3 நாட்களில் 1200 கிமீ பிரயாணம் செய்து 10 தனியார் சட்ட கல்லூரிகளை ஆய்வு செய்து அங்கீகாரம் கொடுத்ததாக ஒரு மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. இந்த மோசடியான ஆய்வில் இந்த தனியார் சட்டக்கல்லூரிகள் செய்துள்ள விதி மீறல்களை எப்படி கண்டுபிடித்திருப்பார்கள். அந்த கல்லூரிகள் சமர்ப்பித்துள்ள பேராசிரியர்கள் பட்டியல் உண்மையா என்பதை கூட சோதனை செய்திருக்க மாட்டார்கள். ஆகையால் ஒவ்வொரு தனியார் சட்டக் கல்லூரி பேராசிரியர்கள் பட்டியலையும் இங்கே வெளியிடுகிறோம். அந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த பட்டியலை சரி பாருங்கள். இந்த பட்டியலில் மோசடி செய்யப்பட்டிருந்தால் அறப்போர் இயக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள்.
தொடர்புக்கு - 7200020099, [email protected]
#skplawcollege
இந்த மோசடி குறித்த விரிவான வீடியோ - https://t.co/pi4gr8UOLj