கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த இனமான தமிழர் எனும் தேசிய இனத்தின், உயிராகவும், உணர்வாகவும், அறிவாகவும், ஆற்றலாகவும், முகமாகவும், முகவரியாகவும் திகழும் நம் தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 72ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளை உலகெங்கும் பரந்து வாழும் எனது உயிருக்கினிய தாய்த்தமிழ்ச் சொந்தங்களோடு பேரன்பும் பெருமிதமும் பொங்கப் பகிர்ந்துகொள்கிறேன்.
மனித இனத்தின் நாகரீகம் என்பது நதிக்கரைகளில் தோன்றியது என்பார்கள். ஆனால் மனித இனத்தின் வளர்ச்சி சில தனி மனிதர்களின் உள்ள ஊக்கத்திலிருந்துதான் பிறந்திருக்கிறது. அந்த தனி மனிதர்கள் தான் உலகத்தை இயக்கும் உந்து சக்திகளாக திகழ்ந்து உலகத்தை தன்னம்பிக்கையால் சுழல வைத்திருக்கிறார்கள். இந்த பூமி பந்தில் ஆதிக்கங்களும் அடிமைத்தனமும் எப்போதெல்லாம் அதிகாரத்தின் பேரில் உருவாகிறதோ அப்போதெல்லாம் வரலாற்றின் கதாநாயகர்கள் தோன்றி பூமியின் சமநிலையை காப்பாற்றி இருக்கிறார்கள். தமிழரின் நீண்ட நெடிய வரலாற்றில் எத்தனையோ வீர பெருமக்கள் தோன்றி மண்ணைக் காக்க மொழியை மீட்க தங்கள் வாழ்க்கையே அர்ப்பணித்து நின்று இருக்கிறார்கள். அப்படி தோன்றிய பெருமக்களில் உயரிய இடத்தில் மங்கா புகழோடு ஒளி வீசி நம் இதயங்களில் நிறைந்து வாழ்பவர் தான் என் உயிர் அண்ணன் தமிழ் தேசியத்தின் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள்.
உலகத்தில் அனைவராலும் கைவிடப்பட்ட தேசிய இனமான தமிழர் என்ற இனத்திற்கு இறுதியாக கிடைத்த ஒற்றை நம்பிக்கை நம் தேசிய தலைவர் அவர்கள். புராணங்களிலும் இதிகாசங்களிலும் காப்பியங்களிலும் வரலாற்றின் தொடர்ச்சியான பாதைகளிலும் வஞ்சிக்கப்பட்ட இனமான தமிழ் இனத்திற்கு வாராது வந்த மாமணிப்போல் வந்துதித்து அடிமை இருளை விரட்ட செங்கதிர் சூரியன் போல் சுடர் விட்டு ஒளிந்தவர் நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள்.
நூலகங்களிலும் வரலாற்றின் காப்பகங்களிலும் உறைந்திருக்கின்ற
இறந்த காலத்தின் ரத்தம் தோய்ந்த ஏடுகளில் மட்டுமே காணப்படும் சாகச வீரர்கள் உரு கொண்டு நிஜ வாழ்வில் எழுந்து வந்தது போல் அன்னை தமிழினத்தின் அடிமை விலங்கொடிக்க ஆயிரமாயிரம் மாவீரர்கள் எழுந்து வந்தார்கள். அவர்களுக்கெல்லாம் உள்ள சக்தியாய், உயிர் ஒளியாய் , தெளிவூட்டும் அறிவாய், வழிநடத்திய ஆற்றலாய், திகழ்ந்தவர் நம் உயிர் தலைவர்.
மானுட வரலாறு தோன்றிய காலத்தில் இருந்து ஆயிரமாயிரம் கவிஞர்களும் ஏடெடுத்து எழுதிய எழுத்தாளர்களும் கனவு கண்ட ஒரு லட்சிய நாடு ஒரு தனி மனிதனால் சமகாலத்தில் உருவாகி தழைத்து நின்றது. தனித் தமிழீழ சோசலிச குடியரசு என்கின்ற அந்தப் பெரும் கனவு நாட்டை பார்த்துப் பார்த்து செதுக்கி இப்படியும் ஒரு நாடு உலகத்தில் உண்டா என்று எல்லோரும் வியக்கும் வகையில் உருவாக்கி எழுப்பிக் காட்டியவர் நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள்.
தாய் மண் விடுதலைக்காக சொந்த மக்களையே ராணுவமாக கட்டி அறுபடை வீடு கொண்ட முருகன் இனத்தில் பிறந்த மக்கள் ஆறு படை கட்டி நிமிர்ந்த வரலாறு. நள்ளிரவு நேரத்தில் கூட இளம் பெண் ஒருவர் கழுத்து நிறைய நகைகளோடு பாதுகாப்பாக சென்று வீடு திரும்புகிற காந்தி கனவு கண்ட தேசம். அறம் சார்ந்த வாழ்வியல். பனை மரம் சார்ந்த பொருளாதாரம், திரும்பிய திசையெல்லாம் வளம் செழிக்கும் அறிவார்ந்த திட்டங்கள், வெற்றி ஒன்றே இலக்கு என்று துவக்கு ஏந்தி பாய்ந்த புலிகள் என கனவு நாட்டை கட்டி எழுப்பினார் நம் தலைவர்.
