்து ஏமாற்றி திராவிடம் நாடு யாரும் ஏற்றிக்கொள்ளவில்லை
தூக்கு தண்டனை தொடர்பான குடியரசுத் தலைவரின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு கூடாதா? மக்களின் உயிர்வாழும் உரிமையை பறிக்கக் கூடாது!!
குற்றவழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனு மீது, குடியரசுத் தலைவர் எந்த முடிவை எடுத்தாலும் அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; குடியரசுத் தலைவரின் முடிவு குறித்து வினா எழுப்பக் கூடாது; உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடாது என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத் திருத்த முன்வரைவின் 473-ஆம் பிரிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு விபரீதமானது. குற்றவழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட அப்பாவிகள் மற்றும் மனம் திருந்தி வாழ நினைப்பவர்களின் வாழ்வுரிமையக் பறிக்கும் செயலாகும்.
குற்றவழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கடைசி நம்பிக்கையாக இருப்பது குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்யப்படும் கருணை மனுக்கள் தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72-ஆம் பிரிவின்படி, ஒருவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. ஆனால், இந்த அதிகாரத்தை பல தருணங்களில் குடியரசுத் தலைவர்கள் முறையாக பயன்படுத்துவதில்லை; பல்வேறு தருணங்களில் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதை பல ஆண்டுகள் தாமதப்படுத்தி விட்டு, இறுதியில் தண்டனையை உறுதி செய்கிறார்கள். சில நேரங்களில் அரசியல் சூழலை பொறுத்தும் குடியரசுத் தலைவர்கள் முடிவெடுக்கின்றனர். அவர்களின் முடிவை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.
கருணை மனுக்கள் மீதான குடியரசுத் தலைவரின் முடிவே இறுதியானது என்று புனிதப்படுத்துவதன் மூலம், குற்றவழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களின் வாழும் உரிமையை மத்திய அரசு பறிக்க நினைக்கிறது. பல தருணங்களில் குடியரசுத் தலைவர்களால் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் போது அதை எதிர்த்து செய்யப்படும் மேல்முறையீடுகளை போது, அதை கனிவுடன் பரிசீலிக்கும் உச்சநீதிமன்றம், தண்டிக்கப்பட்ட மனிதர்களின் தண்டனையை குறைத்தோ, ரத்து செய்தோ ஆணையிடுகின்றன. அண்மைக்காலங்களில் கூட , தூக்குமேடைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பலர் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் காப்பாற்றப்பட்டனர். இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் இத்தகைய வாய்ப்பு மக்களிடமிருந்து பறிக்கப்படக் கூடாது.
உலகில் கிட்டத்தட்ட 150 நாடுகளில் சாவுத்தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. இந்தியாவிலும் சாவுத் தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். சாவுத்தண்டனை ஒழிப்பை நோக்கி முன்னேற வேண்டிய நாம், தூக்குத் தண்டனையிலிருந்து குற்றவாளிகளை நீதிமன்றத்தின் மூலம் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகளை பறிப்பதை நோக்கி பின்னேறக் கூடாது.
தூக்கு தண்டனையை குறைக்கக் கோரும் கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர்கள் முடிவெடுப்பதில் ஏராளமான அரசியல் இருக்கும் நிலையில், அவர்களின் முடிவே இறுதியானதாக இருக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திடம் தான் இருக்க வேண்டும். எனவே, இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் இது தொடர்பாக செய்யப்படவுள்ள திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.
#RightToLife #ObolishCapitalPunishment
ஆவின் பால் கொள்முதல் ஓராண்டில் 10 லட்சம் லிட்டர் வீழ்ச்சி : கொள்முதல் விலையை உயர்த்தி, கொள்முதலை அதிகரிக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் ஆவின் பால் விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் 7 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 14.96 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் விற்பனை இப்போது 16.10 லட்சம் லிட்டராக அதிகரித்திருக்கிறது. ஆவின் பால் விற்பனை அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
ஆவின் பால் விற்பனை அதிகரித்திருக்கும் நிலையில், ஆவின் பால் கொள்முதல் கடுமையாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 38.21 லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதல், நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் 28.78 லட்சம் லிட்டராக குறைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் வெறும் 12% மட்டும் தான் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் வலுவான கட்டமைப்பைக் கொண்டுள்ள ஆவின் நிறுவனத்தால், மொத்த உற்பத்தில் 12 விழுக்காட்டை மட்டுமே கொள்முதல் செய்ய முடிகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டில் 8,000-க்கும் கூடுதலான கிராமங்களில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் இன்னும் தொடங்கப்படவில்லை. அதனால், அந்த கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் பால் முழுவதும் தனியார் நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆவின் நிறுவனத்தை விட, தனியார் நிறுவனங்கள் பாலுக்கு கூடுதல் கொள்முதல் விலை வழங்குவதும் இதற்கான காரணங்களில் மிகவும் முதன்மையானதாகும். இந்த குறைகளை களையாவிட்டால் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் அளவை அதிகரிக்க முடியாது.
