@me_lilipoo sir revenue dept or rto no other go they need to meet again. everyone do the same
but in doctors if one doesn't see other is ready to see
if pvt shuts govt is there. if govt no pvt thy go
padikathavan ellam dr suthuran
ஒரு போர் நடக்கிறது. எண்ணற்ற வீரர்கள் காயம் பட்டு வீழ்கிறார்கள். படையணியில் இருப்பதோ ஒன்றிரண்டு மருத்துவர்கள். அந்தச் சூழலில், அவர்கள் உயிருக்குப் போராடும் ஒரு வீரரை எவ்வளவு விரைவாக காப்பாற்ற முடியுமோ காப்பாற்றி விட்டு அடுத்த வீரருக்குச் சிகிச்சை அளிக்க ஓடுவார்கள்.
அந்தப் போர்க்களத்தில் உட்கார்ந்து வீரருக்கு விலாவரியாக சிகிச்சை முறைகளை விளக்கிக் கூறுவதோ ஆறுதலாக நான்கு வார்த்தைகள் பேசுவதோ 8 மணி நேரம் வேலை முடிந்த உடன் வீட்டுக்குப் போவதா அவர்கள் பணி வரம்பில் இருக்காது.
இன்று நாம் அனுபவிக்கும் பல நுட்பங்கள் யாவும் இராணுவத் தேவைகளுக்காகக் கண்டுபிடிக்கப்பட்டவையே. இன்றைய நவீன மருத்துவத்தின் நுட்ப, பணியிட முறைகளும் கூட இராணுவ வீரர்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் இருந்தே வளர்ந்து வந்திருக்கலாம்.
ஒரு மருத்துவரின் கடமை நோயாளிக்குச் சரியான சிகிச்சை அளிப்பது மட்டுமே. அமைதிக் காலத்தில் பொதுமக்களுக்கு அவர்களின் நோய் பற்றி விளக்கிக் கூறுவது கூட, அடுத்து அவர்கள் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சையும் தொடர் கவனிப்புகளும் உரிய பயன் அளிக்க வேண்டும் என்கிற அடிப்படையால் எழுபவையே.
முன்பெல்லாம் எங்கள் கிராமத்தில் இருந்து தஞ்சை, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு யாராவது நோய்வாய்ப்பட்டவர்கள் சென்றால், உடன் இரத்த உறவுகள் செல்கிறார்களோ இல்லையோ, ஊரில் ஓரளவு படித்து வெளியே போய் வரும் பழக்கம் உடைய ஒரு அண்ணனோ, மாமாவோ உடன் சென்று தங்கி இருப்பார்கள். அவர்கள் மருத்துவர் சொல்வதைப் புரிந்து கொண்டு உறவினர்களுக்கு எடுத்துரைப்பார்கள். இதைச் செய்வதற்கு என்றே நேர்ந்து விடப்பட்டது போல ஊருக்கு ஓரிருவர் இருப்பார்கள்.
இன்று ஊரெங்கும் கடை விரித்திருக்கும் போலி மருத்துவர்கள், பரம்பரை மருத்துவர்கள் நன்றாக இனிக்க இனிக்க மணிக்கணக்கில் பேசுகிறார்கள். வீட்டில் ஆறுதலாகப் புலம்பிப் பேசக் கூட ஆள் இல்லாத மக்களுக்கு அந்தப் பேச்சு இனிக்கிறது. அத்தகைய மருத்துவர்கள் தான் நல்லவர்கள் என்று மனதார நம்புகிறார்கள்.
ஆனால், உண்மையான மருத்துவம் படித்து, ஒரு நாளைக்கு நூற்றுக் கணக்கான மக்களைக் கவனிக்கும் அரசு மருத்துவர்களுக்கு அவ்வளவு நேரம் கிடையாது. உங்களுடன் பேசிக் கொண்டிருக்கும் சில மணித்துளிகளில் உயிருக்குப் போராடும் இன்னும் மற்ற பலரையும் கவனிக்க வேண்டிய பணிச்சுமை அவர்களுக்கு உண்டு. உங்களுக்கோ உங்கள் ஒரு உறவினருக்கோ அவர்கள் விளக்க முடியும். தினம் தினம் புதிதாக யாராவது வந்து விளக்கம் கேட்டுக் கொண்டே இருந்தால், அவர்கள் எல்லோருக்கும் அவர்களால் விளக்க முடியாது.