அகதி என்றும் அடிமை என்றும் ஓடி ஓடி உலகம் முழுக்க வாழ்கின்ற ஒரு இனத்திற்கு உள்ளங்கை அளவிற்கு நாடாக இருந்தாலும் அது வல்லரசு நாடுகளை விட வலிமையாக கட்டப்பட வேண்டும் என்பதில் கணக்கு பார்த்து கட்டி எழுப்பி சாதித்துக் காட்டிய சாதனைத் தலைவர் நம் உயிர் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள்.
அந்தக் கனவு நாட்டை தான் உலகத்தின் வல்லாதிக்க நாடுகள் அனைத்தும் சேர்ந்து கொண்டு சூறையாட நின்ற போது தாய் பருந்து எப்படி தன் குஞ்சுகளை காப்பாற்ற தவித்து நிற்குமோ அதேபோல களத்தில் இறுதிவரை நின்று தன் மண்ணின் விடுதலைக்காக இறுதிவரை போராடி நின்றார் எம் தலைவர்.
அதிகாரத்தால் விலை பேசப்பட்ட போதும், ஆயுதங்களால் மிரட்டப்பட்ட போதும், ஆசை வாக்குறுதிகளால் உள்ளத்தை அசைத்துப் பார்த்த போதும் துளியும் சமரசம் இல்லாமல் கொண்ட கொள்கைக்கு நேர்மையாக நின்று உயிரே போனாலும் உள்ளத்தில் நிலைத்த லட்சியத்திற்கு ஒருபோதும் துரோகம் செய்யாமல் உறுதியாய் நின்று இறுதியாய் சான்றானவர் நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள்.
"உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன் ஆனால் அந்த உயிரினும் விட உன்னதமானது எமது உரிமை எமது விடுதலை எமது கௌரவம்" என முழங்கிய சொற்களுக்கு அவரே சாட்சியாக நம் கண் முன்னால் நின்றது தான் வியப்பினால் அசையா நம் விழிகளில் உறைந்து போன வியப்பான உண்மை.
ஒரு இனத்தின் கண்ணீர் என்பது தனி மனிதனின் துயரமல்ல; அது தலைமுறைகளின் வலி. ஒரு இனத்தின் உரிமை பறிக்கப்படுவது என்பது அதன் நிலம் மட்டுமல்ல, அதன் மொழி, பண்பாடு, வரலாறு, எதிர்காலம் என அனைத்தும் அச்சுறுத்தப்படுவதற்குச் சமம். அந்த உண்மையைத் தனது வாழ்வின் வழியாக உணர்த்தியவராகத் தமிழர்களின் தேசிய உணர்வில் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் நிலைத்திருக்கிறார்.
எப்படியும் வாழலாம் என்ற எண்ணத்திற்கும், எதற்காக வாழ வேண்டும் என்ற இலட்சியத்திற்கும் இடையிலான வேறுபாட்டை அவரது வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது. ஒரு மனிதனின் வாழ்வு அவன் அடைந்த வெற்றிகளால் மட்டுமே அளவிடப்படுவதில்லை; அவன் எதற்காக வாழ்ந்தான், எவற்றைத் தனது வாழ்வின் உயர்ந்த நோக்கமாகக் கொண்டான், தனது காலத்தின் துயரங்களுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றினான் என்பவற்றாலும் அளவிடப்படுகிறது.
அந்த வகையில், தனது வாழ்வையே தமிழர் தேசிய உரிமை, தாயக உணர்வு, மொழி, இன அடையாளம் ஆகியவற்றோடு பின்னிப் பிணைத்துக்கொண்ட தலைவராக நம் உயிர் தலைவர் மேதகு வே பிரபாகரன் விளங்குகிறார்.
இனத்தின் துயரங்களுக்கு மத்தியில், தமிழர்களின் அரசியல் உரிமைகள், மொழி, கல்வி, சமூக சமத்துவம், பெண்களின் பங்கு, தன்னிறைவு போன்ற கனவுகளை முன்னிறுத்தி தமிழ் தேசிய கனவு தேசத்தை கட்டி எழுப்பினார்..
தமிழ்நாடு என பெயர் வைத்து இது தமிங்கில நாடாக தரங்கெட்டு போய் இருக்கும் நிலை கண்டு வருந்தி வாடி நிற்கையில் பொருளாதாரத் தடைகளும், போர்ச்சூழலும், நெருக்கடிகளும் சூழ்ந்திருந்த ஒரு நிலத்தில் அடிப்படை கல்வி முதல் உயர்கல்வி வரை தாய்மொழியில் கல்வி, வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தனித்தமிழ் பெயர்கள், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்கின்ற உயரிய நிலை என நிலை நிறுத்தி தமிழன் தலை நிமிர்த்தினார் நம் தலைவர்.
