பருவமழை தொடங்கியுள்ளதால் கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது!
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது!
டேய் விர்ச்சுவல் அப்யூசர்ஸ்களா, "எங்க அண்ணன்தான் காவிரியின் கையைப் பிடித்து தமிழ்நாட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்தார்" என்று சொல்லிடாதீங்கடா 🤦♂️
விவசாயக் கடன் தள்ளுபடி என்று சொல்லி விவசாயிகளை சவுக்கால் அடிக்க விட்ட ஃபிராட் பயலுங்களா! 🤦♂️😵💫
CJP has a better chance to win against the BJPEE in 2029 than Pappu @RahulGandhi !
Hope @Cockroachisback starts a political party !
Pappu has failed for 12 years and BJP vs Pappu is a walkover for the Sanghi goons !
How @abhijeet_dipke
Thank you CJP for making the dictator take a defeat !
Power of the youth. !!
@ungalsanam
தரித்திரமே சனியனே பீடையே உனக்கென்ன தமிழக அரசியலில் புடுங்குவதற்கு இருக்கிறது என்று வந்து விட்டாய்
ரீல்ஸ் போட்டமா காட்ட வேண்டியதை காமிச்ச மா சம்பாதிச்சமா என்று இருந்து கொள் தரித்திரமே சாத்தானே கேடுகெட்ட சாத்தானே ஒன்ட வந்த பிடாரி
கர்நாடகா, கேரளா முதல்வர்கள் எல்லாம் NEET க்கு எதிரா பேசுராங்க. போராட்டம்ல கலந்துக்குறாங்க.
தேர்தல் அப்போ நீட் ஒழிப்பேன் என பேசுன நம்ம முதல்வர் இத எதிர்த்து பேச கூட மாற்றாரு
#TVKVijayFails
முதன்முதலில் நீட்டை காங்கிரஸ் கொண்டு வந்தபோது “இது கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைப் பாதிக்கும்” என கலைஞர் கண்டித்ததால் “நீட் நடத்துவதும் நடத்தாததும் மாநிலங்களின் உரிமை” என பணிந்து சட்டத்தை மாற்றியது காங்கிரஸ்.
பின்னர் ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்தபோது நீட்டை ஏற்றுக் கையெழுத்திட்டார், அப்போது அதிமுகவில் உளவாளியாக இருந்த RSS கைக்கூலி மாஃபாய் பாண்டியராஜன்,
பிறகு ஜல்லிக்கட்டு போராட்டம் வந்தபோதே நீட் என்பது மாபெரும் அநீதி என போராட்டத்தை ஆரம்பித்தார் MKS. ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசைதிருப்ப இப்படிச் செய்கிறார் என வழக்கம்போல் நம்மூர் திருடர்கள் இட்டுக்கட்டினார்கள். மாடு பிடிப்பதில் ஜெயித்துவிட்டு, படிப்பதில் தோற்றோம்.
பிறகு பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுக பாஜகவை நீட்டை ஒழிக்கச் சொல்லி நிர்பந்திக்கவே இல்லை. ஒரு துரும்பையும் அசைக்கவில்லை. இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பை வேறு வாங்கியது பாஜக.