இப்போது இருப்பதை விட நல்ல கவனிப்பு கிடைக்க வேண்டும் என்றால், அரசு தான் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். ஆனால், ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளின் தனியார் மயம் கொடிகட்டிப் பறப்பதைப் போலவே, தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒப்பந்தப் பணி, தனியார் மயத்தைத் தள்ளும் வேலையைக் கனக்கச்சிதமாக அதிகாரிகள் நிறைவேற்றி வருகிறார்கள். இதை அரசியல் அடிப்படையில் தனியே அணுக வேண்டும்.
அது வரை, மருத்துவர் என்னுடன் சிரித்துப் பேச வில்லை, செவிலியர் முறைக்கிறார், ஆயாம்மா என்னிடம் டீ குடிக்க 5 ரூபாய் கேட்டார் என்பதை எல்லாம் ஒரு குறையாக அரசு மருத்துவத் துறை மீது சுமத்த வேண்டாம்.
அது ஏற்கனவே மனம் நொந்து அரசுப் பணியில் இருக்கும் மருத்துவர்களை, இந்தக் கட்டமைப்பை விட்டே வெளியேற வைக்கும். ஒருவர் வெளியேறினால் அந்த இடத்தை நிரப்ப நான், நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டு ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்களே என்று எண்ணலாம். ஆனால், இன்று தான் பணியில் சேரும் மருத்துவருக்கும் 30 ஆண்டுகளாக அரசுத் துறையில் உள்ள மருத்துவரின் நிறுவன அறிவுக்கும் நினைவுக்கும் (Institutional memory and knowledge) பெரும் வேறுபாடு உண்டு. அந்த அறிவு தான் கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் நமக்குக் கை கொடுக்கும்.
இன்று தனியார் மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான சிகிச்சைகளைத் தரத் தயங்குகிறார்கள். ஏனெனில், ஏதாவது பிரச்சினை என்றால் அடுத்த நொடி மருத்துவர்களைத் தாக்குகிறார்கள். மருத்துவமனையை அடித்து நொறுக்கிறார்கள். அப்படி அவர்கள் கை விரிக்கும் எல்லா சிக்கலான நோயாளிகளையும் அரசு மருத்துவர்கள் தான் துணிந்து பார்க்கிறார்கள்.
அரசு மருத்துவர்களும் தங்கள் உயிருக்கு அஞ்சி கை விரிக்கத் தொடங்கினால், நாம் எல்லோரும் நேரே சுடுகாட்டில் போய் தான் படுத்துக் கொள்ள வேண்டும்.
# pandian cinemas Karaikudi
becoming worst
staffs rude attitude and poor response highly condemned
on 17/08/2024 night show movie thanglan was houseful from the start of the movie ac was not functioning inspite of repeated complaints it was not addressed , staffs were arrogant
# pandian cinemas Karaikudi
becoming worst
staffs rude attitude and poor response highly condemned
on 17/08/2024 night show movie thanglan was houseful from the start of the movie ac was not functioning inspite of repeated complaints it was not addressed , staffs were arrogant
மழை கொட்டினாலும் போராட்டம்!!!
We TN Govt doctors want
GO 354 implementation,
293 GO modifications with arrears &separate PG Increment GO.
16 Nov 2023 Tomorrow (Thursday) 2 PM@Omanthurar Multi-speciality Hospital,Kalaignar's Statue
Every Dr participation brings victory!!
FOGDA
தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்!
ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கு இணையாக, தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்ற அரசு மருத்துவர்களின் கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் சம ஊதியக் கோரிக்கை என்பது நியாயமானது. ஒன்றிய அரசிலும், மாநில அரசிலும் பணியில் சேரும் மருத்துவர்களுக்கு ஒரே மாதிரியாக ரூ.56,100 ஊதியம் வழங்கப்படும் நிலையில், பணி ஓய்வின்போது ஒன்றிய அரசு மருத்துவர்களை விட மாநில அரசு மருத்துவர்களுக்கு ரூ.45,000 குறைவாக வழங்கப்படுகிறது.
