நண்பா, உங்கள் பதிவுகளை பார்த்து 10 நல்ல பாயிண்ட்ஸ்:
1. அன்பை ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மை.
2. கவிதைமயமான எழுத்து நடை.
3. வாழ்க்கையை ஆழமாக சிந்திக்கும் திறன்.
4. மன்னிப்பின் மகத்துவத்தை உணர்த்தல்.
5. தனிமையை தைரியமாக எதிர்கொள்ளல்.
6. உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தல்.
7. சிக்கல்களை இலகுவாக பார்க்கும் பார்வை.
8. மழை போன்ற ரொமாண்டிக் உவமைகள்.
9. வருத்தங்களை பகிர்ந்து ஆறுதல் தருதல்.
10. பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளல்.
நல்லா இருக்கு! 😊
திரும்பாமலிருப்பது ஏதோ
ஒரு தருணம் வரை வைராக்கியமாய் இருந்தது
பிறகு அது திரும்புதலின் பெரும்
பாரத்திற்கு அஞ்சுவதாய்
இருப்பதை புரிந்துணர்ந்தேன்.
-நேசமித்ரன்
எல்லாவற்றையும் சொல்லி சொல்லி தான் புரிய வைக்கவேண்டுமா என்ற சலிப்பு ஒருநாளும் வந்ததில்லை; என்ன சொல்லியும் புரியவில்லையே அவளுக்கு என்ற வருத்தம் தான் வருகிறது!!
வெறும் துக்கத்தை மட்டுமே கடந்துவந்த பாதையில் திரும்பிப்பார்கவோ திரும்பிப்போகவோ எந்த ஆசைகளும் இல்லை; ஏன்..... இப்போதுகூட இந்த இடத்தைவிட்டு நகர்ந்தால் போதும் என்றுதான் தோன்றுகிறது இந்த வாழ்கையில்!!