சாதியற்ற சமூகத்தை உருவாக்கி மாவீரர் துயிலுமிடங்களில் விதைத்த வீரத்திற்கே முதலிடம் என உருவாக்கி சாதியை சவக்குழியில் புதைத்து வீரத்தை புவியிலே நட்டவர் நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன்.
வீட்டிற்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலைக்கவிழுந்தார் என்கின்ற பாட்டன் பாரதியின் பாடல் வரிகளை நினைவாக்கி ஆணுக்கு பெண் சமம் அல்ல ஆணும் பெண்ணும் சமம் என்பதை சரித்திரத்தில் நிலைநாட்டி ஆண்களுக்கு நிகராக பெண்களையும் ஆயுதமேந்தி மண்ணின் விடுதலைக்காக போரிட வைத்த மகத்தான புரட்சியாளன் நம் தலைவன்.
என்னை நோக்கி வரும் எத்தனையோ அவதூறுகளுக்கு மத்தியில் இதயத்தில் பாயும் விமர்சன அம்புகளால் காயப்படும் காயங்களுக்கு நடுவில் இன்னும் நான் உறுதியோடு நிற்க ஒரே காரணம் அப்பழுக்கற்ற அந்த வீர மனிதனின் வீரமிக்க அந்த விழிகள் தான். தளர்வுகள் என்னைச் சூழும்போது, தடைகள் என் பாதையை மறைக்கும்போது, நம்பிக்கையின் ஒளி மங்கத் தொடங்கும்போது, என் மனத்தின் ஆழத்தில் எழும் அவரது நினைவே மீண்டும் என்னை எழுந்து நிற்கச் செய்கிறது.
அவரே எனக்கு அண்ணனாக எம் இனத்தின் மன்னனாக இருந்து என்னை வழிநடத்துகிறார். நான் திரும்பும் திசையெல்லாம் திருஉருவாக நின்று என்னை கைப்பிடித்து அழைத்து செல்கிறார். தோல்விகளாலும் காயங்களாலும் அவதூறுகளும் நான் துவளும் நேரங்களில் எல்லாம் என் உள்ளுக்குள் ஊற்றெடுத்து என்னை ஆற்றுப்படுத்தும் என் வாழ்வியல் துணை என் உயிர் அண்ணன் மேதகு வே பிரபாகரன் அவர்கள்.
என் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் அவரே நிறைந்திருக்கிறார். அசைக்க முடியா உறுதி கொண்ட எங்களது நிலைப்பாடுகளில் அவரே சத்தியமாய் உண்மையுமாய் மறைந்திருக்கிறார்.
எங்கோ பிறந்த என்னை, என் இனத்தின் மீதான பற்றும், மொழியின் மீதான காதலும், தேசிய உணர்வும் ஒரு பெரும் இலட்சியப் பாதையில் அழைத்துச் சென்றிருக்கின்றன. எண்ணற்ற இன்னல்களையும், துயரங்களையும், அடக்குமுறைகளையும் எதிர்கொண்டபோதும், என் மனத்தின் உறுதியைச் சிதைக்காமல் என்னைத் தொடர்ந்து இயங்கச் செய்கிற அந்த உணர்வின் மையத்தில் என் தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே பிரபாகரன் மட்டுமே இருக்கிறார்.
தமிழ்த் தேசிய இனத்தின் வரலாறு எழுதப்படும் போதெல்லாம் மேதகு வே பிரபாகரன் என்ற பெயர் மட்டும் தங்க எழுத்துக்களால் வைரப் பக்கங்களில் எழுதப்படும். அவர் இன்றி நமக்கு இறந்த காலமோ எதிர்காலமோ நிகழ்காலமோ இல்லை என்பதுதான் நிதர்சனம். அவரே நமக்கு தத்துவமாக வழிகாட்டியாக வழியாக மாறி நிற்கிறார். அவர் காட்டிய பாதையில் தமிழர் என்ற தேசிய இனம் தனக்கான இறையாண்மையை, விடுதலையை ஒரு நாள் வென்றெடுத்தே தீரும்.
என் உயிரோடு கலந்த அன்புத் தலைவர், என்னுயிர் அண்ணன், நம் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்களை உலகம் முழுக்க பரந்து வாழும் என் தாய் தமிழ் உறவுகளோடு மகிழ்ந்து பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ்த்தாய் வாழ்க!
தலைவர் பிரபாகரன் வாழ்க!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
என்னை துணை சபாநாயகரும் இன்ஸ்பெக்டரும் மிரட்டி தான் சமாதானம் பேசும் வீடியோவை எடுத்து வெளியிட்டார்கள். என்னை ரசபாநாயகர் தாக்கியதும் கொலை மிரட்டல் விடுத்ததும் உண்மை.
-பாதிக்கப்பட்ட கார்த்திக்
அதிகார திமிரோடு அயோக்கியத்தனமாக செயல்படும் ரவிசங்கர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா ?