பின்னர் திமுக ஆட்சி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது விஸச்செடியாக இருந்த நீட் இப்போது நன்றாக வேர்விட்டு, பல ஏழை, கிராமப்புற, நடுத்தர வர்க, BC, MBC, SC, ST மாணவர்களின் உயிரைக் குடித்து வளர்ந்து ஆலமரமாக நின்றிருந்தது. சட்டப்படி அதை முற்றிலும் ஒழிப்பதற்காக ஏ.கே.ராஜன் கமிட்டி அமைத்து அதை ஒழிக்கச் சட்டமும் இயற்றி அனுப்பியது திமுக அரசு. அதுதான் உதயநிதி சொன்ன ரகசியம். அதுதான் மந்திரம். ஒரு ஜனநாயக நாட்டில் இந்த ரகசியம் வேலை செய்யும். இந்த மந்திரம் பலிக்கும். ஆனால் பாஜகவின் இந்தியாதான் ஜனநாயகமே இல்லையே! ஜனநாயகத்துக்குப் புறம்பாக கவர்னரையும் ஜனாதிபதியையும் வைத்து இன்றளவும் அதை ஒழிக்கவிடாமல் ஒரு பச்சையான அயோக்கியத்தனத்தைச் செய்துகொண்டிருக்கிறது பா ச க. ஆனால் இப்போதும் பாருங்கள் “நீட்டை ஒழிக்கிறேன்னு திமுக சொல்லுச்சே.. ரகசியம் இருக்குனு உதயநிதி சொன்னாரே... ஒழிச்சுச்சா.. கிகிபிகி” என திமுகவைக் கிண்டல் செய்யும் எவனும், அயோக்கியத்தனமாக சட்டத்தை வளைத்த பா ச கவை கேள்வி கேட்க மாட்டான். இதில் நீட்டை ஆதரிப்பவனும் அடக்கம், (திமுகவைச் சேராத) எதிர்ப்பவனும் அடக்கம்! அதுதான் தமிழ்நாட்டின் விசித்திர டிசைன்!
வழக்கம்போல், எப்படி திமுகவின் இந்தித்திணிப்பு எதிர்ப்பை ஏனைய இந்தியா எப்படி லேட்டாகப் புரிந்துகொண்டதோ, எப்படி திமுகவின் இட ஒதுக்கீட்டு ஆதரவை ஏனைய இந்தியா எப்படி லேட்டாகப் புரிந்துகொண்டதோ, திமுகவின் மாநில உரிமைக்கான குரலை ஏனைய இந்தியா எப்படி லேட்டாகப் புரிந்துகொண்டதோ அதேபோல் திமுகவின் நீட் எதிர்ப்பை இப்போது ஏனைய இந்தியா லேட்டாகப் புரிந்துகொண்டிருக்கிறது. இதோ மாணவர் போராட்டம்.
திமுக ஆ.ராசாவை அனுப்பி மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியிருக்கும்போது, உதயநிதி மாணவர்களுக்காக தன் ஆதரவையும் வன்மையான கண்டனங்களையும் தெரிவித்திருக்கும்போது, ஒரு காலத்தில் முதுகெலும்போடு நிமிர்ந்து நின்ற தமிழ்நாட்டு அரசு வாயை மூடிக்கொண்டு டேபிளுக்கு அடியில் ஒளிந்துகொண்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமே எதிர்த்த ஒரு அநீதியை இன்று இந்தியாவே எதிர்க்கும்போது உடன் நிற்க தமிழ்நாட்டுக்கு இன்று தெம்பில்லை. அதன் முதுகெலும்பு சினிமா மோக ஆசிட்டில் கரைந்துவிட்டது. அதன் வீரம் ரீல்ஸ்களின் பொய்களில் செத்துவிட்டது.
விலைபோனவர்களின் வார்த்தைகளுக்கும், ரீல்ஸ்களுக்கும், பொய்க்கும் மூளையை அடகு வைத்தவர்களே... ஏன் திமுக? ஏன் திமுக? ஏன் திமுக? என கேட்டுக்கொண்டே இருப்பீர்களே... இதற்காகத்தான் திமுக! நம்மை மானத்தோடு வைத்திருக்கத்தான் திமுக. தமிழ்நாடுக்கு வந்த ஆபத்தை மட்டுமல்ல, வரப்போகும் ஆபத்தைக் கூட எதிர்க்கத்தான் திமுக. தடுப்பூசியைத் தூக்கி எறிந்துவிட்டு உயிர்க்கொல்லிக் கிருமியிடம் உடலை ஒப்படைத்திருக்கிறீர்களே, நீங்கள் தற்குறி அல்லாமல் வேறு யார்...
நம்மை நிஜ ஹீரோவாக வைத்திருந்தது திமுக. இதோ உங்கள் நிழல் ஹீரோ நம்மை பரிதாபமான நிஜக் கோமாளியாக்கி இருக்கிறார். வடக்கன், பீகார், பீடா வாயன் என கிண்டல் அடித்துச் சிரிப்போமே. அவனெல்லாம் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறான், வாயால் அல்ல! ஏன் என்றால் நாம் செய்திருக்கும் காரியம் அப்படி!