ஆவின் பால் விற்பனையை ஓராண்டுக்குள் 7% அதிகரிக்க முடிகிறது என்றால், ஆவின் பால் மற்றும் பால் பொருட்களுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு இருப்பதாகத் தான் பொருள். மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு ஆவின் நிறுவனம் அதன் உற்பத்தியை அதிகரித்தால் அதன் விற்பனையையும், வருவாயையும் கணிசமாக அதிகரிக்க முடியும். ஆனால், பால் கொள்முதலை அதிகரிக்காமல், இவற்றை சாதிக்க முடியாது.
ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயர்த்துவதன் மூலம் தான், பால் கொள்முதலை அதிகரிக்க முடியும். பால் கொள்முதல் அதிகரிக்கப்பட்டால், ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை பெருமளவில் அதிகரிக்கும். அதுவே ஆவின் நிறுவனம் தமிழக பால் சந்தையில் முதலிடத்தை பிடிக்க முடியும். அதைக் கருத்தில் கொண்டு பால் கொள்முதலை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆவின் நிறுவனமும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும்.
@CMOTamilnadu @AavinTN
"பாமக வினர் மட்டும்தான் சோறு சாப்பிடுகிறார்களா.? அன்புமணி அவர்களின் பக்கம் நில்லுங்கள்.!"
- காங்கிரஸ் சிறுபான்மை பிரிவின் முகம்மது இப்ராகிம் பேட்டி
#NLC#NLCProtest
“என்.எல்.சி விரிவாக்கத்தை தடுக்க முடியாது” – பாஜக தலைவர் அண்ணாமலை
என்.எல்.சி விரிவாக்கத்தை தடுக்க முடியாது – திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு
“அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு” – பொன்மொழி
#NLC#GoBackNLC#NLCProtest
கலவரம் செய்த காவல்துறையினரை விட்டுவிட்டு - பாமகவினரை தேடித்தேடி கைது செய்வது நியாயமா?
தூத்துக்குடிக்கு ஒரு நியாயம்! நெய்வேலிக்கு வேறு நியாயமா?
தமிழரின் மண்ணை, மக்களை காக்கவும், எதிர்கால உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் போராடியவர்கள் மீது கொடுங்கோன்மையை ஏவும் திமுகவுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டும் காலம் வரும்...
படம்: கலவரத்தை நடத்த காவல்துறை தயாரான காட்சி
#NLC #NLCProtest
போராட்டம்னா மற்ற கட்சிகளை போல போலீஸ் அனுமதி பெற்று பாதுகாப்பா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கூடி முழக்கம் போடுவது அல்ல..
சம்பவ இடத்துக்கே சென்று சம்பவம் செய்வது தான் பாமக ஸ்டைல்..
#PattaliMakkalKatchi#AnbumaniRamadoss#NLC#GoBackNLC#Neyveli
என்எல்சி நிலம் எடுக்கும் விவகாரம் : வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி
அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற எனது முறையிட்டை ஏற்று உயர் நீதிமன்றம் அனுமதி வழக்கு மாலை 2.15 மணிக்கு நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியன் முன்பாக விசாரணைக்கு வர உள்ளது
“எல்லாம் நாடகமா கோப்பால்...?” (திமுகவின் என்.எல்.சி மூன்றாம் சுரங்க எதிர்ப்பு)
‘என்.எல்.சி 3ஆவது சுரங்க நடவடிக்கைகளை திரும்பப் பெறுமாறு தமிழ்நாடு அரசு இதுவரை மத்திய அரசிடம் எந்தக் கோரிக்கையும் முன்வைக்கவில்லை’ என்று நாடாளுமன்றத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி விளக்கம் அளித்துள்ளார்.
இதே #NLC 3ஆவது சுரங்கத்தை எதிர்த்து 3.1.2019 அன்று தமிழக சட்டமன்றத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். 7.2.2019 அன்று திமுகவின் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில் கம்மாபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
எல்லாம் நாடகமா கோப்பால்...?
#NLCProtest
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி கைது!
மூன்றடுக்கு பாதுகாப்பையும் மீறி பாமகவினர் என் எல் சி உள்ளே செல்ல முயற்சி, பாமக தலைவர் அன்புமணி தலைமையில் தீவிர போராட்டம்!
போலீஸ் வாகனம் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு! #PMKAgainstNLCLandGrab#NLCIndiaAtrocities#GoBackNLC#Anbumani#NLC
.@AIADMKOfficial சட்டவிதிகளின்படி,11.7.2022 அன்று நடைபெற்ற சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பினை ஒன்றரைக் கோடி கழகத் தொண்டர்கள் சார்பாக மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது1/2
நீட் தேர்வில் மூன்றாவது முறையாக தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக தென்காசி மாவட்டம் குலசேகரமங்கலத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது குடும்பத்திற்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்!(1/4)
#NEETkills