பொய் வழக்கு போட்டு எதிர்க்கட்சிகளை கைது செய்யும் சோப்ளாங்கி அரசு இதற்கு மட்டும் வேடிக்கை பார்க்குமா ?
அதிகார திமிரில் ஆடாதிங்கடா ! அழிஞ்சி போயிருவீங்க !
@CMOTamilnadu@TVKVijayHQ
வாக்குச் செலுத்தியவர் தன்னுடைய குறைகளைத் தெரிவிக்க வீட்டுக்கு வந்தால் அவரை அடித்துத் துரத்தும் அடாவடித்தனம்!
துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கரின் அதிகாரத்திமிர்!
ஐந்து வயதில் திரைத்துறையில் அடியெடுத்து வைத்து,
இன்றுவரை தீராத கலைத்தாகத்தோடு வாழும் கலைஞன்!
எத்தனை சாதனைகள் படைத்தாலும், அடுத்ததாக என்ன புதுமையைப் படைக்கலாம் என்று தேடிக்கொண்டே இருக்கும் பசி அடங்காப் படைப்பாளி!
தன் நடிப்பால் பாத்திரங்களுக்கு உயிரூட்டி, தன் படைப்புகளால் தமிழ்த்திரையின் எல்லைகளை
விரிவாக்கி, கலை சிறக்கத் திரையுலகில்
ஆட்சி செய்யும் கலைவேந்தன்!
கலையின் நுட்பங்களை அறிந்து ஒவ்வொரு படைப்பிலும்
திரைக்கலைக்குப் புதுப் பாதை திறக்கும் கலைஞானி!
தமிழ்த்திரையின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தி, தனது நடிப்பால் மொழிகளைக் கடந்து மக்களின் உள்ளங்களை வென்ற உலக நாயகன்!
பார்போற்றும் பறம்பை
மண்ணின் மைந்தன், தமிழ்த்திரையுலகின் பெருமை, அன்பிற்கினிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கு
என் நெஞ்சம் நிறைந்த
பிறந்தநாள் வாழ்த்துகள்!
@ikamalhaasan
அண்ணனின் நடிப்பில் புதிதாக
உருவாகி வரும் ‘சண்டியர்’
திரைப்படம் மக்களின் பேராதரவைப் பெற்று மாபெரும் வெற்றியடைய அண்ணனுக்கும், படக்குழுவினருக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துகள்!
அன்பு அண்ணன் அவர்கள் எல்லா நலமும் வளமும் பெற்று,
மங்காப் புகழுடனும் மாபெரும் வெற்றிகளுடனும் வாழ்க!
உங்கள் கலைத்தாகம் இன்னும் பல
புதுப் படைப்புகளாய் மலர்க!
வாழ்த்துகள்!
அன்பின் நெகிழ்வோடு,
சீமான்
ஊழல் திமுக ஆட்சியில் நடந்ததோ, தவெக ஆட்சியில் நடந்ததோ ஆனால் இதை அக்டோபர் மாதம் ஆய்வு செய்த முதல்வர் விஜய் கண்டுபிடித்து இருந்தால் மகிழ்ச்சி..
இதுவே நடிகர் விஜய் ஆக இருந்தால் எந்த வரிசையில் எந்த புத்தகம் போலி என்று ஒரு மேப் போட்டு அனிருத் இசையில் கண்டு பிடித்து இருப்பார்..
ஆசிரியர்: திரிஷா விஜய்
அகல்விளக்கு பதிப்பகம்.
கோவை, பெரியார் அறிவுலகம் நூலகத்தில் இடம்பெற்றுள்ள நூல்களில் ஒன்று இது.
இதுபோன்ற போலிப் பெயர்களில் நூற்றுக்கணக்கான போலி பொய்மைப் புத்தகங்களை அச்சித்து அதை அரசாங்கத்திற்கு விற்று கணக்கு காட்டி கல்லா கட்டி இருக்கிறது ஒரு ஊழல் கும்பல்.
அகல் விளக்கு பதிப்பகம் .
விளக்கை பற்றி யார் விளக்குவார்கள் ???
விஜய்க்கு ஜால்ரா அடித்த நமக்குத் தெரிந்த சில எழுத்தாளர்களின் முகங்கள் நினைவுக்கு வந்து தொலைகின்றன ..
ஒருவேளை இது போன்ற திரிஷா விஜய் புத்தகத்தையே அவர்கள் தான் எழுதிக் கொடுத்திருப்பார்களோ ???
என்ன செய்வது ..?? 🧐
அண்ணன் திருமாவுக்காக தனியார் Hotel-லில் விசிக வன்னியரசு என்ன புடுங்கிட்டு இருந்தார்னு நமக்கு தெரியாதா..🤣🤣
இரண்டு சீட்டுக்கு நக்கி பிழைப்பு நடத்தும் விசிக-வினருக்கு அண்ணன் சீமான் அவர்களை பற்றி பேச தகுதி மயிரே இல்ல.!
முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க @VanniTamizhVCK
நாம் தமிழர் கட்சி - திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த களச்செயற்பட்டாளர் அன்புத்தம்பி ஜெய்சங்கர் அவர்களின் அன்புமகள் யுவஸ்ரீ அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அன்புமகளை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புமகள் யுவஸ்ரீ அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
கருத்துக்கேட்புக் கூட்டத்தையே மறைமுகமாக நடத்துவதா? மீனவ மக்களின் எதிர்ப்பைப் புறந்தள்ளி பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுக!
@CMOTamilnadu@TVKVijayHQ
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு மீனவப் பெருங்குடி மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், அவர்களிடம் முறையாகக் கருத்துகளைக் கேட்டறியாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை மட்டும் அழைத்துக் கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்த அதிகாரிகள் முயன்றதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மக்களின் வாழ்வுரிமை தொடர்பான விவகாரத்தில்கூட வெளிப்படைத்தன்மையின்றிச் செயல்படும் தவெக அரசின் அணுகுமுறை வன்மையான கண்டனத்திற்குரியது.
பட்டினப்பாக்கத்தில் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே அப்பகுதி மீனவ மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மீனவர்களுக்குக் குடியிருப்புகள் கட்ட வேண்டிய இடத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதா என்று கேள்வி எழுப்பிக் கருப்புக்கொடி ஏந்திப் போராடியிருக்கின்றனர். இவ்வளவு எதிர்ப்பிற்குப் பிறகும், அங்கேயே புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டியே தீருவோம் எனத் தவெக அரசு பிடிவாதம் காட்டுவது மீனவ மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்.
பட்டினப்பாக்கம் முதல் நொச்சிக்குப்பம் வரையுள்ள 12 மீனவ கிராமங்கள் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அப்படியிருக்கும்போது, அந்தக் கிராமங்களுக்கும், தொடர்ந்து போராடிவரும் மீனவர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் எழுத்துப்பூர்வமாக அழைப்பு விடுத்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிவதுதானே முறையான அணுகுமுறை?
அதைவிடுத்து, ஒவ்வொரு கிராமத்திலும் யாரோ ஒருவரைத் தொலைபேசியில் அழைத்து, “கிராமத்திற்கு ஒருவர் வந்தால் போதும்” என்று கூறியதாக மீனவர் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டுவது எவ்வளவு கடுமையானது! ஒரு கிராமத்தின் சார்பாக யார் பேச வேண்டும் என்பதை அந்தக் கிராம மக்கள்தான் முடிவுசெய்ய வேண்டுமே தவிர, அதிகாரிகள் எப்படி முடிவுசெய்யலாம்? போராடும் சங்கப் பிரதிநிதிகளை அழைக்காமல் நடத்தப்படும் கூட்டத்தில் யாருடைய கருத்தைக் கேட்கப் போகிறீர்கள்?
அரசுக்குச் சாதகமானவர்களை மட்டும் அழைத்துக் கூட்டத்தை நடத்தத் திட்டமிடுகிறார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு எழும் அளவிற்கு நடந்துகொண்டது ஏன்? மக்களின் எதிர்ப்பைப் பதிவு செய்வதற்கான கூட்டமா இது? அல்லது மக்கள் ஏற்றுக்கொண்டதாகக் கணக்குக் காட்டுவதற்கான ஏற்பாடா?
12 கிராமங்களுக்கும் எழுத்துப்பூர்வமாக அழைப்பு விடுக்க வேண்டுமென்று மீனவ மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குக் கடிதம் கொடுத்த பின்னரே கூட்டம் நவம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகச் செய்தி தெரிவிக்கிறது. ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்திற்கும் அழைப்புக் கடிதம் வரவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். தங்களுடைய கருத்தைத் தெரிவிப்பதற்கான முறையான அழைப்பைக்கூட மக்கள் போராடித்தான் பெற வேண்டுமா? இதுதான் மக்களை மதிக்கும் ஆட்சியின் இலட்சணமா?
“கருத்துக்கேட்புக் கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை; எங்கள் கருத்துகளை வலுவாக எடுத்துவைப்போம்; அந்த இடம் மீனவர்களுக்குக் குடியிருப்புகள் கட்ட வேண்டிய இடம் என்பதை ஆதாரங்களோடு தெரிவிப்போம்” என்று மீனவப் பிரதிநிதிகள் தெளிவாகக் கூறியிருக்கின்றனர். இவ்வளவு பொறுப்புடன் பேசும் மக்களை நேருக்கு நேர் சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம்?
கடலை நம்பி வாழும் மக்களுக்குக் குடியிருப்பும் வாழ்வாதாரப் பாதுகாப்பும் உறுதிசெய்ய வேண்டிய அரசு, அவர்களின் வாழ்விடத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்குவது கொடுமையானது. புதிய தலைமைச் செயலகம் அமைந்தால் ஏற்படக்கூடிய பாதுகாப்புக் கட்டுப்பாடுகள், போக்குவரத்து நெரிசல், கடலுக்குச் சென்று திரும்புவதிலான இடையூறுகள் குறித்த அச்சங்களுக்கு என்ன பதில்? தங்கள் சொந்த மண்ணிலேயே உரிமைகளை இழந்துவிடுவோமோ என்று மக்கள் அஞ்சும் நிலையை ஏன் உருவாக்குகிறீர்கள்?