குறிப்பாக, 4,9,13,20 ஆண்டுகள் கழித்து ஒன்றிய அரசு மருத்துவர்கள் காலம் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் பெறுகின்றனர். இதன் விளைவாக, 7வது ஊதியக் குழுவில், 13 ஆண்டுகள் முடித்து 14வது ஆண்டில் ரூ.1,23,000ஐ, ஒரு ஒன்றிய அரசு மருத்துவர் அடிப்படை ஊதியமாக பெறுகின்றார்.
ஆனால், தமிழ்நாட்டில் காலம் சார்ந்த ஊதிய உயர்வு மறுக்கப்படுவதால், ஒரு ஒன்றிய அரசு மருத்துவர், 4 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை, நம் மாநில அரசு மருத்துவர் 15 ஆண்டுகள் கழித்தும், ஒன்றியத்தில் 9 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை 17 ஆண்டுகள் கழித்தும், ஒன்றியத்தில் 13 ஆண்டுகள் கழித்தும் பெறுகின்ற ஊதிய உயர்வை, நம் மாநில அரசு மருத்துவர் 20 ஆண்டுகள் கழித்தும் பெறுகின்ற சூழ்நிலை நிலவுகிறது.
இதன் காரணமாக, ஒன்றிய அரசு மருத்துவர் 13 ஆண்டுகளில் பெறுகின்ற ரூ.1,23,00ஐ அடிப்படை ஊதியமாக பெறுகின்ற நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவர் ரூ.86,000ஐ மட்டுமே அடிப்படை ஊதியமாக பெறுகின்றனர்.
அதாவது, ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கு முறையே 4, 9, 13, 20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் வழங்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும், தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு 8, 15, 17, 20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் வழங்கப்படுவதுதான் இந்த ஊதிய முரண்பாட்டுக்கு காரணம்.
இந்த அநீதிக்கு, அரசாணை எண் 354இல் உள்ள எதிர்கால சரத்துகளைப் பயன்படுத்தி தீர்வு காண முடியும். ஆனாலும், இந்தக் கோரிக்கை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வராதது ஏமாற்றம் அளிக்கிறது.
மருத்துவத் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்வதற்குக் காரணம் அரசு மருத்துவர்கள் தான். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது ஒரு அரசின் கடமையாகும். திமுக ஆட்சியில் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அரசு மருத்துவர்கள் நம்பி இருக்கின்றனர்.
எனவே, தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு அவர்களின் பணிக்காலத்தின் 5, 9, 11, 12 ஆகிய ஆண்டுகளில் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு, கல்வி தகுதிக்கேற்ற அரசு பணி வழங்க வேண்டும்.
தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, போராடும் மருத்துவர்கள் மீது போடப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.
ஞாபகம் வருதா ஞாபகம் வருதா கொடுத்த வாக்குறுதி ஞாபகம் வருதா
கலைஞர் அரசாணை 354 விரைந்து
நிறைவேற்றி தமிழக அரசு மருத்துவர்களின் வாழ்வில் விடியலை உண்டாக்கிடு.
@kannanperiyas11@arivalayam டாக்டர் கலைஞர் ஐயா பேனாவினால்,
தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு கொடுத்த
அரசாணை 354 மறுசீராய்வு செய்து, காலம் சார்ந்த பதவி மற்றும் ஊதியம்,PB4@12 ஆண்டுகளில்
தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு
வழங்கிட மாண்புமிகு. முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஐயா உத்தரவு வழங்கிட வேண்டும்.
@arivalayam டாக்டர் கலைஞர் ஐயா பேனாவினால்,
தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு கொடுத்த
அரசாணை 354 மறுசீராய்வு செய்து, காலம் சார்ந்த பதவி மற்றும் ஊதியம்,PB4@12 ஆண்டுகளில்
தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு
வழங்கிட மாண்புமிகு. முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஐயா உத்தரவு வழங்கிட வேண்டும்.
ஞாபகம் வருதா ஞாபகம் வருதா கொடுத்த வாக்குறுதி ஞாபகம் வருதா
கலைஞர் அரசாணை 354 விரைந்து
நிறைவேற்றி தமிழக அரசு மருத்துவர்களின் வாழ்வில் விடியலை உண்டாக்கிடு.
Today we meet our honourable new Health Secretary @GSBediIAS sir at secretariat regarding various issues in DAGDA.
Thank you Prof Kannan sir,DAGDA Sectetary Dr.Prabu sir & Dr.Palaniappan sir💐
Dr.Prabu Manoharan MS Ortho
President-DAGDA.