மக்கள் கூட பொய்க்குப் ப*லி*யான ப*லியாடுகள். ஆனால் எல்லாம் தெரிந்தும், எல்லாம் அறிந்தும், தவெக என்பது பா ச க'வின் ட்ரோஜன் ஹார்ஸ் என்பது தெரிந்தும் தமிழ்நாட்டின் இந்த வரலாறுகாணா அவமானத்திற்கும், அசிங்கத்திற்கும், வீழ்ச்சிக்கும் துணைநின்று ஒத்து ஊதும் திருமாவளவன், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், காங்கிரஸ்... நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள்.
சாத்தான் உங்களுக்கு அதிகாரத்தில் மட்டும் பங்கு தரவில்லை. பாவத்திலும் தந்திருக்கிறான். தமிழ்நாட்டு வரலாறு உங்களுககன சோஃபா செட்டுகளை வட்டியும் முதலுமாய் கொடுக்கும். வட்டியும் முதலுமாய் கொடுக்கும்.
1/1
தேர்தல் ஜனநாயகம் விநோதமானது.
தமிழ்நாட்டில் நடந்த திமுகவின் மக்கள் நல அரசாங்கம் பல சதிச்செயல்களின் விளைவால் தோற்கடிக்கப்படுகிறது. அக்கட்சி முழுநேரமும் மாநில உரிமைக்காகவும், அனைத்து மக்களின் மேம்பாட்டுக்காகவும், மிகுந்த அர்ப்பணிப்போடு வேலை செய்தது. ஆனாலும் அதன் தலைவரே தோற்கடிக்கப்பட்டார்.
ஆனால் மக்களைத் துச்சமாக மதிக்கும், மக்களின் உரிமையைப் பறிப்பதையே முழுநேர வேலையாகக் கொண்ட மோடி மீண்டும் மீண்டும் வெல்கிறார்.
அவரிடம் மக்கள் போய் மீண்டும் மீண்டும் போராடி தமது உரிமையைக் கேட்க வேண்டியிருக்கிறது.
அதைவிடக் கொடுமை, திமுகவைத் தோற்கடித்த தவெக இன்னும் தனது ரசிகர் மன்ற மனநிலயிலிருந்தே வெளிவராமல் ஒவ்வொரு நாளும் ஜனநாயக விழுமியங்களைக் குழிதோண்டிப் புதைத்துக்கொண்டிருக்கிறது.
தவெக எந்த வகையில் வெல்ல வேண்டிய கட்சி? இந்த இரண்டு மாதங்களில் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.
திமுக எந்த வகையில் தோற்கடிக்கப்பட வேண்டிய கட்சி?
நிச்சயமாக திமுகவை கண்ணுக்குத் தெரியாத பல சக்திகள் சேர்ந்து தான் தோற்கடித்திருக்கிறார்கள்.
ஜனநாயகத்திற்கு, குறிப்பாக அரசாங்கத்திற்கு மக்கள் சார்பு வண்ணத்தைப் பூசியது தான் திமுகவின் தவறு. ஆனால் அதைச் செய்யத்தானே அறிஞர் அண்ணா தலைமையில் திமுக தோற்றுவிக்கப்பட்டது.
இந்தத் தோல்வியும் திமுக தமது கடமையைச் செவ்வனே, தம்மிடம் இருந்த சிறந்த ஆயுதங்களைக் கொண்டு நடத்தியதற்குக் கிடைத்த வெகுமதி என்றே நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
இல்லையேல் இந்த அக்கறை எதுவுமே இல்லாத நடிகரும் மோடியும் ட்ரம்பும் அவரவர் தேர்தல்களில் எப்படி வென்றிருக்க முடியும்?
இப்போது மோடி தமது காவல்துறையைக் கொண்டு தமக்கு வாக்களித்தவர்களையே பந்தாடும் போது, இதே மக்களின் வாக்குகளை எப்படியும் பெற்றுவிட முடியும் என்ற ஆணவம் தவிர வேறு என்ன காரணமாக இருக்கமுடியும்?
மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒவ்வொரு நாளும் இதற்கு முன்பு பல அரசாங்கங்கள் கடும் உழைப்பிற்குப் பிறகு கொண்டு வந்த அனைத்து மக்கள் நலத் திட்டத்தையும் முடக்குவதும் அதற்காக அயராது உழைப்பதுமாக இருக்கிறார்.
மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டம், இந்தப் புதியப் பொருளாதாரச் சூழலில், வேலை வாய்ப்புக் கிடைக்காத கிராமத்து மக்களுக்கு, அவர்கள் உள்ளூர் முதலாளிகளையோ, தனியார் கம்பெனிகளையோ, நிலபிரபுக்களையோ நம்பியிருக்காமல், யாரிடமும் அடிமாட்டு சம்பளத்திற்குப் போய் நிற்காமல் இருப்பதற்காக அவர்களைப் பாதுகாக்க வந்த திட்டமாக்கும்.
அதற்கு எதிராக எத்தனை பரப்புரைகள், சதிக்கோட்பாடுகள், நிதி முடக்கங்கள், தாமதங்கள், தேக்கங்கள் எனத் தொடர்ந்து வேலை செய்து இன்று அதை முற்றிலுமாக நீர்த்துப் போகச் செய்துவிட்டனர்.
இப்படிப்பட்ட தலைவர் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கிறார்.
ஆனால் மு.க.ஸ்டாலின், ஒரே ஒரு முறை முதல்வரானார். மாநில உரிமைக்காகவும், மொழிப் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் நலனுக்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும், கல்விக்காகவும், கட்டுமான மேம்பாட்டுக்காகவும் எவ்வளவு உழைத்தார்.
ஆனால் அவருக்கு எதிராக எத்தனை மோசடிகள்! அவரைத் தோற்கடிக்க எத்தனை சதிகள்!
இது நிச்சயமாக தவெக மட்டும் சாதித்திருக்கமுடியாது.
இப்படி ஒரு தாராளவாத ஆனால் மக்கள் நலனில் அக்கறை கொண்ட, ஒரு மாநிலக் கட்சி, இந்தியாவில் ஒரு மூலையில் வெற்றி பெறுவது யாருக்கோ, எந்த சிந்தனைக்கோ பொறுக்கவில்லை.
திமுக ஆட்சிக்கு எதிராக எத்தனை பொய்ப் பரப்புரைகள்!
நேற்று ஒரு பெரியவர் என்னிடம் சொன்னார், "ஜனநாயகன் படத்தைத் திமுக முடக்கப்பார்த்தது தான் அதன் தோல்விக்கான தொடக்கம்". அதையே உடன் இருந்த வேறொரு இளைஞரும் இளம்பெண்ணும் சொன்னார்கள்.
இப்படி ஒரு பொய்ச்செய்தி எப்படி இவ்வளவு ஆழமாக, விரிவாகப் பரவியது?
தோல்வி அடைந்தது திமுக மட்டும் அல்ல!
தொலைக்காட்சி விவாதங்களில் போகிற போக்கில் பாஜக பேச்சாளர்கள் திமுகவின் தோல்வியைக் கொண்டாடுகிறார்கள். தமிழ்நாட்டில் தோற்றதும் அவர்களும் தான். ஆனால் அவர்களுக்கு ஏன் இந்த குதூகலம்?
இது தவெகவின் வெற்றி மட்டும் அல்ல!
ஏதோ ஒன்று நம்மை எல்லாம் மயக்கி, நம்மிடமிருந்த அறிவுப்புலனை முடக்கி, இந்தத்தேர்தலைப் பறித்துக்கொண்டது.
இல்லையென்றால் ஒன்றாக இருந்த எல்லோரும் இப்படி அடித்துக்கொள்வார்களா?
இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் தனித்தனியாக நிற்பார்களா?
இதற்கிடையில் ஜனநாயகன் படம் வெளியாகி, மந்திரிகள் திரையரங்குகளில் ஆனந்தக் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இப்படிப்பட்ட தமிழ்நாட்டையா நாம் பெருமையாகக் கொண்டாடிக்கொண்டிருந்தோம்?
அமுதன் ஆர்.பி.
ஆவணப்பட இயக்குனர்
சென்னை
24 ஜூலை 2026