தமிழ்நாட்டில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கு வேறு இடமே இல்லையா? மீனவர்களுக்குக் குடியிருப்புகள் கட்ட வேண்டிய இடம் என்று மக்கள் ஆதாரங்களை முன்வைக்கத் தயாராக இருக்கும் நிலையில், அந்த இடத்தில்தான் கட்டுவோம் என்பதில் ஏன் இவ்வளவு பிடிவாதம்? வாக்குக் கேட்கும்போது தேவைப்பட்ட மீனவ மக்களின் குரல், ஆட்சிக்கு வந்த பிறகு கேட்கவில்லையா?
எனவே, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தையும் அதற்கான தொடர் நடவடிக்கைகளையும் தவெக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். 12 மீனவ கிராமங்களுக்கும், அக்கிராம மக்கள் தேர்வுசெய்யும் பிரதிநிதிகளுக்கும், போராடிவரும் மீனவர் சங்கங்களுக்கும் முறையான எழுத்துப்பூர்வ அழைப்பு விடுத்து, வெளிப்படையாகக் கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும். மக்கள் முன்வைக்கும் கருத்துகளையும் ஆவணங்களையும் முழுமையாகப் பதிவுசெய்து, அவற்றிற்கு அரசு வெளிப்படையாகப் பதிலளிக்க வேண்டும்.
மீனவர்களுக்குக் குடியிருப்புகள் கட்ட வேண்டிய இடம் என்ற அவர்களின் கோரிக்கையையும் ஆதாரங்களையும் உரிய முறையில் பரிசீலித்து, அம்மக்களின் குடியிருப்பு உரிமையையும் வாழ்வாதாரத்தையும் உறுதிசெய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
பேசத் துணியாத கதையைப் பேரழகுத் திரைக்காவியமாக்கிய ‘டோரதி’ படக்குழுவினருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
அன்புத்தம்பி கார்த்திக் சுப்புராஜ் எழுத்து இயக்கத்தில், இசை இறைவன் இளையராஜா இசையில் வெளிவந்திருக்கும் டோரதி திரைப்படத்தை கண்டேன். 1990களில் சாதிய வன்முறை நிலவும் கிராமப்புற தமிழ்நாட்டைப் பின்னணியாகக் கொண்டு சமூகம் பேசத் தயங்குகிற, பலரும் சொல்லத் துணியாத இயற்கையின் பாலியல் மாற்றத்தை பற்றிய கதையைக் கையில் எடுத்து, அதனை உணர்வும் உயிர்ப்பும் நிறைந்த அழகிய திரைப்படைப்பாக உருவாக்கியிருக்கும் அன்புத்தம்பி கார்த்திக் சுப்புராஜை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
மனிதர்களை அவர்களது இயல்போடும் உணர்வுகளோடும் ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவத்தை வளர்ப்பதே கலையின் உயர்ந்த பணி. புறக்கணிக்கப்படும் மனிதர்களின் வலியை உணரவும், அவர்களது அன்பையும் வாழ்வுரிமையையும் மதிக்கவும் வைக்கிற படைப்புகள் காலத்தின் தேவையாகின்றன. புறக்கணிக்கப்பட்ட மக்களின் குரலாக கலை மாறும்போது அது புனிதமாகிறது. அந்த வகையில், பார்வையாளனின் மனச்சாட்சியோடு உரையாடும் படைப்பாக ‘டோரதி’யைப் படைத்திருக்கும் தம்பி கார்த்திக் சுப்புராஜின் படைப்புத் துணிவுக்கும் மனிதநேயத்திற்கும் எனது அன்பும் பாராட்டுகளும்!
ஒரு கதையைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, அதற்குரிய திரைமொழியை உருவாக்குவது வரை, படைப்பாளனின் பொறுப்புணர்வு வெளிப்பட வேண்டும். சொல்ல வந்த கருத்தின் ஆழமும், அதைச் சொல்லும் விதத்தின் அழகும் ஒன்றிணையும்போதுதான் சிறந்த திரைப்படம் பிறக்கிறது. அத்தகைய அக்கறையோடு இப்படத்தை உருவாக்கியிருக்கும் தம்பியின் கலைப்பயணம் மேலும் பல உயரங்களைத் தொடட்டும்!
இப்படம் இசை இறைவன், எங்கள் அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஐயா இளையராஜா அவர்களின் அளப்பரிய இசைப்பேராற்றலால், திரையில் சொல்லப்படும் உணர்வுகளுக்கு உயிரூட்டி, ஒரு சிறந்த திரைப்படத்தைக் காவிய அனுபவமாக உயர்த்துகிறது! காலங்கள் மாறலாம்; தலைமுறைகள் மாறலாம்; இசையை ரசிக்கும் முறைகளும் மாறலாம். ஆனால், மனித மனத்தின் ஆழத்தை தொட்டு உணர்வினை உசுப்பும் எங்கள் இசை இறைவனின் இசை வலிமை என்றும் மாறுவதில்லை. இன்றைய தலைமுறையும் ரசித்து மகிழும் பாடல்களை வழங்கியிருக்கும் இசை இறைவனின் படைப்பாற்றல் நம்மை மீண்டும் வியக்க வைக்கிறது. தலைமுறைகளைக் கடந்து தமிழர்களின் உணர்வுகளோடு பயணிக்கும் அவரது இசைக்கு தமிழினம் என்றும் கடமைப்பட்டிருக்கிறது.
தனது கதாபாத்திரத்தின் உணர்வுகளை உள்வாங்கி, அதற்கு உயிர்கொடுத்திருக்கும் அன்புத்தம்பி சனத் நடித்திருக்கிற விதம் பெரிதும் பாராட்டத்தக்கது. ஒரு மனிதரின் அக உலகத்தைப் பார்வையாளனிடம் கொண்டுசேர்ப்பதற்கு நுட்பமான நடிப்பும் ஆழமான புரிதலும் வேண்டும். ஒவ்வொரு காட்சியாக நகரும் திரைக்கதையில் பாலின மாற்றத்தை படிப்படியாக தனது ஆகச்சிறந்த நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கும் தம்பிக்கு எனது பாராட்டுகள். இயல்பான நடிப்பின் வழியே தனது கதாபாத்திரத்திற்கு நம்பகத்தன்மையையும் உணர்வுச் செறிவையும் அளித்திருக்கிறார் அன்புத்தம்பி ரிஷிகாந்த். கதையோடு ஒன்றிப்போகும் அவரது நடிப்பும், உணர்வுகளை வெளிப்படுத்தும் நேர்த்தியும் அவரது திறமைக்கு சான்று. தனது அனுபவமும் நடிப்பாற்றலும் அசாத்திய உடல் மொழியும் கொண்டு கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்து விசில் வீரைய்யாவாக வாழ்ந்திருக்கிறார் அன்புத்தம்பி முத்துகுமார். ஒரு பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, அதற்குரிய அழுத்தத்தைத் திரையில் கொண்டுவரும் அவரது திறன் பாராட்டுக்குரியது. டோரதியாக வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், கதாபாத்திரத்தின் உணர்வுகளுக்கு முதன்மையளித்துத் தனது நடிப்பால் படைப்பிற்கு மேலும் அழகுசேர்த்திருக்கிறார். ஒளியையும் நிழலையும் உணர்வுகளின் மொழியாக்கி, கதையின் சூழலுக்குள் நம்மையும் அழைத்துச் செல்லும் ஒளிப்பதிவாளர் திரு கதாபாத்திரங்களின் மனவோட்டத்தையும், சொல்லப்படாத வலிகளையும் காட்சிகளின் வழியே உணர்த்தி, படைப்பிற்கு மேலும் உயிரூட்டியிருக்கிறார். அத்தோடு இப்படைப்பைச் சாத்தியப்படுத்திய தயாரிப்பாளர்கள், படத்தொகுப்பு உள்ளிட்ட அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அடிப்படைவாதம், ஆணாதிக்கம், சாதியம், வன்முறை , ஆவணக் கொலைகள் போன்ற சகிக்க முடியாத கொடூரங்களும் அநீதிகளும் பெருகி , ஆழமாகப் பதிந்துள்ள ஓர் உலகில், சிறுவயதிலிருந்தே பிரிக்கமுடியாத நண்பர்களாக வளரும் இரு இளைஞர்களின் வாழ்க்கையின் ஊடாக அனைத்தையும் காட்டி பாலியல் பாகுபாடு, திருநர் சமூகத்தின் அகநிலை என மனிதர்களைப் புரிந்துகொள்ளவும், இதுவரை தமிழ்த்திரையில் விரிவாக பேசப்படாத மூன்றாம் பாலினத்தவரின் உலகை பொதுச் சமூகம் நேர்மையாக அறிந்து கொள்ளவும், எல்லாவற்றையும் தாண்டி நம்மோடு சரிசமமாக வாழும் சக மனிதரை உளப்பூர்வமாக நேசிக்கவும், துயர் சூழ்ந்த அவர்களது வாழ்வை ஏற்று மதிக்கவும் துணைநிற்கும் இதுபோன்ற மதிப்பு மிகுந்த படைப்புகள் தமிழ்த்திரையில் மேலும் பெருகட்டும்!
ஏற்கனவே திரையரங்கில் மாபெரும் வெற்றி பெற்ற "டோரதி" இப்போது தொலைக்காட்சிகளிலும் வெளியாகி அனைவரது பெரும் வரவேற்பிற்கு உள்ளாகி வருவது எனக்கு நெகிழ்வை தருகிறது.
'டோரதி’ மக்களின் பேரன்பைப் பெறட்டும்!
அற்புதமான கலைப் படைப்புகள் மூலம் தன்னை தமிழ்த் திரையின் பெருமைமிக்க அடையாளங்களில் ஒருவராக நிலைநிறுத்தி வருகிற தம்பி கார்த்திக் சுப்புராஜின் முயற்சிகள் என்றும் வெற்றியால் மிளிரட்டும் !
- சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#Dorothy @karthiksubbaraj@ilaiyaraaja@iam_rishikanth@Sananth__@KeerthyOfficial
நாம் தமிழர் கட்சியின் அரசியல் எதிரிகளும், எம்மை வெறுப்பவர்களும் தமிழ் தேசியத் தத்துவப் பேராசான் நமது ஐயா பெ மணியரசன் அவர்களின் ஒரு பதிவை தீவிரமாகப் பரப்பிக்கொண்டு, “இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்குச் சொல்ல வேண்டிய பதில் ஒன்றுதான்.
ஐயா பெ மணியரசன் அவர்கள், தேர்தல் அரசியலில் வாக்களிப்பதையே புறக்கணித்து வந்த ஒரு அரசியல் அமைப்பின் கொள்கைப் பின்னணியைக் கொண்டவர். அத்தகையவர், ஒரு சிறப்புத் தீர்மானத்தை இயற்றி, நாம் தமிழர் கட்சிக்காக வாக்குகளைச் சேகரித்து, நமது கட்சிக்கு வாக்களித்தவர்.
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியிலும், நமது அரசியல் முன்னேற்றத்திலும், அண்ணன் சீமான் அவர்களின் நலனிலும் எப்போதும் மிகுந்த அக்கறை கொண்டவராகவே ஐயா அவர்கள் வாழ்ந்து வருகிறார்.
எங்களது துன்பகரமான காலகட்டங்களில் எங்களோடு தோள்நின்று வழிகாட்டி துணைநின்றவர் ஐயா பெ மணியரசன் அவர்கள்.
எனவே, அவர் எங்களை விமர்சிப்பது என்பது ஒரு தந்தை தனது மகனை விமர்சிப்பதைப் போன்றது. அந்த விமர்சனங்களுக்குப் பின்னால் உள்ள அக்கறையையும், அறிவார்ந்த நோக்கத்தையும் நாங்கள் நன்கு புரிந்துகொள்கிறோம்.
அவர் முன்வைக்கும் விமர்சனங்களை நாங்கள் ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொள்வோம். அவற்றை எங்களுக்குள் ஆய்வு செய்து, எங்களது அரசியல் செயல்பாடுகளைச் சீர்தூக்கிப் பார்ப்போம்.
ஆனால், அவரை எதிர்த்து விமர்சிப்பதோ, இழிவுபடுத்துவதோ நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த எவரும் செய்ய வேண்டிய செயலல்ல. அப்படி நாம் தமிழர் கட்சியின் முகமூடி மாட்டிக் கொண்டு புரிதலற்ற எதிர்வினைகள் செய்வோர் அனைவரும் நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்கள் அல்லர்.
எங்கள் ஐயா பெ.ம எங்களுக்கு வெறும் அரசியல் விமர்சகர் அல்ல; எங்களது பெருந்தகப்பன். எங்களது அறிவுலக வழிகாட்டி.
ஐயா மணிரசன் அவர்களை நாங்கள் உளப்பூர்வமாக நேசிக்கிறோம்.அவரது கருத்துக்களை உள்வாங்கி இருக்கிறோம். அவரது விமர்சனங்களை மதிக்கிறோம்.
எப்போதும் எங்களது பெருந்தகப்பனாகவும், தமிழ் தேசியத் தத்துவப் பேராசானாகவும், எங்களது உள்ளத்திலும், அரசியல் களத்திலும் ஐயா மணியரசன் அவர்கள் உயர்ந்து வீற்றிருப்பார்.
அவரது ஒரு பதிவைக் காரணம் காட்டி எங்களை இழிவுபடுத்தலாம் என்றும், எங்களுக்குள் பிளவை ஏற்படுத்திவிடலாம் என்றும் எண்ணுகின்ற அரசியல் எதிரிகளுக்கும், எங்களை வெறுப்பவர்களுக்கும் நாங்கள் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான்:
ஐயா பெ மணியரசன் அவர்களுக்கும் எங்களுக்குமான உறவு தமிழ் தேசிய தத்துவார்த்த கோட்பாடு வழியாக எழுந்த தந்தை மகன் உறவு. அதை தற்குறிகளாலும், தற்குறிகளுக்கு விலை போன ஊடக வியாபாரிகளாலும் புரிந்துக் கொள்ள முடியாது.
எங்கள் மீது கொண்டிருக்கின்ற அக்கறையை எங்களைப் பிரித்துவிடலாம் என்று நீங்கள் நினைத்தால், நிச்சயமாக ஏமாந்து போவீர்கள்!
தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் எங்களது உறவும், நன்றியுணர்வும், கொள்கைப் பற்றும் உங்கள் அவதூறுகளால் சிதைக்கப்பட முடியாதவை!
நாம் தமிழர்!
❤️
மணி செந்தில்.
@Tamizhdesiyam